மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம்: பாதுகாப்பு செலவை சரிகட்ட நடவடிக்கை
- மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க 5 கோவில்களில் சிறப்பு வழிபாடு
- மனைவிக்கு உடல்நலம் இல்லாததால் சஞ்சய்தத்துக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்
- தெலுங்கானாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: ஜெகன்மோகன் கட்சி முடிவு
- மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற சீமாந்திரா காங்கிரஸ் முடிவு
- சீமாந்திரா–தெலுங்கானா பிரிப்பு: இரண்டு மாநிலத்துக்கும் ஒரே கவர்னர்
- கொழிஞ்சாம்பாறை அருகே மகன்–மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி
- பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் வெளியாகிறது: வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு
- டெல்லி தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
- மணிப்பூரில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
- மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு
- சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
- தனித்தெலுங்கானா வரைவு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
- விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளியின் 19 வார கருக்கலைப்புக்கு டெல்லி ஜகோர்ட் அனுமதி
- துப்பாக்கி காணாமல் போனதாக மந்திரியின் மெய்காப்பாளர் பொய் புகார்: தீவிரவாதிகளுக்கு விற்பதற்காக நாடகமாடியது அம்பலம்
- ஒரு கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள 12 கான்பூர் ஐஐடி மாணவர்கள்
- தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சோனியாவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் மத்திய மந்திரி சிரஞ்சீவி
- உலக வர்த்தக மாநாட்டில் இந்தியாவுக்கு சாதகமான முடிவு: ஆனந்த் சர்மா
- பாலியல் புகாரில் சிக்கிய ஏ.கே.கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
- பெண்களிடம் பேச பயமாக இருக்கிறது: சர்ச்சைக்குரிய கருத்தை வாபஸ் பெற்றார் பரூக் அப்துல்லா
| வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம்: பாதுகாப்பு செலவை சரிகட்ட நடவடிக்கை Posted: 06 Dec 2013 10:41 PM PST பெங்களூரில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் 'கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை |
| மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க 5 கோவில்களில் சிறப்பு வழிபாடு Posted: 06 Dec 2013 10:25 PM PST மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 25–ந்தேதி தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் சுமார் 140 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதற்கிடையே ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கைக்கு 2 வாரம் காத்திருக்க வேண்டியதிருந்ததால் மத்திய பிரதேச மாநில கட்சித் தலைவர்களிடம் ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக எல்லா கட்சித் தலைவர்களும் சாமி கும்பிடத் தொடங்கி விட்டனர். தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். |
| மனைவிக்கு உடல்நலம் இல்லாததால் சஞ்சய்தத்துக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் Posted: 06 Dec 2013 10:21 PM PST மனைவி உடல்நலம் இல்லாததால் சஞ்சய் தத்துக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 1–ந்தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக 2 வாரம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் பரோல் மேலும் 2 வாரங்கள் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 30–ந்தேதி சிறைக்கு திரும்பினார். |
| தெலுங்கானாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: ஜெகன்மோகன் கட்சி முடிவு Posted: 06 Dec 2013 10:15 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். நாடு முழுவதும் சென்று மாநில முதல்–மந்திரிகள் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். இந்த நிலையில் தெலுங்கானா மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரகுராம் கிருஷ்ணமராஜீ தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கு தொடரப் போவதாகவும் |
| மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற சீமாந்திரா காங்கிரஸ் முடிவு Posted: 06 Dec 2013 10:10 PM PST ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு விட்டது. வரைவு மசோதாவில் தெலுங்கானா மாநிலத்தில் அடிலாபாத், கரீம்நகர், மேடக், நிஜாம்பாத், வாரங்கல், ரங்காரெட்டி, நலகொண்டா, மகபூப்நகர், கம்மம், ஐதராபாத் ஆகிய 10 மாவட்டங்கள் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதுபோல சீமாந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதா வரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், நெல்லூர், கர்னூல், அனந்த்பூர், சித்தூர், கடப்பா ஆகிய 13 மாவட்டங்கள் இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை தவிர 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக இருக்கும் என்று வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவு |
| சீமாந்திரா–தெலுங்கானா பிரிப்பு: இரண்டு மாநிலத்துக்கும் ஒரே கவர்னர் Posted: 06 Dec 2013 10:09 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதை தெலுங்கானா பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினார்கள். ஆனால் சீமாந்திரா பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு மாநிலத்துக்கும் 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத்துதான் பொது தலைநகராக இருக்கும் என்றும் ஒரே கவர்னர் பொறுப்பு வகிப்பார் என்றும் |
| கொழிஞ்சாம்பாறை அருகே மகன்–மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி Posted: 06 Dec 2013 10:05 PM PST கேரள மாநிலம் மணப்புரம் மாவட்டம் காரச்சேரியை சேர்ந்தவர் சுஜீரா. இவரது மனைவி ஜீனத் (வயது 42). இவர்களுக்கு திகுஸ் (12) என்ற மகனும், ஷிபா பர்வின் (11) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர் |
| Posted: 06 Dec 2013 09:29 PM PST மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஐந்தாண்டு பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2014) மே மாதம் இறுதியில் முடிகிறது. இதையடுத்து பாராளுமன்றத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. கடந்த சில தினங்களாக டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலில் அதிகாரிகள் கவனம் |
| டெல்லி தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் Posted: 06 Dec 2013 09:18 PM PST ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் செலவினங்கள் தொடர்பான விளக்கம் கேட்டு டெல்லி மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் அலுவலர்களின் பதிவேடுகளுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலின் செலவின அறிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒட்டியே அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இசை கச்சேரிக்காக செலவிடப்பட்ட தொகையை குறைத்து காண்பித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஆணைய |
| மணிப்பூரில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை Posted: 06 Dec 2013 09:10 PM PST மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இந்திய- மியான்மர் நாட்டு எல்லையில் நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை. அசாமின் 44-வது படையினர் கேம்ஜாங் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டபோது அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் |
| மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு Posted: 06 Dec 2013 09:04 PM PST மண்டேலா இறுதி சடங்கில் பிரதமர் மன்மோகன்சிங்கும, சோனியா காந்தியும் பங்கேற்கின்றனர். தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். இறுதிசடங்கு வருகிற 15–ந்தேதி அவரது சொந்த கிராமமான குலுவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நெல்சன் மண்டேலாவின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. |
| சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Posted: 06 Dec 2013 08:42 PM PST கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த வாரம் பாபர் மசூதி இடிப்பு நாளுக்காக பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்தது |
| தனித்தெலுங்கானா வரைவு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது Posted: 06 Dec 2013 12:43 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன்படி நாட்டின் 29–வது மாநிலமாக தெலுங்கானா அமைய உள்ளது. கடும் எதிர்ப்பு காரணமாக தெலுங்கானாவுடன் ராயல சீமா |
| விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளியின் 19 வார கருக்கலைப்புக்கு டெல்லி ஜகோர்ட் அனுமதி Posted: 06 Dec 2013 11:31 AM PST டெல்லி விபச்சார தடுப்பு போலீசார் கடந்த மாதம் புதுடெல்லியில் உள்ள பல்வேறு விபசார விடுதிகளில் திடீர் 'ரெய்டு' நடத்தினர். அங்கு தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பல இளம்பெண்களை கைது செய்து டெல்லியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க |
| Posted: 06 Dec 2013 11:02 AM PST ஜார்கண்ட் மாநில கலால் மந்திரி ஜெய் பிரகாஷ் பாய் பட்டேலிடம் மெய்காப்பாளராக பணியாற்றும் போலீஸ்காரர், நவ்நீத் திவாரி. கடந்த (நவம்பர்) மாதம் 24ம் தேதி தனது ஓய்வறையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காணவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டிடம் |
| ஒரு கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள 12 கான்பூர் ஐஐடி மாணவர்கள் Posted: 06 Dec 2013 09:24 AM PST இந்த வருடக் கல்வியாண்டின் இறுதிப் பருவம் நெருங்க உள்ள வேளையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் திறமையான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து தங்களுடன் இணைத்துகொள்ள கல்வி நிறுவனங்களை முற்றுகை இட்டுள்ளன. கான்பூரில் இருக்கும் இந்தியத் |
| தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சோனியாவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் மத்திய மந்திரி சிரஞ்சீவி Posted: 06 Dec 2013 08:24 AM PST ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது முதல் ஆந்திராவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு வலுத்து வந்தது. இந்த எதிர்ப்புகளுக்கு |
| உலக வர்த்தக மாநாட்டில் இந்தியாவுக்கு சாதகமான முடிவு: ஆனந்த் சர்மா Posted: 06 Dec 2013 06:27 AM PST இந்தோனேசியாவின் மாலி நகரில் உலக வர்த்தக அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று இரவு நடைபெற்ற அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின்போது, உணவு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, உணவு |
| பாலியல் புகாரில் சிக்கிய ஏ.கே.கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் Posted: 06 Dec 2013 05:11 AM PST பாலியல் புகாரில் சிக்கிய ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.கங்குலிக்கும், டெல்லி நகர போலீஸ் கமிஷனருக்கும் தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இளம் பெண் வழக்கறிஞரால் கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக |
| பெண்களிடம் பேச பயமாக இருக்கிறது: சர்ச்சைக்குரிய கருத்தை வாபஸ் பெற்றார் பரூக் அப்துல்லா Posted: 06 Dec 2013 04:25 AM PST மத்திய மந்திரி பரூக் அப்துல்லா டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. "பெண்களிடம் பேசவே பயமாக இருக்கிறது. நான் பெண் செயலர்களை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |