Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Posted: 23 Dec 2013 03:11 PM PST

5. தலைமுறைகள் நல்ல படம். பாலுமகேந்திராவின் முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு. நல்ல படங்களை நாங்க பார்ப்போம் என்று ஜல்லியடிக்கும் யாரும் இந்தப் படத்தை பார்க்கவில்லை. அதனால் வெளியான முதல் மூன்று தினங்களில் வெறும் 2.4 லட்சங்களை மட்டுமே படம் வசூலித்திருக்கிறது. தமிழனின் ரசனை எப்போதோ தீய்ந்து போய்விட்டது என்பதற்கு இன்னொரு உதாரணம்.

இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

Posted: 23 Dec 2013 03:02 PM PST

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததையடுத்து இப்போது அவர் நார்மலாக ...

மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

Posted: 23 Dec 2013 02:59 PM PST

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த திருக்குமரன், பிரணவ மந்திரத்தை தனது தந்தைக்கு உபதேசித்த திருத்தலம் எது என்றால் சுவாமிமலை என்று சட்டென்று பதில் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவன் உபதேசித்த திருத்தலம் எது என்றால், பலரும் திசை தெரியாதவர் போல் முழிக்கத்தான் செய்வார்கள். அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலம் கோவை மாட்டம் செஞ்சேரிமலையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவன் உபதேசித்த திருத்தலம் இது என்பதால் மிகவும் பழமையான திருத்தலம் ...

கோமுகாசனம்

Posted: 23 Dec 2013 02:57 PM PST

செய்முறை: முதலில் விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். பின்னர் இடக்காலின் முழங்காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று இடக்காலின் மீது அமரவும். முழங்கால் தரைமீது இருப்பது போல வைக்கவும். வலக்காலை வளைத்து,இடக்காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும், அப்போது வலது பக்க முழங்கால்,இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது புட்டத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும். வலது பக்க முழங்கையை மடித்து, கீழ்ப்புறமாக வளைத்து, முதுகுப்புறம் கொண்டுவரவும். இடக்கையை வளைத்துத் ...

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

Posted: 23 Dec 2013 02:54 PM PST

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு சென்னை:பசு மற்றும் எருமை பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், கூட்டுறவு அமைப்பின் கீழ் உள்ள, 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். அதே நேரத்தில், ஆவினில் விற்கப்படும் பால் விலையில் மாற்றமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது. "தமிழக அரசின், ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும், பால் கொள்முதல் விலையை, உயர்த்தி தர வேண்டும்' என, பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர், கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலிக்க, ...

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 23 Dec 2013 02:49 PM PST

70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது. இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் ...

கஞ்சா நகரமான தேனி மாவட்டம்

Posted: 23 Dec 2013 02:24 PM PST

தேனி மாவட்டம் சின்ன மனூர் ரைஸ்மில் தெருவில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வினோஜி தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள இன்பராஜ் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இன்பராஜின் மனைவி அன்னலட்சுமி (வயது27), கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மனைவி ராக்கம்மாள் (50) ஆகிய 2 பேர் 16 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் ...

மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.

Posted: 23 Dec 2013 02:23 PM PST

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம். 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார். நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த ...

நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விவேக் ஓபராய்க்கு அழைப்பு

Posted: 23 Dec 2013 02:20 PM PST

குஜராத் முதல் அமைச்சரும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவரது இளம் வயது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கிறார் இயக்குனர் மிதேஷ் பட்டேல். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிதேஷ் பட்டேல் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். சாதாரண டீக்கடை நடத்தி பின்னர் அரசியலுக்கு வந்து, படிப்படியாக முன்னேறி மாநிலத்தின் முதல்வராக உயர்ந்தவர் மோடி. அவரது வளர்ச்சியால் ஈர்க்கப்பட்ட மிதேஷ், அவரது வாழ்க்கை வரலாறை படம் எடுக்க திட்டமிட்டார். இதற்காக ...

ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் முதலிடத்தை நோக்கி இந்தியா!

Posted: 23 Dec 2013 02:16 PM PST

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இது முதலிடமாகும். வரும் 2016 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியா முதலிடம் வகிக்கும் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 37.4 சதவீதமும், இந்தோனேசியாவில் 28.7 சதவீதமும், மெக்ஸிகோவில் ...

சாம்பாரின் வயசு என்ன?

Posted: 23 Dec 2013 02:15 PM PST

இன்றைக்கு இட்லிக்கோ, சோற்றுக்கோ நாம் முதலில் தேடும் சாம்பாரின் வயசு, வெறும் 300தான். இவ்வளவு குறுகிய காலத்தில் புகழ்பெற்ற சாம்பாரின் வரலாற்றைத் தேடிப் போனால், தஞ்சையை ஆண்ட சாம்போஜி என்ற அரசர் சிறந்த சமையல் கலை நிபுணராக இருந்ததாக அந்தக் கதை தொடங்கும். அவருக்கு ரொம்பப் பிடித்த ஆம்தி என்ற மராட்டியக் குழம்பை வைப்பதற்குத் தேவையான கோகம் புளி ஒரு நாள் கிடைக்காமல் போன நிலையில், அந்தத் தகவலை அவரிடம் தெரிவிக்க அரண்மனை சேவகர்கள் பயந்தார்களாம். அப்போது சமர்த்தியமான ஒரு சேவகர், கோகம் புளியைவிட, தஞ்சையின் ...

வண்ணங்களுக்காக ஓர் வலைத்தளம்

Posted: 23 Dec 2013 02:13 PM PST

ஒரு வழியாக வீடு கட்டி முடித்தாயிற்று. அடுத்து என்ன?, அதனை வண்ணங்களால் அழகு படுத்த வேண்டும். மழை புகாத வகையிலான வண்ணங்களா, வேறு வகையிலானவையா என்பது ஒரு புறம் இருக்க, எந்தெந்த அறைகளுக்கு எந்தெந்த வண்ணங்களைப் பூசுவது என்பது குடைச்சலான விஷயம்தான். வீட்டுக்கு வண்ணங்களை எப்படித் தேர்வு செய்வது? மிகப்பெரிய அறைகளை சிறியதாக கச்சிதமாகக் காட்ட அடர் வண்ணங்களைப் பூச வேண்டும். சிறிய அறைகளை எடுப்பாகவும், விசாலமாகவும் காட்ட வெளிர் வண்ணங்களைப் பூச வேண்டும் போன்ற அடிப்படையான விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு ...

உலகச் செய்திகள்!

Posted: 23 Dec 2013 02:12 PM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

எய்ட்ஸுக்கு புதிய மருந்து

Posted: 23 Dec 2013 02:02 PM PST

எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு புதிய மருந்தினைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கை, கால் வலிப்புக்காக தயாரிக்கப்பட்ட மருந்து, எச்.ஐ.வி. வைரஸுக்கு எதிராகப் போராடுவதாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கிளாட்ஸ்டோன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி டாக்டர் வார்னர் கிரீன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: எங்களது ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனித திசுக்களில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து செலுத்தப்பட்டது. பின்னர் எச்.ஐ.வி. வைரஸை அந்த மனித திசுக்களில் செலுத்தியபோது ...

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை: பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை

Posted: 23 Dec 2013 02:01 PM PST

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையை பிரான்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். பிரான்ஸை சேர்ந்த 75 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் இயங்கக்கூடிய செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உயிரி மருந்தியல் நிறுவனமான கார்மட் இந்த செயற்கை இதயத்தை வடிவமைத்துள்ளது. இந்த இதயம் லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. பேட்டரியை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும். உயிரி பொருள்களுடன் மாட்டின் திசுக்களும் கொண்டு செயற்கை இதயம் உருவாக்கப்பட்டுள்ளதால், ...

தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்

Posted: 23 Dec 2013 02:00 PM PST

தெற்கு சூடானில் ஐ.நா. முகாம் மீது அரசு எதிர்ப்புப் படையினர் 2,000 பேர் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக ஐ.நா. சபை அதிகாரி புகழாரம் சூட்டியுள்ளார். தெற்கு சூடானில் அதிபர் சல்வா கிர்க், முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது. அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பெரும்பான்மை பழங்குடி இனத்தைச் ...

E-Tweets

Posted: 23 Dec 2013 11:07 AM PST

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Posted: 23 Dec 2013 10:54 AM PST

இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

Posted: 23 Dec 2013 10:41 AM PST

பால முருகன் சின்னச்சின்னக் குழந்தையம்மா எங்கள் பாலமுருகன்-புன் சிரிப்புக்காட்டி மயக்கிடுவான் எங்கள் பாலமுருகன் வண்ணமயில் மீதிருப்பான் எங்கள் பாலமுருகன்-கையில் வடிவேலும் வைத்திருப்பான் எங்கள் பாலமுருகன் பிள்ளையாரின் நல்லதம்பி எங்கள் பாலமுருகன்-சிறு பிள்ளைகளின் இனியதோழன் எங்கள் பாலமுருகன் கள்ளமில்லா உள்ளங்கொண்டால் ...

சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்!

Posted: 23 Dec 2013 10:38 AM PST

மும்பை : அமெரிக்காவில், 'விசா' மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள, தூதரக அதிகாரி தேவயானிக்கு, மும்பையில் உள்ள, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் உட்பட, 11 இடங்களில், அசையா சொத்துக்கள் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த, தேவயானி என்ற பெண் அதிகாரி மீது, அந்த நாட்டு அரசு, விசா மோசடி செய்ததாக, வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிகாரிகள், தேவயானியை கைது செய்தது, அவரை நடத்திய விதம் ஆகியவை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், ...

சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்:

Posted: 23 Dec 2013 10:26 AM PST

சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்: (சுய அறிமுகத்துக்குப் பின், பேச ஆரம்பித்த கொஞ்ச நாள்ல..) 1. உன்ன நா எப்டி கூப்பிட்றது?? அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?"னு அர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். "உங்க இஷ்டம்"னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி"னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான் கூப்டுவேன்.. ...

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.

Posted: 23 Dec 2013 10:13 AM PST


கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..!

எலிக்கு பூனையக் கண்டா பயம்..!

பூனைக்கு நாயக் கண்டா பயம்..!

நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..!

மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..!

அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!

இப்ப நம்பிறீங்களா...?

டிசம்பர் டார்ச்சர்கள்!

Posted: 23 Dec 2013 10:11 AM PST

டிசம்பர் மாதம் வந்தாலே டரியல்தான் பாஸ். மார்கழி மாதக் குளிர், ஃப்ரீசருக்குள் குத்தவெச்ச எஃபெக்ட் கொடுக்குதுன்னா, அதே மார்கழி யில் நாம சந்திக்கிற அட்ராசிட்டீஸ் இருக்கே. அய்யய்ய்யோ! ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி வந்துவிடுவதால், டிசம்பரில் ஃபேஸ்புக்கே ஜாம் ஆகிவிடுகிறது. எங்கெங்கு திரும்பினும் கவிதைக் கறிவேப்பிலைகள், நாவல் நவ்வாப்பழங்கள் என சந்தைக்கடை எஃபெக்ட்தான். முகநூலின் புண்ணியத்தால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். ஒரே கருத்துக் குத்துகளாக குத்தி எடுத்துவிடுகிறார்கள். அதில் நிறைய ...

தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!'

Posted: 23 Dec 2013 09:59 AM PST

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடிபோலச் செயல்பட்ட இந்திய அரசு, இந்தப் பிரச்னையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளியானபோதுகூட, இந்திய அரசு அடக்கியே வாசித்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் ...

நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்

Posted: 23 Dec 2013 09:40 AM PST

இதோ 2013-ம் ஆண்டு முடியப்போகிறது. எம்.டிவி-யின் டாப் 10 பட்டியல் இதோ... ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல் இது. மோசமானவங்களில் முக்கியமானவங்க இவங்கதான் : பலத்த கரகோஷங்களுக்கு இடையே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறார் பாப் பாடகி மிலி சைரஸ். கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகள் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும் மிலி சைரஸ், உடை அணிவதில் மோசமோ மோசம் என்கிறது எம்.டிவி! ராப் பாடகியும், நடிகையுமான நிக்கி மினாஜ் ( 2-ம் இடம் ...

பத்திரப் பதிவு: மோசடியைத் தவிர்க்கும் வழிகள்!

Posted: 23 Dec 2013 09:36 AM PST

இந்திய அளவில் பத்திரப்பதிவு நடைமுறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. முதலிடத்தில் ஆந்திராவும், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மூன்று, நான்காம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் பத்திரப்பதிவில் இன்னும் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டால் முதன்மை மாநிலமாக முன்னேற்ற முடியும்? குறிப்பாக, மோசடிகளைத் தவிர்க்க எந்த மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? இந்த விஷயங்களில் மற்ற மாநில நடைமுறைகளில் உள்ள சிறந்த விஷயங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம்! கிரயப் பத்திரத்தில் ...

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Posted: 23 Dec 2013 09:31 AM PST

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது. நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை ...

ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி!

Posted: 23 Dec 2013 09:16 AM PST

ராமேஸ்வரம்: 50 ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி நகரம் இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழ்ந்து வருகிறது. இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால், இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான். 1964ஆம் ...

இரண்டு மாதத்தில் ஒரு கோடி காலக்ஸி நோட் 3 விற்பனை

Posted: 23 Dec 2013 09:01 AM PST

சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி நோட் 3 சாதனத்தை சென்ற செப்டம்பர் 25ல் விற்பனைக்குக் கொண்டு வந்தது. நவம்பர் 25 வரை மொத்தம் ஒரு கோடி காலக்ஸி நோட் 3 விற்பனைக்கு, விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சாம்சங் அண்மையில் அறிவித்துள்ளது. முதல் காலக்ஸி நோட், அக்டோபர் 2011ல் வெளியானது. இதன் விற்பனை ஒரு கோடி என்ற எண்ணிக்கையை எட்ட 9 மாதங்கள் ஆனது. இதே போல, காலக்ஸி நோட் 2 விற்பனை ஒரு கோடியை எட்ட 4 மாதங்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் இரண்டே மாதங்களில், இந்த எண்ணிக்கையை காலக்ஸி நோட் 3 எட்டியுள்ளது. சாம்சங் ...

20000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் சமையல் ராணிக்கு வாழ்த்துகள்!

Posted: 23 Dec 2013 08:56 AM PST



தங்களின் பதிவுகள் மேலும் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் அக்கா!

சிக் நமீதா!

Posted: 23 Dec 2013 08:48 AM PST

தென்னிந்திய சினிமாவில் உடல் பெருத்த கவர்ச்சி கதாநாயகிகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. நமீதா என்ட்ரி ஆனபோதும் இதே வரவேற்பு கொடுத்தனர். என்னம்மா இருக்குது இந்த பொண்ணு. சும்மா குதிரை மாதிரி என்று கிறங்கிப்போன கோலிவுட் இயக்குனர்கள் வாட்டசாட்டமான கதாநாயகர்களுக்கு அவரை ஜோடி சேர்த்தனர். அதனால் சில காலம் கவர்ச்சி கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்தார் நமீதா. ஆனபோதும், அவரிடமிருந்து எதிர்பார்த்தபடி பர்பாமென்ஸ் வெளிப்படாததால், வெயிட்டான கதாபாத்திரங்களை அவரை நம்பி யாரும் கொடுக்கவில்லை. ...

அரசு கோட்டாவில் சொத்துக்களை குவித்த தேவ்யானி :(

Posted: 23 Dec 2013 08:47 AM PST

மும்பை : விசா முறைகேடு விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே, அரசு கோட்டாவில் பல சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆதர்ஷ் குடியிருப்பு பகுதியில் தேவ்யானிக்கு ஒரு பிளாட் உள்ளது. இந்த பிளாட் உள்ளிட்ட 11 அசையா சொத்துக்கள் தேவ்யானி பெயரில் உள்ளது. ஆதர்ஷ் குடியிருப்பு : மகாராஷ்டிராவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படு்தியது ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரம். ...

பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Posted: 23 Dec 2013 08:47 AM PST

'பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர் - 8 'பெம்புடு கொடுக்கு' 'வெளி வந்த நாள்: 13.11.1953 கதை: வரதராஜன் இசை: எஸ். ராஜேஸ்வரராவ். தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத்  (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)           நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத். நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு ...

பி. கக்கன்

Posted: 23 Dec 2013 08:45 AM PST

ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981 கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர் கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது ...

சர்ச்சைக்குள்ளான விஜய்யின் சாமி தரிசனம்...........

Posted: 23 Dec 2013 08:29 AM PST

விஜய் சாமி தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு படம் வெளியாகும் போது வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் விஜய். இந்நிலையில் விஜய் கடந்த சனிக்கிழமை அன்று காலை திருநள்ளாறு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தார். நளன்குளத்தில் நீராடிய அவர், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை சன்னதிகளில் வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, ...

"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!

Posted: 23 Dec 2013 08:23 AM PST

இன்று தில்லியில் ஆட்சி அமைப்பதாக தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்துக் கூறிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழகத்தில் மதுரையில்தான் பிறந்தாராம். இப்படி ஒரு விநோதம் இன்று வெளிப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சியில் இருந்து அளிக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழின்படி, அரவிந்த் கேஜ்ரிவால் மதுரையில் பிறந்துள்ளார் என்பதே அந்த விநோதம். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறை எண் 95-க்கு கடந்த வியாழன் அன்று ஒரு தபால் வந்துள்ளது. வழக்குரைஞர்கள் முத்துக்குமார், ...

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை .......

Posted: 23 Dec 2013 08:21 AM PST

ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை. இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும். இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது. ஒரு முறை அமிதாப் ரஜினியிடம் கேட்டார்... 'ரஜினி, உலகில் உங்களுக்குத் தெரியாத ஆளே கிடையாது என்கிறார்களே.. நிஜமா...' 'எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க... சரி, ஏதாவதொரு ஒரு ஆள் பேர் சொல்லுங்க. எனக்குத் ...

உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா?

Posted: 23 Dec 2013 08:18 AM PST

உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா? லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம் லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை? # ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்). # எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான ...

தருணின் நான்காவது பிறந்த நாள் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு

Posted: 23 Dec 2013 06:53 AM PST

தருணின் நான்காவது பிறந்த நாள் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு நன்றி வை.பா

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

Posted: 23 Dec 2013 06:45 AM PST

ஜாலி கேலி இளைஞர் பருவத்தில் ஒருவன் சமூகப் பொறுப்போடு யோசித்தால்... அவன் வேறு மாதிரிதானே! சட்டக் கல்லூரிக் கலவரத்தில் மூன்று மாணவர்கள் பலியாகக் காரணமான சட்ட அமைச்சரைத் தண்டிக்க நினைக்கிறார் 'காமன் மேன்' விக்ரம் பிரபு. அதற்காக பரோலில் வெளிவந்திருக்கும் அவரது தம்பி வம்சி கிருஷ்ணாவைக் கடத்துகிறார். வம்சி மீண்டும் சிறைக்குச் செல்லாததால், அமைச்சரின் பதவி பறிபோகிறது. வம்சி தன்னைக் கடத்தியவன் யார் என்று வெறிபிடித்துத் தேடுகிறார். விக்ரம் பிரபுவை அவர் கண்டுபிடித்தாரா... பழிதீர்த்தாரா? 'சட்டத்தைக் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -78)

Posted: 23 Dec 2013 06:42 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

ஒரு பக்கக் கதை - தனிக் குடித்தனம்!

Posted: 23 Dec 2013 06:32 AM PST

தளும்பத் தளும்ப பால் டம்ளரை நீட்டிய மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன். "பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?' "என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம் போயிடலாம்!' "என்ன சொல்றே நீ?' "ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும் வர்றதில்லை.' "கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம்கூட ஆகலை. அதுக்குள்ளாற நாம தனிக்குடித்தனம் போனா, பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க?' "என்ன வேணும்னாலும் நினைச்சுட்டுப் போகட்டும்' "கொஞ்ம் பொறுத்துக்க ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™