Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"தேவதை"

Posted: 11 Dec 2013 10:43 AM PST

நானே தேடிய "வதை"
நீ என் "தேவதை"
நீயே எனக்குள் "விதை"
நான் எழுதும் "கவிதை" ...!


( சிறு வரி கிறுக்கல் - ஆயினும்
ஆழ்ந்து சிந்தித்து கிறுக்கியதால்
தனித்திரியில் பதிகிறேன் ...

மன்னிக்கவும் ! )

கூடாதது ...

Posted: 11 Dec 2013 10:42 AM PST

கோவில் வாசலில் காலனி விடும் மடத்தில் கால்கள் ஊனமுற்றோரிடத்தில் (மாற்றுத்திறனாளிகள்) பத்திரமா பார்த்துப்பீங்களா எனக் கேட்பது ... தொலைபேசிக் கடையில், நடைபாதையில் சில்லறை கொடுத்து, வழிகாட்டிவிட்டு கண்பார்வை இழந்தோரிடம் (மாற்றுத்திறனாளிகள்) பார்த்து எண்ணுங்கள், பார்த்து செல்லுங்கள் எனக் கூறுவது ... சில வேலை இடங்களில் கைகள் வீழ்ந்தோரிடம் (மாற்றுத்திறனாளிகள்) தவறி விடாமல் வேலை செய்யுங்கள் என்று சொல்வது ... பல நேரங்களில் பல்வேறு இடங்களில் "மனநிலை" பாதிக்கப் பட்டவரை அனுசரிச்சுத்தான் ...

என் காதலும் ...

Posted: 11 Dec 2013 10:40 AM PST

இருட்டில்
நிழல் தெரிவதில்லை

வெளிச்சத்தில்
அது மறைவதில்லை

அது போலவே என் காதலும்

துன்பத்தில்
உன் கண்ணீருக்குப் பின்
இருக்கும் கண்களாகவும்

இன்பத்தில்
உன் உதட்டில்
உதிரும் புன்முறுவலாகவும்

என்றும் உன்னிலே வாழ்கிறது ...!

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

Posted: 11 Dec 2013 10:40 AM PST

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும். 3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உ ங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் ...

சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்

Posted: 11 Dec 2013 10:32 AM PST

# சோனியாகாந்தி என்பது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பிறப்புச்சான்றிதழிலும் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பத்திலும் அவரது பெயர் ஆண்ட்டோனியோ மைனோ என்று இருக்கிறது. ஏன் இந்த பித்தலாட்டம்..? # சோனியாவின் தந்தை ஸ்டிபனோ மைனோ ரஷ்யச்சிறையில் போர்க்கைதியாக இருந்தபோது கேஜிபியின் உறுப்பினராக சம்மதித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதனால் ரஷ்யப்பெயரான சோனியாவை தனது ஒரு மகளுக்கும் அனுஷ்கா என்னும் ரஷ்யப்பெயரை இன்னொரு மகளுக்கும் வைத்தார். # சோனியாவின் பிறப்புச் சான்றிதழில் அவரது பிறந்த தேதி ...

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் மதுவுக்குத் தடை!

Posted: 11 Dec 2013 09:49 AM PST

சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த கலவரம் காரணமாக, இனி அந்த பகுதிகளில் மதுவுக்கு முழு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் இந்த தடை அமலுக்கு வரும் என்று அந்நாட்டில் இரண்டாம் உள்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த பகுதியில் எந்த நேரத்தில் மதுவை தடை செய்யலாம், எந்தெந்த பகுதிகளில் மதுவைத் தடை செய்யலாம் என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விபத்து ...

எனக்குத் தெரிந்த காதல் ... !

Posted: 11 Dec 2013 09:47 AM PST

கானல்நீர் கூட கோடையில் மட்டுமே உன் கோபக்கனல் நீர் என் வாழ்நாள் முழுதுமே ஏனிந்த வெறுப்பு என்னிடம்? இயற்கை கூட பகலாகவும் இரவாகவும் வேறுபடும்பொழுது என்னிடம் மட்டும் ஏன் எப்பொழுதும் உன் உக்கிரம்? கோடை மார்கழி வசந்தம் உண்டு இவ்வுலகில் இவற்றில் கோடை மட்டுமே உன்னால் என்னருகில் - இருந்தும் மார்கழியாய் எண்ணுவேன் உன் உதட்டால் பொழியும் சுடுமழை வார்த்தைகளும் எனக்குப் பனிமழையே - அன்பே இது தான் என் காதல் எனக்குத் தெரிந்த காதல் ... !

அந்தோ விந்தை !

Posted: 11 Dec 2013 09:46 AM PST

தவறுதலாய்
தவறிழைத்தமைக்கு
தவறை திருத்த
சிறுவருக்கு
சீர்த்திருத்தப் பள்ளியாம் ...

அந்தோ விந்தை !

தவறாமல்
தவறு செய்தமைக்கு
பாராட்டி பாடும்
அரசியல்வாதிக்கு
அமைச்சர் மேடையாம் ... !

உன் நினைவுகள் ...

Posted: 11 Dec 2013 09:45 AM PST

கனவுகள் என்பது

கற்பனைக்கு மட்டும் உரித்தானதல்ல

அதை காணும் கண்களுக்கும்

சேர்த்துத்தான் - அதுபோலவே

உன் நினைவுகள் என்பது

இதயத்திற்கு மட்டும் உரித்தானதல்ல

அதன் வலிகளை வெளிப்படுத்தும்

கண்ணீருக்கும் சேர்த்துத்தான் ... !

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

Posted: 11 Dec 2013 09:42 AM PST

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி ...

அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!

Posted: 11 Dec 2013 09:24 AM PST

நடிகர் திலகத்தின் 1977ஆம் ஆண்டின் மிகபெரிய வெற்றிகாவியமான அண்ணன் ஒரு கோவில், மீண்டும் சென்னையில் மகாலட்சுமி திரை அரங்கில் டிசம்பர் 27 முதல் மூன்று காட்சிகளாக திரையிடப்பட உள்ளது. அண்ணன் ஒரு கோவில் என்றால்....தங்கை ஒரு தீபம் அன்றோ.... சுசீலா மற்றும் SPB குரலில் மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை ...அன்புகோர் எல்லை ... TMS அவர்கள் குரலில் நாலு பக்கம் வேடன் உண்டு ..... SPB சுசீலா குரலில்.... மேற்கண்ட அருமையான பாடல்களை கொண்ட அருமையான குடும்ப சித்திரம் அண்ணன் ஒரு கோவில்....1977 ஆம் ஆண்டு ...

திருவாசகம் – பெயர்க்காரணம்

Posted: 11 Dec 2013 09:20 AM PST

திரு - அழகு, வாசகம் – வார்த்தை; சொல் திருவாசகம் – அழகிய சொல் என்பது அதனையுடையதாகிய நூலை உணர்த்திற்று. திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என உரைகாண்பர் பேராசிரியர். இதனைக் கண்டார் வேறு எதனையும் விரும்பார் ஆகலின் புண்ணியங்கூட்டக்கண்ட பக்குவான்மாக்களால் விரும்பப் பெறுந்தன்மையுடைய வாசகம் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கரநமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரையில் "அடையடுத்த வாசகம் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய யாப்பிற்கு ஆயிற்று" என்பர். சிவஞான சுவாமிகள் இலக்கணவிளக்கச் ...

தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்!

Posted: 11 Dec 2013 09:20 AM PST

தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! - டாக்டர் மு.வ எழுதிய 'தம்பிக்கு' கடிதங்கள் புத்தகத்தில் இருந்து தமிழரிலே தனித்தனியே இவர் இவர் இப்படி உயர்ந்தார் என்று சொல்வது பழமை. தமிழர் கூடிக் கூடி இன்னது செய்து உயர்ந்தார்கள் என்று சொல்லும் நற்சொல்லே இனி வேண்டும். சேர்ந்து செயல் செய்து உயரும் வல்லமை தழிழருக்கு உண்டு என்பதை இனி உலகுக்கு உணர்த்த வேண்டும். தனியாட்களின் உயர்வு இனத்துக்கு என்ன நன்மை செய்யும்? தமிழ்ச் சமுதாயம் உயர வேண்டாமா? தனி ஒருவன் அதோ ஒரு தொழிற்சாலையைத் திறமையாக நடத்துகிறான் என்று ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -75)

Posted: 11 Dec 2013 09:18 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 11 Dec 2013 09:17 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

முயற்சி பொன்மொழிகள்!!!!!!!

Posted: 11 Dec 2013 09:15 AM PST

1. முயற்சி திருவினையாக்கும்! - தமிழ்நாடு 2. ஓடிச் செல்பவனுக்கு அகப்படும்! - இந்தியா 3. மற்றொருவன் மூக்கினால் ஒருவன் மூச்சுவிட முடியாது! - தாய்லாந்து 4. முன்னால் தாவுவதற்குச் சிறிது பின்னால் செல்ல வேண்டும்! - பிரான்ஸ் 5. வாழ்வதன் பொருள் இடைவிடாது முயற்சி செய்தல்! - ஜெர்மனி 6. முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பலில்லாத கடல் யாத்திரை போன்றது! - வேல்ஸ் 7. அடி மேல் அடி விழுந்தால் ஆப்புக்கட்டையும் இறங்கி விடும்! - வேல்ஸ் 8. கடவுள் ஒருவனுக்குப் புதையலைக் காட்டினால், அவனேதான் ...

வார்த்தை தேடல் ...

Posted: 11 Dec 2013 09:13 AM PST

தம் வாழ்க்கை எனும்
வறண்ட பாலைவனமும்
வசந்தகாலமாகும்
எதிர்பார்ப்பில் ஏங்கி
மனதால் வாழும்
இளம் கன்னி ... !

- முதிர்கன்னி !


தமிழுக்கும்
வார்த்தை தேடல்
விதவையின்
வலிகளை பற்றி
எடுத்துரைக்க ... !

6 "ஆறு' தகவல்கள்!

Posted: 11 Dec 2013 09:08 AM PST

1)  வாலிபால் விளையாட்டில் ஓர் அணியில் 6 பேர் இடம் பெற்றிருப்பர்.

2)  யானைக்கு பற்கள் 6 முறை விழுந்து முளைக்கும்.

3)  ரத்தம் தண்ணீரைவிட 6 மடங்கு கனமானது.

4) புளூட்டோ கோளிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 6 மணி நேரமாகும்.

5) சராசரியாக 6 விநாடிகளுக்கு ஒருமுறை நாம் கண்களை இமைக்கிறோம்.

6) யானையின் காலடித் தடத்தின் குறுக்களவை 6-ஆல் பெருக்கினால் அந்த யானையின் உயரம் தெரிந்துவிடும்..

நன்றி : முகநூல்

மகளெனும் தேவதை

Posted: 11 Dec 2013 09:05 AM PST

காணாமல்போன செல்போனை வீடெங்கும் தேடினால் தண்ணீர் அண்டாவில் கிடக்கிறது. தொலைக்காட்சி ரிமோட்டின் உடலெங்கும் கட்டுக்கள். அடுத்த ரிமோட் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது. வெளியில் கிளம்பும் எல்லோருக்கும் விளையாட்டு காத்திருக்கிறது உங்கள் செருப்பைத் தேடுங்கள் பார்ப்போம். அடுக்கிவைத்திருந்த துணிகளெல்லாம் அறையெங்கும் சிதறிக்கிடக்க மனைவியின் புலம்பலால் நிறைகிறது இரவு உணவு. * நடமாடும் பகுதியெல்லாம் சோற்றுப்பருக்கை கஞ்சி என காலெங்கும் பிசுபிசுப்பு. என் மகளெனும் ...

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Posted: 11 Dec 2013 08:12 AM PST

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது. 1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது. இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச 'த்ரில்' விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ...

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட்

Posted: 11 Dec 2013 08:08 AM PST

புதுடில்லி: ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என கடந்த 2009ம் ஆண்டு, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளி்த்திருந்தது. இது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக்கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணைக்கு பிறகு, இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில், டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது தான் என தீர்ப்பளித்துள்ளது. -- தினமலர் ஆண், பெண் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச ...

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் !!!!!!!!!

Posted: 11 Dec 2013 07:33 AM PST

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு

ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் செய்வது எப்படி?

Posted: 11 Dec 2013 07:31 AM PST

ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் செய்வது எப்படி?

சி ட்ரைவுக்கு மேலும் கொஞ்சம் இடம் தேவைப்படுகிறது.

டி இ எப் ட்ரைவிலிருந்து எப்படி எடுத்துக் கொடுப்பது

கொஞ்சம் எளிமையாகச் சொல்லவும்

வின்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.

பல் திறன் கொண்ட பெண்களின் மூளை !

Posted: 11 Dec 2013 07:07 AM PST

பொதுவாகவே ஆண்களை விட பெண்களின் செயல் திறன் பல வேலைகளில் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலும், பல மொழி பேசும் ஆற்றலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம் அவர்களது மூளை தான் என்கிறது ஆய்வுகள். அதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. அதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை இணைக்கும் நரம்புகளை அதிகமாகவும், பலமாகவும் கொண்டதாக ஆண்களின் மூளை உள்ளது. ...

பெண்ணியவாதி! - ஹைபுன்

Posted: 11 Dec 2013 07:05 AM PST

பெண்ணியத்தால் பல மகிழ்ச்சிகளை சந்தோஷங்களை இன்பங்களை இழந்ததுதான் நிறைய… எதிர் வீட்டுப்பெண் கணவனுக்குக் கால் பிடித்துவிடுகிறாள்… குளித்தால் அழுக்குத் தேய்த்து மகிழ்கிறாள்… கணவன் விழித்திருக்கும் வரையில் விழித்திருந்து கணவனுக்குத் தேவையானதை செய்து அவருடனேயே உறங்கி சீக்கிரம் எழுகிறாள் சந்தோஷமாக… வீட்டில் அனைத்தையும் செய்கிறாள்… எப்போதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இன்பமுமாக புன் முறுவலுடனேயே காணப்படுகிறாள்… அவ்வவப்போது சிரிப்புச் சப்தம் கேட்கவே அவளைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு!... நானோ, நானே தான் ...

தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி!

Posted: 11 Dec 2013 07:04 AM PST

சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட தமிழ் கவிதையுலகின் சூரியன் பாரதியின் பிறந்தநாள் டிசம்பர் பதினொன்று. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது 'முதுமையில் மண்' என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர். அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியை குறிக்கும் பட்டத்தை ...

நடைப்பயிற்சி - தவறுகளை தவிர்க்கும் வழிகள்!

Posted: 11 Dec 2013 06:47 AM PST

''உடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். சர்க்கரைநோய், உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்கவும் முடியும். பலன்களை அள்ளித் தரும் இந்தப் பயிற்சிகளை, பலரும் கடமைக்காகச் செய்கின்றனர். 'டாக்டர், வாக்கிங் போகச் சொன்னார் போறேன். ஜாகிங் செய்யச் சொன்னார் செய்றேன்...' இப்படிக் கடனே என்று செய்பவர்கள் பலர். நடைப்பயிற்சியோ ஓட்டப்பயிற்சியோ எதுவானாலும் அதை முறையோடு ...

காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Posted: 11 Dec 2013 06:32 AM PST

ஐதராபாத்: காங்கிரஸ் தலைவர், சோனியாவின், 67வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத் மகிளா காங்கிரஸ் தொண்டர்கள், போலி ரத்த தான முகாம் நடத்தி, விளம்பரம் தேடிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சோனியா, 67வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத் நகரில் உள்ள கட்சி கட்டடத்தில், நேற்று முன்தினம் குவிந்த, ஏராளமான, மகளிர் காங்கிரஸ் தலைவர்கள், சில பெண்களை, கையுடன் அழைத்து வந்திருந்தனர். அந்தப் பெண்கள், தங்கள் ரத்தத்தை தானமாக கொடுத்த போது, கட்சியின் பெண் தலைவர்கள், சுற்றி நின்று, புகைப்படங்களுக்கு, 'போஸ்' கொடுத்தனர். ...

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:!!!!!

Posted: 11 Dec 2013 06:24 AM PST

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Posted: 11 Dec 2013 06:13 AM PST

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? விதி என்பது என்ன? முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான். நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்? முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். முயற்சியன் பலன் என்றால் என்ன? நாம் நினைத்த இலக்கை அடைவது. விதி என்பது ...

பழங்கள் பற்றி அறியலாமா?

Posted: 11 Dec 2013 05:53 AM PST

பப்பாளி பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் "என்ஸைம்" எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை. பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவித சருமத்தினரும், முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் 'ஏ', 'சி' சத்துகள் ...

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர் !

Posted: 11 Dec 2013 05:37 AM PST

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெணகள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது. வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் ...

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 11 Dec 2013 05:04 AM PST

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Posted: 11 Dec 2013 03:57 AM PST

அன்பே நீ தோசை, எனக்கு உன் மேல ஆசை,  அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி,  அன்பே நீ கெட்டி சட்னி  என்னை போடாதே பட்னி  அழகே நீ ஒரு ஊத்தப்பம்  உன்னை பார்த்தால் வருது ஏப்பம்  கண்ணே நீ ஒரு பச்சடி   எனக்கு ஒரு  இச்சடி    அன்பே நீ புரோட்டா, பொண்ணு கேட்டு வரட்டா?  அன்பே நீ அப்பம், ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,  அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி.  அன்பே நீ கையேந்தி பவன், உனக்காக கையேந்துறான் இவன்.   (குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் ...

சுடிதாரை எப்படி தேர்வு செய்வது...?

Posted: 11 Dec 2013 03:43 AM PST

குள்ளமாக இருப்பவர்கள்: * குள்ளமாக இருப்பவர்கள் லோங் டொப் போடாதீர்கள். அது உங்களை இன்னமும் குள்ளமாகக் காண்பிக்கும். முழங்கால் வரையிலான டொப் குர்தா போட்டுக் கொண்டால் உயரமாகத் தெரிவீர்கள். அதேபோல நெடுங் கோடுகள் கொண்ட சுடிதார் உங்களை உயரமாகக் காட்டும். * முடிந்தவரை குள்ளமாக இருப்பவர்கள் சுடிதாரின் டொப் ஒரு கலர், பொட்டம் பகுதி ஒரு கலர் என்று போடாதீர்கள். இரண்டும் வேறுபட்ட கலர்களாக இருந்தால் உங்களின் தோற்றத்தை உயரக் குறைவாக காண்பித்து விடும். ஒரே கலர் சுடிதார்தான் உங்களுக்கு ஏற்றது. * ...

இன்று பாரதியார் பிறந்த தினம் (டிச.11- 1882)

Posted: 11 Dec 2013 03:04 AM PST

சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பரம் மாதம் 11-ந்தேதி பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் ...

சுற்றுச்சூழல் பாதிப்பும் மனித உரிமை மீறலே..!

Posted: 11 Dec 2013 02:42 AM PST

சுற்றுச்சூழல் பாதிப்பும் மனித உரிமை மீறலே..! சென்னையில் இருக்கும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ராஜேஸ்வரன், ''கொடுமைகள் மூலம் உடல்ரீதியில் ஏற்படுத்தப்படும் காயங்கள் போன்றவை மட்டுமே மனித உரிமை மீறல் என்று அரசாங்கம் கருதக்கூடாது. சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவையும் மனித உரிமை மீறலே. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்புகளை இந்த வகையில் கணக்கில் கொண்டு, அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை ...

(08 09 10) 11 12 13 (14 15 16)

Posted: 11 Dec 2013 01:06 AM PST

(08 09 10) 11 12 13 (14 15 16) முன்னதாக வாழ்த்தினால் சின்னதான எண் வரிசை 08-09-10-11-12-13 பிறிதொரு முறை வாழ்த்த பெரியதோர் எண் வரிசை. 11-12-13-14-15-16 எண்களின் அழகு வரிசை,நம்   எண்ணங்களின் வண்ணக்கலவையோ  !. விண்ணகத்தே மின்னிடும் கணக்கிலா  விண்மீன்கள் மண்ணகத்தே வந்தனவோ  வாழ்த்துக்களாய் !! அரியதோர் வாய்ப்பு அமைவதோ சிறப்பு வாழ்த்திடுவோம் உறவுகளை அடுத்த சிறப்பு வரும்வரை. ரமணியன்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Posted: 11 Dec 2013 12:26 AM PST

M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™