Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

Posted: 30 Dec 2013 10:09 PM PST

sithamparam

sithamparamமத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஒரு தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், யார் பிரதமராக பதவி ஏற்பாரோ, அவரை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே முன்னிறுத்த வேண்டும் என்பது எனது கருத்து. இது எனது கருத்துதான். இதுபற்றி கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால், பாராளுமன்ற தேர்தலோ, சட்டசபை தேர்தல்களோ எதுவாக இருந்தாலும், யார் தலைவர் என்று கேட்பது வாக்காளர்களின் வழக்கமாக இருக்கிறது. எனவேதான், இந்த கருத்தை கடந்த 15, 20 ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன்.

மாநில சட்டசபை தேர்தல்களை பொறுத்தவரை, இந்த கட்சி தலைவரா? அந்த கட்சி தலைவரா? என்றுதான் முதல்-மந்திரி பதவிக்கு இரண்டு பேரிடையே நேரடி போட்டி நடக்கிறது. தமிழ்நாட்டில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்படித்தான் பார்த்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு குறித்து ப.சிதம்பரம் கூறியதாவது:-

'நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 5 ஆயிரம் கோடி டாலராக குறையும். இருப்பினும், தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு நீடிக்க வேண்டும்.

அதே சமயத்தில், நம் நாட்டில் நிலத்தில் புதைந்து கிடக்கும் தங்கத்தை தோண்டி எடுக்க வேண்டும். மூடப்பட்டுள்ள சுரங்கங்களை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, அந்த சுரங்கங்களை மத்திய சுரங்க அமைச்சகம் ஏலம் விட வேண்டும்.

ஏனென்றால், அந்த சுரங்கங்களை எங்களிடம் தாருங்கள், நாங்கள் தங்கத்தை தோண்டி எடுக்கிறோம்' என்று என்னை சந்தித்த எத்தனையோ பேர் கூறி உள்ளனர்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

2013–ம் ஆண்டில் உலக அளவில் 70 பத்திரிகையாளர்கள் கொலை

Posted: 30 Dec 2013 10:01 PM PST

muder

muderஉலக நடப்புகளை சேகரித்து பத்திரிகை, ஊடகம் உள்ளிட்ட நிருபர்கள் செய்திகளை அளித்து வருகின்றனர். போர்முனை, உள்நாட்டு கலவரம் நடைபெறும் பகுதிகளில் பணியில் ஈடுபடும் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

எனவே, அவர்களை பாதுகாக்க நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு 'பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு கமிட்டி' என்ற அமைப்பு நடத்த 1981–ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டில் பணியின் போது கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குறித்து இச்சங்கம் ஆய்வு நடத்தியது. அதில், சர்வதேச அளவில் இதுவரை 70 பேர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் மத்திய கிழக்கு நாடுகளான பாகிஸ்தான், சோமாலியா, இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ், நாடுகளில் கொலை செய்யப்பட்டுள்னர்.

இதில் பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவில் தான் அதிகம் பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மட்டும் 5 பேர் கொலையுண்டு இருக்கின்றனர்.

தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் 29 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் லெபனான் மற்றும் துருக்கு எல்லையில் உயிரிழந்துள்ளனர்.

பணியின் போது கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகும். ஏனெனில் கடந்த ஆண்டு 74 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

திருப்பூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

Posted: 30 Dec 2013 09:45 PM PST

rape

rapeதிருப்பூர் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த தம்பதியின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2–ம் படித்து வருகிறாள். பெற்றோர் இருவரும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதால் அந்த மாணவி அருகேயுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருப்பாள். பெற்றோர் வந்ததும் வீட்டுக்கு சென்று விடுவாள்.

வழக்கம்போல் அந்த சிறுமி தனது பாட்டி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவர்கள் ஹரிகிருஷ்ணன்(14), சூர்யா(14) ஆகியோர் அங்கு வந்தனர்.

மாணவியிடம் நைசாக பேசி அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். வீடு திரும்பிய சிறுமி சிறுநீர் கழிக்க சென்ற போது வலியால் துடித்தாள்.

என்ன ஏது என்று பெற்றோர் விசாரித்த போதுதான் மாணவர்கள் இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதிர்ந்து போன பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து மாணவர்கள் இருவரையும் கைது செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் அங்கு சேர்க்கப்பட்டனர்.

 

This posting includes an audio/video/photo media file: Download Now

தேவயானி பிரச்சினையில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை:

Posted: 30 Dec 2013 09:42 PM PST

Devyani-Khobragade-PTI

Devyani-Khobragade-PTIஅமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை தொடர்ந்து நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும், அவர் மீதான வழக்கை திரும்பப்பெறும் எண்ணமில்லை என்றும் அமெரிக்கா கூறிவருவதாக தெரிகிறது.

அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கு கடைசி நாளான ஜனவரி 13-ந் தேதிக்குள் இந்த ஆதாரங்களை திரட்டவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

முன்னதாக டிசம்பர் 12-ந்தேதி தேவயானி கைது செய்யப்பட்டு அவரது ஆடைகளை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அவரது கைதுக்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்தியாவும் இங்குள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சில நடவடிக்கை எடுத்துள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம்

Posted: 30 Dec 2013 09:35 PM PST

rathi

rathiசுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை நாடுகடத்தும் நடவடிக்கைகள், சிறிலங்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி, நியூசிலாந்தின் கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த அனைத்துலக ஊடக அமைப்பு பிரதிநிதிகள், கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் போன்ற பலர் அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 28ம் நாள் சுற்றுலா நுழைவிசைவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சிறிலங்கா வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் தங்கியுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.அவரது நடவடிக்கைகளை சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்ற போதிலும், சுற்றுலா நுழைவிசைவில் வந்து அரசியல் நவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நாட்டைவிட்டு அவரை வெளியேற்ற சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது.

அவ்வாறு அவர் நாடுகடத்தப்படுவதை , புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் விரும்புவதாகவும், அதனை சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வர் என்றும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, ராதிகா சிற்சபேசன் போன்று, புலம்பெயர் தமிழர்களுக்கு நெருக்கமான வெளிநாட்டு அரசியல்வாதிகள், மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தற்கொலை நடத்த வந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பா?-

Posted: 30 Dec 2013 09:31 PM PST

sarath fonseka

sarath fonsekaதற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுக்கும் எனக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக பிரதியமைச்சர் சரண குணவர்தன சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இதற்கு எதிராக வழக்கு தொடராமல் இருக்க வேண்டுமாயின், 14 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு கோரி சட்டத்தரணி ஊடக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு கடந்த 19 ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர போவதாக கடிதம் அனுப்பியுள்ளோம்.

முன்னாள் இராணுவ தளபதியான தனக்கு ஏற்படுத்திய அவதூறுக்கு இழப்பீடாக 500 மில்லயின் ரூபாவை வழங்க வேண்டும் என அதில் கேட்டுள்ளோம்.

எனக்கு ஏற்படுத்திய அவதூறுக்கு தொகையை நிர்ணயம் செய்ய முடியாது எனினும் பிரதியமைச்சருக்கு ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

என் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது எனக் கூறி, பிரதியமைச்சர் எனக்கு மட்டுமல்ல, முழு இராணுவத்திற்கும் கறையை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொலைபேசிக் கட்டணங்கள் நாளை முதல் உயர்வு

Posted: 30 Dec 2013 09:28 PM PST

find-address-from-phone-number-2

find-address-from-phone-number-2நிலையான மற்றும் செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன.

தொலைபேசி அழைப்பிற்கான கட்டணங்கள் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

மொத்த அழைப்பு நேரத்தின் 25 வீதமாக இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது.

புதிய கட்டண அதிகரிப்பு மூலமாக 400 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் வருமானமாக ஈட்ட உத்தேசித்துள்ளது.

தொலைபேசி அழைப்பிற்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் எனவும், இணைய இணைப்பிற்கு அறவீடு செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜி.எல்.பீரிஸ் அடுத்த மாதம் இந்தியா விஜயம்

Posted: 30 Dec 2013 09:24 PM PST

g.l.peris_

g.l.peris_இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்த மாதம் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமைச்சுர் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவ்விவகார அமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள், பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் ஆகியோரை அமைச்சர் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், அமைச்சர் பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறிலங்கா இராணுவத்துக்கு தெற்கில் தீவிர ஆட்சேர்ப்பு

Posted: 30 Dec 2013 09:18 PM PST

army-poster-paste-432x360

army-poster-paste-432x360போர் முடிவுக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும், சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறிலங்கா இராணுவம் வெளிப்படையாக ஊடகங்களின் மூலம் விளம்பரங்களைக் கோரி ஆட்சேர்ப்பு செய்வதற்குப் பதிலாக, சிறிலங்காவின் தென்பகுதியில், சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்து ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டு வருகிறது.

களுத்துறைப் பகுதியில், சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவுக்கு ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பான சுவரொட்டிகளை சிறிலங்கா படையினர் ஒட்டி வருகின்றனர்.

வடக்கில் நிலை கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரைக் குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போது, படையினரை எங்கு கொண்டு போய் நிறுத்துவது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கடும் குளிரில் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 30 Dec 2013 09:08 PM PST

இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் காலநிலையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது. அத்துடன் குளிர் காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் நேற்று காலையில் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது கடந்த 10 ஆண்டுகளில், டிசம்பர் மாதத்தில் நிலவிய மிக குறைந்த அளவு வெப்ப நிலையாகும். அங்கு அதிகபட்சமாக 19.5 […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™