Daily Thanthi |
- மோடிக்கு தொடர்பு இல்லை கோட்டு தீர்ப்பு; நிதிஷ் குமார் முகத்தில் விழுந்த நல்ல அடி: சுஷில்மோடி
- ஜல்பைகுரியில் பாதுகாப்பு படை சோதனை
- நாராயண்சாய் கற்பழிப்பு வழக்கு: பெண்ணின் மனு தொடர்பாக விளக்கம் கேட்டு குஜராத் போலீசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
- மராட்டிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ‘ஆதர்ஷ்’ ஊழல் விசாரணை அறிக்கை நிராகரிப்பை ஏற்க முடியாது ராகுல் காந்தி அதிரடி கருத்து
- ஐதராபாத் அருகே கார் மீது லாரி பயங்கரமாக மோதி விபத்து; மராட்டியத்தை சேர்ந்த 5 பேர் பலி
- ‘‘நிவாரண முகாம்களில் குளிரால் யாரும் சாகவில்லை:’’ அதிகாரியின் பேச்சால் மீண்டும் புதிய சர்ச்சை
- சினிமாவின் மறுபக்கம் : ‘‘சுட்டுவிட்டு சுட்டுக்கொண்டார்!’’
- அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வெளிநாட்டு பெண்ணை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை
- அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
- டெலிவிஷன் விருந்து
| மோடிக்கு தொடர்பு இல்லை கோட்டு தீர்ப்பு; நிதிஷ் குமார் முகத்தில் விழுந்த நல்ல அடி: சுஷில்மோடி Posted: 27 Dec 2013 03:10 PM PST பாட்னா, குஜராத் கலவரத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்களில் நரேந்திரமோடிக்கு தொடர்பு இல்லை என்று விசாரணை குழு தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பீகார் மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுஷில் மோடி, ஆமதாபாத் கோட்டின் இந்த தீர்ப்பு போலி மதச்சார்பற்ற தலைவர் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார்க்கு முகத்தில் விழுந்த நல்ல அடி என்று கூறியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்ததும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் பிரிந்தது. இந்நிலையில் கூட்டணியை உடைத்தவரும், மக்களின் ஆணைக்கு மரியாதை கொடுக்காதவருமான நிதிஷ்குமார், 2012 குஜராத் கலவரத்தில் மோடியை குற்றம் சாட்டியதற்கு பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுஷில்மோடி கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| ஜல்பைகுரியில் பாதுகாப்பு படை சோதனை Posted: 27 Dec 2013 02:23 PM PST |
| Posted: 27 Dec 2013 01:46 PM PST புதுடெல்லி, சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபு மீதும், அவரது மகன் நாராயண் சாய் மீதும் குஜராத்தை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் ஜாங்கிபூரா போலீசில் கற்பழிப்பு புகார் செய்தனர். அதன்படி சகோதரிகளில் மூத்தவர் சாமியார் அசராம் பாபு மீதும், இளையவர் நாராயண் சாய் மீதும் புகார் கூறினர். இந்த புகாரின் பேரில் ஏற்கனவே மற்றொரு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய அசராம் பாபுவை சூரத்தை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக நாராயண் சாய் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். பின்னர் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் நாராயண் சாய் டெல்லி-பஞ்சாப் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருடன் உதவியாளர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீசார் அவரை குஜராத்திற்கு கொண்டு சென்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரது விசாரணை செய்த போது சில உண்மைகள் வெளியாகின. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பெண்ணை விசாரணைக்கு ஆஜராகுமாறு குஜராத் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சம்பந்தபட்ட பெண் போலீஸ் முன் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவரது சார்பில் புதுடெல்லி ஐகோட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு, பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பிய காரணத்தை தெரிவிக்குமாறு குஜராத் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், பெண்ணுக்கு எதிராக குஜராத் மற்றும் புதுடெல்லி போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கை ஜனவரி 8ம் தேதிக்கு எடுத்துக் கொள்வதாக கோர்ட்டு கூறியுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 27 Dec 2013 01:22 PM PST புதுடெல்லி, 'ஆதர்ஷ்' ஊழல் பற்றிய விசாரணை அறிக்கையை மராட்டிய அரசு நிராகரித்ததை ஏற்க முடியாது என்று ராகுல் காந்தி கூறினார். முதல்–மந்திரிகள் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை தடுப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்–மந்திரிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்தார். இக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 15, ரகாப்கஞ்ச் என்ற முகவரியில் உள்ள 'காங்கிரஸ் வார் ரூம்' எனப்படும் காங்கிரஸ் ஆலோசனை கூட்ட அரங்கத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர்கள் காங்கிரஸ் ஆளும் 12 மாநிலங்களின் முதல்–மந்திரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மத்திய மந்திரிகளுமான ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல், கே.வி.தாமஸ் மற்றும் அகமது படேல், திக்விஜய்சிங், ஜனார்த்தன் திவிவேதி ஆகியோர் கலந்துகொண்டனர். கட்சியின் மாநில பொறுப்பாளர்களாக உள்ள பொதுச் செயலாளர்களான அம்பிகா சோனி, ஷகீல் அகமது, லுய்சினோ பலேரோ ஆகியோரும் கலந்துகொண்டனர். விலைவாசி உயர்வு 4 மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வே காரணம் என்று தேர்தல் முடிவு வெளியான உடன் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முதல்–மந்திரிகள் கூட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றியும், மாநிலங்கள் தோறும் 'லோக் அயுக்தா' மசோதா கொண்டு வருவது பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. பேட்டி கூட்டம் முடிவடைந்த பின்னர், ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் பற்றிய விசாரணை கமிஷன் அறிக்கையை மராட்டிய அரசு நிராகரித்தது சரியா?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:– தனிப்பட்ட முறையில், அந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. மராட்டிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஊழலில் சிக்கிய யாரையும் பாதுகாப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, உடனிருந்த மராட்டிய மாநில முதல்–மந்திரி பிருதிவிராஜ் சவானிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'எனது மந்திரிசபை சகாக்களுடன் விவாதித்து முடிவு எடுப்பேன்' என்று கூறினார். ராகுல் காந்தியின் பகிரங்க கருத்து, மராட்டிய மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸ் 'தமிழக காங்கிரசை பலப்படுத்த ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?' என்று தமிழக பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி, 'இதுபற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணி விஷயத்தில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன்' என்று கூறினார். காய்கறி விலை குறையும் ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:– ஜனவரி 15–ந் தேதிக்குள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் விவசாய விளைபொருள் சந்தை கமிட்டி சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதனால் விளைபொருட்களை தாங்கள் விரும்பும் இடங்களில் விற்க விவசாயிகளுக்கு வழிவகுக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முட்டைகள் விற்பனை செய்ய உடனடி ஏற்பாடு செய்யப்படும். லோக் அயுக்தா லோக்பால் சட்டம் அடிப்படையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 'லோக் அயுக்தா' மசோதாவை பிப்ரவரி 28–ந் தேதிக்குள் கொண்டுவர வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதுபோல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களும் 'லோக் அயுக்தா' மசோதாவை கொண்டுவர வேண்டும். ஊழலை ஒடுக்குவது பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லை. ஊழலுக்கு எதிரான மசோதாக்களை காங்கிரஸ்தான் கொண்டு வருகிறது. ஆனால், அவற்றை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காமல், பாராளுமன்றத்தை முடக்குகின்றன. எனவே, ஊழலை ஒடுக்க ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதை தேசிய அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் கொண்டுவர வேண்டும். அந்த திசையில்தான் காங்கிரஸ் செயல்படுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். image: category: |
| ஐதராபாத் அருகே கார் மீது லாரி பயங்கரமாக மோதி விபத்து; மராட்டியத்தை சேர்ந்த 5 பேர் பலி Posted: 27 Dec 2013 01:19 PM PST ஐதரபாத், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை அடுத்த துக்குகுடா பகுதியில் சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று சொகுசு காரின் மீது பயங்கரமாக மோதியது. 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கொண்ட இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரில் வந்தவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஐதராபாத்தில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| ‘‘நிவாரண முகாம்களில் குளிரால் யாரும் சாகவில்லை:’’ அதிகாரியின் பேச்சால் மீண்டும் புதிய சர்ச்சை Posted: 27 Dec 2013 01:13 PM PST லக்னோ, 'உத்தரபிரதேச கலவர நிவாரண முகாம்களில் குளிரால் யாரும் சாகவில்லை, குளிரால் சாவது என்றால் சைபீரியாவில் யாரும் உயிர் வாழமுடியாது' என்று அதிகாரி கூறியதால் அந்த மாநில அரசில் மீண்டும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குளிரால் சாகவில்லை உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர், ஷாம்லி மாவட்டங்களில் கலவரம் நடந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. முகாம்களில் தங்கியிருந்த குழந்தைகள் பலர் இறந்ததால், அதற்கான காரணத்தை கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை கொடுத்தது. குழுவின் அறிக்கை குறித்து மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஏ.கே.குப்தா நிருபர்களுக்கு விளக்கினார். நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் இறந்தன என்றும் அதற்கான காரணங்களையும் அவர் கூறினார். எந்த குழந்தையும் குளிரால் சாகவில்லை, நிமோனியா போன்ற நோய்களால் இறந்தன. நிமோனியாவுக்கு குளிர் காரணம் அல்ல. மக்கள் குளிரால் இறந்தனர் என்றால், சைபீரியாவில் யாருமே உயிர் வாழ முடியாது என்றும் அவர் தெரிவித்தார். கடும் கண்டனம் அதிகாரியின் இந்த பேச்சு உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் அந்த அதிகாரிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. ஏற்கனவே அங்குள்ள எதிர்க்கட்சிகள் மாநில சமாஜ்வாடி அரசை புதிய இக்கட்டில் தள்ளுவது மட்டுமின்றி, இப்போது முதல்–மந்திரி அகிலேஷ் யாதவும், அந்த உயர் அரசு அதிகாரியின் கருத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவுக்கு முதன்மை செயலாளர் ஏ.கே.குப்தா மிகவும் நெருக்கமான அதிகாரி என்று கூறப்படுகிறது. ஒரு தகவலை சொல்லும்போது வார்த்தைகளை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரிக்கு அகிலேஷ் யாதவ் ஆலோசனை வழங்கியுள்ளார். நாங்களே செய்ய முடியுமா? ''அதிகாரிகள் பேட்டி கொடுக்கும்போது, கட்டுப்பாட்டை மீறி சில வார்த்தைகளை கூறிவிடுகிறார்கள். அரசியல்வாதிகளான நாங்களே எல்லா நேரமும் எல்லாவற்றையும் செய்ய முடியுமா?'' என்று நிருபர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறினார். image: category: |
| சினிமாவின் மறுபக்கம் : ‘‘சுட்டுவிட்டு சுட்டுக்கொண்டார்!’’ Posted: 27 Dec 2013 01:02 PM PST எம்.ஆர்.ராதா தன்னை சுட்டுவிட்டு சுட்டுக்கொண்ட நிகழ்ச்சி குறித்து எம்.ஜி.ஆர். எனக்குச் சொன்ன அந்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எம்.ஜி.ஆர்:– கோயம்புத்தூரில், ராதாண்ணனுக்கு வேண்டிய யாரோ ஒரு செல்வந்தர் படம் எடுக்கப் பணம் கொடுக்கிறதா சொல்றதாகவும், அதனால் ஒரு மாசத்துல படத்தை எடுத்து ரிலீஸ் பண்றதுக்குத் தகுந்த மாதிரி நான் சேர்ந்தாற்போல 'கால்ஷீட்' தரணும்னு முத்துக்குமரன் பிக்சர்ஸ் வாசு எங்கிட்டே கேட்டாரு. போன தடவை மாதிரி இப்பவும் அவர் தவறான தகவல் கொடுத்து, மறுபடியும் என்னை மாட்ட வைக்கப்பாக்கிறதா என் மனசுல பட்டுச்சு. எப்படின்னா அவர் எப்பவுமே அழுத்தந்திருத்தமா பேசமாட்டாரு. நழுவி நழுவிப் பேசுவாரு. அதை வச்சு அவர் மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு. அவருக்கு நான் சொன்னேன்... பணம் கொடுக்குறவுங்க யாரா இருந்தாலும் சரி, அவுங்களை எங்கிட்டே அழைச்சிட்டு வாங்க. அவுங்களோட நான் நேர்ல பேசி, நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, அவர் உத்தரவாதம் கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தப்புறம்தான் என் கால்ஷீட்டைப் பற்றி நான் முடிவு செய்வேன். அதுவரைக்கும் தயவு செஞ்சு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க. இப்படி நான் சொல்லிக்கிட்டிருக்கும்போது – அதாவது வாசு உட்கார்ந்திருந்த பக்கம் அவர் முகத்தைப் பார்த்து நான் பேசிக்கிட்டிருக்கும்போது – ராதாண்ணன் என் ஓரமா நடந்துக்கிட்டிருந்தார். அப்போ என்னாச்சுன்னா... என்று எம்.ஜி.ஆர். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அதன் கீழ் முனையை எனது இடது காதுக்குள் நுழைத்தபின்பு... 'இப்போ சட்டுன்னு என் பக்கம் திரும்புங்க' என்றார். நான் அவ்வாறே திரும்பினேன். அந்த வேகத்தில் எம்.ஜி.ஆர். என் காதுக்குள் வைத்த பேனா வழுக்கிக் காதுக்குக்கீழே கழுத்துப்பகுதிக்கு வந்துவிட்டது. எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்:– இப்போ உங்களுக்கு புரியும்படியாக சொல்றேன். (பேனாவை எடுத்து உயர்த்திக்காட்டி) இந்தப்பேனா தான் ராதாண்ணனோட ரிவால்வர். அதன் முனையை அவர் என் காதுக்குள்ளே வச்சதும், ஏதோ ஒண்ணு காதுக்குள்ளே நுழையுதே என்னான்னு பார்க்க சட்டுன்னு திரும்பினேன் இல்லியா – அந்த வேகத்தில் காதுக்குள்ளே இருந்த ரிவால்வர் முனை வழுக்கிக் கழுத்துப்பக்கம் வரவும் ராதாண்ணன் அடுத்தடுத்து சுட்ட அந்த இரண்டு குண்டுகளும் என் கழுத்துக்குள்ளே போயிடுச்சி. நான் காதைக் கையால பொத்திக்கிட்டு, 'அண்ணே! என்ன இப்படி செஞ்சிட்டிங்க'ன்னு கேட்டபடியே எங்கே மறுபடியும் சுட்டுடுவாரோன்னு நினைச்சு ஒரு நொடியில் பாய்ந்து, சோபாவுக்குப் பின்னால உட்கார்ந்து மறைஞ்சிக்கிட்டேன். நான் செத்து விழுந்திட்டேன்னு அவர் முடிவு பண்ணிட்டார். 'அடப்பாவி! என்னடா இப்படி பண்ணிட்டே' என்று சொல்லி வாசு தாவி ராதாண்ணன் கையிலிருந்த ரிவால்வரைப் பிடுங்க எத்தனிச்சாரு. ஆனால் அதுக்குள்ளே அவர் ரிவால்வரை தன் உச்சந்தலையில் வச்சி இரண்டு தடவை தனக்குத்தானே சுட்டுக்கிட்டார். தலையிலிருந்து ரத்தம் கொட்டுச்சு. வாசு அவர் கையிலிருந்த ரிவால்வரைப் பிடுங்கி வீசி எறிஞ்சார். நான் வெளியே ஓடிவந்து காரில் ஏறிட்டேன். சத்தம் கேட்டு அந்தப்பக்கம் மெயின் வீட்டிலேருந்து அம்மாவும், நம்ம ரத்தினம் அண்ணனும், திருப்பதி சாமியும் ஓடிவந்தாங்க. என்னைப் பார்த்துவிட்டு அம்மா அலறினாங்க. 'உள்ளே போய் ராதாண்ணனைப்பாருங்கன்னு' அவுங்ககிட்டே சொல்லிட்டு நான் காரில் வேகமாக வெளியே போயிட்டேன். நேரா ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப்போய் அட்மிட் ஆயிட்டேன். கொஞ்ச நேரத்துல ராதாண்ணனும் போலீசால் அங்கு கொண்டு வரப்பட்டார். எங்க இரண்டு பேரையும் போலீஸ் பந்தோபஸ்தோட ஒரே வேன்ல ஏற்றி இங்கே ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டாந்தாங்க. (மிக்க உணர்ச்சிவசப்பட்டு) உடனே என்னை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோய் மயக்க மருந்து கொடுத்தாங்க. அதுவரைக்கும்தான் எனக்குத் தெரியும். அப்புறம் மயக்கமாயிட்டேன். அதுக்கப்பறம்... என்பதற்குள் ஜானகி அம்மா குறுக்கிட்டு – தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி... அம்மா:– போதுங்க, போதும். இனிமே பேசாதீங்க. (தேவரண்ணனிடம்) அண்ணே! தயவு பண்ணி நீங்க புறப்படுங்க. அவர் ரொம்ப களைச்சிப்போயிட்டாரு. அவரைப்படுக்க வச்சு தூங்க வைக்கணும். புறப்படுங்க என்றார். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். அடுத்த நாள் காலை ஒன்பது மணி! தேவர் பிலிம்ஸ் அண்ணனின் அறையில் அமர்ந்து அவரும் நானும் முந்தின நாள் எம்.ஜி.ஆர். சொன்னதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் தம்பி – இயக்குநர் எம்.ஏ.திருமுகம் அண்ணனின் அறைக்குள் நுழைந்து எதிரில் அமர்ந்தார். அவருக்கு அடுத்த தம்பியும் அலுவலக நிர்வாகியும் பொருளாளருமான எம்.ஏ.மாரியப்பன் மூலமாக அண்ணன் எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி பணம் கொண்டு போய் கொடுக்கும் விஷயத்தை திருமுகம் தெரிந்து வைத்திருந்தார் என்பதை அவர் பேச்சிலிருந்தே நான் புரிந்து கொண்டேன். அண்ணன் கூடவே நானும் போவதும் அவருக்குத் தெரிந்திருந்தது. அண்ணனிடம் உறவுடனும், உரிமையுடனும் தம்பி கேட்டார்:– திருமுகம்:– 'ஏண்ணே! இப்படி லட்சம் லட்சமா கொண்டுபோய் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்குறியே. அவர் நல்ல ஆரோக்கியத்தோட ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வந்து மறுபடியும் படங்கள்ல நடிப்பார்னு என்ன நிச்சயம்? அதுதான் கொடுக்கவேண்டிய அளவுக்கும் மேல கொடுத்திட்டியே. மறுபடியும் இப்போ உபரித்தொகையா ஏன் கொண்டுபோய் கொட்டுறே? அவர் இதோட மேற்கொண்டு படத்துல நடிக்காம வீட்டுலேயே செட்டில் ஆயிடலாம். ஆனால் நாம படம் எடுக்காமல் இருக்க முடியுமா? அதுக்குப்பணம் வேண்டாமா? அவருக்கு நீ கொடுக்கிற பணத்தை திருப்பி உனக்குக் கொடுப்பாரா? அண்ணன்:– பணத்தைத் திருப்பிக் கொடுக்கலேன்னாலும் படத்துல நடிச்சுக் கொடுப்பாருங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்படியே அவர் கொடுக்கலேன்னாலும் அதைப்பத்தி நான் கவலைப்படலை. நம்மோட 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில எம்.ஜி.ஆர். நடிச்சதுக்கப்பறந்தான் நாம சொத்துபத்து வாங்குனோம். இவ்வளவு பெரிய கட்டிடமே அவர் நடிச்ச படங்கள்ல கிடைச்ச லாபத்தை வச்சித்தானே வாங்கினேன். அதுக்கு முந்தி வாடகை இடத்துல இருந்து கிட்டு, கைக்கும் வாய்க்குமாகத்தானே வாழ்ந்துகிட்டிருந்தோம். நீ வீணா கவலைப்படாதே. முருகன் என்னைக் காப்பாத்துவான். அடுத்தபடியா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேருல ஜெயலலிதாவை வச்சு ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவோம். அதுக்குள்ளே எம்.ஜி.ஆர். நல்லபடியா வீட்டுக்கு வந்திடுவாரு. மறுபடியும் இந்த வருஷத்துக்குள்ளே அவரை வச்சு அடுத்த படம் எடுத்துக்காட்டுறேனா இல்லியா பாரு. நீ புறப்பட்டுக்க. இயக்குநர் என்ற முறையில் அல்ல – உடன் பிறந்த தம்பி என்ற உறவைக்கொண்டு திருமுகம் அப்படிக் கூறியதில் தவறொன்றுமில்லை. அது சரிதான். ஏனென்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தெழுவது கடினம் என்றும், அப்படியே வந்தாலும் இனிமேல் படங்களில் அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு, இத்துடன் அவருடைய சினிமா வாழ்க்கை முடிந்து போய்விடும் என்றும் அன்றைய பட உலகில் பரவலாகப் பேசப்பட்டது. பலர் அதை நம்பினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். நலமுடன் திரும்பி வந்து தங்கள் படங்களில் நடிப்பார் என்ற முழு நம்பிக்கை கொண்ட இருவருள் ஒருவர் தேவரண்ணன். இன்னொருவர் அண்ணன் ஆர்.எம்.வீரப்பன். தம்பி திருமுகத்திடம் சொன்னபடியே தண்டாயுதபாணி பிலிம்ஸ் பெயரில் ஜெயலலிதாவை வைத்து இரண்டே மாதங்களில் ஒரு படம் எடுத்து தமிழ் வருடப்பிறப்பன்று 14.4.1967–ல் வெளியிட்டார், தேவரண்ணன். அதுதான் 'மகராசி'. அதற்கும் வழக்கம்போல நான்தான் வசனம் எழுதினேன். அத்துடன் அண்ணன் விட்டுவிடவில்லை. அவர் சொன்னபடியே – நம்பியபடியே எம்.ஜி.ஆர். நலம் பெற்று இல்லம் திரும்பி ஏற்கனவே பாதிப்படம் வரை நடித்து பாக்கி வைத்திருந்த ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் 'காவல்காரன்' படத்தை நடித்து முடித்து 7.9.1967–ல் அது ரிலீஸ் ஆன பிறகு அடுத்தபடியாக எம்.ஜி.ஆர். – கே.ஆர்.விஜயாவை வைத்து தேவரண்ணன் வழக்கம்போல குறுகிய காலத்தில் ஒரு படம் எடுத்து, 1.11.1967–ல் வெளியிட்டார். அதுதான் 'விவசாயி'. வழக்கம்போல நான் வசனம் எழுதவேண்டிய அந்தப்படத்திற்கு என்னால் எழுத இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் அந்தச் சமயத்தில் ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரித்த 'பெண் என்றால் பெண்' படத்திற்கு கதை வசனம் எழுதி, முதல் முறையாக நான் இயக்கியதன் காரணமாக அந்த ஒரு படத்திலேயே முற்றிலுமாக முடங்கிப்போய் விட்டேன். விபரீதமாக நிகழ்ந்த – உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய விபத்திலிருந்து 'விதி'யின் வலிமையைக் கொண்டு மீண்டு வந்து, எம்.ஜி.ஆர். எடுத்த விஸ்வரூபத்தைக்கண்டு பட உலகம் மட்டும் அல்ல – நாடே வியப்பில் ஆழ்ந்தது. எம்.ஜி.ஆர். இனி பிழைக்கமாட்டார் என்று தப்புக்கணக்குப் போட்டு ஒதுங்கியவர்கள் எல்லாம் இப்பொழுது மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ளப்பார்த்தார்கள். இனமும் குணமும் புரிந்துகொண்டு எம்.ஜி.ஆர். அவர்களைத் தவிர்த்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. அன்றைய பிரபல கிரிமினல் வழக்கறிஞரான 'வானமாமலை' எம்.ஆர்.ராதா சார்பில் ஆஜராகி வாதாடினார். ஆயினும் சந்தர்ப்பச் சாட்சியங்களைக் கொண்டு குற்றம் உறுதி செய்யப்பட்டு, எம்.ஆர்.ராதா ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தீர்ப்பு வெகு நாட்களுக்குப்பின்னர் தாமதமாக வழங்கப்பட்டதால் அதுவரையில் சிறையில் இருந்த ஒன்றரை வருட காலம் தள்ளப்பட்டு அத்துடன் இன்னும் சில காரணங்களால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு, இறுதியில் ஏறத்தாழ நான்கரை வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவில் எம்.ஆர்.ராதா விடுதலை பெற்று வெளியில் வந்தார். 1978 ஜனவரி மாதம் 16–ந்தேதி. காணும் பொங்கல் நாள். அன்றைக்கு உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் பட உலகத்தினர் திரண்டு பிரபல இயக்குநர் – வரிசையாக அடுத்தடுத்து பல 'ப', 'பா'வை முன் முதல் எழுத்தாகக்கொண்ட 'நடிகர் திலகம் சிவாஜி' நடித்த பல வெள்ளி விழாப்படங்களையும், இந்தி மொழிப்படங்களையும் இயக்கி அனைத்து இந்தியப் புகழ் பெற்றிருந்த ஏ.பீம்சிங் இல்லத்திற்கு காணும் பொங்கலும் அதுவுமாக அவரைக்காண வந்தனர். கைகளில் மலர் மாலைகளுடன். ஆனால், அவரோ சர்வமும் அடங்கிப்போன நிலையில், சடலமாகப் படுத்து மீளாத்துயில்கொண்டிருந்தார். அன்றாடம் புன்னகை பூத்திருக்கும் அந்தப் பூந்தோட்ட முகம் வாடிப்போயிருந்தது. என் கையிலிருந்த ரோஜா மலர் மாலையை அவர் கழுத்தில் அல்ல – காலடியில் சமர்ப்பித்துவிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, சற்றுத்தள்ளிப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தேன். ஏற்கனவே பலர் அங்கு அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் என்னைப்பார்த்து, ''தாசு! நல்லாருக்கியா?'' என்று கேட்டார். அந்த குரலுக்கு உரிய அவரை நான் ஏறிட்டுப்பார்த்தேன். அவருடைய தலை முடிகள் உதிர்ந்து போயிருந்தன. முகம் – வெயிலில் காய்ந்த வத்தல் போல வாடி வதங்கி இருந்தது. உடல் மெலிந்திருந்தது. நீளமான கோடு போட்ட லூஸ் பைஜாமாவும், அதே துணியில் 'நைட் டிரஸ்' போன்ற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். வைத்த விழி வாங்காமல் அவரையே பார்த்தேன். கடந்த 1959–ம் ஆண்டிலிருந்து 66 வரையில் எட்டு ஆண்டுகள் அவரோடு பழகி அவருடைய அன்புக்கு நான் ஆளாகி, அவரால் புகழப்பட்டுப் பாராட்டுப் பெற்றிருக்கிறேன். அன்றைக்கு கம்பீரமாக நடந்து, கர்ஜனை செய்த அந்தச் சிங்கமா இன்றைக்கு இப்படி அடங்கிப்போய் அமைதியாக அமர்ந்திருக்கிறது? என்னால் நம்பவே முடியவில்லை. அவரா இவர்? என்று எண்ணி கொண்டேன். என்னை இத்தகைய அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்திற்கும் ஆளாக்கிய அவர் வேறு யாரும் அல்ல – 'நடிகவேள்' எம்.ஆர்.ராதாண்ணன்தான். அவர் அருகில் அவருடைய முன்னாள் ஒப்பனையாளர் – மேக்அப் மேன் கஜபதி உட்கார்ந்திருந்தார். எம்.ஆர்.ராதா:– ஊர்லதான் இருக்கியா? உன்னைப் பார்க்கவே முடியலியே?. வீட்டுல குழந்தை குட்டிங்கள்ளாம் நல்லாருக்குங்களா? நான்:– நல்லாருக்காங்கண்ணே. எல்லாம் உங்க ஆசீர்வாதம். எம்.ஆர்.ராதா:– (வழக்கமான இழுப்புக்குரலில்) என்னத்த ஆசீர்... வாதம்? நான் ஆசீர்வாதம் பண்ணி இதுவரைக்கும் ஒருத்தன்கூட உருப்பட்டது கிடையாது. அந்த மாதிரி அப்பவுலேருந்து பல பெரியவுங்க என்னை ஆசீர்வாதம் பண்ணி நானும் உருப்படலே. உனக்குத்தான் என்னைப்பற்றி நல்லா தெரியுமே. உங்கிட்டேதான் பல படங்கள் நான் நடிச்சிருக்கேன். ஆமா... தேவரண்ணன் எப்படி இருக்காரு. உங்களையெல்லாம் நான் பார்த்து அஞ்சாறு வருஷமாச்சு. அஞ்ஞாத வாசம். கொஞ்சம் அப்படிவா தள்ளிப்போய் தனியா உட்கார்ந்து உங்கிட்டே ஒரு விஷயம் பேசணும். வா. இதைக்கேட்டதும் எனக்கு 'திக்' என்றிருந்தது. என்ன சொல்லப் போகிறாரோ, என்னமோ என்று சென்று தனியாக அவருடன் அமர்ந்தேன். 'நடிகவேள்' பேசினார்:– எம்.ஆர்.ராதா:– தாசு! (ஒரு சிகரெட்டை உருவி உதட்டுக்கிடையில் பொருத்திப் பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்து ஊதிவிட்டு) நான் உள்ளே இருக்கும்போது சோறும் அவிச்ச வேர்க்கடலை, கொண்டக்கடலையைத் தின்னுக்கிட்டு சும்மா இல்லே – சொறி பிடிச்சவன் கையும், வெறி பிடிச்சவன் மூளையும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. ''வால்டர்''னு ஒரு சர்வதேசக் கடத்தல் மன்னன் என்னோட ஜெயில்ல அதே வார்டுல இருந்தான். அவன் பிரெஞ்சுக்காரன். அவனுக்கு நான் ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தேன். அவன் எனக்கு பிரெஞ்சு மொழி கத்துக்கொடுத்தான். கொஞ்சம் கொஞ்சம் பேசக்கத்துக்கிட்டேன். சின்ன வயசுலேருந்தே மூஞ்சில பவுடரைத் தடவிக்கிட்டு ராக்கூத்து ஆடுனவன்லியா. என்னை மாதிரி எந்த நாடகக்காரனும் ராத்திரியில கண்ணு முழிச்சிருக்கமாட்டான். எனக்கு மரத்துப்போன கண்ணுங்க. அதனால் ராத்திரியில் தூக்கமே வராது. அதனால்தான் சரக்கை ஏத்திக்குவேன்... ஆச்சா... ஒருநாள் ராத்திரி ஒரு கதை எம் மனசுல உருவாச்சு. அது உண்மையா நடந்த கதை. அதை அப்படியே மனசுலயே வச்சிக்கிட்டேன். ரிலீசாகி வெளியே வந்ததும் அதை நல்லா டெவலப்பண்ணி நாடகமா எழுதி நடத்தணுன்னு நினைச்சேன். எனக்கு சரியான எழுத்தாளன் கிடைக்கலே. நான் உள்ளே போயிட்டு வந்ததுலேருந்து முந்தி மாதிரி ஒரு பயலும் என் வீட்டுக்கு வரமாட்டேங்குறானுங்க. பயப்படுறானுங்க. இருக்கட்டும்.
இப்போ உன்னைப் பார்த்ததும் ஒரு யோசனை. அந்தக் கதையை உங்கிட்டே சொல்லி, அதோட உன் கற்பனையையும் சேர்த்து நாடகமாக எழுதிக்கொடுத்தின்னா அதை அரங்கேற்றம் பண்ணி நடத்தலான்னு ஐடியா. எனக்கும் திருவாரூர்கார எழுத்தாளன்களுக்கும் ஒரு ராசி இருக்கு. அரங்கேற்றம் அன்னிக்கு வர்ற புல் கிராண்ட் கலக்ஷனை அப்படியே உனக்குக் கொடுத்து அதோட உனக்கு ஒரு பட்டமும் கொடுக்கிறேன். இந்த நாடகம் ரத்தக்கண்ணீரைவிட நல்லா இருக்கும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அந்தக் கதையை பத்து நிமிஷங்களுக்குள்ளே சுருக்கமாகச் சொல்கிறேன் கேளு. அப்புறம் அதை நீ உன் கற்பனைக்குத் தகுந்தபடி டெவலப்பண்ணிக்க. உன் திறமை எனக்குத் தெரியும். 'நடிகவேள்' சொன்ன அந்தக் கதைச்சுருக்கத்தைக்கேட்டு நான் நடுங்கிப்போய்விட்டேன். நான்:– என்னண்ணே! எம்.ஜி.ஆரை நீங்க சுட்டதை வச்சி கதை சொல்றீங்க? எம்.ஆர்.ராதா:– (சிரித்தபடி) ஆ...! ... கண்டுபிடிச்சிட்டே. நீ புத்திசாலி. அதேதான். அதைத்தான் ஒரு கதையா பண்ணியிருக்கேன். நீ என்ன செய்யணுன்னா... ராமச்சந்திரன்கிற பேரை பாலச்சந்திரன்னும், ராதாங்குற என் பேரை வேதான்னும், வாசுங்குற அவன் பேரை ராசுன்னும் வச்சி எழுது. அப்போதான் ஜனங்களுக்குப் புரியும். அப்புறம்... இந்தக்கதைக்கு நீ ஒண்ணும் டைட்டில் வைக்கவேண்டாம். நான் ஏற்கனவே பிக்ஸ் பண்ணி வச்சிருக்கேன். பிரமாதமான டைட்டில். என்ன தெரியுமா? ''சுட்டான் – சுட்டேன்'' எப்படி? என்று சொல்லிவிட்டு அவரது வழக்கம்போல வாய்விரிய பலமாக விட்டு விட்டுச்சிரித்தார். நான்:– என்னண்ணே? நீங்கதானே அவரைச் சுட்டுட்டு அப்பறம் உங்களைச் சுட்டுக்கிட்டிங்க. அவர் எங்கே உங்களைச்சுட்டார்? 'சுட்டான் – சுட்டேன்'னு சொல்றீங்களே. இது சரியா? எம்.ஆர்.ராதா:– (சலித்துக்கொண்டு) அடபோப்பா. உலகம் புரியாதவனா இருக்கியே. உண்மையைச்சொன்னா, அதுல என்ன 'இன்ட்ரஸ்டு' இருக்கு? பொய்யை மிகைப்படுத்தி சொன்னாத்தான் நல்லாருக்கும். இன்னிக்கு நம்ம நாட்டு மக்கள் அதைத்தான் நம்புறாங்க. நான் 50 வருஷத்துக்கு மேல மேடையில் நடிச்சி நடிச்சி அனுபவப்பட்டவன். நான் சொன்னா அது சரியா இருக்கும். நான்:– இப்படிப்பட்ட இயற்கை அறிவு கொண்ட நீங்க எதுக்காகண்ணே அந்தக்காரியத்தைச் செஞ்சீங்க? எம்.ஜி.ஆரை நீங்க சுடலாமா? உங்க வாழ்நாள்ள நாலஞ்சி வருஷம் வீணாப்போயிடுச்சு இல்லியா? இந்த இடைக்காலத்துல நீங்க என்னென்னமோ பல நல்ல காரியங்கள்ளாம் பண்ணியிருக்கலாமே. அவர் மேலும் தொடர்ந்தார்:– எம்.ஆர்.ராதா:– என் பொண்டாட்டிகிட்டேகூட சொல்லாததையெல்லாம் இப்போ உங்கிட்டே சொல்லிட்டேன். இதையெல்லாம் உன் எழுத்துல வச்சுப்பின்னி நாடகத்தை உருவாக்கணும். கடைசி கிளைமாக்ஸ்,... கோர்ட் சீன். நான் செஞ்சதை நியாயப்படுத்தி நீ என்ன வேணுன்னாலும் எழுது. நான் நடிச்சிக்காட்டுறேன் பார். ஜனங்களை அழவச்சிக் காட்டுறேன். இந்த நாடகத்தை இரண்டு ரத்தக்கண்ணீர் ஆக்கிக்காட்டலே நான் ராதா இல்லே. சோதா! உன் எழுத்து! என் நடிப்பு! இந்த நாடே குலுங்கும்! நாளைக்கே வா. நம்ம வீட்டு மாடியில் உட்கார்ந்து எழுது. அப்போ படத்துக்கு உனக்கு அட்வான்ஸ் கொடுத்தேன். இப்போ நாடகத்துக்குக் குடுக்கிறேன். வாங்கிக்கோ. எழுது. நாளைக்கு காலையிலே நான் உனக்கு வண்டி அனுப்பவா, இல்லே நீயே வர்றியா? நான்:– (உள் நடுக்கத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல்) நானே வர்றேண்ணே. எம்.ஆர்.ராதா:– எதிர்பார்த்துக்கிட்டிருப்பேன். நான்:– சரிண்ணே, என்றபடி புறப்பட்டேன். நான் எதிர்பார்த்தபடியே மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் அவர் யாரையோ விட்டு எனக்குப்போன் பண்ணிக் கேட்கச் சொல்லி இருக்கிறார். நான் பிடிகொடுக்கவும் இல்லை. அவரிடம் பிடிபடவும் இல்லை. *** 'நான் செய்த இரண்டு தவறுகள்' –எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர். வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றது குறித்து எம்.ஆர்.ராதா என்னிடம் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:– எம்.ஆர்.ராதா:– இதோபார், நீ என் புள்ளை மாதிரி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு ஒரு உண்மையை உங்கிட்டேதான் சொல்றேன். நான் பெரியார் வழியைப் பின்பற்றுறவன். இந்த சத்தியம் அது இதுன்னு எல்லாம் சொல்லி எனக்குப் பழக்கம் இல்லே. உண்மைன்னா உண்மை. அவ்வளவுதான். நான் சுடணுங்குற எண்ணத்துல துப்பாக்கியோட தோட்டத்துக்குப்போகலே. சுடணும்னு முடிவு பண்ணியிருந்தா ஸ்டூடியோவுலேயே வச்சி சுட்டிருப்பேன் இல்லியா? சுட்டுடுவேன்னு சொல்லி ரிவால்வரைக்காட்டி சும்மா மிரட்டுறதுக்காகத்தான் கொண்டு போனேன். அ அதனால் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகலே. வட்டி இல்லாம வெறும் கைமாத்தா வாசுவுக்கு நான் கொடுத்த லட்ச ரூபாய் பணத்தை சொன்னபடி எனக்குத் திருப்பிக் கொடுக்க அவனால் முடியவில்லை. எம்.ஜி.ஆரை வச்சு படம் தொடங்கினா போதும். எல்லா ஏரியாவும் வித்து பணம் கைக்கு வந்திடும். அதுல எனக்குக் கொடுக்கவேண்டிய லட்ச ரூபாயைக் கொடுத்திட்டு பாக்கிய வச்சுப் படத்தை முடிச்சிடலான்னு வாசு சொன்னதை நான் நம்பிட்டேன். அவன் தப்புக்கணக்கு போட்டான். அது நடக்கலே. கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி. தேவை இல்லாமல் நான் வீணா மாட்டிக்கிட்டேன். அப்படி இப்படின்னு படத்தை ஒரு வழியா முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டு அடுத்தபடியா பைனான்சுக்கு கோயம்புத்தூர்ல ஒரு பார்ட்டியைப் பார்த்து பேசி முடிச்சிட்டு, கால்ஷீட் கேட்குறதுக்காகத்தான் தோட்டத்துக்குப்போனோம். சும்மா சொல்லக்கூடாது. நான் இடுப்புல துப்பாக்கியை சொருகி மறைச்சு வச்சிருந்தது பாவம் வாசுவுக்குத் தெரியாது. போறதுக்கு முன்னால நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அது என்னன்னா, அன்னிக்கு மத்தியானம் வாசு வீட்டுல நான் சாப்பிடும்போது ஒரு கால் பாட்டிலும், அப்புறம் சாயந்திரம் போறதுக்கு முன்னால குடிச்சிட்டு பாக்கி வச்சிருந்த அந்தக் கால் பாட்டில் சரக்கையும் ஏத்திக்கிட்டேன். கோயம்புத்தூர் பைனான்ஸ் பார்ட்டியைக் கொண்டாந்து தனக்கு காட்டும்படியா ராமச்சந்திரன் சொன்னதைக்கேட்டதும் எனக்கு கோபம் வந்திடுச்சு. என் இடுப்புலேருந்து ரிவால்வரை உருவி சும்மா மிரட்டுறதுக்காக பொட்டுல வைக்கிறதா நினைச்சு காதுக்குள்ளே வச்சிட்டேன். நல்ல போதை மப்பு வேறயா? என்ன செய்றோம்னு எனக்கே தெரியலே. ரிவால்வர் குதிரையை (விசையை) தவறுதலாக அழுத்திட்டேன். இப்பவும் சொல்றேன், நான் செஞ்சது குற்றம் இல்லே. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் பொழைச்சிக்கிட்டோம். ஆனால் என்னோட தப்பு, அதுவும் இரண்டு தப்பு. ஒண்ணு ரிவால்வரைக் கொண்டு போனது. இரண்டாவது குடிச்சிட்டுப்போனது. இந்த இரண்டு தப்பையும் நான் செய்யாமல் இருந்திருந்தால் நீ சொன்ன மாதிரி, என் வாழ்நாள்ள அனாவசியமா அஞ்சு வருஷம் அநியாயத்துக்கு வீணா போயிருக்காது. இந்த அஞ்சு வருஷத்துல அம்பது படம் நடிச்சி லட்சம் லட்சமாக சம்பாதிச்சிருப்பேன். போச்சு. எல்லாமே போச்சு'. சில விநாடி நேரம் மவுனம். அவர் முகம் கவலை தோய்ந்து காணப்பட்டது. தான் செய்த தவறைப்பற்றிய அந்த உண்மையான உணர்வு, தளர்ந்துபோன அவர் முகத்தில் பரவிப்படர்ந்தது. கண்கள் கலங்கின. category: |
| அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வெளிநாட்டு பெண்ணை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை Posted: 27 Dec 2013 12:55 PM PST மும்பை, பாந்திராவில், அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வெளிநாட்டு பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. வெளிநாட்டு பெண் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு மும்பைக்கு சுற்றுலா வந்திருந்தார். அந்த பெண் பாந்திரா பெரி கிராஸ் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் 3–வது மாடியில் அறை எடுத்து தங்கியிருந்தார். கடந்த நவம்பர் 5–ந்தேதி தனது அறையில் அவர் தனியாக இருந்தார். அப்போது, ஜன்னல் வழியாக முகமது பாதுஷா அன்சாரி(28) என்ற வாலிபர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி அறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தார். பின்னர் அந்த பெண்ணை கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். கற்பழிப்பு சுற்றுலா வந்த இடத்தில் கற்பழிக்கப்பட்டதால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அந்த பெண், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுஷாவை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண் ஸ்பெயின் சென்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் பாதுஷாவிற்கு எதிராக போலீசார் இந்த வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்தார். ஆயுள் தண்டனை இந்த வழக்கு நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஷி முன்னிலையில் நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நேற்று நடந்தது. பாதுஷா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்காக தன்னை மட்டுமே நம்பியுள்ள மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோரை கருத்தில் கொண்டு தனக்கு கருணை வழங்கும்படியும் பாதுஷா கோர்ட்டில் முறையிட்டார். ஆனால், அரசு வக்கீல் உஜ்வல் நிகாம் நாட்டின் மரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்து கொண்ட அவருக்கு கருணை காட்டக்கூடாது என்று வாதிட்டார். விசாரணை முடிவில், வெளிநாட்டு பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக பாதுஷாவிற்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 27 Dec 2013 12:52 PM PST சென்னை, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ரூ.20 கோடி அனுமதித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு உயர் சிகிச்சை இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– நலமான சமுதாயமே வளமான நாட்டிற்கு அடிப்படையாகும். மாநிலத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களை தீட்டி முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நோய் சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவமனைகளை நாடிவரும் பொதுமக்களுக்கு உயர்தர நவீன சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொது மருத்துவமனைகள் அதன்படி சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள 4 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ரூ.3 கோடி, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 10 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ரூ.3 கோடி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள 8 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ரூ.2 கோடியே 50 லட்சம், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள 3 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒரு கோடி ரூபாய், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள இரண்டு அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் என ரூ.12 கோடியும், ரூ.20 கோடிக்கு ஒப்புதல் பரமக்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில், அறந்தாங்கி, திருமயம், திருச்செந்தூர், பொள்ளாச்சி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, குன்னூர், மன்னார்குடி, திருச்சி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, செய்யார், பென்னாகரம் ஆகிய 16 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ரூ.50 லட்சம் என ரூ.8 கோடியும், ஆக மொத்தம் ரூ.20 கோடி செலவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியும், நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. image: category: |
| Posted: 27 Dec 2013 12:50 PM PST Image Upload: ![]() |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



துவும் ஏன்? இரண்டு மாசத்துக்குள்ளே முடிச்சு ரிலீஸ் பண்ணணும்னு திட்டம் போட்டு தொடங்கின ''பெற்றால்தான் பிள்ளையா'' படம் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாமல் லேட்டாகி வருஷக்கடைசிக்கு வந்திடுச்சி.