மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்ற பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவிப்பேன்: அன்னா ஹசாரே
- வடமாநில மக்களை வாட்டி வதைக்கும் குளிர்: இமாச்சலபிரதேசத்தில் 4 பேர் பலி
- பாராளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை தோற்கடிக்க தீவிர பிரச்சாரம் செய்வேன்: பாபா ராம்தேவ் சபதம்
- பாராளுமன்ற தேர்தல் வியூகம்: காங். முதல்-மந்திரிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை
- ராஜ்நாத்சிங்குடன் எடியூரப்பா சந்திப்பு: பா.ஜனதாவில் சேர ஒப்புதல்
- திருப்பதி கோவிலில் பூந்தி கூடத்தில் திடீர் தீ விபத்து
- டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஊழல்களை விசாரித்து நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு
- நாளை மறுநாள் மண்டல பூஜை: பம்பை முதல் சபரிமலை வரை நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்
- காளஹஸ்தி கோவிலில் கோடிக் கணக்கில் முறைகேடு: நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை
- கருணாநிதிக்கு சோனியா புத்தாண்டு வாழ்த்து
- ஜனவரி 20-21-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் 2 நாள் தொடர் வேலை நிறுத்தம்
- ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் நம்பத்தகுந்தது அல்ல: முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்
- 2002 திப்தா தர்வாஜா கலவர வழக்கு: 21 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியது குஜராத் ஐகோர்ட்டு
- ராஜஸ்தானில் வதேரா வாங்கிய 270 ஹெக்டேர் நிலங்கள் குறித்து விசாரிக்க பா.ஜ.க. கோரிக்கை
- நடிகர் மோகன்பாபு, பிரமானந்தாவின் பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு
- பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார வியூகம்: பா.ஜனதா முக்கிய தலைவர்கள் நாளை ஆலோசனை
- சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே அரசின் முதல் கடமை: வசுந்தரா ராஜே
- குறுஞ்செய்தியை அதிகாரப்பூர்வ செய்தியாக ஏற்றுக்கொள்ள மத்திய அரசு முடிவு
- உ.பி. கலவர பகுதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்: முலாயம் சிங் கடும் தாக்கு
- அணு ஆயுதங்கள் சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனை
| டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்ற பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவிப்பேன்: அன்னா ஹசாரே Posted: 23 Dec 2013 11:22 PM PST 70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி |
| வடமாநில மக்களை வாட்டி வதைக்கும் குளிர்: இமாச்சலபிரதேசத்தில் 4 பேர் பலி Posted: 23 Dec 2013 09:53 PM PST வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக குளிர் தாக்கம் மிகவும் கடுமையாக அதிகரித்து விட்டது. காலையில் விடிந்த பிறகும் நீண்ட நேரத்துக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. தாங்க முடியாத குளிர், மற்றும் பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. காஷ்மீரில் பனி பொழிவு காரணமாக சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. |
| பாராளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை தோற்கடிக்க தீவிர பிரச்சாரம் செய்வேன்: பாபா ராம்தேவ் சபதம் Posted: 23 Dec 2013 09:49 PM PST அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தோற்கடிக்க தீவிர பிரச்சாரம் செய்யப் போவதாக பிரபல யோகாசன பயிற்றுனர் பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார் |
| பாராளுமன்ற தேர்தல் வியூகம்: காங். முதல்-மந்திரிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை Posted: 23 Dec 2013 09:47 PM PST 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஜனவரி மாதம் 17–ந்தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வியூகம் பற்றியும், வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். |
| ராஜ்நாத்சிங்குடன் எடியூரப்பா சந்திப்பு: பா.ஜனதாவில் சேர ஒப்புதல் Posted: 23 Dec 2013 09:17 PM PST கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா ஊழல் புகார் காரணமாக பதவி இழந்தார். தனக்கு மீண்டும் முதல்–மந்திரி பதவி கொடுக்காததால் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். கர்நாடக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேர்தலுக்குப்பின் பாடம் கற்றுக்கொண்ட எடியூரப்பா மீண்டும் பாரதீய ஜனதா வில் சேர மேலிடத்துக்கு தூது விட்டார். ஆனால் மேலிட தலைவர்கள் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. அவரை சேர்த்தால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் என்று தலைவர்கள் கருதினார்கள். |
| திருப்பதி கோவிலில் பூந்தி கூடத்தில் திடீர் தீ விபத்து Posted: 23 Dec 2013 09:01 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு விநியோகிக்க தினந்தோறும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக் கப்படுகிறது. லட்டுக்குரிய பூந்தி தயாரிப்பதற்காக கோவிலுக்கு வெளியே இடது புறம் பூந்தி கூடம் ஒன்று 5 ஆண்டுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு பூந்தி தயாரித்து கன்வேயர் பெல்ட் மூலம் லட்டு உருட்டும் கூடத்துக்கு அனுப்பப்படும் |
| டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஊழல்களை விசாரித்து நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு Posted: 23 Dec 2013 08:49 PM PST டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. நாளை மறுநாள் ராம் லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். தேர்தலுக்கு முன்பு டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசை ஆம்ஆத்மி கட்சி |
| நாளை மறுநாள் மண்டல பூஜை: பம்பை முதல் சபரிமலை வரை நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் Posted: 23 Dec 2013 08:42 PM PST சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை நாளை மறுநாள் (26–ந் தேதி) நடக்கிறது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்தனர். மண்டல பூஜைக்கான நாள் நெருங்க, நெருங்க சன்னிதானத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பதினெட்டாம் படி ஏற தற்போது பம்பையில் இருந்தே பக்தர்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய |
| காளஹஸ்தி கோவிலில் கோடிக் கணக்கில் முறைகேடு: நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை Posted: 23 Dec 2013 08:38 PM PST ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் பஞ்சபூத தளங்களில் வாயு தலமாக விளங்குகிறது. மேலும், ராகு, கேது, சர்பதோஷ பரிகார தலமாகவும் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து நாக தோஷ பரிகாரப் பூஜை செய்கிறார்கள் |
| கருணாநிதிக்கு சோனியா புத்தாண்டு வாழ்த்து Posted: 23 Dec 2013 08:09 PM PST 2013–ம் ஆண்டு முடிந்து 2014–ம் ஆண்டு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. புத்தாண்டையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதோடு அவரது குடும்பத்தினருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். சோனியா காந்தியின் புத்தாண்டு வாழ்த்துக்கு கருணாநிதி நன்றி தெரிவித்து |
| ஜனவரி 20-21-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் 2 நாள் தொடர் வேலை நிறுத்தம் Posted: 23 Dec 2013 07:48 PM PST ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி கடந்த 18-ந்தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கத்தினர் நடத்தினர். ஐக்கிய வங்கி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் நடத்திய இந்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் கலந்து கொண்டன. இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்ட வெற்றியைத்தொடர்ந்து ஐக்கிய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் |
| ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் நம்பத்தகுந்தது அல்ல: முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் Posted: 23 Dec 2013 04:09 PM PST டெல்லியில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தநிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கப்போவதாக கூறினார். இதை அறிவித்த சில நிமிடங்களில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கெஜ்ரிவால் குறித்து கூறியதாவது:- |
| 2002 திப்தா தர்வாஜா கலவர வழக்கு: 21 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியது குஜராத் ஐகோர்ட்டு Posted: 23 Dec 2013 01:48 PM PST 2002 திப்தா தர்வாஜா கலவர வழக்கு குற்றவாளிகள் 21 பேருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. மெக்ஷானா மாவட்டத்தில் திப்தா தர்வாஜா பகுதியில் ஒரே |
| ராஜஸ்தானில் வதேரா வாங்கிய 270 ஹெக்டேர் நிலங்கள் குறித்து விசாரிக்க பா.ஜ.க. கோரிக்கை Posted: 23 Dec 2013 12:45 PM PST காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரியானாவில் பரிதாபாத் எம்.எல்.ஏ. மகேஷ் நாகர் பெயரில் ராபர்ட் வதேராவின் கம்பெனிக்கு சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது குறித்து மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. |
| நடிகர் மோகன்பாபு, பிரமானந்தாவின் பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 23 Dec 2013 10:26 AM PST தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு மோகன்பாபு தயாரித்த 'தேனிகைனா ரெடி' என்ற திரைப்படைத்தில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோத்வானியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். |
| பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார வியூகம்: பா.ஜனதா முக்கிய தலைவர்கள் நாளை ஆலோசனை Posted: 23 Dec 2013 08:25 AM PST நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பின்பற்றவேண்டிய அணுகுமுறை குறித்து ஆலோசிக்க பா.ஜனதா கட்சியின் தேசிய, மாநில |
| சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே அரசின் முதல் கடமை: வசுந்தரா ராஜே Posted: 23 Dec 2013 07:51 AM PST ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிக்கு பிறகு அங்கு முதல்வராகப் பொறுப்பேற்ற பா.ஜனதா கட்சி தலைவர் வசுந்தரா, இன்று முதல் முறையாக புதிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- |
| குறுஞ்செய்தியை அதிகாரப்பூர்வ செய்தியாக ஏற்றுக்கொள்ள மத்திய அரசு முடிவு Posted: 23 Dec 2013 07:13 AM PST பணப்பரிமாற்றம், பதிவு செய்வது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை ஆதாரமாக ஏற்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பொதுமக்கள் கொடுத்த 241 மனுக்களை, 100 துறைகளுக்கு அனுப்பி |
| உ.பி. கலவர பகுதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்: முலாயம் சிங் கடும் தாக்கு Posted: 23 Dec 2013 06:37 AM PST உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மற்றும் ஷாம்லில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் விமர்சனம் செய்துள்ளார். |
| அணு ஆயுதங்கள் சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனை Posted: 23 Dec 2013 05:28 AM PST இந்தியாவின் அதிநவீன ஏவுகணை திட்டங்களில் ஒன்றான, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணை இன்று ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து மீண்டும் சோதனை செய்யப்பட்டது. 3000 கி.மீ.க்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |