Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சபரிமலையில் கனமழையிலும் குவிந்த அய்யப்ப பக்தர்கள்

Posted: 02 Dec 2013 10:56 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. மேலும் சபரிமலையில் நடை திறந்தது

கேரளாவில் பேஸ் புக்கில் வெளியான ஜெயில் கைதிகளின் படங்கள்: உள்துறை மந்திரி விசாரணை

Posted: 02 Dec 2013 10:50 PM PST

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயில்கள் தற்போது உல்லாச விடுதிகளாக மாறி வருவதாக கேரள அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக உயிர் உள்ளவரை போராடுவேன்: ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு

Posted: 02 Dec 2013 10:46 PM PST

சித்தூர் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 2–வது நாளாக சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் வி.கோட்டா மண்டலத்தில் பேசியதாவது:– ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் மனதை புரிந்து கொண்டு பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படுத்தாமல் ஆட்சி செய்ய வேண்டும். ஓட்டு வேண்டும் என்றால் மக்களிடம் நேரில் போய் அவர்களின் நிலைமையை பற்றி விசாரிக்க வேண்டும். மக்களுக்கு உதவி செய்ய

சட்டசபை தேர்தல்: டெல்லியில் நாளை ஓட்டுப்பதிவு

Posted: 02 Dec 2013 10:19 PM PST

5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்து விட்டது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லி மாநிலம் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்டு வந்தது. ஷீலா தீட்சித் தொடர்ந்து 3 முறை முதல்–மந்திரியாக இருந்து வருகிறார். 4–வது முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். பாரதீய ஜனதா சார்பில் பிரபல டாக்டர் ஹர்ஷ்வர்தன் முதல்–மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி அருகே 2 போலீஸ்காரர்கள் கொலை

Posted: 02 Dec 2013 09:20 PM PST

சித்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதியில் செம்மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை கடத்தல் கும்பல் சேர்ந்தவர்கள் வெட்டி கடத்தி அண்டை மாநிலங்களில் விற்றுவருகின்றனர். செம்மரகட்டை கடத்தலை தடுக்க வனத்துறை மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனபகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் அருகே லாரி மீது கார் மோதல்: 6 பேர் பலி

Posted: 02 Dec 2013 09:06 PM PST

கர்நாடக மாநிலம் பெல் காம் மாவட்டம் ஸ்ரீநகர் கார்டன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலுக்கு எதிரே நேற்று மாலையில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது கோலாப்பூரில் இருந்து தார்வார் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் மோதியது.

மராட்டியத்தில் 3 வயது குழந்தை நரபலி

Posted: 02 Dec 2013 08:48 PM PST

மராட்டிய மாநிலம் யவத் மால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கட்டிடப்பணி நடந்து வந்தது. நேற்று அந்த இடத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். உடனே போலீசார் சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர். உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆங்காங்கே

டெல்லியில் வாக்காளர்களுக்கு ‘பிராந்தி–விஸ்கி’ சப்ளை: ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனில் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்

Posted: 02 Dec 2013 08:36 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

விமான நிலையத்திற்கு அரசு கார் வரவில்லை: வாடகை காரில் பயணம் செய்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி

Posted: 02 Dec 2013 08:33 PM PST

கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி அரசு முறை பயணமான டெல்லிக்கு சென்று இருந்தார். அங்கு பணிகளை முடித்து விட்டு அவர் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று காலை திரும்பினார். விமான நிலையத்திற்கு உம்மன்சாண்டியை அழைத்து செல்ல அரசு கார் வரவில்லை. இதைத்தொடர்ந்து அவர் ஒரு வாடகை காரில் ஏறி தனது அலுவலகத்திற்கு சென்றார். அவருடன் அந்த காரில் வலியதுறை போலீஸ்

டெல்லி தேர்தலில் தீவிர பிரசாரம்: அரசியலில் ஈடுபட பிரணாப் மகள் ஷர்மிஸ்தா விருப்பம்

Posted: 02 Dec 2013 07:47 PM PST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மகன் அபிஜித் முகர்ஜி மேற்கு வங்கத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, தனது சகோதரர் அபிஜித் முகர்ஜியுடன் இணைந்து டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நடந்த பல்வேறு பிரசார கூட்டங்களில்

ரேபரேலி - அக்பர்கஞ்ச் இடையே புதிய ரெயில் பாதை: சோனியா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

Posted: 02 Dec 2013 03:04 PM PST

296 போடி ரூபாய் மதிப்பீட்டில் ரேபரேலி - அக்பர்கஞ்ச் பகுதிகளுக்கிடையே புதிதாக அமைக்கப்படும் ரெயில் பாதையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று துவக்கி வைத்தார்

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்: முக்கிய ஆவணங்களை மத்திய அரசிடம் இத்தாலி நிறுவனம் ஒப்படைத்தது

Posted: 02 Dec 2013 02:48 PM PST

ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பில் 12 வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது

நாளை டெல்லி சட்டசபை தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 02 Dec 2013 02:14 PM PST

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நாளை (4ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 810 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். புதுடெல்லி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை

5 லட்சத்து 36 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து வெற்றிகரமாக சந்திரனை கடந்து செவ்வாய் நோக்கி விரையும் மங்கல்யான்

Posted: 02 Dec 2013 01:50 PM PST

செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கல்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது

10 முறை பிரதமர் ஆனாலும் 370வது அரசியலமைப்பு சட்டத்தை மோடியால் ரத்து செய்ய முடியாது: பரூக் அப்துல்லா

Posted: 02 Dec 2013 01:18 PM PST

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி முதன்முதலாக கடந்த 1ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவை

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் நீதிபதி கங்குலி மனித உரிமை ஆணைய தலைவராக நீடிப்பதா?: சுஷ்மா ஆவேசம்

Posted: 02 Dec 2013 12:08 PM PST

வழக்கறிஞர் பயிற்சியின் போது உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் தற்போது ஓய்வு பெற்று விட்டதாகவும் சமூக வலைதளம் மூலமாக பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த நீதிபதியின் பெயரை அவர் வெளியிடவில்லை

16 வயதுக்கு மேற்பட்ட இளம் குற்றவாளிகள் பெரியவர்களை போன்று விசாரிக்கப்படுவர்: மத்திய அரசு அதிரடி திட்டம்

Posted: 02 Dec 2013 11:54 AM PST

18 வயதை எட்டாதவர்கள் இளம் சிறார்களாக கருதப்படுகிறார்கள். 18 வயது அடையாத இளம் குற்றவாளிகளை இளம் சிறார் நீதிபரிபாலன சட்டத்தில்தான் விசாரிக்க முடியும். மற்றவர்களைப் போன்று, இ.பி.கோ. சட்டம்

ரூ.5 கோடி வரை பேரம்: ஆருஷி கொலையை திரைப்படமாக்க அனுமதிக்க முடியாது - வக்கீல் கடும் எதிர்ப்பு

Posted: 02 Dec 2013 11:34 AM PST

டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது பிணமும் கண்டுபிடிக்கப்பட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருதுகள்: ஜனாதிபதி நாளை வழங்குகிறார்

Posted: 02 Dec 2013 07:51 AM PST

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில், சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்குகிறார். இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

பாலியல் வழக்கில் கைதான தேஜ்பாலுக்கு ஆண்மை பரிசோதனை

Posted: 02 Dec 2013 06:52 AM PST

பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை கோவா நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, சனிக்கிழமை இரவில் அவர் கைது செய்யப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™