Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 215 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்

Posted: 11 Dec 2013 12:29 PM PST

நாகப்பட்டினம்,

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 215 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

நாகை மீனவர்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், கல்லார், சாமந்தான்பேட்டை, பட்டினச்சேரி, வேளாங்கண்ணி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். நாள்தோறும், விசைப்படகு மற்றும் பைபர் படகு மூலம் கடலுக்கு சென்று வரும் நாகை மீனவர்கள் அடிக்கடி நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையால் தாக்குதலுக்குள்ளாகி சிறைபிடித்து செல்லப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இவ்வாறு சிறைபிடிக்கப்படும் நாகை மீனவர்கள் இலங்கை சிறையில் பல்வேறு இன்னல்களை சந்திப்பதுடன் தங்கள் வாழ்வாதார கருவியான படகுகளை இலங்கை அரசிடம் பறிகொடுக்கும் நிலையும் இருந்து வருகிறது.

சிறைபிடித்தனர்

இந்தநிலையில் கடந்த 8–ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், கல்லார், சாமந்தான்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 215 மீனவர்கள் 32 விசைப்படகில் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நடுக்கடலில் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கடலில் வைத்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களை இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

விடுவிப்பு

இதைக்கண்ட சக மீனவர்கள் இதுகுறித்து நாகை அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் இந்திய பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு சம்மதம் தெரிவித்தது. இதன்படி 32 விசைப்படகுகளுடன் 215 மீனவர்களும் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட நாகை மீனவர்கள் தங்கள் படகுகளுடன் இன்று நாகைக்கு வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது 40 பாராளுமன்ற தொகுதிக்கும் அ.தி.மு.க. விருப்ப மனு ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 11 Dec 2013 12:28 PM PST

சென்னை

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் 19–ந் தேதி முதல் விருப்பமனுக்களை கொடுக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயார்

'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்ற வாசகத்திற்கேற்ப 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பாராளுமன்ற தேர்தல் காய்ச்சல் இப்போதே அரசியல் கட்சிகளை தொற்றிக்கொண்டு உள்ளது. தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியின் அபார வளர்ச்சியும், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பின்னடைவும் அரசியல் பார்வையாளர்களையும், அரசியல் கட்சியினரையும் சற்றே யோசிக்கவே வைத்திருக்கிறது. மாநில கட்சிகளை பொறுத்தவரையில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளை பிரதானப்படுத்தியே பிரசாரத்தை முன் எடுத்துச்செல்லும். ஏனென்றால் நடப்பது பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.

40 தொகுதிகளிலும் வெற்றி இலக்கு

தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திலும் வெற்றி பெற்று தேசிய அரசியலில் செல்வாக்கை செலுத்த விரும்புகிறது. அதற்கேற்றாற்போல் அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களை சந்திக்கும் போது எல்லாம் இதையே வலியுறுத்தி வருகிறார்.

ஏற்காடு தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி கொண்டாட்டத்தின் போது தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு பேசிய முதல்–அமைச்சர், ஏற்காடு தேர்தலை போலவே தொண்டர்கள் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற உழைக்க உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மற்ற கட்சிகள்

தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் பற்றி முடிவு செய்ய 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறது.

பா.ம.க. ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டாலும், பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ம.தி.மு.க.வும் இதே மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பாரதீய ஜனதாவை பொறுத்தவரையில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று ஏற்கனவே அறிவித்து விட்டது.

ஜெயலலிதா அறிவிப்பு

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயார் என்று அ.தி.மு.க. அறிவித்து, களத்தில் இறங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனுக்களை 19–ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமை கழகத்தில் வருகிற 19–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டண தொகையை செலுத்தி அதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

ரூ.25 ஆயிரம் கட்டணம்

அ.தி.மு.க. பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு இணங்க, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உட்பட்ட 40 பாராளுமன்ற மக்களவை தொகுதிகளில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமை கழகத்தில் ரூ.25 ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு கூட்டம்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்சியாக அ.தி.மு.க. களம் இறங்கியிருக்கிறது. விருப்பமனு வாங்கும் அதே நாளில், (19–ந் தேதி) மதியம் 3 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
 

category:

News Group Category:

தமிழகத்தில் சாதி, மதப்பிரச்சினைகளை உருவாக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் ஜெயலலிதா பேச்சு

Posted: 11 Dec 2013 12:18 PM PST

சென்னை

சென்னையில் தலைமைச்செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு நேற்று நடைபெற்றது.

மாநாட்டை தொடங்கி வைத்து முதல்–அமைச்சர் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

ஏராளமான திட்டங்கள்

கடந்த இரண்டரை ஆட்சிகால செயல்பாட்டை பின்னிட்டு பார்க்கும்போது, ஆட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் சாதனை படைத்துள்ளோம் என்ற முழுமையான திருப்தியை உணர முடிகிறது. அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை ஏழை, எளியவர்கள் அடைய வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை இந்த அரசு தீட்டியுள்ளது.

பெண்கள், குழந்தைகள், நலிவடைந்த மக்களின் மேம்பாடு, முதலீட்டை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, கல்வித் தர உயர்வு, சிறப்பான சுகாதாரம், திறமைகளை வளர்த்து வேலை வாய்ப்பை பெற செய்வது போன்றவற்றுக்கும் தமிழக அரசு ஏராளமான திட்டங்களை வடிவமைத்துக்கொடுத்துள்ளது.

தேசிய விருது

குறிப்பிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக நமது மாநிலம் தேசிய அளவிலான விருதுகளை வென்றுள்ளது. இந்த சாதனைகளை படைப்பதற்கு 3 காரணங்கள் உள்ளன. தீர்க்கமான நோக்கம் மற்றும் சிறந்த தலைமை; மக்கள் முன்னேற்றம் அடைவதற்கு ஏதுவாக பொதுஅமைதி நிலை பராமரிப்பு; அரசுத்துறையின் ஒவ்வொரு நிலை அலுவலர்களின் அர்ப்பணிப்பான பணி ஆகியவையே.

இதை நாம் அப்படியே விட்டுவிடக்கூடாது. இந்த செயல்பாடு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, செயல்பாட்டை மேலும் உயர்த்துவதும் அவசியம்.

முக்கியமான பிரச்சினைகளில் மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வதும், அதற்கேற்ப செயல்படும் எனது அரசின் திறமைதான், தமிழகத்தில் பொது அமைதி குலையாமல் பாதுகாப்பதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

போலீஸ் துறைக்கு முழு சுதந்திரம்

சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை, மத அடிப்படைவாத வன்முறை, இடதுசாரி தீவிரவாதம், சாதிக்கலவரங்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவது, இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் பெருமை அளிப்பதோடு, மன நிறைவையும் தருகிறது. மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீஸ் துறைக்கும் முழு சுதந்திரத்தை நான் அளித்திருப்பதுதான் இதற்கு காரணம்.

சாதி வெறியை ஏற்படுத்துகிறவர்கள், மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறவர்களை இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது. சமூகவிரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதற்கான உறுதியான ஆணைகளை போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நான் அளித்துள்ளேன்.

தமிழகத்துக்குள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நுழைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், தீவிர கண்காணிப்பினால் முறியடிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் முச்சந்திப்பகுதிகளில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் பற்றிய உளவுத்துறை தகவல்களை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இடதுசாரி தீவிரவாதத்தின் கொள்கைகளை தூக்கிப்பிடித்து கொண்டு, தமிழகத்தில் கூட்டத்தை சேர்க்க முயலும் சில அமைப்புகளை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை பிரச்சினை

இலங்கையில் நடைபெற்ற போருக்குப்பின்னர், அங்குள்ள தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இரண்டாம் நிலை குடிமக்களாக நடத்தப்படும் மனித உரிமையற்ற நிலை உள்ளது. அதோடு, போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த இனப்படுகொலைக்காக இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததும், தமிழகத்தில் உணர்ச்சிப்பெருக்கை ஏற்படுத்தின.

இலங்கை பிரச்சினையை இந்திய அரசு, அறிவுப்பூர்வமாக கையாளாததால், பிரச்சினை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலவிய கடுமையான சூழ்நிலை, திறமையாக கையாளப்பட்டது.

கச்சத்தீவு

இலங்கை கடற்படையினரால் பாக்.ஜலசந்தியில் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தமிழக மீனவர்களை கொந்தளிக்கச் செய்தது. இதில் பிரதமர் தலையிட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன்.

கச்சத்தீவை திரும்ப பெறுவதுதான் தமிழக மீனவர்களின் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதையும் பிரதமருக்கு கடிதங்கள் வாயிலாக தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து 2008–ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

புவியியல், கலாசாரம், வரலாறுகளின்படி இந்தியாவின் பாகமாக கச்சத்தீவு உள்ளது என்பதும், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் செக்ஸ் வன்முறைகள் அதிக அளவில் நடைபெறும் சூழ்நிலையில், தமிழகத்தில் அப்படியொரு நிலை ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணித்து செயல்படுவது முக்கியமாகும். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் ஏற்படாத வகையில் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நிலையற்ற சீதோஷ்ணத்தை நாம் சந்தித்து வருகிறோம். எதிர்பார்த்த அளவில் வடகிழக்கு பருவமழை கிடைக்கவில்லை. மழைகாலம் முடிவதற்குள் மேலும் மழை பெய்யும் என்று நம்புகிறேன். எனவே நிலையற்ற தட்பவெப்ப நிலையால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொண்டு, நடவடிக்கை எடுப்பதற்கு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

விரைவில் ஸ்மார்ட் கார்டு

முக்கிய திட்டமான ஒருங்கிணைந்த பொதுவிநியோக முறை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். மக்களின் பயோ மெட்ரிக் தகவல்களை தேசிய ஜனத்தொகை பதிவில் இருந்து பெறுவதில் கலெக்டர்கள் துரிதமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், அனைத்து குடும்பத்தினருக்கும் விரைவில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

பசுமை கடைகள்

விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் வகையில், புதிய நுகர்வோர் பண்ணை பசுமைக்கடைகளை அரசு திறந்துள்ளது. எனவே குறைந்த விலையில் காய்கறிகளை மக்கள் வாங்க முடிகிறது. சென்னையில் உள்ள 40 கடைகளின் மூலம் இதுவரை ரூ.7.38 கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 482 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

காய்கறிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு ஏதுவாக, 10 ஆயிரத்து 493 விவசாயிகளுக்கு ரூ.55.22 கோடி பயிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தந்த மாவட்டங்களில் தகுந்த இடங்களில் இதுபோன்ற பண்ணை பசுமைக்கடைகளை கலெக்டர்கள் திறக்க வேண்டும்.

அம்மா உணவகம்

நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மற்றும் நலிவடைந்த மக்கள்தான், எனது திட்டத்தில் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகிறார்கள். அந்த வகையில் அம்மா உணவகங்கள் திட்டம், ஒரு புரட்சிகரமான திட்டமாகும். 30 ஆண்டுகளுக்கு முன்பு 1982–ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத்திட்டம் போல், இந்த திட்டத்தால் ஏழைகள் பசித்திருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விலை இல்லா பொருட்கள்

அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அறிவுப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் போன்றவை எல்லாம், பெண்களை அதிக தட்டுமுட்டு வேலைப்பளுவில் இருந்து நீங்கச்செய்து, நல்ல பணிகளில் பங்கேற்க செய்யும் நோக்கத்தில் வழங்கப்படுகின்றன. இவையெல்லாம், பயனாளிகளுக்கு வழங்கப்படுவதையும், அவற்றுக்கான சேவைகள் கிடைப்பதையும் கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

புதிய தொழில்பூங்காக்கள்

தொழில் வளர்ச்சியை பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக தென்மாவட்டங்களில் விரிவாக்கம் செய்வதற்கு தமிழக அரசு சமீபகாலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக 20 ஆயிரத்து 650 ஏக்கர் நிலப்பரப்பில், ஒன்பது தென் மாவட்டங்களில் ஒன்பது புதிய தொழில்பூங்காக்கள் உருவாக்கப்படும்.

அந்த மாவட்ட மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, இந்த தொழில் பூங்காக்களில் புதிய தொழில் பிரிவுகளை அமைப்பதற்கு தொழிற்சாலைகளுக்கு வழிவகை செய்யப்படும்.

உங்கள் மாவட்டங்களின் நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்தி, எனது அரசின் நோக்கமான மக்கள் நலன் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுக்கு சிறப்பான பங்களிப்பை கலெக்டர்கள் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கான அனைத்து ஆதரவையும், வாய்ப்பையும் இந்த அரசு உங்களுக்கு வழங்கும்.

கலெக்டர் கடமை

கடந்த 2011–ம் ஆண்டில் கலெக்டர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 81 அறிவிப்புகளுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. கடந்த 2012–ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 346 அறிவிப்புகளில் 332 அறிவிப்புகளுக்கு அரசாணை அளிக்கப்பட்டுவிட்டது. 8 அறிவிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அரசு வெளியிடும் அறிவிப்புகளை மக்கள் அடையும் பலனாக மாற்றுவது உங்கள் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் ரத்து

Posted: 11 Dec 2013 12:06 PM PST

இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் ரத்து டி காக், டிவில்லியர்ஸ் சதம் வீண்

செஞ்சூரியன்

இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இதனால் டிகாக், டிவில்லியர்ஸ் ஆகியோரின் சதம் வீண் ஆனது.

ஸ்டெயினுக்கு ஓய்வு

தென்ஆப்பிரிக்கா–இந்தியா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், காலிஸ், மோர்னே மோர்கல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், வெய்ன் பார்னல், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ரஹானேவுக்கு பதிலாக யுவராஜ்சிங் இடம் பெற்றார்.

டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து 3–வது முறையாக முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்காவுக்கு இந்த தடவை தொடக்கம் சரியாக அமையவில்லை. அம்லா 13 ரன்னில் முகமது ஷமியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மா ஒரே ஓவரில் ஹென்ரி டேவிட்ஸ் (1), டுமினி (0) ஆகியோரை வெளியேற்றினார். 28 ரன்னுக்குள் (7.4 ஓவர்) 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய தென்ஆப்பிரிக்காவை மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயின்டான் டி காக், கேப்டன் டிவில்லியர்ஸ் இருவரும் இணைந்து காப்பாற்றினர். இந்தியாவுக்கு அருமையான தொடக்கம் கிடைத்த போதிலும், பீல்டிங் சொதப்பலால் இறுகிய பிடி படிப்படியாக தளர்ந்தது. தென்ஆப்பிரிக்காவின் கை ஓங்கியது.

டி காக் மீண்டும் சதம்

இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய டி ஹாக் 'ஹாட்ரிக்' சதம் அடித்தார். 'ஹாட்ரிக்' சதம் எடுத்த முதல் விக்கெட் கீப்பர் இவர் தான். ஸ்கோர் 199 ரன்களை எட்டிய போது டி காக் (101 ரன், 120 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். மறுமுனையில் டிவில்லியர்ஸ் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். முகமது ஷமியின் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்க விட்ட அவர், அஸ்வினையும் பலமாக தண்டித்தார். அவரது ஓவர்களில் 3 சிக்சர்களை விரட்டியடித்தார். தனது 16–வது சதத்தை பூர்த்தி செய்த அவர் 109 ரன்களில் (101 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். இறுதிகட்டத்தில் டேவிட் மில்லரின் (56 ரன், 34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதத்தின் உதவியுடன் தென்ஆப்பிரிக்கா 300 ரன்களை கடந்தது.

மழையால் ரத்து

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 100 ஆக (70 ஆட்டம்) உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்திய அணி இன்னிங்சை தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டது. விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்ததால் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து 3 போட்டி கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 18–ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு

தென்ஆப்பிரிக்கா

அம்லா (சி) யுவராஜ் (பி) முகமது ஷமி 13

டி காக் (பி) இஷாந்த் 101

டேவிட்ஸ் (சி) ரெய்னா (பி) இஷாந்த் 1

டுமினி (சி) ரெய்னா (பி) இஷாந்த் 0

டிவில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) யாதவ் 109

டேவிட் மில்லர் (நாட்–அவுட்) 56

மெக்லரன் (சி) யாதவ் (பி) இஷாந்த் 6

பார்னல் (சி) ரோகித் (பி) முகமது ஷமி 9

பிலாண்டர் (பி) முகமது ஷமி 0

சோட்சோப் (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 5

மொத்தம் (50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 301

விக்கெட் வீழ்ச்சி: 1–22, 2–28, 3–28, 4–199, 5–252, 6–269, 7–291, 8–298

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 10–1–40–4

உமேஷ் யாதவ் 9–0–57–1

முகமது ஷமி 10–0–69–3

அஸ்வின் 9–0–63–0

ஜடேஜா 6–0–32–0

ரெய்னா 3–0–16–0

விராட் கோலி 3–0–22–0

தவறிய கேட்ச்சுகள் சதமாக மாறின

தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் 38 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, 'ஷார்ட் பைன் லெக்' திசையில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மாற்று பீல்டர் ரஹானே வீணடித்தார். 43 ரன்களில் இருந்த போது அளித்த கேட்ச்சை, யுவராஜ்சிங் நழுவ விட்டார்.

இதே போல் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 90 ரன்களில் இருந்த போது தூக்கியடித்த பந்தை யுவராஜ்சிங் பிடிக்க தவறினார். இப்படி இந்திய வீரர்கள் காட்டிய கருணையால் இருவரும் சதத்தை ருசித்தனர்.
 

category:

News Group Category:

திருநங்கை கொடூரமாக வெட்டிக்கொலை உல்லாசத்திற்கு அழைத்து சென்றவாலிபர்கள் வெறிச்செயல்

Posted: 11 Dec 2013 12:03 PM PST

சேலத்தில் திருநங்கை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை உல்லாசத்திற்கு அழைத்துச்சென்ற இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு நடந்த இந்த கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

அய்யோ...அம்மா சத்தம்

சேலம் அம்மாபேட்டை குமரகிரி ஏரி அருகில் குமரகிரிபேட்டை பகுதி உள்ளது. இங்கு குமரகிரி ஏரியை தாண்டி சாக்கடை கழிவுநீர் செல்லும் ராஜவாய்க்கால் இருக்கிறது. நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜவாய்க்கால் பகுதியில் உள்ள மினரல் வாட்டர் நிறுவனம் அருகில் அய்யோ...அம்மா என அலறும் சத்தம் கேட்டது.

அப்போது குமரகிரிபேட்டை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், குமார் ஆகியோர் குமரகிரி ஏரியின் கடைசி பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் பேசிக்கொண்டிருந்தனர். அலறல் சத்தம் கேட்டதும் இருவரும் சத்தம் வரும் திசைநோக்கி ஓடி வந்தனர். கும்மிருட்டான அப்பகுதியில் யாரோ சிலர் ஓடும் ஓசை மட்டும் கேட்டது.

திருநங்கை கொடூர கொலை

இருவரும் மினரல் வாட்டார் நிறுவனம் அருகில் உள்ள ராஜவாய்க்கலை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். கழிவுநீர் செல்லும் ராஜவாய்க்கால் ஒடையில் உடலில் சரமாரியான வெட்டுகாயங்களுடன் திருநங்கை (அரவாணி) கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். வெட்டுப்பட்டதில் அவரது இடது கை துண்டாகி சாக்கடை கால்வாயில் மூழ்கி கிடந்தது.

கொலை செய்த நபர்கள், வெட்டி சாய்த்து அவரை மினரல் வாட்டர் நிறுவனத்தின் தடுப்பு சுவரில் வீசியிருக்கிறார்கள். திருநங்கையின் உடல் சுவரில் மோதி சாக்கடை கால்வாயில் விழுந்திருப்பது தெரியவந்தது. அந்த சுவரில் ரத்தக்கறை படிந்திருந்தது.

உல்லாசம் அனுபவிக்க...

இதுகுறித்து ராமகிருஷ்ணன், குமார் ஆகியோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் ஏ.ஜி.பாபு, பிரபாகரன், உதவி கமிஷனர் ரவிசங்கர், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

திருநங்கை பிணத்தை அவரது தம்பி மணி அடையாளம் காண்பித்த பின்னரே அவர் யார்? என தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட திருநங்கை பெயர் ஈஸ்வரன் என்ற ஈஸ்வரி (வயது 45) என்பதும், உடையாப்பட்டி தொழில்பேட்டை பின்புறம் உள்ள காரிப்பட்டி அம்பேத்கார் காலனியில் வசித்து வருவதும் தெரியவந்தது. ஈஸ்வரியின் தந்தை நைனாமலை இறந்து விட்டார்.

அதன் பின்னர் தாயார் பூங்காவனத்துடன் வசித்து வந்த திருநங்கை ஈஸ்வரி, பகல் வேளையில் பூண்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும், இரவு வேளையில் வாலிபர்களுடன் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு, வாலிபர்கள் சிலர், ஈஸ்வரியுடன் உல்லாசமாக இருப்பதற்காக மறைவான இடத்திற்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் திருநங்கை ஈஸ்வரியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தேடுதல் வேட்டை

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை கொலை செய்த வாலிபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலத்தில் நேற்று முன்தினம் கட்டிட காண்டிராக்டர் வினோத் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து மறுநாளான நேற்று இரவு திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகரில் தினமும் ஒரு கொலை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

category:

News Group Category:

ஒரே நேரத்தில் ‘செஞ்சுரி’ டெஸ்டில் களம் காணும் மைக்கேல் கிளார்க், குக்

Posted: 11 Dec 2013 11:36 AM PST

பெர்த்,

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டில் ஆச்சரியமான ஒரு சாதனை அரங்கேறப்போகிறது.

ஆஸ்திரேலிய கேப்டன் 32 வயதான மைக்கேல் கிளார்க்குக்கு இது 100–வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 12–வது ஆஸ்திரேலிய வீரர் கிளார்க் ஆவார். தனது 98, 99–வது டெஸ்டுகளில் சதம் அடித்த அவர் செஞ்சுரி டெஸ்டிலும் சதம் விளாசும் ஆவலில் இருக்கிறார். 2004–ம் ஆண்டு பெங்களூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் சதத்துடன் சர்வதேச டெஸ்ட் அரங்கிற்குள் நுழைந்த கிளார்க் இதுவரை 26 சதங்கள் உள்பட 7940 ரன்கள் (சராசரி 52.58) குவித்து இருக்கிறார்.

இந்த மாத இறுதியில் 29–வது பிறந்த நாளை கொண்டாட உள்ள இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்கும் இது 100–வது டெஸ்ட் போட்டியாகும். 2006–ம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனதுடன், இவரும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து பிரமாதப்படுத்தினார். இதுவரை 25 சதங்கள் உள்பட 7883 ரன்கள் (சராசரி 47.20) சேர்த்துள்ள குக், 100–வது டெஸ்டில் ஆடப்போகும் 11–வது இங்கிலாந்து நாட்டவர் ஆவார்.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் இரு அணிகளின் கேப்டன்களும் தங்களது 100–வது டெஸ்டில் விளையாட இருப்பது அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். உலக அளவில் மொத்தம் 56 பேர் 100 டெஸ்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார்கள். இவர்களில் 7 பேர் தங்களது 100–வது டெஸ்டில் சதம் அடித்து சரித்திரம் படைத்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் கிளார்க், குக் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

category:

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்ஆப்பிரிக்கா 301 ரன்கள் குவிப்பு

Posted: 11 Dec 2013 11:27 AM PST

செஞ்சூரியன்,

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 301 ரன்கள் குவித்தது. டிகாக், டிவில்லியர்ஸ் சதம் அடித்தனர்.

ஸ்டெயினுக்கு ஓய்வு

தென்ஆப்பிரிக்கா–இந்தியா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், காலிஸ், மோர்னே மோர்கல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், வெய்ன் பார்னல், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ரஹானேவுக்கு பதிலாக யுவராஜ்சிங் இடம் பெற்றார்.

டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து 3–வது முறையாக முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்காவுக்கு இந்த தடவை தொடக்கம் சரியாக அமையவில்லை. அம்லா 13 ரன்னில் முகமது ஷமியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மா ஒரே ஓவரில் ஹென்ரி டேவிட்ஸ் (1), டுமினி (0) ஆகியோரை வெளியேற்றினார். 28 ரன்னுக்குள் (7.4 ஓவர்) 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய தென்ஆப்பிரிக்காவை மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயின்டான் டி காக், கேப்டன் டிவில்லியர்ஸ் இருவரும் இணைந்து காப்பாற்றினர். இந்தியாவுக்கு அருமையான தொடக்கம் கிடைத்த போதிலும், பீல்டிங் சொதப்பலால் இறுகிய பிடி படிப்படியாக தளர்ந்தது. தென்ஆப்பிரிக்காவின் கை ஓங்கியது.

டி காக் மீண்டும் சதம்

இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய டி ஹாக் 'ஹாட்ரிக்' சதம் அடித்தார். 'ஹாட்ரிக்' சதம் எடுத்த முதல் விக்கெட் கீப்பர் இவர் தான். ஸ்கோர் 199 ரன்களை எட்டிய போது டி காக் (101 ரன், 120 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். மறுமுனையில் டிவில்லியர்ஸ் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். முகமது ஷமியின் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்க விட்ட அவர், அஸ்வினையும் பலமாக தண்டித்தார். அவரது ஓவர்களில் 3 சிக்சர்களை விரட்டியடித்தார். தனது 16–வது சதத்தை பூர்த்தி செய்த அவர் 109 ரன்களில் (101 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். இறுதிகட்டத்தில் டேவிட் மில்லரின் (56 ரன், 34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதத்தின் உதவியுடன் தென்ஆப்பிரிக்கா 300 ரன்களை கடந்தது.

மழை குறுக்கிடு

நிர்ணயித்த 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 100 ஆக (70 ஆட்டம்) உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்திய அணி இன்னிங்சை தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

ஸ்கோர் போர்டு

தென்ஆப்பிரிக்கா

அம்லா (சி) யுவராஜ் (பி) முகமது ஷமி 13

டி காக் (பி) இஷாந்த் 101

டேவிட்ஸ் (சி) ரெய்னா (பி) இஷாந்த் 1

டுமினி (சி) ரெய்னா (பி) இஷாந்த் 0

டிவில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) யாதவ் 109

டேவிட் மில்லர் (நாட்–அவுட்) 56

மெக்லரன் (சி) யாதவ் (பி) இஷாந்த் 6

பார்னல் (சி) ரோகித் (பி) முகமது ஷமி 9

பிலாண்டர் (பி) முகமது ஷமி 0

சோட்சோப் (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 5

மொத்தம் (50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 301

விக்கெட் வீழ்ச்சி: 1–22, 2–28, 3–28, 4–199, 5–252, 6–269, 7–291, 8–298

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 10–1–40–4

உமேஷ் யாதவ் 9–0–57–1

முகமது ஷமி 10–0–69–3

அஸ்வின் 9–0–63–0

ஜடேஜா 6–0–32–0

ரெய்னா 3–0–16–0

விராட் கோலி 3–0–22–0

தவறிய கேட்ச்சுகள் சதமாக மாறியன

தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் 38 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, 'ஷார்ட் பைன் லெக்' திசையில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மாற்று பீல்டர் ரஹானே வீணடித்தார். 43 ரன்களில் இருந்த போது அளித்த கேட்ச்சை, யுவராஜ்சிங் நழுவ விட்டார்.

இதே போல் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 90 ரன்களில் இருந்த போது தூக்கியடித்த பந்தை யுவராஜ்சிங் பிடிக்க தவறினார். இப்படி இந்திய வீரர்கள் காட்டிய கருணையால் இருவரும் சதத்தை ருசித்தனர்.

category:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 307 ரன்கள் சேர்ப்பு டெய்லர் சதம் விளாசினார்

Posted: 11 Dec 2013 11:21 AM PST

வெலிங்டன்,

வெஸ்ட் இண்டீஸ்–நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. 10–வது சதத்தை பூர்த்தி செய்த ராஸ் டெய்லர் 129 ரன்களில் ஆட்டம் இழந்தார். ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பாக கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த டெய்லர் அதனை சதமாக மாற்றிக் காட்டியதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களையும் நேற்று கடந்தார். கனே வில்லியம்சன் 45 ரன்களும், கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 37 ரன்களும் எடுத்தனர். 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

category:

சிம்பு, சந்தானம் நடித்துள்ள திரைப்படத்துக்கு தடை கேட்டு வழக்கு தயாரிப்பாளருக்கு நோட்டீசு

Posted: 11 Dec 2013 11:15 AM PST

சென்னை

சென்னை வடபழனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர், சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

சென்னை நந்தனத்தை சேர்ந்த நீலகண்டன் என்ற கணேஷ் என்னிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இந்த தொகையை காசோலை மூலம் திருப்பிக் கொடுத்தார். அந்த காசோலையில், வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என்று திரும்பி வந்தது.

இதுகுறித்து நீலகண்டனிடம் கேட்டபோது, வழக்கு எதுவும் தொடர வேண்டாம். பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். இந்த நிலையில், எனக்கு பணம் தராமல், நடிகர்கள் சிம்பு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'இங்க என்ன சொல்லுது' என்ற படம் நீலகண்டன் தயாரித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்காமல், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு குறித்து படதயாரிப்பாளர் நீலகண்டன் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.

 

image: 

category:

News Group Category:

பணம் கேட்டு மிரட்டியதாக கூறியது பொய் புகாரா? நடிகர் மயில்சாமியிடம் விசாரிக்க போலீசார் முடிவு

Posted: 11 Dec 2013 10:22 AM PST

பூந்தமல்லி

பணம் கேட்டு மிரட்டியதாக கூறியது பொய் புகாரா? என நடிகர் மயில்சாமியிடமே விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் வசித்து வரும் நகைச்சுவை நடிகர் மயில்சாமி. இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ரூ.50ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்களது விஷயங்களை வெளியில் சொல்லி உங்களை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்து இருந்தார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மயில்சாமியின் செல்போனுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படும் அந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த செல்போன் எண் ஆயிஷா என்ற பெண்ணின் பெயரில் வாங்கி இருப்பது தெரிந்தது. அந்த எண்ணுக்கு 1–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர் என்று போலீசார் விசாரித்தனர்.

மயில்சாமியிடம் விசாரிக்க முடிவு

அப்போது அந்த எண்ணுக்கு நடிகர் மயில்சாமியின் செல்போன் எண்ணில் இருந்துதான் தினமும் பல மணி நேரம் பேசியது பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மயில்சாமியிடம், ''புகார் கொடுத்த தொலைபேசி எண்ணுக்கு நீங்களே அதிகளவில் பேசி உள்ளீர்களே?'' என்று போலீசார் கேட்டதாகவும், அதற்கு அவர், ''மிரட்டல் வந்த தொலைபேசி எண் அது இல்லை. நான் பதற்றத்தில் தொலைபேசி எண்ணை மாற்றி கொடுத்து விட்டேன். அது எனக்கு தெரிந்தவரின் தொலைபேசி எண்தான்''என்று கூறியதாகவும் தெரிகிறது.

சினிமா படப்பிடிப்பு விஷயமாக மயில்சாமி பெங்களூர் சென்று விட்டதாகவும், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் அவர் கொடுத்தது பொய்யான புகாரா? என்று அவரிடமே விசாரணை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும் விருகம்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™