Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உ.பி.கலவரம், தெலுங்கானா விவகாரம்: பாராளுமன்றத்தில் அமளி

Posted: 08 Dec 2013 11:29 PM PST

பாராளுமன்றம் கடந்த வாரம் கூடிய போது முதல் நாள் முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கும், 2–வது நாள் மண்டேலா மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பாராளுமன்றம் கூடியதும் பல்வேறு பிரச்சினைகளால் அமளி ஏற்பட்டது. தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் தெலுங்கானா பிரச்சினையை கிளப்பினார்கள். பகுஜன் சமாஜ்கட்சி எம்.பி.க்கள்

யாருக்கும் மெஜாரிட்டி இல்லாததால் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படுமா?: மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு

Posted: 08 Dec 2013 11:21 PM PST

டெல்லி மாநில சட்ட சபைக்கு கடந்த 4–ந்தேதி தேர்தல் நடந்தது. நேற்று ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி 32 இடங்கள், ஆம் ஆத்மி 28 இடங்கள், காங்கிரஸ் 8 இடங்கள், மற்றவர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் அந்த அளவுக்கு தனி பெரும்

4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி: பங்கு சந்தையில் வரலாறு காணாத உயர்வு

Posted: 08 Dec 2013 10:47 PM PST

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவு பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 482 புள்ளிகள் உயர்ந்து 21483 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 147 புள்ளிகள் உயர்ந்து 6,415.25 என்ற நிலையிலும் இருந்தன.

மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு முஸ்லிம் ஓட்டுக்கள் காங்கிரஸ் பறிகொடுத்தது

Posted: 08 Dec 2013 10:40 PM PST

மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சிவராஜ்சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆக பதவி ஏற்க உள்ளார். இந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. அதில் 164 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது

காங்கிரஸ், பா.ஜ.க.வை மிரள வைத்த 'ஆம் ஆத்மி'

Posted: 08 Dec 2013 10:33 PM PST

ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட போது, மற்ற எல்லா கட்சிகளும் அந்த கட்சியை சற்று ஏளனமாக பார்த்தன. அந்த கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் கண்டு கொள்ளவே இல்லை

மிசோரம் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முன்னணி

Posted: 08 Dec 2013 10:22 PM PST

மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களின் ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லியில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தாலும் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 4

11.12.13ல் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டும் ஜோடிகள்

Posted: 08 Dec 2013 10:16 PM PST

ஒத்த எண்களைக் கொண்ட 10.10.10,11.11.11,12.12.12க்குப் பிறகு இந்த நூற்றாண்டின் இறுதி சிறப்பு நாளாக வருவது இன்னும் இரு தினங்களில் வரவிருக்கும் 11.12.13 என்ற தொடர் எண்ணினைக் கொண்ட தினமாகும். ஒத்த எண்கள் கொண்ட தினத்தில் உலகெங்கும் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். அதுபோல் வரும் 11 ஆம் தேதியிலும் தங்கள் திருமணத்தை நடத்த பல ஜோடிகள் ஏற்பாடு

டெல்லி சட்டசபை தேர்தலில் 70 பெண்கள் போட்டி: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 3 பேர் மட்டுமே வெற்றி

Posted: 08 Dec 2013 09:14 PM PST

டெல்லி சட்டசபை தேர்தல் போட்டியிட்ட 67 பெண் வேட்பாளர்களில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும், 70 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 'ஆம் ஆத்மி' கட்சி சார்பில் போட்டியிட்ட 3 பெண் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்ற 67 பெண் வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.

சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது: பக்தர்களுக்கு அப்பம் வழங்க கட்டுப்பாடு

Posted: 08 Dec 2013 09:01 PM PST

பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15–ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை வருகிற 26–ந்தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கு சில வாரங்களே உள்ளதால் சபரிமலையில் அய்யப்பப் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகளவில் தமிழகம் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

துபாயில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு தங்கம் கடத்திய 2 பேர் கைது

Posted: 08 Dec 2013 08:56 PM PST

இந்தியாவில் தங்கம் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளிலிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் அதிகளவில் தங்கம் கடத்துவது சமீபத்தில் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த தங்க கடத்தலில் பெண்களும் ஈடுபடுகிறார்கள். இதை தொடர்ந்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சையது (வயது 24), உமர்

மண்டேலா நினைவு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக பிரணாப், சோனியா இன்று தென் ஆப்பிரிக்கா பயணம்

Posted: 08 Dec 2013 08:01 PM PST

நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிபர் 95 வயது நெல்சன் மண்டேலா கடந்த வியாழக்கிழமை அன்று மரணம் அடைந்தார். உலக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருதை பெற்றவருமான மண்டேலாவின் மறைவுக்கு உலகத்தலைவர்கள் அனைவரும் இரங்கல் செய்தி விடுத்தனர். இந்திய அரசு சார்பில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மண்டேலாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் பிறந்த குனு நகரில் நடக்கிறது. இதில் உலகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக நாளை (செவ்வாய்க்கிழமை) ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள

புதிய சாதனை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி

Posted: 08 Dec 2013 07:15 PM PST

ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில், டெல்லி மாநில சட்டசபைக்கு போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளது. லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் அன்னா ஹசாரே தீவிர போராட்டம் நடத்தினார். அப்போது வருமானவரித்துறை அதிகாரியான அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரேயின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற

நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுவதையே காட்டுகிறது: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

Posted: 08 Dec 2013 07:11 PM PST

டெல்லி, சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:- நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார். இது குறித்து மேலும் கூறிய அவர், "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்" என்றார்.

மிசோரத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை

Posted: 08 Dec 2013 04:32 PM PST

மிஜோரம் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இங்குள்ள 40 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், மிஜோரம் ஜனநாயக முன்னணி, மிசோ தேசிய முன்னணி என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பீகாரில் பஸ் விபத்தில் 6 பேர் பலி

Posted: 08 Dec 2013 03:18 PM PST

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சாப்ரா நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் சரண் மாவட்டத்தில் உள்ள மார்கவுரா என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ்

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா?: சோனியா சூசக தகவல்

Posted: 08 Dec 2013 02:37 PM PST

டெல்லியில் நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவரா? என்ற கேள்விக்குப் பதில் அளித்தார்.

ராஜஸ்தான்: தோல்வியை ஒப்புக்கொண்ட முதல் மந்திரி, பாரதீய ஜனதா மீது கடும் தாக்கு

Posted: 08 Dec 2013 01:53 PM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்த ஆட்சியை பாரதீய ஜனதா பறித்துள்ளது. மொத்தம் உள்ள 200 தொகுதியில் 142 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

4 மாநில தேர்தல் முடிவுகள் கவனத்தை ஈர்க்கும் வெற்றி: நரேந்திர மோடி கருத்து

Posted: 08 Dec 2013 12:42 PM PST

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் அந்தக் கட்சி பெரும்பான்மை பெற்று விட்டது.

டெல்லி,மத்தியபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி படுதோல்வி

Posted: 08 Dec 2013 10:45 AM PST

டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில் 27 இடங்களில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்தது 7 பேர் வெற்றி பெறுவார்கள் என்று அந்த கட்சி சார்பில் எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரசும், பா.ஜ.கவும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையேல் அழியவேண்டும்: கெஜ்ரிவால்

Posted: 08 Dec 2013 08:59 AM PST

தலைநகரான டெல்லி பிரதேசத்திற்கு நடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்துள்ளது. தொடர்ந்து மூன்று முறையாக டெல்லியை ஆண்டு வந்த ஷீலா தீட்சித், புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™