மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஒரே வீட்டில் கணவருடன் மனைவி–காதலி வாழலாம்: லோக் அதாலத் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- பீகாரில் நிதிஷ்குமாரை வீழ்த்த மோடி அதிரடி வியூகம்: மீண்டும் 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
- திருப்பதி விடுதியில் விபசாரம்: 3 பெண்கள் கைது
- விமான பெட்ரோல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
- புத்தகத்தைப் பார்த்து எழுதும் கேள்விகளுக்காக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க கல்வி வாரியம் முடிவு
- டெல்லியில் ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை பா.ஜனதா வெளியிட்டது
- அன்னாஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம்: சொந்த ஊரில் 10-ந்தேதி தொடங்குகிறார்
- நிலக்கரி சுரங்க ஊழலுக்கு சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும்: அத்வானி பேட்டி
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குப்பதிவு
- லாக்-அப்பில் கொலை குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்ட தேஜ்பால்: விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தார்
- 8 மணி நேரத்தில் 10 ஆயிரம் இந்திய மாணவர்கள் உறுப்பு தானம்: புதிய கின்னஸ் சாதனையை படைத்தனர்
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 5-ந்தேதி தொடங்குகிறது
- பெண் நிருபர் கற்பழிப்பு புகார்: தேஜ்பாலுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு தலையிடாது - சுஷில்குமார் ஷிண்டே பேட்டி
- ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி தேர்தலில் 38 முதல் 50 சீட்டுகள் கிடைக்கும்: யோகேந்திர யாதவ்
- டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை மூன்றாவது கட்சியாக ஏற்க முடியாது: அத்வானி நிராகரிப்பு
- ஜனாதிபதியாக இருந்தபோது தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை ராஷ்டிரபதி பவனுக்குத் திருப்பி அளித்த பிரதிபா பாட்டில்
- காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்: ஜம்மு பிரச்சாரத்தில் மோடி பேச்சு
- ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்: மதியம் வரை 40 சதவிகிதம் வாக்குப்பதிவு
- இந்தியாவில் முழு உடல் ஸ்கேனர்களை இரண்டு விமான நிலையங்களில் நிறுவ முடிவு
- காஷ்மீர் வெடிவிபத்தில் சாலைப்பணியாளர்கள் 3 பேர் பலி
| ஒரே வீட்டில் கணவருடன் மனைவி–காதலி வாழலாம்: லோக் அதாலத் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Posted: 01 Dec 2013 11:21 PM PST மத்தியபிரதேச மாநிலம் காந்த்வா பகுதியை சேர்ந்தவர் பகந்த் மஹுலால். இவர் மின்சார வாரியத்தில் 'லைன் மேன்' ஆக பணிபுரிகிறார். திருமணமான இவர் தனது காதலியுடன் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்கிறார். இவர் காதலியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து மனைவியுடன் தங்க வைத்தார். அவரின் இந்த நடவடிக்கை மனைவிக்கு பிடிக்கவில்லை. எனவே கணவரை விட்டு தனியாக பிரிந்த அவர் இதுகுறித்து |
| பீகாரில் நிதிஷ்குமாரை வீழ்த்த மோடி அதிரடி வியூகம்: மீண்டும் 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் Posted: 01 Dec 2013 10:40 PM PST பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்தபோது நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பகிரங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி முறிந்தது. நிதிஷ்குமார் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா வாபஸ் பெற்றது. அடுத்தபடியாக வருகிற தேர்தல்களில் |
| திருப்பதி விடுதியில் விபசாரம்: 3 பெண்கள் கைது Posted: 01 Dec 2013 10:04 PM PST ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார் ரெட்டி. இவர் திருப்பதி ராயல் நகரில் ரூ. 7 ஆயிரத்துக்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கினார். பின்னர் திருப்பதியைச் சேர்ந்த 2 பெண்கள், கர்னூலைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய 3 பேரையும் வைத்து விபசாரம் நடத்தினார். பின்னர் பல இடங்களில் இருந்து பெண்களை வரவழைத்தும் விபசாரம் நடத்தினார். |
| விமான பெட்ரோல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு Posted: 01 Dec 2013 07:58 PM PST பெட்ரோலிய நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலைக்கேற்ப விமான பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி இந்த மாதம் விமான பெட்ரோல் விலை 0.8 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களின் வாட் உள்ளிட்ட உள்ளூர் வரிகளை சேர்ந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. |
| Posted: 01 Dec 2013 07:55 PM PST கடந்த வருடமே மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தில்(சிபிஎஸ்இ) படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களைப் பார்த்து கேள்விகளுக்கு விடை எழுதும் முறையை அறிமுகப்படுத்த கல்வி வாரியம் முடிவு செய்தது. அதன்படி இந்தக் கல்வியாண்டில் ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது இந்தத் தேர்வுமுறை பரீட்சார்த்தமாக துவக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி, கேள்வித்தாளை படிப்பதற்கு அளிக்கப்படும் 15 |
| டெல்லியில் ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை பா.ஜனதா வெளியிட்டது Posted: 01 Dec 2013 07:42 PM PST டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டது. டெல்லி மாநில சட்டசபைக்கு 4-ந் தேதி தேர்தல் நடக்கிறது. டெல்லியில் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஷீலா தீட்சித் தலைமையில் நடந்து வருகிறது. நேற்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை வெளியிட்டார். டெல்லி தேர்தல் பொறுப்பாளர் நிதின் கட்காரி, முதல்-மந்திரி வேட்பாளர் |
| அன்னாஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம்: சொந்த ஊரில் 10-ந்தேதி தொடங்குகிறார் Posted: 01 Dec 2013 07:10 PM PST ஊழலுக்கு எதிராக போராடி வரும் பிரபல சமூகசேவகரும் காந்தியவாதியுமான அன்னாஹசாரே வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி முன்பு டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது பாராளுமன்ற மேல்-சபையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தப்போவதாக |
| நிலக்கரி சுரங்க ஊழலுக்கு சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும்: அத்வானி பேட்டி Posted: 01 Dec 2013 04:01 PM PST பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி நேற்று பத்திரிகையாளர்களை புதுடெல்லியில் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து அத்வானி கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசில் நேர்மையற்ற தன்மை நிலவி வருகிறது. காமன்வெல்ட் விளையாட்டு போட்டிகளில் |
| ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குப்பதிவு Posted: 01 Dec 2013 02:39 PM PST 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்ககான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றறது. சுரு தொகுதி வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் மீதம் 199 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது |
| லாக்-அப்பில் கொலை குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்ட தேஜ்பால்: விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தார் Posted: 01 Dec 2013 12:31 PM PST பெண் நிருபரை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்த தேஜ்பால் |
| 8 மணி நேரத்தில் 10 ஆயிரம் இந்திய மாணவர்கள் உறுப்பு தானம்: புதிய கின்னஸ் சாதனையை படைத்தனர் Posted: 01 Dec 2013 12:01 PM PST அரியானா மாநிலம் ரோட்டக் நகரை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுப்பு தானம் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாணவர் அமைப்பாக இந்திய தேசிய மாணவர் பேரவை இயங்கி வருகிறது |
| பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 5-ந்தேதி தொடங்குகிறது Posted: 01 Dec 2013 10:53 AM PST 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரம் தவிர 4 மாநில தேர்தல் முடிவுகள் 8-ந்தேதி (ஞாயிறு) யும், மிசோரம் தேர்தல் முடிவுகள் மறுநாள் திங்கட்கிழமையும் வெளியாகின்றன. அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகும் பரபரப்பான சூழ்நிலையில் குளிர்கால கூட்டத் தொடர் |
| Posted: 01 Dec 2013 10:41 AM PST மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தெகல்கா பத்திரிகை பெண் நிருபர் கற்பழிப்பில், அதன் ஆசிரியர் தருண் தேஜ்பால் கைதான விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள் |
| ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி தேர்தலில் 38 முதல் 50 சீட்டுகள் கிடைக்கும்: யோகேந்திர யாதவ் Posted: 01 Dec 2013 08:54 AM PST டெல்லியில் வரும் புதனன்று சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த 15 வருடங்களாக டெல்லியில் ஆட்சி செலுத்தி வரும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டன. இதில் அவைகளை துடைத்தெறிவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பான் சின்னத்துடன் களமிறங்கியுள்ளனர். |
| டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை மூன்றாவது கட்சியாக ஏற்க முடியாது: அத்வானி நிராகரிப்பு Posted: 01 Dec 2013 07:35 AM PST டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:- நாட்டில் ஒரே |
| Posted: 01 Dec 2013 07:32 AM PST முன்னாள் இந்திய ஜனாதிபதியான பிரதிபா பாட்டில் தன்னுடைய பதவிக் காலத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தையும் ராஷ்டிரபதி பவனுக்குத் திருப்பி அளித்தார். இந்தப் பரிசுகள் சிலகாலம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி நகரில் இயங்கிவரும் அவர்கள் |
| Posted: 01 Dec 2013 03:48 AM PST பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் முன்பு லால்கர் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 அம்மாநிலத்திற்கு மிகவும் சாதகமாக உள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆகவே இதுகுறித்து எங்கள் கட்சி சில திருந்தங்கள் கொண்டுவரும் என்று கூறினார். |
| ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்: மதியம் வரை 40 சதவிகிதம் வாக்குப்பதிவு Posted: 01 Dec 2013 02:24 AM PST ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு முதல்வர் அசோக் கேலட்டு தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. |
| இந்தியாவில் முழு உடல் ஸ்கேனர்களை இரண்டு விமான நிலையங்களில் நிறுவ முடிவு Posted: 01 Dec 2013 01:48 AM PST ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 125 விமான நிலையங்கள் இயங்கிவருகின்றன. இவை தவிர 5 தனியார் விமான நிலையங்களும் இந்தியாவில் உள்ளன. இவற்றுள், மெட்ரோ அல்லாத இரண்டு விமானநிலையங்களில் சோதனை முயற்சியில் தொழில்நுட்ப முழு உடல் ஸ்கேனர்களை நிறுவுவதற்கு இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. |
| காஷ்மீர் வெடிவிபத்தில் சாலைப்பணியாளர்கள் 3 பேர் பலி Posted: 01 Dec 2013 01:35 AM PST ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டத்தில் இன்று காலை சாலைகளை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளிர் அதிகமாக இருந்ததால், அங்குள்ள கவுரி மீட்டி லடா கிராமத்தின் சாலையோரத்தில் தீ மூட்டி அவர்கள் குளிர் காய்ந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |