Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஜன்னல் ஓரம் படத்தின் உரிமையை டி.வி.சேனல்களுக்கு வழங்க இடைக்கால தடை

Posted: 14 Dec 2013 07:08 AM PST

சென்னை,

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் என்.செந்தில்பிரபு. சாலிகிராமத்தை சேர்ந்தவர் டி.டி.ராஜா. இவர்கள் இருவரும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஹேமந்த் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.முருகன் எங்களிடம் கடன் பெற்று இருந்தார். ஆனால், கடனை அவர் திருப்பித் தரவில்லை. இந்த நிலையில், நடிகர்கள் பார்த்திபன், விமல் உட்பட பலர் நடித்துள்ள ஜன்னல் ஓரம்' என்ற சினிமா படத்தை முருகன் தயாரித்துள்ளார்.

இந்த படமும் அண்மையில் வெளியாகிவிட்டது. இப்போது, இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை டி.வி.சேனல்களுக்கு வழங்க உள்ளார். எனவே எங்களுக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்காமல், இந்த படத்தின் உரிமையை டி.வி. சேனல்கள், இணையதளங்கள், டி.டி.எச். உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்க தடை விதிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் விசாரித்து, ஜன்னல் ஓரம் படத்துக்கான டி.வி. சேனல்கள், இணையதளங்கள், டி.டி.எச். உள்ளிட்ட உரிமைகளை பிறருக்கு வழங்க, வரும் ஜனவரி 9-ந் தேதி வரை தயாரிப்பாளர் முருகனுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டுள்ளார்.
 

category:

News Group Category:

தி.மு.க. தலைவர் கருணாநிதி

Posted: 14 Dec 2013 06:54 AM PST

தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி ஆறாம் பாகம் புத்தகத்தை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

1

பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் 98 யானைகள் பங்கேற்கும் சிறப்பு நல வாழ்வு முகாம் தமிழக அரசு அறிவிப்பு

Posted: 14 Dec 2013 06:27 AM PST

சென்னை

பவானி ஆற்றுப்படுகையில் 98 யானைகள் பங்கேற்கும் சிறப்பு நல வாழ்வு முகாம் 19–ந் தேதி தொடங்கி பிப்ரவரி 4–ந் தேதிவரை 48 நாட்கள் நடக்கின்றன.

ஜெயலலிதா விருப்பம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–இயற்கையின் படைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் அன்பு காட்டி பாதுகாக்கப்பட வேண்டியவை என்பது மனிதநேயமிக்க சமூக ஆர்வலர்களின் சிந்தனையாகும். மனிதர்களுக்கு பல்வகையிலும் உதவிடும் விலங்குகளிடத்தில் அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்பதும் அவற்றுக்கு கொடுமைகள் இழைக்கப்படாமல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பமாகும்.

மக்களுக்கு இடையூறு

யானைகளை முறையாக பராமரிக்காது சீரற்ற கடினமான தரையில் நிற்க வைப்பதாகவும், போதுமான ஓய்வு அளிப்பதில்லை எனவும் அவைகள் கடுமையாக நடத்தப்படுவதாகவும், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு 2003–ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.இவ்வாறு முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் யானைகள் பல இடங்களில் அமைதி இழந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றன.

சத்தான உணவு

இதனைத் தொடர்ந்து முதல்–அமைச்சர்ஜெயலலிதா, திருக்கோவில்களில் உள்ள யானைகளை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல், போதுமான ஓய்வு தரவும், சத்தான உணவளித்து யானைகளை முறையாக பராமரிக்கவும், உடல் நலத்தைப் பேணவும், தேவையான ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை தமிழக வனத்துறையின் ஒத்துழைப்போடு தமிழகத்திலுள்ள திருக்கோவில்களின் யானைகள் மற்றும் தனியார் யானைகளை நீர்வசதி கொண்ட, ஏற்ற சுற்றுச்சூழல் அமைந்த முதுமலை (தெப்பக்காடு) வனவிலங்குச் சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திடவும் ஆணையிட்டார்.

புத்துணர்ச்சி பெற்றன

இதன்படி, 2003–ம் ஆண்டில் 55 யானைகளுக்கு 30 நாட்களும், 2004–ம் ஆண்டில் 65 யானைகளுக்கு 48 நாட்களும், 2005–ம் ஆண்டில் 63 யானைகளுக்கு 48 நாட்களும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டன. இந்த முகாமில் யானைகளின் உடல்நலம் பேணப்பட்டு புத்துணர்ச்சி அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.யானைகளுக்கு புத்திளமை அளிக்கும் சிறப்பு உணவும், மருத்துவ வசதியும் வழங்கப்பட்டது. அவற்றின் உடல்நலமும், மனநலமும் பேணப்பட்டு நலவாழ்வு முகாம் முடிந்து திருக்கோவிலுக்கு அவைகள் திரும்பிச் சென்று புத்துணர்ச்சியோடு தங்கள் பணிகளை மேற்கொண்டன.

கடந்த ஆட்சியில் முகாம் இல்லை

அத்துடன் யானைகளை அன்புடன் பராமரிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் எல்லா யானைப் பாகர்களுக்கும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இத்திட்டம் அனைத்து தரப்பினராலும் சிறப்பாக பாராட்டப்பட்டதுடன், இதன் பயன்கள் சமுதாயத்தில் வெகுவாக உணரப்பட்டது.இந்த நலவாழ்வு முகாம் 2006–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை நடத்தப்படவில்லை. இதனால் யானைகளின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து, யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், 2011–12–ம் ஆண்டு திருக்கோவில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 37 யானைகளுக்கு 48 நாட்களுக்கு முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் (தெப்பக்காடு) ''யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்" முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி நடைபெற்றது.

கடந்த ஆண்டில்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி 2012–13–ம் ஆண்டு திருக்கோவில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 35 யானைகளுக்கு 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் ''யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்" நடைபெற்றது.இந்த ஆண்டு, திருக்கோவில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்படுவதைப் போலவே, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும் இந்த நலவாழ்வு முகாம் நடத்தப்பட வேண்டும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு நடத்தப்படும் ''யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்"ல் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள யானைகளும் பங்கேற்கும்.

48 நாட்கள்

இந்த ஆண்டு டிசம்பர் 19–ந் தேதி முதல், வரும் பிப்ரவரி 4–ந் தேதி வரை 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் இந்த முகாம் நடைபெறும்.இதில் திருக்கோவில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 43 யானைகள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 55 யானைகள் என மொத்தம் 98 யானைகள் பங்கு பெறும்.இதற்கான மொத்த செலவுத் தொகையான ரூ.1 கோடியே 53 லட்சத்தை அரசே வழங்கும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முகாமிற்கு வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தி முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டியதில்லை எனவும், நோயுற்று இருக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்துச் செல்லவேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது இருக்கும் இடத்திலேயே இந்த யானைகளுக்கும் முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்பட வேண்டும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

விசா மோசடி குற்றச்சாட்டு ‘கைதான இந்தியப்பெண் தூதருக்கு விலக்கு உரிமை கிடையாது’ அமெரிக்கா அறிவிப்பால் சிக்கல்

Posted: 14 Dec 2013 06:26 AM PST

வாஷிங்டன்

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெண் துணைத்தூதர்

அமெரிக்காவில் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவரும் மும்பையை சேர்ந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), வேலைக்காரப்பெண்ணுக்கு ஏ–3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான தகவல்கள் தந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இதன்பேரில் அவர் கடந்த 12–ந்தேதி கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தனது பணிப்பெண் சங்கீதாவுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் சம்பளம் தருவதாக அழைத்துச்சென்று விட்டு, ரூ.30 ஆயிரம் மட்டுமே தந்து கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தியா கண்டனம்

தேவயானி, மேன்ஹட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், 2லு லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதித்தந்து உடனடியாக ஜாமீன் பெற்றார்.2 குழந்தைகளின் தாயான துணைத்தூதரை அமெரிக்கா இப்படி அநாகரிகமாக நடத்தியவிதம், இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பவலை, வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நேற்று  நேரில் அழைத்து கண்டித்தார். இப்படிப்பட்ட ஒரு தரம்கெட்ட செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிபடத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் இந்திய–அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

வழக்கு விசாரணை உண்டு

நியூயார்க் அரசு வக்கீல்கள் அலுவலகம் சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், 'தேவயானி சட்டத்தை மீறி உள்ளார். அவர் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.நியூயார்க் அரசு தலைமை வக்கீல் பிரித் பராரா, ''அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு அழைத்துவரக்கூடிய வெளிநாட்டுப் பெண்களுக்கு, அமெரிக்க குடிமக்களின் வேலைக்காரர்களுக்கு வழங்கப்படுகிற அதே பாதுகாப்பு வழங்கப்படுகிறது'' என கூறினார்.

விலக்கு உரிமை கிடையாது

இந்தப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், '' தேவயானி கைதான சம்பவத்தை சட்ட அமலாக்க அமைப்புகள் மூலமாக கையாண்டு வருகிறோம். இந்தியாவுடன் நாங்கள் நெடுங்கால உறவு கொண்டுள்ளோம். அந்த உறவு தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என கூறினார்.அவர் மேலும் கூறுகையில், ''தூதரக உறவுகள் தொடர்பான 'வியன்னா உடன்படிக்கை'யின்படி, தூதரக அலுவல்களில்தான் இந்திய துணைத்தூதர் (சட்ட நடவடிக்கையிலிருந்து) விலக்கு உரிமையைப் பெற்றுள்ளார்'' என்றார். எனவே சொந்த விவகாரங்களில் துணைத்தூதர் தேவயானி, விலக்கு உரிமையைப் பெறமுடியாது, அவர் நீதிமன்றத்தில் விசாரணை எதிர்கொண்டாக வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

15 ஆண்டு சிறை?

இதற்கிடையே இந்தப்பிரச்சினை தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி தரண்ஜித் சிங் சந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இருப்பினும் தேவயானி மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

தஞ்சை பெரிய கோவில்

Posted: 14 Dec 2013 06:21 AM PST

சனிபிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நந்திக்கு அபிஷேகம் செய்தபோது எடுத்தபடம் அருகில் தரிசனத்திற்க்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

7

லோக்பால் மசோதா நிறைவேற ஆதரிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் ராகுல் காந்தி வேண்டுகோள்

Posted: 14 Dec 2013 06:13 AM PST

புதுடெல்லி,

அனைத்து கட்சிகளும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார். ஆம் ஆத்மியின் எழுச்சி காரணமாகவே, லோக்பால் மசோதா கொண்டு வரப்படுவதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.

லோக்பால்

மேல்மட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வகைசெய்யும் லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று  டெல்லி மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது, நாளை விவாதம் நடைபெறுகிறது.சமாஜ்வாடி கட்சியின் எதிர்ப்பால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவருடன், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில் சிபல், நாராயணசாமி ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.

ராகுல் காந்தி

அப்போது, ராகுல் காந்தி கூறியதாவதுஊழலுக்கு எதிராக போராடுவதற்கு மிகமிக வலிமையான ஆயுதம், லோக்பால் மசோதா. இது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டு நலனுக்கு உகந்தது. ஊழலை ஒடுக்க ஒரு வழிமுறை வேண்டும் என்று நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நேரத்தில், லோக்பால் மசோதா வந்துள்ளது.
நாங்கள் அந்த மசோதாவை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். ஆனால், பாராளுமன்றம் முடக்கப்பட்டு விட்டது.நாங்கள் 99 சதவீத பணிகளை முடித்து விட்டோம். மீதி ஒரு சதவீதத்தை அனைத்து கட்சிகளும் செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க வேண்டும். அப்படி செய்தால், நாட்டுக்கு லோக்பால் சட்டத்தை வழங்கி விடுவோம். எனவே, அனைத்து கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து மசோதாவை ஆதரிக்க வேண்டும்.

ஆம் ஆத்மி

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி மற்றும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் காரணமாக, லோக்பால் மசோதாவை நாங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுவது தவறு. இது, வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. நாங்கள் முன்பே தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வந்தோம். அது, ஊழல் ஒழிப்பில் வலிமையான ஒற்றை ஆயுதம்.அதன்பிறகு, சிறிது காலமாக, லோக்பால் மசோதாவுக்காக பணியாற்றி வந்தோம். அன்னா ஹசாரேவை பொறுத்தவரை, அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அது, அவரது பார்வை. எங்களைப் பொறுத்தவரை, ஊழல் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ப.சிதம்பரம்

உடன் இருந்த மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:ஓரிரு கட்சிகளுக்கு லோக்பால் மசோதா குறித்து அதிருப்தி இருக்கலாம். ஆனால் எந்த கட்சியுமே லோக்பாலே கூடாது என்று கூறவில்லை. நாட்டுக்கு இந்த மசோதா தேவை. கட்சிகள் தங்களது அதிருப்தியை கைவிட்டால், இந்த கூட்டத்தொடரிலேயே லோக்பால் சட்டம் சாத்தியமாகி விடும்.தேர்வுக்குழு அறிக்கையில் மத்திய அரசு இரண்டு, மூன்று திருத்தங்களையே செய்துள்ளது. அதிகாரப்பூர்வ திருத்தங்களை மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி தாக்கல் செய்துள்ளார். லோக்பாலின் அதிகாரத்தை சீர்குலைக்கும் வகையில் மசோதாவில் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.மத்திய மந்திரி கபில் சிபல் கூறுகையில், லோக்பாலின் கீழ் சி.பி.ஐ. செயல்படும் என்றார்.

category:

News Group Category:

டெல்லியில் ஆட்சி அமைக்கப்படுமா? காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு கெஜ்ரிவால் திடீர் நிபந்தனை

Posted: 14 Dec 2013 06:07 AM PST

புதுடெல்லி,

டெல்லியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிக்கு கெஜ்ரிவால் திடீர் நிபந்தனைகளை விதித்து உள்ளார்.

காங்கிரஸ் அதிரடி

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் முடியும் நிலையிலும், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடர்கிறது. 70 இடங்களைக் கொண்ட சட்டசபையில் 31 இடங்களைப்பிடித்து தனிப் பெருங்கட்சியாக உருவாகியுள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முன்வரவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாக அந்தக் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.சற்றும் எதிர்பாராத நிலையில், ஆம் ஆத்மி கட்சி அரசு அமைக்க ஆதரவு அளிக்கப்போவதாக நேற்று  இரவு காங்கிரஸ் அறிவித்தது.

கவர்னர்-கெஜ்ரிவால் சந்திப்பு

இந்த நிலையில், 28 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ள ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கை நேற்று காலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து துணைநிலை கவர்னர் நஜீப் ஜங், ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவேன் எனக் கூறினார்.
 டெல்லியில் தற்போது யாரும் அரசு அமைக்கும் நிலையில் இல்லை என அவர் அதில் தெரிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

ஆதரவில் போட்டி

துணைநிலை கவர்னரை சந்தித்த பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:துணைநிலை கவர்னர் எங்களை அரசு அமைக்க அழைப்பு விடுத்தார். நாங்கள் அரசு அமைக்கவில்லை என்பதை துணை நிலை கவர்னரிடம் தெரிவித்தோம். அரசு அமைப்பதற்கு அவர் எந்தக் காலக்கெடுவும் விதிக்கவில்லை. நாங்கள் எப்போது தயாரானாலும், அது குறித்து தகவல் தெரிவிக்குமாறு அவர் கூறினார்.எங்கள் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) துணை நிலை கவர்னருக்கு காங்கிரஸ் கடிதம் அளித்துள்ளது. நாங்கள் காங்கிரசிடமிருந்தோ, பாரதீய ஜனதாவிடமிருந்தோ ஆதரவு கேட்கவில்லை. ஆனால் இரு கட்சிகளுமே எங்களுக்கு ஆதரவு தருவதில் ஒன்றுக்கொன்று போட்டிப்போடுகின்றன.

ஆதரவின் நோக்கம் என்ன?

எந்தவொரு ஆதரவும் நிபந்தனையற்றதாக இருக்காது. அவர்களது ஆதரவின் பின்னால் ஏதோ உள்நோக்கம் அடங்கி இருக்கிறது.காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவின் ஊழல், வகுப்புவாத அரசியல் காரணமாகத்தான் எங்கள் கட்சியே பிறந்தது. இவ்விரு கட்சிகளுமே டெல்லி மக்களைப்பற்றி கவலைப்படவில்லை.எங்களுக்கு அவர்கள் ஆதரவு தருவதற்கு பின்னால் உள்ள உள்நோக்கம் என்ன? நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, நாங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் கடிதம் எழுதி உள்ளோம்.அதில் 17 பிரச்சினைகளில் அவர்களது நிலை என்ன என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறோம்.

முக்கிய அம்சங்கள்

அந்தக் கடிதத்தில் டெல்லியில் உள்ள மிக முக்கிய பிரபலங்கள் கலாசாரம், வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த தடை, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், மின் வினியோக நிறுவனங்களின் கணக்கு தணிக்கை, பெண்கள் பாதுகாப்பு, டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து உள்ளிட்ட அம்சங்கள்பற்றி குறிப்பிட்டிருக்கிறோம்.டெல்லியில் வி.ஐ.பி. கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும். எந்தவொரு எம்.எல்.ஏ.வோ அல்லது மந்திரியோ கார்களில் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தக்கூடாது, பெரிய பங்களாவில் வசிக்கக்கூடாது, பலத்த பாதுகாப்பு கூடாது. நாங்கள் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம். ராம்லீலா மைதானத்தில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்துவோம்.

மக்கள் சொல் கேட்போம்

எங்கள் கடிதத்துக்கு சோனியா காந்தியும், ராஜ்நாத் சிங்கும் பதில் கடிதம் எழுதினால், அந்தக் கடிதங்களுடன் நாங்கள் டெல்லி மக்களிடம் செல்வோம். அவர்கள் மறுதேர்தலை விரும்புகிறார்களா அல்லது நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்பதை கேட்போம். நாங்கள் மக்கள் விரும்புவதைச் செய்வோம்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

10 நாள் அவகாசம் கேட்டார்

துணை நிலை கவர்னரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைப்பதற்கு 10 நாள் அவகாசம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் கடிதத்தை பரிசீலித்து வருகிறோம், ஓரிரு நாளில் பதில் கடிதம் எழுதப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது தெரிவித்தார்.இதற்கிடையே பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி கட்சிகள் அரசு அமைக்க மறுத்துள்ளதால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த துணை நிலை கவர்னர் பரிந்துரை செய்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. அப்படி ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டால், வரும் மே மாதம் பாராளுமன்றத்தேர்தலுடன் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

category:

News Group Category:

டெல்லி அரசியல் நிலவரம் குறித்து குடியரசு தலவருக்கு அறிக்கை அனுப்பினார் துணை ஆளுநர் ஜங்

Posted: 14 Dec 2013 06:01 AM PST

புதுடெல்லி,

புது டெல்லி  துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், தில்லி மாநில அரசியல் சூழல் குறித்து தனது அறிக்கையினை  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் பாஜகவை அழைத்துப் பேசியபோது, பாஜக தெரிவித்த கருத்துகள், இன்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிடம் தெரிவித்த விவரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து ஓர் அறிக்கையாக அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை துணை நிலை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

category:

News Group Category:

கெஜ்ரிவால் எழுப்பியுள்ள 18 நிபந்தனைகள்

Posted: 14 Dec 2013 05:52 AM PST

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் எழுப்பியுள்ள 18 பிரச்சினைகள் வருமாறு:

1. டெல்லியில் மிக முக்கிய பிரமுகர்களுக்கான (வி.ஐ.பி.) கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருதல். எம்.எல்.ஏ., மந்திரி அல்லது டெல்லி அதிகாரிகள் கார்களில் சிவப்பு சுழல் விளக்குக்கு தடை. அவர்கள் பெரிய அரசு பங்களாக்களில் வசிக்க தடை. சிறப்பு பாதுகாப்பு கூடாது.

2. ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுதல்.

3. ஒவ்வொரு பகுதியிலும், காலனியிலும் மக்கள் சபைகளில் நேரடியாக முடிவுகளை எடுத்தல்.

4. டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து. டெல்லி பெருநகர் வளர்ச்சி குழுமம், போலீஸ் ஆகியவை மத்திய அரசின் பிடியில் இருந்து விடுபடுதல்.

5. டெல்லியில் உள்ள அனைத்து மின்சார வினியோக கம்பெனிகளிலும் சிறப்பு தணிக்கை. மறுக்கிற கம்பெனிகளின் உரிமங்கள் ரத்து.

6. மின் மீட்டர்களை சோதித்தல்.

7. ஒவ்வொருவருக்கும் தினமும் 220 லிட்டர் குடிநீர்.

8. அதிகாரப்பூர்வமற்ற குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துதல்.

9. குடிசைகளில் வசிப்பவர்களுக்கு குறைவான விலையில் முறையான வீடுகள் கட்டித்தருதல்.

10. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறவர்களுக்கு முறையான வேலை.

11. சாதாரண வியாபாரிக்கும் சாலைகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்.

12. சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு கூடாது

13. டெல்லி விவசாயிகளுக்கு வசதிகள், மானியங்கள்

14. 500 அரசு பள்ளிகள் தொடங்குதல். தனியார் பள்ளிகளுக்கு நன்கொடை நிறுத்தம். கல்வி கட்டணத்தில் ஒளிவுமறைவின்மை.

15. நல்ல வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனைகள்

16. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு படைகள். பாலியல் தொல்லை வழக்குகளில் 3 மாதத்தில் முடிவு.

17. எல்லா வழக்குகளிலும் 6 மாதத்தில் தீர்வு காண கோர்ட்டுகள் அமைத்தல், நீதிபதிகள் நியமித்தல்.

18. இந்த திட்டங்களை நிறைவேற்ற டெல்லி மாநகராட்சிகளின் ஆதரவு.

மேற்கண்ட திட்டங்கள் பற்றி சோனியா காந்தி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தங்கள் கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.

category:

News Group Category:

கல்யாண சமையல் சாதம்

Posted: 14 Dec 2013 05:24 AM PST

Cinema Category: 
விமர்சனம்

Cinema Group

Cinema Group Image

images: 

Cinema Group History

நடிகர்கள்: 
பிரசன்னா–லேகா வாஷிங்டன்
இசை: 
அரோரா
ஒளிப்பதிவு: 
கிருஷ்ணன் வசந்த்
இயக்கம்: 
ஆர்.எஸ்.பிரசன்னா

Cinema Description

Cinema Description: 

சினிமா விமர்சனம்:

கதாநாயகன்–கதாநாயகி: பிரசன்னா–லேகா வாஷிங்டன்.

டைரக்ஷன்: ஆர்.எஸ்.பிரசன்னா.

கதையின் கரு: தனக்கு ஆண்மைக்குறைவோ என்று பயப்படும் இளைஞன்.

திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போகும் பிரசன்னா ஒருவழியாக சம்மதித்து, லேகா வாஷிங்டனை பெண் பார்க்க போகிறார். பார்த்ததுமே அவரை பிடித்துப்போகிறது. ''எனக்கு சம்மதம்'' என்கிறார். லேகா வாஷிங்டனின் சம்மதத்தையும் கேட்கிறார். அவருடைய அணுகுமுறை லேகாவுக்கும், அவருடைய பெற்றோர்களுக்கும் பிடித்துப் போகிறது.

திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இருவரும் காதலர்கள் போல் பழகுகிறார்கள். இரண்டு பேரும் 'பார்ட்டி'க்கு போகிறார்கள். உற்சாக பானம் அருந்துகிறார்கள். தனி அறையில் தங்குகிறார்கள். லேகாவை நெருங்கும்போது பிரசன்னா, 'முடியாதவராகி' விடுகிறார். தனக்கு ஆண்மை குறைவோ என்று சந்தேகப்படும் அவர், ராசி கல் ஜோதிடர் முதல் லேகியம் விற்கும் வைத்தியர் வரை சென்று வீரியமானவராக முயற்சிக்கிறார்.

திருமண நாளும் நெருங்குகிறது. பிரசன்னாவுக்கும், லேகாவுக்கும் இடையே அந்த 'முடியாத' பிரச்சினை தொடர்பாக சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், மோதல்கள் ஏற்படுகின்றன. அதையும் மீறி, அவர்கள் திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே மீதி கதை. எந்த கதாநாயகனும் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை துணிச்சலுடன் ஏற்று நடித்ததற்காக, பிரசன்னாவை முதலில் பாராட்ட வேண்டும். சந்தோஷமும், கலகலப்புமாக திருமண களையுடன் கூடிய ஒரு இளைஞராகவே மாறியிருக்கிறார்.

தன்னை, ''உஸ்'' என்று லேகா சொன்னதற்காக கோபப்படும்போதும், அம்மாவை குறை சொன்னதற்காக ஆத்திரப்படும் போதும், தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். லேகா வாஷிங்டன், அந்த மணப்பெண் வேடத்துக்கு அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். அவருடைய அப்பாவாக டெல்லி கணேஷ், டாக்டராக கிரேசி மோகன், பிரசன்னாவின் தாத்தாவாக காத்தாடி ராமமூர்த்தி ஆகியோரும் கலகலப்பூட்டுகிறார்கள்.

பிரசன்னாவும், லேகாவும் கடலுக்குள் அமைந்த அந்த தீவுக்குள் சென்று வருகிற காட்சியில், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் திறமை காட்டியிருக்கிறார். அரோராவின் இசையில் பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்கவில்லை.

கதை சொன்ன விதம், கல்யாண விருந்துதான். ஆனால், படம் முழுவதும் 'அந்த ஒரு விஷயத்தையே' சுற்றி வருவது, அலுப்பு. மெதுவாக நகரும் திரைக்கதை, இன்னொரு பலவீனம். ஆரம்பத்திலும், முடிவிலும் கோபுரங்களை காட்சிப்படுத்திய விதத்துக்கு பெயர், தமாஷ் அல்ல. ஆபாசம்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™