Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம் 5 நாட்கள் நடக்கிறது

Posted: 16 Dec 2013 12:30 PM PST

தேனி மாவட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்கி, 5 நாட்கள் நடைபெற உள்ளது.

புலிகள் கணக்கெடுப்பு

தேசிய புலிகள் கணக் கெடுப்பு ஆணையம் சார்பில் நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி 3-வது தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 21-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் மாவட்ட வனப்பகுதிகள் மற்றும் மேகமலை பாதுகாக் கப்பட்ட வனச்சரணாலய பகுதிகளில் மொத்தம் 12 வனக் கோட்டங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகள் 46 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு மொத்தம் 39 உட்பிரிவுகள் உள்ளன. கணக்கெடுப்பு பணிக்காக ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒரு குழு வீதம் மொத்தம் 39 குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சேகரிக்கும் முறை

ஒவ்வொரு குழுவிலும் வனக்காப்பாளர்கள் 2 பேர் மற்றும் வனஆர்வலர் ஒருவர் என மொத்தம் 3 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழு வினர் 46 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதிகளிலும் கணக் கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புலிகளின் கால் தடம், மரங்களில் பதிவான நகக்கீறல்கள், எச்சம், உதிர்ந்த முடிகள், கேமராவில் பதிவு செய்யப்படும் புகைப் படங்கள் ஆகியவற்றை கொண்டு புலிகளின் எண் ணிக்கை கணக்கிடப் படு கிறது.

புலிகள் கணக்கெடுப்போடு சேர்த்து மற்ற விலங்குகளான செந்நாய், ஓநாய், நரி, கீரி, கரடி, மான், கேளையாடு போன்றவையும் கணக்கெடுக் கப்பட உள்ளது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் கணக்கெடுப்பு பணிகளை வனத்துறையினர் தொடங்கு கின்றனர். முதல் நாளில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் கணக்கெடுப்பு நடக்கிறது.

ஆலோசனை கூட்டம்

கணக்கெடுப்பு பணியை தொடர்ந்து 39 உட்பிரிவு களிலும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரங்களை ஒருங்கிணைத்து புலிகளின் எண்ணிக்கை வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் இறுதி செய்யப்பட உள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணி குறித்து தேனி வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் கள், வனவர்கள், வனத்துறை அலுவலர் களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தேனி மாவட்ட வன அலுவலர் சுந்தரகுமார் தலைமை தாங்கி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

கம்பம்

மேகமலை வன உயிரின சரணாலய பகுதிக்கு உட்பட்ட கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது. 7 குழுக்கள் கொண்ட களப்பணியாளர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட னர். பயிற்சி முகாமை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கமுருகன் தொடங்கி வைத்தார். கம்பம் கிழக்கு வனச்சரகர் சுரேஷ் பயிற்சி அளித்தார்.

image: 

category:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Posted: 16 Dec 2013 12:20 PM PST

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவ&மாணவிகளுக்கு கவர்னர் கே.ரோசய்யா பட்டங்களை வழங்கியபோது எடுத்த படம். அருகில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் டி.என்.ரெட்டி, துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.

10

காற்றாலை அமைத்து தருவதாக மோசடி: கோவை கோர்ட்டில் சரிதா நாயர் ஆஜர்

Posted: 16 Dec 2013 12:16 PM PST

கோவை,

காற்றாலை அமைத்து தருவதாக மோசடி செய்த வழக்கில் கோவை கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் ஆஜரானார்.

சரிதா நாயர்

கேரளாவில் சூரிய ஒளி மின்சக்தி அமைத்து கொடுப்பதாக கூறி கோடிக்கணக்கில் நடைபெற்ற மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொழிலதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவருடைய மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பத்தினம்திட்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், கோவையை சேர்ந்த ஒரு நிறுவனத்தை மோசடி செய்தது தொடர்பான வழக்கு கோவை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அவர்கள் இருவரும் 2011–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கோவை கோர்ட்டில் ஆஜரானார்கள். பின்னர் அவர்கள் இருவரும் கோவை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டது.

கோவை கோர்ட்டில் ஆஜர்

எனவே அவர்கள் இருவருக்கும் கோவை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்த நிலையில் சரிதா நாயரை கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று கோவை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

27–ந் தேதிக்கு தள்ளிவைப்பு

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன், இந்த வழக்கை 27–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் கண்டிப்பாக கோவை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து கேரள போலீசார் சரிதா நாயரை பலத்த பாதுகாப்புடன் கேரளா அழைத்துச்சென்றனர்.

category:

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இன்னும் ஆறு மாதங்களில் தீரும் நிதிக்கமிஷனிடம் ஜெயலலிதா உறுதி

Posted: 16 Dec 2013 12:03 PM PST

சென்னை,

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இன்னும் ஆறு மாதங்களில் தீரும் என்று நிதிக் கமிஷனிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

உண்மையை கூறுகிறேன்

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த 14-வது நிதிக்கமிஷன் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-மின்சார சப்ளை மற்றும் தேவையின் நிலை குறித்து நிதிக்குழு உறுப்பினர் முண்டல் கேள்வி எழுப்பினார். இது குறித்து சில உண்மைகளை விளக்க வேண்டியதுள்ளது. மின்சார நிலையில், இந்த அரசு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து அதை கையாண்டு வருகிறது. ஆனால் இந்த நிலை இந்த அரசால் ஏற்பட்டதல்ல.

பல திட்டங்கள்

மூன்றாம் முறையாக நான் 2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, தமிழகம் படுபாதாள இருளுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் மாநிலமாக இருந்தது.மின்சார உற்பத்திக்காக 2001-06-ம் ஆண்டுகளில் எனது அரசு பல திட்டங்களைத் தீட்டி இருந்தது. அந்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி முடித்திருந்தால், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாகத்தான் இருந்திருக்கும்.ஆனால் கடந்த ஆட்சியாளர்கள், அந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு எந்தவொரு முனைப்பும் காட்டாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் 2007-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலையான மின்பற்றாக்குறை நிலவத்தொடங்கி, 2011-ம் ஆண்டு மே வரை நீடித்தது.

குறுகியகால திட்டம்

அப்போது மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை எழுந்தது. மின்சார வாங்குவதற்கு பல வகைகள் இருந்தன. அதில் நீண்டகால ஒப்பந்தம் என்ற முறை உண்டு. மற்ற மாநிலங்களுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சாரத்தின் விலை குறையும். அதிக ஆண்டுகளுக்கு மின்சாரம் பெறலாம் என்ற உத்தரவாதம் கிடைக்கும்.
அதோடு, மின் பகிர்மானப் பாதை (காரிடார்) அமைப்பதில் எங்களுக்கு மத்திய அரசால் முன்னுரிமை கிடைக்கும் என்ற நன்மைகள் இருந்தன. ஆனால் கடந்த கால அரசு, வேண்டுமென்றே, மின்சாரம் வாங்குவதற்கு குறுகிய கால முறையை தேர்வு செய்தது. இதனால்தான் எனது அரசு, இருண்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

முன்னுரிமை கிடைக்கவில்லை

அப்போது நான்காயிரம் மெகாவாட் மின்சாரம் மின்பற்றாக்குறை இருந்தது. இது எங்களால் ஆனதல்ல. இந்த சூழ்நிலைக்குள் சிக்கி அதை எதிர்கொள்ளும் அவல நிலைக்கு ஆளானோம். எனவே நாங்களும் மின்சாரம் வாங்கினோம். இதற்கு காலம் ஆகும் என்பது உங்களுக்கு தெரியும்.எனவே மின்மிகை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். ஆனாலும் மின்சார பகிர்மானப் பாதை அமைப்பதற்கு தமிழகத்துக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. ஏனென்றால், மற்ற மாநிலங்கள், ஏற்கனவே நீண்டகால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தன.

மத்திய அரசு தாமதம்

இதனால்தான், குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொண்டு வருவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தாலும், 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கொண்டு வர முடிந்தது. இதுதான் இங்குள்ள நிலை.இது அரசியல் களமல்ல, ஆனால் உண்மையை கூறுகிறேன். நாங்கள் பல்வேறு புதிய மின் திட்டங்களை தொடங்கினோம். அவை தொடங்கி இந்த நேரத்தில் பயனளித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அவற்றுக்கான ஒப்புதலை மத்திய அரசு தாமதப்படுத்தியது.

பகிர்மான கேபிள்

மிகவும் குறைந்த அளவு மின்சாரத்தையே தமிழகம் பெற்றது. மத்திய அரசு தர வேண்டிய ஒப்புதல்கள் மறுக்கப்படுகின்றன. உதாரணமாக, குண்டா மின் திட்டம், சில்லகல்லா மின் திட்டம் ஆகியவற்றை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.நான் இரண்டாம் முறையாக முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த மின் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்பட்டது. வனப்பகுதியில் 14 கி.மீ. நீளத்துக்கு பகிர்மான கேபிளை அமைக்க வேண்டும் என்பதற்கான ஒப்புதல் அது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றோம்

மத்திய வனத்துறைதான் அந்த ஒப்புதலை வழங்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அது தாமதப்படுத்தப்பட்டது. நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு நினைவூட்டினோம். ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தோம். இதெல்லாம் மக்களுக்கான தேவைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இறுதியில் சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. இதுபோன்ற பிரச்சினைகளையும் நாங்கள் சந்தித்து வருகிறோம்.

இடைவெளி நிரப்பப்பட்டது

மின்சார தேவை எவ்வளவு, இருப்பு எவ்வளவு என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம். எங்களுக்கு மின்சார சப்ளை செய்ய முடியும். முன்பு சில இடையூறுகளால் கட்டப்பட்டு இருந்தோம். இப்போது நான் சொல்கிறேன், மின்சார தேவைக்கும் சப்ளைக்கும் இடையே உள்ள இடைவெளி அடைக்கப்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு ஜூலையில் இருந்து அக்டோபர் வரை தமிழகத்தில் மின்வெட்டு இருந்ததில்லை. அந்த இடைவெளியை இரண்டு ஆண்டுகளில் அடைப்பதற்கு ராட்சச முயற்சியை எனது அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சட்டசபையில் நான் பேசினேன்.உடனே எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் உள்ள பல மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் செயலற்றுப்போயின. இன்றுவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின்நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

6 மாதத்தில்

இதற்கு காரணம், மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் போனதால்தான். அனைத்திலும் ஒரே நேரத்தில் இது நிகழ்ந்தது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவில் முயற்சி செய்கிறோம். இன்னும் 6 மாதங்களில் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மட்டுமல்ல, மின்மிகை மாநிலமாக இருக்கும் என்பதை உங்களிடம் உறுதிபட கூறிக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

category:

News Group Category:

அமெரிக்க கோர்ட்டு நோட்டீசுக்கு பதில் அளிக்க சோனியா காந்திக்கு ஜனவரி 2-ந்தேதி வரை அவகாசம்

Posted: 16 Dec 2013 11:57 AM PST

நியூயார்க்,

டெல்லியில் 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதலை நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பது, பதவி உயர்வு அளிப்பது போன்ற செயல்களை கண்டித்து சோனியா காந்தி மீது அமெரிக்க கோர்ட்டில் சீக்கியர்கள் நீதிக்கான உரிமைக்குழு வழக்கு தொடர்ந்தது.

இதற்கு விளக்கம் கேட்டு அமெரிக்க பெடரல் கோர்ட்டு சோனியா காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. நியூயார்க் ஸ்லோன் கெட்டரிங் ஆஸ்பத்திரியில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அந்த ஆஸ்பத்திரி ஊழியரிடம் நோட்டீசை கோர்ட்டு ஊழியர் வழங்கினார். ஆனால் சோனியா காந்தியோ, ஆஸ்பத்திரி நிர்வாகமோ நோட்டீசை பெற்றுக் கொண்டதாக கூறவில்லை. சோனியா காந்தி இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க ஜனவரி 2&ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
 

category:

News Group Category:

நர்சிங் பயிற்சி அளிக்காமல் மாணவிகள் அலைக்கழிப்பு சான்றிதழை பெற்றுத்தருமாறு போலீசில் புகார்

Posted: 16 Dec 2013 11:48 AM PST

திண்டிவனத்தில் நர்சிங் பயிற்சி அளிக் காமல் அலைக்கழிக்கப் படுவதால், கல்வி சான்றிதழை பெற்றுத் தருமாறு மாணவிகள் போலீசில் புகார் கொடுத் துள்ளனர்.

வீட்டில் பயிற்சி

திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை 6 மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கவிதாவிடம் புகார் ஒன்றை கொடுத்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களது கிராமத்திற்கு வந்த திண்டிவனத்தை சேர்ந்த ஒரு பெண், மருத்துவம் சார்ந்த டிப்ளமோ பாடங்களை 2 ஆண்டுகளில் பயிற்சி அளிப்ப தாக கூறினார்.

அதன்படி திண்டிவனம் பகுதியை சேர்ந்த 27 மாணவிகள் முதற் கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்து அந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்தனர். முதலில் திண்டிவனம் நேரு வீதியில் ஒரு கட்டிடத்தில் பயிற்சி கொடுத்தனர். பின்னர் மல்லிபத்தன் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று பயிற்சி கொடுத்தனர்.

தற்போது அந்த இடத்தையும் மாற்றி, பெலாக்குப்பம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

சான்றிதழ்களை கொடுக்க மறுப்பு

கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 இடங்களை மாற்றி பயிற்சி கொடுக்கின்றனர். அரசு அனுமதி பெறாமல் பயிற்சி அளிப்பதாலும், பயிற்சி இடத்தை மாற்றி அலைக் கழிப்பதாலும், எங்களுக்கு அதில் கல்வி பயில பிடிக்க வில்லை. எனவே நாங்கள் கொடுத்த 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வி சான்றிதழை திரும்ப கேட்டபோது கொடுக்க மறுக்கின்றனர். மேலும் ரூ.12 ஆயிரம் கொடுத் தால்தான், கல்வி சான்றிதழை கொடுப்பதாக அந்த பெண் தெரிவிக்கிறார். எனவே எங்களது கல்வி சான்றிதழை வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்களது புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.

image: 

போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி***

Posted: 16 Dec 2013 11:46 AM PST

பாகிஸ்தானுடனான 1971-ம் ஆண்டு போரில் இந்தியா பெற்ற வெற்றி விஜய்திவாஸ் என்ற பெயரில் ஆண்டுதோறும் டிசம்பர் 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. டெல்லியில் போர் வீரர்கள் நினைவு சின்னமான அமர்ஜவான் ஜோதியில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்திய காட்சி.
 

6

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3–வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலிய அணி

Posted: 16 Dec 2013 11:46 AM PST

பெர்த்,

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3–வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. ஷேன் வாட்சன் சதம் அடித்தார்.

3–வது டெஸ்ட்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 385 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. 134 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து இருந்தது. ஷேன் வாட்சன் 29 ரன்னுடனும், ஸ்டீவன் சுமித் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஷேன் வாட்சன் சதம்

நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. ஷேன் வாட்சன், ஸ்டீவன் சுமித் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். ஸ்டீவன் சுமித் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து ஜார்ஜ்பெய்லி, ஷேன் வாட்சனுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அபாரமாக ஆடிய ஷேன் வாட்சன் சதம் அடித்தார். 106 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் தனது 4–வது சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த ஷேன் வாட்சன் 103 ரன்னில் இருக்கையில் பிரிஸ்னனால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து களம் கண்ட பிராட் ஹேடின் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

504 ரன்கள் இலக்கு

மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 87 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிரடியில் சாதனை படைத்த ஜார்ஜ் பெய்லி 30 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்னுடனும், ஜான்சன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டிம் பிரிஸ்னன், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், ஸ்வான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 504 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. கேப்டன் குக் ரன் எதுவும் எடுக்காமலும், கார்பெர்ரி 31 ரன்னிலும், ஜோரூட் 19 ரன்னிலும், கெவின் பீட்டர்சன் 45 ரன்னிலும், இயான்பெல் 60 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பென் ஸ்டோக்ஸ் 72 ரன்னுடனும், மேத் பிரையர் 7 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.

வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

இன்று (செவ்வாய்க்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு இன்னும் 253 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. முதல் இரண்டு டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை வெல்லும் முனைப்புடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அசுர வேகப்பந்து வீச்சை இங்கிலாந்து நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பது கடினம்.

--–

லாராவை சமன் செய்தார்
ஒரே ஓவரில் 28 ரன் எடுத்து ஜார்ஜ் பெய்லி சாதனை

2–வது இன்னிங்சில் கடைசி ஓவரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி ஒரே ஓவரில் 28 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் லாராவின் சாதனையை சமன் செய்தார். ஜார்ஜ் பெய்லி அந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரியும், 2–வது பந்தில் சிக்சரும், 3–வது பந்தில் 2 ரன்னும், 4–வது பந்தில் பவுண்டரியும், 5–வது மற்றும் 6–வது பந்தில் சிக்சரும் விளாசினார். 2003–04–ம் ஆண்டில் ஜோகனஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ராபின் பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் லாரா 28 ரன்கள் (4,6,6,4,4,4) எடுத்ததே உலக சாதனையாக உள்ளது.

--–

எலும்பு முறிவு ஏற்படவில்லை ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவார்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஜான்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். யார்க்கராக வீசப்பட்ட அந்த பந்தில் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு வலது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று ஸ்டூவர்ட் பிராட் பீல்டிங் செய்யவில்லை. இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட 'ஸ்கேன்' பரிசோதனையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'எலும்பு முறிவுக்கான ஆதாரம் இல்லை என்பது ஸ்கேன் பரிசோதனை வெளிப்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயத்தின் தன்மையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் 3–வது டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் பேட்டிங் செய்வார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

category:

14-வது நிதிக்குழு கூட்டம்

Posted: 16 Dec 2013 11:42 AM PST

*தலைமைச்செயலகத்தில் நேற்று 14-வது நிதிக்குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 14-வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் ஒய்.வி.ரெட்டி, உறுப்பினர்கள் பேராசிரியர் அபிஜித் சென், சுஷாமா நாத், டாக்டர் எம்.கோவிந்தா ராவ், டாக்டர் சுதிப்தோ முண்ட்லே, அமைச்சர்கள், 14-வது நிதிக்குழுவின் செயலாளர் ஏ.எம்.ஷா, தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மத்திய நிதிக்குழு உயர் அதிகாரிகள், நிதித்துறை முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

9

மருத்துவ மாணவிக்கு அஞ்சலி***

Posted: 16 Dec 2013 11:36 AM PST

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவுபெற்றது. இதையட்டி மருத்துவ மாணவிக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் சமூக அமைப்புகள், மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவ மாணவிக்கு அஞ்சலி செலுத்திய காட்சி.
 

1


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™