Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தனது மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விலை பேசிய கணவர்

Posted: 06 Dec 2013 11:09 PM PST

மனைவியை நண்பர்கள் அனுபவிக்க ஒரு இரவுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு விலை பேசிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷார் அலி லஷ்கர்(26). இவர் கடந்த நவம்பர் 28ம் திகதி மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்கு தனது 23 வயது மனைவியுடன் வந்துள்ளார். மும்பை மங்குட் ரயில் நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர் அங்கு காத்திருந்த தனது நண்பர்கள் மொபின் குரேஷி(40), சஜித் குரேஷி(24), நிஜாம் கான்(25) மற்றும் சுஜித் குமார் சௌராஸ்யா(43) ஆகியோருடன் […]

மத்திய அமைச்சர் பதவி சிரஞ்சீவி ராஜினாமா?

Posted: 06 Dec 2013 11:06 PM PST

தெலுங்கானா விவகாரத்தால் அதிருப்தி அடைந்த சிரஞ்சீவி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான வரைவு ஆந்திரா மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா பிரிவினை காரணமாக அதிருப்தி அடைந்த, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு […]

மண்டேலா மறைவிற்கு 5 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கும் தமிழக அரசு

Posted: 06 Dec 2013 10:59 PM PST

Nelson+Mandela1

Nelson+Mandela1தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்முகமாக தமிழக அரசு சார்பில் 5 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசு துக்கம் அனுஷ்டிக்கிறது.

இதன் காரணமாக டிசம்பர் 6 முதல் 10ம் திகதி வரை அரசு சார்பில் எந்த விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறாது.

மேலும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

This posting includes an audio/video/photo media file: Download Now

500 கோடி தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட அமெரிக்கா

Posted: 06 Dec 2013 10:47 PM PST

amarikka

amarikkaநாளொன்றுக்கு 500 கோடி தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. பதிவு செய்து வருவதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக் கேட்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறித்து என்.எஸ்.ஏ. அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் கோடிக்கணக்கான தொலைபேசிகளை அமெரிக்க உளவு அமைப்பு ஒட்டுக் கேட்டு வருவது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிவதற்காகவே இதுபோன்ற ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத என்.எஸ்.ஏ.வுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

"நாங்கள் உலகெங்கும் இருந்து ஏராளமான தரவுகளை பெற்று வருகிறோம். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த செல்போன் வலையமைப்புகளை தீவிரமாக கண்காணித்து தகவல்களை சேகரிக்கிறோம். இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை அறிவதற்காகத்தான் செய்துள்ளோம்.

பல்வேறு வெளிநாடுகளுக்கு லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் சுற்றுலா செல்கின்றனர். அவர்களின் செல்போன்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார். உளவு அமைப்பின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

என.எஸ்.ஏ.வுக்கு தேவையான தகவல்கள் மிகவும் குறைவுதான். ஆனால், எது தனக்கு உபயோகமான தகவல் எனத் தெரியாததால், அனைத்தையும் பதிவு செய்து வருகிறது. வியாபாரம் தொடர்பாகவோ, தனிப்பட்ட முறையிலோ வெளி நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்களின் இருப்பிட விவரங்களை, சந்திக்கும் நபர்கள் மற்றும் அவர்களுடனான பேச்சுகளை உளவு அமைப்பு சேகரிக்கிறது. அமெரிக்கர்கள் மட்டு மல்ல, பிற நாடுகளைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன்களும் இதுபோன்று ஒட்டுக்கேட்கப்படுகின்றன

This posting includes an audio/video/photo media file: Download Now

மரணத்துக்கு முன் வசூலை வாரி குவித்த மண்டேலா திரைப்படம்

Posted: 06 Dec 2013 10:32 PM PST

தென் ஆப்ரிக்காவில் வெளியான மண்டேலா சினிமா திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார். சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்மார்ட் கைப்பேசிகளை 3D ஸ்கானராக மாற்றும் அப்பிளிக்கேஷன்

Posted: 06 Dec 2013 10:13 PM PST

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதுடன், பல்வேறு துறைகளிலும் இவற்றினை பயன்படுத்தக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல சாதாரண ஸ்மார்ட் கைப்பேசிகளை 3D ஸ்கானராக மாற்றும் அப்பிளிக்கேஷன் ஒன்றினை சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. சாதாரண புகைப்படங்களும் முப்பரிமாண காட்சிக்கு மாற்றும் வசதிகொண்ட இந்த அப்பிளிக்கேஷன் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சர்வதேச கணனி கருத்தரங்கு ஒன்றில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மண்டேலாவிற்கு த.தே.கூட்டமைப்பு அஞ்சலி – கட்சிக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர்.

Posted: 06 Dec 2013 09:59 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான அறிவகம், நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவை ஒட்டி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு இருப்பதுடன், தமது கட்சிக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு அவரது உருவப் படத்திற்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தியது. இந்நிகழ்வு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று மதியம் இடம் பெற்றது. அவர்களால் வெளியிடப்பட்ட அஞ்சலிச் செய்தியில், உலகின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர்களின் வரிசையில் விடுதலைக்கான சர்வதேச குறியீடாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலா […]

இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடும்!- அமைச்சர்

Posted: 06 Dec 2013 09:49 PM PST

இலங்கையில் நிலவரம் தொடர்பில் தொடர்ந்தும் பிரித்தானியா, பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ சுவைர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பின் போது பிரித்தானியா, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. இந்தநிலையில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வின்போதும் பிரித்தானியா, உரிய செயற்பாட்டை வழங்கும் என்று ஹுகோ சுவைர் குறிப்பிட்டுள்ளார். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் தடுக்கிறது இராணுவம் : குருகுலராஜா

Posted: 06 Dec 2013 09:05 PM PST

தமிழ் மக்களாகிய எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் இராணுவத்தினர் தடுக்கின்றதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையினால் நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற 'கோவில் நகரம்' இறுவெட்டு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வரலாற்று சின்னங்கள் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டு வருகின்றது. அந்த […]

சிறிலங்காவில் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்-அமெரிக்கா

Posted: 06 Dec 2013 08:59 PM PST

amarica

amaricaசிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா  கூறியுள்ளது.

வொசிங்டனின் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார்.

"அண்மையில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த போரை அடுத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலஅவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நாவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அதற்கு அவசரப்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவரும் கூட, அமெரிக்காவும், ஐ.நாவும் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார்.

எனவே, மனிதஉரிமைகள் மற்றும் சிறிலங்காவின் ஏனைய நிலவரங்கள் தொடர்பாக, தற்போது என்ன நடக்கிறது?" என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மேரி ஹாப்,

"நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்தும் தமது கடப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை சட்டமீறல்கள் குறித்த மோசமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பதிலளிக்கும் வகையில் நம்பகமான நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வருகிறது.

ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், சட்டத்தின் ஆட்சி சிதைக்கப்படுவது, மதசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் நாம் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்.

மனிதஉரிமை ஆர்வலர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்வது குறித்தும் கரிசனை கொண்டுள்ளோம்.

வெளிப்படையாக இவை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய தேவை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™