Tamil Star |
- பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
- கருணாநிதிக்கு சோனியாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- புத்தாண்டை கொண்டாட சில நிபந்தனைகள்
- குக்கிராமத்தில் 117 கோடீஸ்வர பெண்கள்
| பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு Posted: 23 Dec 2013 11:33 PM PST ‘பத்மஸ்ரீ’ விருதுகளை திரும்ப ஒப்படைக்கும்படி தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு மற்றும் பிரம்மானந்தத்திற்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படங்களில் பெயருக்கு முன்பு “பத்மஸ்ரீ’ என விருதுப் பெயர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த விருதுகளை திரும்ப ஒப்படைக்கும்படி நேற்று தீர்பளிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் ஆற்றிய சேவைகளுக்காக கடந்த 2007ஆம் ஆண்டு மோகன்பாபுவுக்கும், 2009ஆம் ஆண்டு பிரம்மானந்தத்திற்கும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கியது. இந்நிலையில், “டேனிகினா ரெட்டி’ என்னும் திரைப்படத்தில் விதிமுறைகளை மீறி, […] |
| கருணாநிதிக்கு சோனியாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Posted: 23 Dec 2013 11:29 PM PST திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதனையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம், கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தாருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். மேலும் கருணாநிதி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ சோனியாகாந்தி வாழ்த்தியுள்ளார். அதேபோல தனக்கும் குடும்பத்தினருக்கும் சோனியாகாந்தி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து, […] |
| புத்தாண்டை கொண்டாட சில நிபந்தனைகள் Posted: 23 Dec 2013 11:23 PM PST சென்னை மாநகரில் புத்தாண்டு தினத்தில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்னையில் களைகட்டும். வரவிருக்கும் 2014 புத்தாண்டை வரவேற்று, கோலாகலமாக கொண்டாட சென்னைவாசிகள் இப்போதே தயாராகி வருகிறார்கள். வழக்கமான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவிருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக நட்சத்திர ஹொட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து, சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று […] |
| குக்கிராமத்தில் 117 கோடீஸ்வர பெண்கள் Posted: 23 Dec 2013 11:21 PM PST குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 117 பெண்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். குஜராத் மாநிலம் சனந்த் அருகே உள்ள ஒரு சிறிய குக்கிராமம் உள்ளது. இங்கு பெண்கள் திரண்டு இருக்கிறார்கள். இதில் 117 பெண்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதற்கு காரணம் என்னவெனில் குஜராத் தொழி்ல் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் குறைவாக உள்ள நிலங்களுக்கு வழங்கப்படுகின்ற இழப்பீடு பணம் ஒரே நாளில் 117 பெண்களை கோடீஸ்வரர்களாக்கி உள்ளது . This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |