Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் குழந்தைகள் ஆதிரா

Posted: 16 Dec 2013 01:08 PM PST

உலக நகைச்சுவை அரங்கத்தில் குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு நகைச்சுவைகளைக் கொட்டிய குழந்தைகள் (நானும்தான்)


மார்கழி என்றால்…

Posted: 16 Dec 2013 12:27 PM PST

"வைகறையின் செம்மை இனிது. மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க. உஷையை நாங்கள் தொழுகின்றோம். அவள் திரு. அவள் விழிப்பு தருகின்றாள். தெளிவு தருகின்றாள். உயிர் தருகின்றாள். ஊக்கந் தருகின்றாள். அழகு தருகின்றாள். கவிதை தருகின்றாள்." - வைகறைப் பொழுதை வாழ்த்தும் பாரதியின் வார்த்தைகள் இவை. வைகறை எப்போதும் அழகு; மார்கழியிலோ கூடுதல் அழகு; தமிழர் வாழ்வியலில் இன்னும் அழகு. முன்பனி, பின்பனி, நான்கு திசைகளில் வரும் வாடை, தென்றல், குடக்கு, குணக்கு என எல்லாவற்றையும் போற்றிய எம் மக்கள் பனிப் படலத்தைத் ...

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜன-17.ல் அறிவிப்பு?

Posted: 16 Dec 2013 12:24 PM PST

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் ஜனவரி 17–ஆம் தேதி நடக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ராகுல் பிரதமர் வேட்பாளர்? இக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. கடந்த ...

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை

Posted: 16 Dec 2013 12:23 PM PST

சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தைச் சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான்பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கின்றனர். அறுசுவை உணவு: சீனாவில், கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்துச் சாப்பிடுவது, அறுசுவை உணவாகக் கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, ...

கிறிஸ்துமஸ் பண்டிகை

Posted: 16 Dec 2013 12:20 PM PST

புண்ணியத்தால் பாவத்தை வெற்றிகொள் நன்மையால் தீமையை வெற்றிகொள் நட்பால் பகைமையை வெற்றிகொள் மன்னிப்பால் எதிரிகளை வெற்றிகொள் நிலையற்ற மனித வாழ்வில், தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் தனக்கு நன்மை செய்தவர்களுக்காகவும் மட்டும் இறைவனை வழிபடுபவன் சாதாரண மனிதன். தனக்குப் பாவமிழைத்த, வஞ்சித்த எதிரிகளின் செயல்பாடுகளை மன்னித்து, அவர்களின் நலனுக்காக இறைவனிடம் மன்றாடுபவன் மாமனிதன். அவன் கருணைபொழியும் ஆண்டவனுக்கு ஒப்பாகிறான். மற்றவர்கள் செய்த தவறையும், தீங்கையும் தன்மேல் ஏற்றுக் கொண்டு தண்டனையை ...

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

Posted: 16 Dec 2013 12:10 PM PST

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

இரட்டை - சிறுகதை

Posted: 16 Dec 2013 11:46 AM PST

ஆஸ்பத்திரியின் லிப்ட் எதிரே குழுமியிருந்தவர்களுடன் காத்திருக்க பொறுக்காமல் வாசுகி படியேறத்துவங்கினாள். கடந்த எட்டு மாதங்களாய் மேற்கொண்ட அலைச்சல்களை ஒப்பிட்டால் நாலு மாடி படி ஏறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லைதான். நாற்பதுகளில் சஞ்சரிக்கும் வயதுக்கு நாலு மாடி அதிகம்தான். சுவரில் பதித்து வைத்திருக்கிற கண்ணாடியில் மாதக்கணக்கில் தூங்காமல் ஓடியாடி வேலை செய்ததில் ஒரு சுற்று இளைத்துபோன உருவம் தெரிகிறது. குழந்தைகள் பிறந்த நிம்மதியில் அன்றைய இரவில் நன்றாய் தூங்க கூடிய பாக்யம் கிடைக்கலாம். கதவை தட்டி ...

ஒரு பக்கக் கதை - அகல்

Posted: 16 Dec 2013 11:43 AM PST

மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள். "அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள். குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான். "இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி. "இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி ...

குண்டு வைக்கப்போவது தெரிந்தால் கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்திருப்பேனா?

Posted: 16 Dec 2013 11:40 AM PST

''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்'' என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரது வாக்குமூலங்களும் திருத்தப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7-ம் தேதி வேலூர் சிறையில் முருகனை சந்தித்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவரைச் சந்தித்தோம்.  முருகன் சொன்னதாக எஸ்.துரைசாமி சில தகவல்களை முதலில் சொன்னார். ...

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா?

Posted: 16 Dec 2013 11:39 AM PST

பதினான்கு வயது மகள் ஆருஷியும் அவளது ஆண் நண்பரும் வீட்டு வேலையாளுமான ஹேம்ராஜும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைக் கொலை செய்ததோடு குற்றத்தை மறைத்ததற்காக, பல் மருத்துவர் ராஜேஷ் தல்வாருக்கும் அவரது மனைவி நூபுர் தல்வாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.  குற்ற நிரூபணத்துக்கான போதிய தடயங்கள் இல்லை என்பதற்காகக் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட இந்த வழக்கை, மறு விசாரணைக்கு ஆட்படுத்தி  இன்று அவர்கள் தண்டிக்கப்பட்டதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. ...

கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டோலாக்கர் வைரஸ்

Posted: 16 Dec 2013 11:36 AM PST

இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டோ லாக்கர் ('CryptoLocker') வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது. கம்ப்யூட்டரில் பரவியவுடன், மிக மிக முக்கியமான டாகுமெண்ட்களைத் திருடி, பின்னர் அவற்றில் உள்ள விஷயங்களை வெளியிடாமல் இருக்க, பெரும் அளவில் பணம் தரவேண்டும் என, இந்த வைரஸை அனுப்பியவர்கள் மிரட்டுகின்றனர். பணத்தை, அடையாளம் தெரியாமல் பெற, பல வழிகளைக் கையாள்கின்றனர். ...

2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்

Posted: 16 Dec 2013 11:26 AM PST

சென்ற 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம். அவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம். "தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் புதுமையான வழிகளில் பரவிய மால்வேர் புரோகிராம்கள், மேக் கம்ப்யூட்டரிலும் பரவிய அபாய புரோகிராம்கள் எனச் சென்ற ஆண்டு வைரஸ் தாக்குதல்களைப் ...

தகராறு - சினிமா விமர்சனம்

Posted: 16 Dec 2013 11:22 AM PST

ரத்தம், சத்தம், சம்பவம்... என விறுவிறு தகராறு! திருட்டு நண்பர்கள் அருள்நிதி, பவண்ஜி, முருகதாஸ், சுலில் குமார் டீம், ஊருக்குப் புதிதாக வந்த இன்ஸ்பெக்டர், தாதா அருள்தாஸ், கந்துவட்டி ஜெயப்பிரகாஷ் ஆகிய மூவரின் விரோதத்தைச் சம்பாதிக்கிறது. திடீரென சுலில் குமார் மர்மமாகக் கொல்லப்பட, நண்பனைக் கொன்றவனைத் தேடுகிறார்கள் மற்ற மூவரும். அந்த முக்கோண விரோதக் கூட்டணி மிச்ச மூவரையும் தூக்க ஸ்கெட்ச் போடுகிறது. நண்பர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை! பழக்கவழக்கமான அருவா, மாப்ள நட்பு, குடி, கூத்து ...

"பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?

Posted: 16 Dec 2013 11:15 AM PST

அழகு குறிப்புகள் எவ்வளவு சொன்னாலும், கேட்டுக் கொண்டேயிருப்பது, பெண்களின் குணம். ஆனால், அதைச் செயல் படுத்துவது ஒரு சிலரே! அதற்கு, குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை என, ஏதாவது ஒரு காரணம் இருக்கும். எளிய முறையில், சிக்கனமாக (நேரத்திலும்தான்) செய்யக்கூடிய டிப்ஸ் தான், கீழே கொடுக்கப்பட்டவை. செய்து பாருங்கள்... மற்றவர் உங்களைப் பார்க்கச் செய்யுங்கள்! * தினந்தோறும், குறைந்தது, 2 முதல் 3 லிட்டர் வரை, தண்ணீர் பருகுங்கள். * பீட்ரூட் சாறை முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து, தண்ணீரால் ...

காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு

Posted: 16 Dec 2013 08:50 AM PST

பாராளுமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. பொதுக்குழு இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– கருத்து ...

தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்

Posted: 16 Dec 2013 08:47 AM PST

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது  அவர் கூறியதாவது:- தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் மீது இழிவுபடுத்தி உள்ளனர். அவதூறாக பேசி உள்ளனர். 2ஜி யை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து உள்ளனர்.தி.மு.க. வெளி யேறியதால்  எங்களுக்கு வருத்தம் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். தி.மு.க.வுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து ...

கூகுள் ட்ரைவ் டிப்ஸ்

Posted: 16 Dec 2013 08:45 AM PST

கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 1. இணைய இணைப்பு இல்லாமல்: கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு ...

ஈயை விரட்டிய குரங்கு

Posted: 16 Dec 2013 08:06 AM PST

ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தாரு. அவரு ஒரு குரங்கை ரொம்ப ஆசையா வளர்த்துட்டு வந்தாரு. அதுவும் அவரு மேல ரொம்பப் பாசமா இருந்துச்சு. ராஜா ஒரு நாள் வழக்கம் போல தோட்டத்துல உலாவப் போனபோது குரங்கும் கூடவே போச்சு. புற்களுக்கு நடுவுல பாம்பு ஒண்ணு இருந்ததை குரங்கு கவனிச்சிடுச்சு. உடனே அது தாவி குதிச்சு ராஜாவோட கவனத்தைக் கவர்ந்து பாம்பு இருக்கறதை காண்பிச்சிடுச்சு. சரியான சமயத்துல ராஜா, பாம்புக் கடியிலிருந்து தப்பிச்சாரு. குரங்கோட எச்சரிக்கை உணர்வையும், விசுவாசத்தையும் பார்த்து ராஜா ரொம்ப நெகிழ்ந்து ...

தமிழில் ஒரு சந்தேகம்(பானு)

Posted: 16 Dec 2013 08:05 AM PST

வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம்

Posted: 16 Dec 2013 08:03 AM PST

விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதிதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும். இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி மலர்களாய் மலரும். இந்த மலர்கள் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு ...

ebay ல் கையடக்கத் தொலைபேசி வாங்க உதவி தேவை.

Posted: 16 Dec 2013 07:55 AM PST

வணக்கம் தோழர்களே,
நான் இலங்கையில் வசிக்கின்றேன். abay ஒரு பொருள் வாங்கினால் அது இலங்கைக்கு வரும்போது மேலதிகமாக சுங்கவரி வசூலிக்கப்படுமா. குறிப்பாக கையடக்கத் தொலைபேசிக்கு.

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Posted: 16 Dec 2013 07:51 AM PST

பாடல் - 1 உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலை மீது ...

கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்

Posted: 16 Dec 2013 07:26 AM PST

மீன்கொத்திப்பறவை தான் சாப்பிட்ட மீன்களின் முட்களைக்கொண்டே கூடு கட்டிக்கொள்கிறது… மனங்கொத்திப் பறவை நீயோ முதலில் என் இதயத்தில் கூடுகட்டிக் குடியேறிவிட்டு பிறகு என் இதயத்தை சாப்பிடுகிறாய்….. ஒரு முறை எரிந்து சாம்பலான பொருளை இன்னொருமுறை எரிக்கவே முடியாது ஆனால் நீயோ என்னை மறுபடி மறுபடி எரித்துக்கொண்டே இருக்கிறாய்…. தும்மல் வரும்போது நம் உடலில் இதயம் உட்பட அனைத்தும் ஒருநொடி நின்றுவிடும் நீ வரும் போது தும்மலே நின்றுவிடும்… இந்தியாவில் ஆளுனர் ஆவதற்கு 35 வயதிற்கு மேல் ஆகியிருக்க ...

மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

Posted: 16 Dec 2013 07:25 AM PST

ஜாதி, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி, இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே. அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான். நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள். அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின் குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும். நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம் என்று விளக்கமாக பார்ப்போம். உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய ...

ஐயோ இது உண்மையா?

Posted: 16 Dec 2013 07:20 AM PST

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்    அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் ...

பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து

Posted: 16 Dec 2013 06:59 AM PST

ஐதராபாத் : உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ள, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, ஆந்திர மாநில அரசு, 'குடும்பத் தலைவர்' அந்தஸ்தை பெண்களுக்கு வழங்கி, அனைத்து குடும்பத்தினருக்கும், புதிய ரேஷன் கார்டு வழங்க உள்ளது. உணவு பாதுகாப்பு திட்டம்: மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், நட்சத்திர திட்டங்களில் ஒன்றாக, உணவு பாதுகாப்பு திட்டம் கருதப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, குடும்பத் தலைவர் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (182)

Posted: 16 Dec 2013 06:58 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

தமிழகம்... இருளகம்!

Posted: 16 Dec 2013 06:28 AM PST

 மின்வெட்டில் புதுப்புது பரிமாணங்களை அறிமுகப்படுத்தியபடி இருக்கிறது தமிழக அரசு. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம், எட்டு மணி நேரம் என்று தாவித் தாவி, 12 மணி நேர மின்தடை என மிரட்டுகிறது நிலவரம். அதிலும் முன்னர் கோடை காலத்தில் தான் மின்வெட்டு நிகழும். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலத்திலேயே குறிவைத்து வெளுக்கிறார்கள்!  'பருவமழை பொழிந்தால் சரியாகும்' என்றார்கள். பிறகு, 'காற்று வீசினால் கரன்ட் வரும்' என்றார்கள். ஆனால், எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. இடையில் சில காலம் 'பரவாயில்லை' ரேஞ்சில் இருந்த ...

மிருகங்கள் பெயர்களைக் கற்றுத்தரும் இணையதளம்

Posted: 16 Dec 2013 05:35 AM PST

ஆங்கிலத்தில் காடு மற்றும் வீடுகளில் வாழும் அல்லது வளர்க்கப்படும் மிருகங்களை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது? இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - goat/sheep எது சரி? பெண் ஆட்டிற்கான சொல் என்ன? ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது? குட்டி ஆட்டினை எந்தப் பெயர் சொல்லி அழைப்பது? டிக்ஷனரியைப் புரட்டினாலும், அதற்கான ஏதேனும் ஒரு பெயர் தெரியாமல் கண்டறிவது கஷ்டமல்லவா? இந்த வகையில் ...

குண்டு குழந்தைகளா...? எச்சரிக்கை!

Posted: 16 Dec 2013 05:22 AM PST

''உடலுக்கு உணவு என்கிற வரவு மட்டும் போதாது. உடற்பயிற்சி என்கிற செலவும் இருந்தால் தான் ஆரோக்கியம். இல்லாவிட்டால் குழந்தைகள் குண்டாகிவிடுவர்,'' என்கிறார், மதுரை அப்போலோ மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் முருகன் ஜெயராமன். அவர் கூறியதாவது: கொழுப்பு (குண்டு) என்பது ஆரோக்கியமல்ல. உலகளவில் சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்கள் பட்டியலில், நாம் முதலிடத்தில் உள்ளோம். குண்டான குழந்தைகள் தான், குண்டாகும் பெரியவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தவரை, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு ...

மைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்

Posted: 16 Dec 2013 04:57 AM PST

1. டெக்நெட் (TechNet): இந்த 2013 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கைவிடப்பட்ட பெரிய திட்டம் டெக்நெட் என்பதாகும். இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும், திருட்டுத்தனமாகக் காப்பி எடுத்துப் பயன்பாட்டிற்கு பரப்புவதாகவும் கூறி மைக்ரோசாப்ட் இதனை நிறுத்தியது. தகவல் தொழில் நுட்ப துறையில் இயங்கும் வல்லுநர்களுக்கு, விண்டோஸ் க்ளையண்ட் மற்றும் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, நிலைத்த உரிமம் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பயனாளர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தியதால், பாதுகாப்பு ...

அதிகப்படியான கொலஸ்ட்ரால் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!

Posted: 16 Dec 2013 04:52 AM PST

சுகாதாரம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு காரணமான விஷமியாக அதிக அளவு கொழுப்பு உள்ளது. இப்பொழுது இந்த அதிக அளவு கொழுப்பைப் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதிக அளவு கொழுப்பு மார்பக புற்றுநோய் வளரவும், பரவவும் காரணமாக இருக்கும் என்று IANS-ன் அறிக்கை தெரிவிக்கிறது. ட்யூக்கில் உள்ள மருந்தாக்கியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் துறையினரின் (Department of Pharmacology and Cancer Biology) கருத்துப்படி, ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் போல செயல்படும் கொழுப்பின் துணைப் பொருள் ஒன்று பெண்களுக்கு ...

கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்!

Posted: 16 Dec 2013 04:52 AM PST

மாணவர்களும் ஆசிரியர்களும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் என களம் இறங்க... மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கதிகலங்கியது. ஒரு வாரத்துக்கும் மேல் தொடர்ந்து போராட் டம் நடைபெற... 11-ம் தேதி காலை அனைவரும் கைது செய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு விடுதலை செய்யப்பட்டனர். மாணவர்களும் பேராசிரியர்களும் எதிர்த்துப் போராடும் கல்யாணி மதிவாணன், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள்! பல்கலைக்கழக வளாகம் கலவரக் களமாக மாறியதன் பின்னணி என்ன? ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் ...

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,

Posted: 16 Dec 2013 04:37 AM PST

புதுக்கடை: கண்ணியம் காக்க வேண்டிய காவல்துறையில், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டரை, இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பால்ராஜ். இரவு பணியில் ஈடுபட்ட இவர் பணியை முடித்து விட்டு நேற்று முன்தினம் அதிகாலை வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் போலீசாரின் வருகை பதிவேட்டை இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து சரிபார்த்துக் கொண்டு இருந்தார். ...

கணித விளையாட்டு

Posted: 16 Dec 2013 04:35 AM PST

?+?+?+?+?+?=20

by applying these
condition, no
use of zero and double term

அபூர்வ கானங்கள்

Posted: 16 Dec 2013 04:20 AM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

மார்கழி வழிபாடு!

Posted: 16 Dec 2013 03:43 AM PST

மாதங்களில் நான் மார்கழி என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. மார்கழி மாதம் என்றாலே இறைவழிபாட்டிற்குரிய மாதம். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் .. அதிகாலையில் தெருக்களை அலங்கரித்த வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்கள் என, இந்தாண்டு உற்சாகமாக மார்கழி மாதம் துவங்கி விட்டது. பல்வேறு பகுதிகளிலும், தெருக்களில் வெண்ணிற அரிசி மாவு உட்பட பல்வேறு வண்ணங்களில், அழகிய கோலங்கள் இடப்படுகின்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் வண்ணக் கோலங்களும், பஜனை முழக்கங்களுமாக மார்கழி களைகட்டியுள்ளது. மார்கழியில் ...

உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்

Posted: 16 Dec 2013 03:18 AM PST

1. உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சிதான். 2. உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். 3. நிம்மதியான தூக்கம் வரும். உடற்பயிற்சி செய்வது எந்தப் பக்கவிளைவையும் தராது. 4. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. 5. வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் ...

உலர் திராட்சையில் பெண்களுக்கு உள்ள பயன்கள்!

Posted: 16 Dec 2013 03:14 AM PST

உலர்ந்த திராட்சையில் வைட்டமின் 'பி' மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக ...

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Posted: 16 Dec 2013 03:09 AM PST

தி.நகர்: ''டாஸ்மாக் விற்பனை ஏன் குறைந்தது என, கலால் அதிகாரியாக இருந்தபோது, நான் கேட்ட கேள்விக்கு, ஊழியர் கூறிய பதிலால், ஆடி போய் விட்டேன்,'' என, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன, நிர்வாக இயக்குனர், சகாயம் பேசினார். போதை ஏறல்சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில், ஊழல் ஒழிப்பு, பல்வேறு அரசு சேவைகளை அறிவது, சலுகைகளை பெறுவது குறித்த, இலவச தொலைபேசி எண் (76671 00100) அறிமுகப்படுத்தும் விழா, சென்னையில் உள்ள, பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன, நிர்வாக இயக்குனர், சகாயம் ...

யார்.....?

Posted: 16 Dec 2013 02:44 AM PST

வட்டமான பாதையிலே.. ஓயாமல் அலைந்திருப்பான்... மாயாமல் மணியடிப்பான்... மாய்ந்தாலும் உயிர் பெறுவான்... நிமிஷமெனும் பாதையிலே.... நொடியாக வலம் வருவான்.... கரத்தினிலே இணையும் இவன் காலமாக இயங்கிடுவான்.

முள்ளங்கி முட்டைப் பொரியல்

Posted: 16 Dec 2013 02:37 AM PST

முள்ளங்கி முட்டைப் பொரியல் முள்ளங்கி ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍ 1/4 கிலோ முட்டை 2 மிளகு தூள் 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் 2 வெங்காயம் 1 மஞ்சள் தூள் சிறிது தேவையான அளவு உப்பு, எண்ணை முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வதக்கி தேவைப்பட்டால் இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன் சேர்க்கலாம். மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து முள்ளங்கியை போட்டு நன்றாக வதக்கவும். முள்ளங்கி வெந்ததும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™