மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ராஜஸ்தானின் இமாலய வெற்றிக்கு நரேந்திரமோடி அலையே காரணம்: வசுந்தராராஜே பெருமிதம்
- திருச்சானூர் பிரம்மோற்சவ நிறைவு விழா: 3 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
- டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை: ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸ் படுதோல்வி
- சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்.–பா.ஜனதா இழுபறி
- ராஜஸ்தானில் முதல்–மந்திரி அசோக் கெலாட் (காங்கிரஸ்) முன்னணி
- திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி
- புதுடெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித் தோல்வி முகம்: அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி
- மத்திய பிரதேசம், ராஜஸ்தான் 2 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது
- சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்: 22–ந்தேதி தொடங்குகிறது
- கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி வீடு முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் முற்றுகை
- சமையல் கியாஸ் மானியத்துக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை: வீரப்ப மொய்லி அறிவிப்பு
- ஏர்-இந்தியா நிறுவனம் தனது 5 போயிங் விமானங்களை எதிஹாட் ஏர்வேசிற்கு விற்பனை செய்கின்றது
- டெல்லி உள்பட 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- பொதுமக்களிடம் குறை கேட்ட பிரதமர் மன்மோகன் சிங்: கோரிக்கை மனுக்களை பெற்றார்
- சர்ச்சைகளையும் மீறி கோவாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
- 'தனி தெலுங்கானா மசோதாவை சட்டசபையில் தோற்கடிப்போம்': கிரண்குமார் ரெட்டி சவால்
- ஊட்டச்சத்து கிடைக்காமல் 6 பந்தய குதிரைகள் பரிதாப சாவு: பண்ணை உரிமையாளர் மீது வழக்கு
- லூதியானாவில் மணப்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு: திருமணம் ஒத்திவைப்பு
- டோகோ சிறையில் உள்ள இந்திய மாலுமியை விரைவில் விடுதலை செய்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- முசாபர்நகர் கலவரம்: 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
| ராஜஸ்தானின் இமாலய வெற்றிக்கு நரேந்திரமோடி அலையே காரணம்: வசுந்தராராஜே பெருமிதம் Posted: 07 Dec 2013 10:53 PM PST ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 199 இடங்களில் பா.ஜனதா 137 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜனதாவின் இமாலய வெற்றிக்கு நரேந்திர மோடி அலையே காரணம் என்று வசுந்தரா ராஜே கூறியுள்ளார். |
| திருச்சானூர் பிரம்மோற்சவ நிறைவு விழா: 3 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் Posted: 07 Dec 2013 10:43 PM PST திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் மாதம் 29–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 8 நாட்கள் வெகு விமரிசையாக நடந்து வந்தது. 9–வது நாளான நேற்று பஞ்சமி தீர்த்தம் |
| டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை: ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸ் படுதோல்வி Posted: 07 Dec 2013 10:24 PM PST 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் கடந்த 2008–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. பா.ஜ.க.வுக்கு 24 இடங்களே கிடைத்து இருந்தன. கடந்த 3 தேர்தல்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி இருந்தன. அது இன்று 100 சதவீதம் சரியாக இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை காங்கிரஸ் கட்சி 34 இடங்களை பறிகொடுத்தது. அந்த இடங்களை எல்லாம் அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. |
| சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்.–பா.ஜனதா இழுபறி Posted: 07 Dec 2013 09:51 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக அந்த மாநிலத்தில் கடந்த மாதம் 11, 19–ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2 தேர்தல்களில் தொடர்ச்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக ராமன்சிங் முதல்–மந்திரியாக உள்ளார். |
| ராஜஸ்தானில் முதல்–மந்திரி அசோக் கெலாட் (காங்கிரஸ்) முன்னணி Posted: 07 Dec 2013 09:42 PM PST ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்–மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா பெரு வாரியான தொகுதிகளில் முன்னணி வகித்து வெற்றி பெறும் தருவாயில் உள்ளது. பாரதீய ஜனதாவின் முதல் – மந்திரி வேட்பாளராக வசுந்தரா ராஜே சிந்தியா அறிவிக்கப்பட்டார். அவர் தனது சொந்த ஊரான |
| திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 07 Dec 2013 09:38 PM PST திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா (வயது 91). இவர் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது வீடு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் அருகே உள்ளது. மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது |
| புதுடெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித் தோல்வி முகம்: அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி Posted: 07 Dec 2013 09:22 PM PST தலைநகர் டெல்லியில் ஊழலை எதிர்த்து போராடிய அரவிந்த் கெஜ்ரிவால் 'ஆம்ஆத்மி' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அந்த கட்சி முதல்–மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை அறிவித்தது. இதையடுத்து முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். |
| மத்திய பிரதேசம், ராஜஸ்தான் 2 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது Posted: 07 Dec 2013 09:11 PM PST டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் 11–ந்தேதி தொடங்கி கடந்த 4–ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இவற்றில் மிசோரம் மாநிலம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் இன்று (ஞாயிறு) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் |
| சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்: 22–ந்தேதி தொடங்குகிறது Posted: 07 Dec 2013 08:54 PM PST கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த மாதம் 15–ந்தேதி தொடங்கியது. நடை திறந்தது முதல் சபரிமலையில் அய்யப்பப் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காட்டுப் பகுதி வழியாகவும் பக்தர்கள் சன்னிதானத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை வருகிற 26–ந்தேதி நடைபெறுகிறது. அன்று சுவாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இந்த தங்க அங்கி பந்தளம் அரண்மனையில் இருந்து வருகிற 22–ந்தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. |
| கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி வீடு முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் முற்றுகை Posted: 07 Dec 2013 08:49 PM PST கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களாக அமைதி காத்த மார்க்சிஸ்டு |
| சமையல் கியாஸ் மானியத்துக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை: வீரப்ப மொய்லி அறிவிப்பு Posted: 07 Dec 2013 08:43 PM PST மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:– சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் பெறுவதற்கு அதன் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை கட்டாயமாக அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை அளிக்கப்படாவிட்டாலும் மானியம் வழங்கப்படும். மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பெறுவதில் எந்த பிரச்சினையும் |
| ஏர்-இந்தியா நிறுவனம் தனது 5 போயிங் விமானங்களை எதிஹாட் ஏர்வேசிற்கு விற்பனை செய்கின்றது Posted: 07 Dec 2013 08:21 PM PST ஏர்-இந்தியா நிறுவனம் அபுதாபியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எதிஹாட் எர்வேசிற்கு தனது 5 போயிங்-777 விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக விமானத்துறைத் தகவல்கள் நேற்று தெரிவித்தன. |
| டெல்லி உள்பட 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Posted: 07 Dec 2013 07:12 PM PST டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில தேர்தல் வாக்குப்பதிவு சமீபத்தில் முடிவடைந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ராஜஸ்தானில் பா.ஜனதாவும், காங்கிரசும் இரண்டு தொகுதியில் முன்னணியில் இருந்து வருகிறது. டெல்லியில் ஒரு தொகுதியில் கெஜ்ரிவால் கட்சி முன்னணியில் இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் |
| பொதுமக்களிடம் குறை கேட்ட பிரதமர் மன்மோகன் சிங்: கோரிக்கை மனுக்களை பெற்றார் Posted: 07 Dec 2013 06:38 PM PST பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தனது இல்லத்தில் பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார். நீண்ட நாட்களுக்குப்பிறகு நடத்தப்பட்ட குறைகேட்பு நிகழ்ச்சி இது என்பதால், இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். |
| சர்ச்சைகளையும் மீறி கோவாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Posted: 07 Dec 2013 06:17 PM PST சமீப காலங்களாக இந்தியாவில் கடற்கரைகளுக்குப் புகழ் பெற்ற கோவா மாநிலம் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. போதை மருந்து கடத்தல் விவகாரங்கள், நைஜீரியர்களுடனான பிரச்சினை, பாலியல் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளை பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. |
| 'தனி தெலுங்கானா மசோதாவை சட்டசபையில் தோற்கடிப்போம்': கிரண்குமார் ரெட்டி சவால் Posted: 07 Dec 2013 05:35 PM PST ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. அடுத்த கட்டமாக, 'ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா–2013', ஆந்திர மாநில சட்டசபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. ஆனால் ஆந்திர மாநில சட்டசபையில் இந்த மசோதா தோல்வி அடையும் என்று அந்த மாநில |
| ஊட்டச்சத்து கிடைக்காமல் 6 பந்தய குதிரைகள் பரிதாப சாவு: பண்ணை உரிமையாளர் மீது வழக்கு Posted: 07 Dec 2013 08:38 AM PST உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு பண்ணையில் ஏராளமான பந்தயக் குதிரைகள் கைவிடப்பட்ட நிலையில் பட்டினியால் தவிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ஒரு தொண்டு நிறுவனத்தினர், கடந்த வாரம் அங்கு சென்றனர். அங்கு இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட 49 குதிரைகள் பட்டினியாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவற்றை |
| லூதியானாவில் மணப்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு: திருமணம் ஒத்திவைப்பு Posted: 07 Dec 2013 07:41 AM PST பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள பர்னாலா நகரின் சரபா நகரைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு இன்று திருமணம் நடக்கவிருந்தது. முகூர்த்த நேரத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன், மணப்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்குச் சென்று அலங்காரம் செய்து கொண்டிருந்தார். |
| டோகோ சிறையில் உள்ள இந்திய மாலுமியை விரைவில் விடுதலை செய்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை Posted: 07 Dec 2013 05:05 AM PST அட்லாண்டிக் கடலில் கடந்த ஜூலை 16-ம் தேதி சென்றுகொண்டிருந்த ஒரு சரக்கு கப்பலை, மேற்கு ஆப்பிரிக்கா நாடான டோகோ அருகில் கடற்கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடித்தனர். இந்த கொள்ளையர்களுக்கு உதவி செய்ததாக கப்பலில் பணியாற்றிய மும்பை கேப்டன் சுனில் ஜேம்ஸ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். |
| முசாபர்நகர் கலவரம்: 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Posted: 07 Dec 2013 03:59 AM PST உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த செப்டம்பர் மாதம் பயங்கர மதக்கலவரம் வெடித்தது. இதில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறினர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |