Tamil Star |
- இலங்கை மனித உரிமை நிலைமையில் கனடா மிக அதிருப்தி
- வெளிநாடுகளில் வசிக்கும் வடக்கு மக்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது
- விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் யாழிற்கு விஜயம் செய்தால் வரவேற்பேன்: பிரதமர்
- BMW i5 காரினை வடிவமைக்கும் பணிகள் மும்முரம்
- இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
- உலக கோடீஸ்வர தலைவர்களில் விளாடிமிர் புடின் முதலிடம்
- மக்கள் கண்ணீரை துடைத்த வெங்காயம்
- ரயில் தடம்புரண்டு ஆற்றின் கரையில் விழுந்தது
- ரஷ்ய எல்லையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்
- மாத்திரைகளால் ஏழைகளாகும் 4 கோடி இந்தியர்கள்!
| இலங்கை மனித உரிமை நிலைமையில் கனடா மிக அதிருப்தி Posted: 02 Dec 2013 11:06 PM PST
பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதற்கு கனடியப் பிரதமர் மறுத்துவிட்ட நிலையில், கனடாவில் சார்பில் இலங்கை சென்று திரும்பிய கனடிய வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபரோய் அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது இலங்கை பயணம் பற்றிய விடயத்தில் அதிருப்தியை வெளியிட்டார். இச்சந்திப்பின் பின்னர் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு மாநாட்டை நடாத்தி இலங்கையின் மனித உரிமை நிலை, பொறுப்புக்கூறல், இனங்களுக்கான ஒருமைப்பாட்டில் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டார். கடந்த சனிக்கிழமை, நவம்பர் 30ஆம் திகதி, ரொறன்ரோ நகரில் இந்த முக்கிய சந்திப்பும், ஊடக மாநாடும்; இடம்பெற்றன. பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்த தீபக் ஒபரோய் அவர்கள், அங்கு சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், யாழ் கத்தோலிக்க ஆயர், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் உட்பட, பல்வேறு சந்திப்புக்களிலும் கலந்து கொண்டதை, கனடியத் தமிழ் மக்களிடம் விளக்கினார். யாழ்ப்பாணம் செல்வதற்கு தான் விரும்பியபோது, அதற்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு செல்வது சிரமம் என்று சிறீலங்கா அரசு மறுத்துரைத்த போதும், தாம் தரைவழியாகப் பயணிக்க அனுமதிபெற்று, 8 மணிநேரம் பயணித்து யாழ் சென்று தமிழ் மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்து அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஒபரோய் அவர்கள், அங்கு மக்கள் மிகவும் பயம்நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வதை தான் அவதானித்ததாகக் கூறினார். மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரத்தில் எழுச்சி போன்ற எதனையும் தான் கண்டுகொள்ள முடியாமை தனக்கு வருத்தம் தருவதாகத் தெரிவித்த அவர், சர்வதேச சமூகம், சிறீலங்காவிடம் இதுகுறித்து போதிய மாற்றங்களைக் கோரும் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே சுதந்திர விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா, தொடர்ந்தும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று உறுதியளித்த ஒபரோய், வருகிற வருடம் ஜெனீவாவில் சிறீலங்கா குறித்த விவாதம் எழும்போது, அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் உட்பட, தொடர்ந்தும் மக்களின் வாழ்விடங்கள் மீள வழங்கப்படாமை, ஊடக சுதந்திரமின்மை, தொடரும் படுகொலைகள், பாதுகாப்பற்ற சூழல், மக்கள் அச்சத்துடன் வாழ்கின்ற சூழ்நிலை போன்ற பல்வேறு விடயங்களிலும் முன்னேற்றம் உள்ளதா என்ற கேள்வியை கனடா முன்வைக்கும் என்று தெரிவித்தார். தான் முதலாவது தடவையாக சுனாமி பேரழிவிற்குப் பின்னரும், இரண்டாவது தடவை, 2009ல் போர் முடிவுற்ற சூழ்நிலையிலும், தற்போது பொதுநலவாய மாநாட்டிற்காக மூன்றாவது தடவையாகவும் இலங்கை சென்று வந்துள்ளதை நினைவுகூர்ந்த ஒபரோய், அங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கை அரசில் அதிருப்தி கொண்ட நிலை இருப்பதை தான் அவதானித்ததாகவும், பிரதம நீதியரசர் சிராணியை பதவி நீக்கம் செய்தமை, ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், ஜனநாயக விரோத மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலைகள் போன்றவற்றை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டதுடன், அது குறித்து கனடா போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார். கனடிய வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபரோய் அவர்கள், தமிழ் மக்கள் பிரதிநிதிகளை ரொறன்ரோவில் சந்தித்தபின் ஊடகவியலாருக்கு வழங்கிய மாநாட்டின் போது, அவர் வழங்கிய உரையையும் நிருபர்களின் வினாக்களுக்கு அவர் வழங்கிய பதில்களையும், இங்கேயுள்ள ஒளிக்காட்சி வடிவங்களில் காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெளிநாடுகளில் வசிக்கும் வடக்கு மக்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது Posted: 02 Dec 2013 10:57 PM PST வெளிநாடுகளில் நிரந்தரமாக அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. […] |
| விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் யாழிற்கு விஜயம் செய்தால் வரவேற்பேன்: பிரதமர் Posted: 02 Dec 2013 10:46 PM PST வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனின் அழைப்புக்கு அமைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தால் அதனை வரவேற்பதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏனையோர் கூறுவதை கேட்பதற்கு பதிலாக அவர் நேரில் யாழ்ப்பாணத்திற்கு சென்று நிலைமைகளை பார்த்து அறிந்து கொண்டால் நல்லது. வடக்கு மாகாண முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு விடுத்துள்ள அழைப்பு குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரபூர்வமான […] |
| BMW i5 காரினை வடிவமைக்கும் பணிகள் மும்முரம் Posted: 02 Dec 2013 03:31 AM PST BMW தொடரில் விற்பனைக்கு வரும் கார்கள் மக்கள் மத்தியில் மிகப்பிரம்மாண்டமான வரவேற்பினைப் பெற்றுவருகின்றது. இந்நிலையில் BMW i3 காரானது அடுத்த வருட ஆரம்பத்திலும், BMW i8 காரானது அடுத்த வருடத்தின் பிந்திய மாதங்களிலும் சந்தைக்கு வரவுள்ளது. இதேவேளை BMW i5 எனும் புதிய வடிவமைப்புடனும், இலத்திரனியல் செயற்பாட்டினை அதிகளவில் கொண்டதுமான காரினை வடிவமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக இடம்பெறுகின்றன. BMW நிறுவனமானது தற்போது i வரிசையினைக் கொண்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. இதன் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 02 Dec 2013 03:13 AM PST இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு இந்தோனேஷியாவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவான நிலநடுக்கத்தால், சவுமலாகி என்னும் நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கட்டிடங்களும் அதிர்ந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இதற்கிடையே சிபைங் எரிமலை அருகே உள்ள குடலிங் கிராமத்தில் நிலநடுக்கத்தால் சில வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் […] |
| உலக கோடீஸ்வர தலைவர்களில் விளாடிமிர் புடின் முதலிடம் Posted: 02 Dec 2013 02:45 AM PST உலக கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதலிடம் பிடித்துள்ளார். உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், ஜனாதிபதிகள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்- முதலிடம் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புதினின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர். கோடீஸ்வர தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். தாய்லாந்து மன்னர்- இரண்டாவது இடம் […] |
| மக்கள் கண்ணீரை துடைத்த வெங்காயம் Posted: 02 Dec 2013 02:41 AM PST கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த வெங்காய விலை குறைந்துள்ளது. சந்தையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ 70 முதல் 80 ரூபாய் என விற்ற வெங்காயம், இரண்டு வாரங்களாக குறைந்து தற்போது கிலோ 40 என்ற அளவில் விற்கிறது. இருப்பினும் தக்காளி விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து கிலோ 58 முதல் 60 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது. |
| ரயில் தடம்புரண்டு ஆற்றின் கரையில் விழுந்தது Posted: 02 Dec 2013 02:39 AM PST
விபத்து பற்றிய தகவலின்பேரில் தீயணைப்புப் படையினர் 100 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் தாற்காலிகமாக ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம், இதே இடத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஷ்ய எல்லையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் Posted: 02 Dec 2013 02:34 AM PST கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 22 நவீன ஏவுகணைகளை எல்லைப் பகுதிகளில் வைக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. பனிப்போர் நடந்த காலத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆயுதங்களை தயாரித்தன. இதன்பின்னர் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுதங்களை குறைக்கும் நோக்கில், அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்நிலையில் செசன்யா பயங்கரவாதிகளால் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அடுத்தாண்டு இறுதிக்குள் எல்லைப் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் 22 ஏவுகணைகள் […] |
| மாத்திரைகளால் ஏழைகளாகும் 4 கோடி இந்தியர்கள்! Posted: 02 Dec 2013 02:29 AM PST இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவித்துள்ளன. உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது. இதில் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இல்லை என்று கடந்த 2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் விடயத்தில் விலை […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



