மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உடல்நிலை பாதிப்பு காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்கள் ஓய்வு: சுற்றுப்பயண நிகழ்ச்சி ரத்து
- கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு போலீஸ் மந்திரி பதவி: ஏ.கே. அந்தோணி கூட்டத்தில் முடிவு
- மானியத்தில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது: மத்திய அரசு திட்டம்
- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது, மேலும் 2 பேர் அடையாளம் தெரிந்தது
- ஊழல் புகாரில் சிக்கிய 50 சதவீத காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சீட் இல்லை: ராகுல்காந்தி அதிரடி முடிவு
- புத்தக சுமையை குறைக்க பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்: குஜராத் மாநிலத்தில் அறிமுகம்
- டெல்லியை கலக்கும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள்: ஆட்டோ மற்றும் ரயிலில் அலுவலகத்திற்கு வந்தனர்
- திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்: 4 மலை பாதைகளிலும் ரூ.69 கோடியில் 2 ஆயிரம் கேமரா
- நிபந்தனை எதுவுமின்றி பா.ஜனதாவில் இணைகிறேன்: எடியூரப்பா அறிவிப்பு
- ஸ்பெக்ட்ரம் ஏலம் பிப்ரவரி 3–ந்தேதிக்கு தள்ளிவைப்பு: தொலைத்தொடர்புத்துறை அறிவிப்பு
- காங்கிரஸ் எம்.பி. அழகிரி தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு
- பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம்
- சாராய கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
- டெல்லியில் வரலாறு காணாத குளிர்: காஷ்மீரில் 'தால்' ஏரி உறைந்தது
- தேவயானி விவகாரத்தை மறுஆய்வு செய்வதற்கு இந்தியா வரவேற்பு
- காங். முதல்-மந்திரி வீரபத்ரசிங் லஞ்சம் பெற்றதாக பா.ஜனதா புகார்
- பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி: வாலிபர் கைது
- புத்தாண்டு கும்மாளத்திற்காக கடத்தப்பட்ட 13 கிலோ போதைப்பொருள் மும்பையில் பறிமுதல்: 3 பேர் கைது
- சேவை வரி செலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
- கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் வாழ்த்தி கோஷமிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட்
| உடல்நிலை பாதிப்பு காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்கள் ஓய்வு: சுற்றுப்பயண நிகழ்ச்சி ரத்து Posted: 30 Dec 2013 11:38 PM PST டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் ஓய்வு இல்லாமல் கடந்த 2 நாட்களாக பணியாற்றி வந்தார். இலவச குடிநீர் வழங்குவது பற்றியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றியும் இடைவிடாது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். தினமும் தூங்கச்செல்வதற்கு இரவு வெகுநேரம் ஆனது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான வயிற்றோட்டமும் இருந்தது. உடனே டாக்டர்கள் வர வழைக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை அளித்தனர். |
| கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு போலீஸ் மந்திரி பதவி: ஏ.கே. அந்தோணி கூட்டத்தில் முடிவு Posted: 30 Dec 2013 11:12 PM PST கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. போலீஸ் மந்திரியாக திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும், சபாநாயகராக ஜி.கார்த்திகேயனும் உள்ளனர். இக்கட்சிக்குள் கோஷ்டி பூசல் ஏற்பட்டு மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவை மந்திரியாக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மேலிட தலைவர்கள் முதல்–மந்திரி உம்மன்சாண்டியுடன் பேச்சு நடத்தினர். |
| மானியத்தில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது: மத்திய அரசு திட்டம் Posted: 30 Dec 2013 11:10 PM PST மத்திய அரசு மானிய செலவுத்தொகையை குறைக்க கடந்த ஆண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது ஒரு ஆண்டுக்கு மானிய விலையில் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களே வழங்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை 6–ல் இருந்து 9 ஆக உயர்த்தப்பட்டது. |
| ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது, மேலும் 2 பேர் அடையாளம் தெரிந்தது Posted: 30 Dec 2013 10:38 PM PST ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை, பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. மன்வீந்தர் சிங் என்ற அந்த மாணவர் தனது இரு நண்பர்களுடன் அங்குள்ள பிர்ரா ரங் பூங்காவின் நடைபாதையில் நின்றிருந்தபோது ஆப்பிரிக்கர் போல் |
| ஊழல் புகாரில் சிக்கிய 50 சதவீத காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சீட் இல்லை: ராகுல்காந்தி அதிரடி முடிவு Posted: 30 Dec 2013 10:37 PM PST 5 மாநில சட்ட சபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ராஜஸ்தான், டெல்லியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ராஜஸ்தானில் 21 இடங்களிலும் டெல்லியில் வெறும் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான், டெல்லியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.யாக இருந்த அனைவருக்கும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்ததே காங்கிரசின் மோசமான வீழ்ச்சிக்கு காரணம் என்று ஆய்வில் தெரியவந்தது. ஊழல் குற்றச்சாட்டுக்களால் காங்கிரசுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கும் நிலையில் திறமையற்ற பழைய முகங்களை நிறுத்தியதால் மக்கள் அதிருப்தி அடைந்து காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து விட்டதாக கருதப்படுகிறது. |
| புத்தக சுமையை குறைக்க பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்: குஜராத் மாநிலத்தில் அறிமுகம் Posted: 30 Dec 2013 10:27 PM PST பள்ளி மாணவர்களின் புத்தக சுமை பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்கிறது. பள்ளி குழந்தைகளின் முதுகில் சுமைக்க முடியாத அளவிற்கு பாடப் புத்தகங்களை சுமக்கும் நிலையை மாற்ற மத்திய மனித வளத்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக புதிய உத்திகளை கையாளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்படுகின்றன. காலாண்டு, |
| டெல்லியை கலக்கும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள்: ஆட்டோ மற்றும் ரயிலில் அலுவலகத்திற்கு வந்தனர் Posted: 30 Dec 2013 10:23 PM PST டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் தங்கள் எளிமையான பயணங்கள் மூலமும் அதிரடி செயல்பாட்டின் மூலமும் அரசியல் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். நேற்று டெல்லி தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு அக்கட்சி அமைச்சரான ராக்கி பிர்லா ஆட்டோவிலும், மற்றொரு |
| திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்: 4 மலை பாதைகளிலும் ரூ.69 கோடியில் 2 ஆயிரம் கேமரா Posted: 30 Dec 2013 08:18 PM PST திருப்பதியில் இருந்து திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருமலை, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு இலாகாவினர் தெரிவித்துள்ளனர். திருமலையில் கோவிலுக்குள்ளும், சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் நான்கு மாட வீதிகளிலும் தற்போது 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை கோவிலின் பாதுகாப்புக்கு பெரிதும் துணையாக அமைந்துள்ளன. |
| நிபந்தனை எதுவுமின்றி பா.ஜனதாவில் இணைகிறேன்: எடியூரப்பா அறிவிப்பு Posted: 30 Dec 2013 07:31 PM PST கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா, சிமோகாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''புத்தாண்டின் முதல் வாரத்தில் உங்களுக்கு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. நான் பா.ஜனதாவில் இருந்து விலகியதும் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது நான் பழைய கதையை பேச விரும்பவில்லை. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதேபோல் நானும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பா.ஜனதாவில் சேர முடிவு செய்து உள்ளேன். |
| ஸ்பெக்ட்ரம் ஏலம் பிப்ரவரி 3–ந்தேதிக்கு தள்ளிவைப்பு: தொலைத்தொடர்புத்துறை அறிவிப்பு Posted: 30 Dec 2013 07:21 PM PST ஸ்பெக்ட்ரம் 1,800 மற்றும் 900 மெகாஹெட்ஸ் அலைவரிசை ஒதுக்கீடு ஏலம் வருகிற ஜனவரி 23–ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஏலம் தற்போது பிப்ரவரி 3–ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை நேற்று அறிவித்தது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் வருகிற 15–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்ப மனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 27–ந்தேதி என்றும் கூறி உள்ளது. |
| காங்கிரஸ் எம்.பி. அழகிரி தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு Posted: 30 Dec 2013 03:12 PM PST தமிழக மீனவர் சங்க பிரநிதிகள் ஏற்கனவே தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமரை சந்தித்து இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்த 2 நாட்களில் தமிழகத்தின் ராமேசுவரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் |
| பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் Posted: 30 Dec 2013 02:50 PM PST மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஒரு தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், யார் பிரதமராக பதவி ஏற்பாரோ, அவரை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே முன்னிறுத்த வேண்டும் |
| Posted: 30 Dec 2013 02:22 PM PST டெல்லியைச் சேர்ந்த போலீஸ்காரர் வினோத் குமார் (வயது 48) கடந்த வாரம் ஆயத்தீர்வை அதிகாரிகளுடன் சாராய கும்பலை பிடிக்கச் சென்றார். அப்போது அக்கும்பல் தாக்கியதில் வினோத் குமார் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் |
| டெல்லியில் வரலாறு காணாத குளிர்: காஷ்மீரில் 'தால்' ஏரி உறைந்தது Posted: 30 Dec 2013 02:09 PM PST டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது. அத்துடன் குளிர் காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு |
| தேவயானி விவகாரத்தை மறுஆய்வு செய்வதற்கு இந்தியா வரவேற்பு Posted: 30 Dec 2013 01:35 PM PST அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஆடைகளை களைந்து சோதனையிடப்பட்டார். விசா மோசடியில் ஈடுபட்டதாகவும், தனது பணிப்பெண்ணுக்கு குறைவான ஊதியம் வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது |
| காங். முதல்-மந்திரி வீரபத்ரசிங் லஞ்சம் பெற்றதாக பா.ஜனதா புகார் Posted: 30 Dec 2013 12:31 PM PST இமாசலபிரதேசத்தில் நீர்மின் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்காக அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி வீரபத்ரசிங் லஞ்சம் பெற்றதாக பா.ஜனதா புகார் கூறியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு அருண்ஜெட்லி கடிதம் அனுப்பி உள்ளார் |
| பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி: வாலிபர் கைது Posted: 30 Dec 2013 11:14 AM PST பெங்களூர் மாநகராட்சி அருகே ஜே.சி.ரோட்டில் நவம்பர் மாதம் 19-ந்தேதி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்ற வங்கி பெண் அதிகாரி ஜோதியை ஒரு மர்ம மனிதன் தாக்கி பணம், செல்போனை கொள்ளையடித்துச் சென்றான். அந்த கொள்ளையன் உருவம் ஏ.டி.எம். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியும் இன்னும் போலீசார் கையில் சிக்காமல் |
| புத்தாண்டு கும்மாளத்திற்காக கடத்தப்பட்ட 13 கிலோ போதைப்பொருள் மும்பையில் பறிமுதல்: 3 பேர் கைது Posted: 30 Dec 2013 10:55 AM PST 2013-ம் ஆண்டு இன்றுடன் விடைபெற்று '2014' புத்தாண்டாக பிறக்க உள்ளது. இதையொட்டி, உலகெங்கிலும் உள்ள முக்கிய தலைநகரங்களில் விழாக்கோலம் களைகட்டி வருகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வேடிக்கை, கேளிக்கை, மது உள்ளிட்ட போதை விருந்துகள் என இந்தியாவின் பல்வேறு மாநில தலைநகரங்களும் |
| சேவை வரி செலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை Posted: 30 Dec 2013 10:32 AM PST சேவை வரி செலுத்தாதோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 'தானாக முன்வந்து வரி செலுத்தும் திட்டம்' ஒன்றை மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் அறிமுகம் செய்தார். கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் மூலம் சேவை வரி செலுத்தாதோர் தானாக முன்வந்து வரி செலுத்துவதற்கு |
| கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் வாழ்த்தி கோஷமிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் Posted: 30 Dec 2013 06:25 AM PST டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். இதற்காக ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |