மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கெஜ்ரிவால் வீட்டில் அலைமோதும் கூட்டம்: 2 நாளில் வாடகை வீட்டில் குடியேறுகிறார்
- டெல்லியில் 150 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பல் கைது
- மேற்கு வங்காளத்தில் ஹெலிகாப்டர் சர்வீஸ் அறிமுகம்: 7 பேர் பயணம் செய்யலாம்
- டெல்லி முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு
- கெஜ்ரிவால் அதிரடியால் மோடி அலை குறையுமா?
- குஜராத்தை தகர்க்க சதி: சூரத்தில் அணுகுண்டை வெடிக்க திட்டமிட்டேன் - தீவிரவாதி யாசீன் பத்கல் தகவல்
- ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மரக்கிடங்கில் தீ விபத்து
- கானா மக்களுக்காக தன வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ள இந்திய மகப்பேறு மருத்துவர்
- பா.ஜனதாவில் அடுத்த மாதம் சேருவேன்: எடியூரப்பா அறிவிப்பு
- டெல்லியில் ஆசிரியர் நியமன கேள்வித்தாள் ‘அவுட்’ ஆனதால் தேர்வு ரத்து: ஆம் ஆத்மி மந்திரி நடவடிக்கை
- காஷ்மீரில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
- சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது: கே.வி.தாமஸ் வலியுறுத்தல்
- திருப்பதி கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்
- நரேந்திர மோடியோ, கெஜ்ரிவாலோ ராகுலுக்கு சமமாக மாட்டார்கள்: லாலு பிரசாத் யாதவ்
- மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
- 'அரசியலில் நுழைவது பாவம் அல்ல': கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே வாழ்த்து செய்தி
- ஒடிசா: உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 பழங்குடியினர் உடல் கருகி பலி
- 'லிஃப்ட்' தருவதாக கூறி தலித் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூவருக்கு போலீஸ் வலை
- எல்லைப் பகுதியை கண்காணிக்க 15 ஆளில்லா விமானங்கள்: இந்தியா வாங்குகிறது
- கொல்கத்தா வணிக வளாகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் தராத போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது
| கெஜ்ரிவால் வீட்டில் அலைமோதும் கூட்டம்: 2 நாளில் வாடகை வீட்டில் குடியேறுகிறார் Posted: 29 Dec 2013 11:19 PM PST டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் காசியாபாத் நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார். டெல்லியின் துணைக்கோள் நகரமாக திகழும் காசியாபாத் உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாகும். அங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிர்னர் குடியிருப்பை மத்திய வருவாய் துறை தன் அதிகாரிகளை குடியமர்த்த வாங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் ஐஆர்எஸ் அதிகாரி என்பதால் கவுசாம்பியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வீடு ஒதுக்கியது. அங்குள்ள 4–வது மாடியில் ஒரு வீட்டில் கெஜ்ரிவால் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் |
| டெல்லியில் 150 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பல் கைது Posted: 29 Dec 2013 11:14 PM PST இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள சூழலில் டெல்லி மாநில போலீசாருக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் அங்கு முகாமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இக்கடத்தல் கும்பல் தெற்கு ஆசிய நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் தளம் அமைத்து செயல்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. |
| மேற்கு வங்காளத்தில் ஹெலிகாப்டர் சர்வீஸ் அறிமுகம்: 7 பேர் பயணம் செய்யலாம் Posted: 29 Dec 2013 10:53 PM PST 'மேற்கு வங்க மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும்' என்று அந்த மாநில முதல்– மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். அந்த மாநில போக்குவரத்து மந்திரி மதன் மித்ரா, ஹெலிகாப்டர் சேவை பற்றிய அறிவிப்பை கடந்த 27–ந்தேதி வெளியிட்டார். இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவை நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக அந்த மாநிலத்தின் 4 இடங்களுக்கு ஹெலிகாப்டரில் பயணிகள் சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் ஹெலிகாப்டர் பயணத்தை கொல்கத்தாவில் மந்திரி மதன் மித்ரா தொடங்கி வைத்தார். இதில் பெகாலா பிளையிங் கிளப் உறுப்பினர்கள் பயணம் |
| டெல்லி முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு Posted: 29 Dec 2013 09:58 PM PST டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று அலுவலகம் செல்லமாட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி 700 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. |
| கெஜ்ரிவால் அதிரடியால் மோடி அலை குறையுமா? Posted: 29 Dec 2013 09:38 PM PST பா.ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் ஆதரவு அலை வீசுவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது பிரசார கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள். பரவலாக பேசப்பட்டு வரும் மோடி ஆதரவு அலையை ஒருங்கிணைத்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்பட்டு |
| குஜராத்தை தகர்க்க சதி: சூரத்தில் அணுகுண்டை வெடிக்க திட்டமிட்டேன் - தீவிரவாதி யாசீன் பத்கல் தகவல் Posted: 29 Dec 2013 09:28 PM PST இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவரான அகமது ஜரர் சித்திபப்பா என்ற யாசீன் பத்கல் கடந்த ஆகஸ்டு மாதம் 27–ந்தேதி நேபாள எல்லையில் பிடிபட்டான். அவனிடம் தேசிய பாதுகாப்புப் படை, உளவுத்துறை மற்றும் மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் இந்த ஆண்டு குண்டு வெடிப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் வகுத்திருந்த சதி திட்டங்கள் பற்றி யாசீன் பத்கல் தகவல்களை கூறி வருகிறான். இது தவிர பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டு |
| ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மரக்கிடங்கில் தீ விபத்து Posted: 29 Dec 2013 09:09 PM PST ஐதராபாத்தில் உள்ள முஷராபாத்தில் 'கல்பனா டிம்பர் டிப்போ' என்ற பெயரில் மரக்கிடங்கு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மத்தியில் இந்த மரங்கிடங்கு உள்ளது. இன்று அதிகாலை இந்த மரக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமள என பற்றி எரிந்து அருகில் உள்ள அடுக்குமாடி வீட்டிலும் பரவியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் |
| கானா மக்களுக்காக தன வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ள இந்திய மகப்பேறு மருத்துவர் Posted: 29 Dec 2013 08:39 PM PST கடந்த 1969 ஆம் ஆண்டில் கானா சுகாதார அமைச்சகத்தின் மூலம் அங்கு பணி நியமனம் பெற்றவர் இந்தியாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான உமா சென் என்பவர் ஆவார். இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளிலும் பணி புரிந்த அவர் கடைசியாக கடந்த 1999 ஆம் ஆண்டு வோல்டா பிராந்திய மருத்துவமனையில் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றார். பின்னர் ஒப்பந்த அடிப்படையில் வோல்டா மருத்துவமனையின் பல கிளைகளிலும் தனது சேவையைத் தொடர்ந்த இவர் 80 வயதாகும் |
| பா.ஜனதாவில் அடுத்த மாதம் சேருவேன்: எடியூரப்பா அறிவிப்பு Posted: 29 Dec 2013 08:32 PM PST கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா பாரதிய ஜனதாவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி கடும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அவர் மீண்டும் பாரதிய ஜனதாவில் சேர முடிவு செய்தார். இதற்காக அவர் பாரதிய ஜனதா தலைவர்களிடம் பேச்சு நடத்தி வந்தார். |
| டெல்லியில் ஆசிரியர் நியமன கேள்வித்தாள் ‘அவுட்’ ஆனதால் தேர்வு ரத்து: ஆம் ஆத்மி மந்திரி நடவடிக்கை Posted: 29 Dec 2013 08:24 PM PST டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம். ஊழல் செய்த அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். மின் கட்டணத்தை பாதியாக குறைப்போம். ஒவ்வொரு வீட்டுக்கும் |
| காஷ்மீரில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை Posted: 29 Dec 2013 07:48 PM PST காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சங்லி பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு பணியில் இருந்த ராஜ்குமார் (வயது 28) என்ற ராணுவ வீரர் நேற்று முன்தினம் திடீரென கூடாரத்தில் தூக்குப்போட்ட நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த மற்ற வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை |
| சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது: கே.வி.தாமஸ் வலியுறுத்தல் Posted: 29 Dec 2013 07:47 PM PST அரசின் சேவைகள், மானியங்கள், சலுகைகள், குறிப்பாக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை நேரடியாக பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என தகவல்கள் வெளியாகி வந்தன. நாட்டில் சரிபாதி எண்ணிக்கையிலான மக்களுக்குக்கூட இந்த ஆதார் அடையாள அட்டை இன்னும் வழங்கப்படவில்லை. |
| திருப்பதி கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் Posted: 29 Dec 2013 07:26 PM PST ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். இதற்காக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் தந்திரிகளும், தேவசம் போர்டு அலுவலர்களும் வரவேற்பு அளித்தனர். சாமி தரிசனத்தை முடித்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு, தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதமும், புத்தாண்டு காலண்டரும் வழங்கினர். |
| நரேந்திர மோடியோ, கெஜ்ரிவாலோ ராகுலுக்கு சமமாக மாட்டார்கள்: லாலு பிரசாத் யாதவ் Posted: 29 Dec 2013 07:21 PM PST உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக, பிகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று முசாபர்நகர் சென்றார். அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அவல நிலைகள் குறித்து தொலைக்காட்சிகளில் பார்த்தேன். இந்த மக்களின் நலனுக்காக தொடக்கத்திலே நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவே நாங்கள் |
| மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு Posted: 29 Dec 2013 07:20 PM PST மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையொட்டி, பம்பையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், மண்டல பூஜைக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை |
| 'அரசியலில் நுழைவது பாவம் அல்ல': கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே வாழ்த்து செய்தி Posted: 29 Dec 2013 02:45 PM PST அரசியலே சாக்கடை ஆகிவிட்டது என்று கூறிவந்த காந்தியவாதி அன்னா ஹசாரே தற்போது அரசியலில் நுழைவது பாவம் அல்ல என்று தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றுவந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனிக்கட்சி |
| ஒடிசா: உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 பழங்குடியினர் உடல் கருகி பலி Posted: 29 Dec 2013 02:04 PM PST உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 பழங்குடியினர் உடல் கருகி பலியான சம்பவம் மல்காங்கிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சித்ரகொண்டா என்ற சிற்றூர் உள்ளது |
| 'லிஃப்ட்' தருவதாக கூறி தலித் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூவருக்கு போலீஸ் வலை Posted: 29 Dec 2013 01:05 PM PST உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா அருகே உள்ள நாக்லா ஹன்சி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் தலித் மணவி கடந்த 26-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரை சேர்ந்த 3 பேர் காரில் வந்து அவரை வீட்டில் இறக்கி விடுவதாக |
| எல்லைப் பகுதியை கண்காணிக்க 15 ஆளில்லா விமானங்கள்: இந்தியா வாங்குகிறது Posted: 29 Dec 2013 12:44 PM PST எல்லை பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை கடந்த 1990-களில் இந்தியா பயன்படுத்த தொடங்கியது. அப்போது, 'சர்ச்சர் மார்க்-1' மற்றும் 'சர்ச்சர் மார்க்-2' ரக ஆளில்லா விமானங்களை இந்தியா பயன்படுத்தியது |
| கொல்கத்தா வணிக வளாகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் தராத போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது Posted: 29 Dec 2013 12:11 PM PST கொல்கத்தா போலீஸ் துறையில் சிறப்பு துணை கமிஷனராக பணியாற்றி வரும் ஒருவர் டெல்லியில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் பொருட்களை வாங்கிக் கொண்டு, அவற்றிற்குரிய பணத்தை செலுத்தாமல் சென்று விடுவதாக டெல்லி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |