Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அதிகமாக சம்பாதிப்பவரா? 75 சதவீத வரி செலுத்துங்கள்

Posted: 29 Dec 2013 11:04 PM PST

doller

dollerபிரான்ஸ் நாட்டில் அதிகமாக சம்பளம் பெறும் நபர்களிடம் 75 வீத வரியை வசூலிக்க பிரான்ஸ் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது ஆண்டு வருமானத்தில் இருந்து 75 வீத வரி வசூலிக்கப்பட உள்ளது.

வருடத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்களை சம்பளமாக பெறும் தனி நபர்களிடம் 75 வீதமான வரி வசூலிடும் சட்டத்தை பிரான்ஸ் அரசியலமைப்புச் சபையில் அந்நாட்டு ஜனாதிபதி பிரேன்கோசிஸ் ஹொல்லேடன் இந்த வருட ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்கமளிக்கப்படவில்லை என்பதால் அது நிராகரிக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தான் இராணுவம் என் பக்கம்: மிரட்டும் முஷராப்

Posted: 29 Dec 2013 10:49 PM PST

musharaf-slider-150x125

musharaf-slider-150x125பாகிஸ்தான் இராணுவத்தின் முழு ஆதரவும் தமக்கு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் இராணுவ தளபதியும், முன்னாள் ஜனாதிபதியுமான பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

பாகிஸ்தான் இராணுவம் என்னை கைவிட்டு விட்டதாக கூறப்படுவதை மறுக்கிறேன். பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவு இன்னும் எனக்கு இருக்கிறது.

பழிவாங்கும் நடவடிக்கையாகவே என் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து, பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தியில் உள்ளது என்று முஷாரப் கூறியுள்ளார்.

தேசத் துரோக வழக்கில் வரும் முதலாம் திகதி ஆஜராகும்படி முஷாரபிற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்கப்படக்கூடும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையர்களுக்கு புகலிடம் கோர வேண்டிய தேவை இல்லை – திசர

Posted: 29 Dec 2013 10:46 PM PST

sl

slபுகலிடம் கோர வேண்டிய அவசியம் இலங்கையர்களுக்கு இல்லை என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அத்மிரால் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதால் வேறு நாடுகளில் புகலிடம் கோர வேண்டிய அவசியம் இலங்கை பிரஜைகளுக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் புகலிடம் மற்றும் அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திதேலியாவிற்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை என திசர தெரிவித்துள்ளார்.

ஆனால் சில இலங்கையர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வருவதாக அவர் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இளவரசருக்கு தூக்கு?

Posted: 29 Dec 2013 10:40 PM PST

dubail_prince_002

dubail_prince_002சவூதி அரேபிய இளவரசருக்கு கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது.

துபாயில் சவூதி இளவரசர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரபியரை கொலை செய்துள்ளார்.

அந்நாட்டு வழக்கப்படி கொலையாளி சார்பில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்க்கு பெருந்தொகை ஒன்றை கொடுத்து விட்டால் மரண தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

ஆனால் இந்த வழக்கில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதனால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் சவூதியில் இதுவரை மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இனி ‘குவா குவா’ ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்

Posted: 29 Dec 2013 10:35 PM PST

ambulance_002

ambulance_002திருநெல்வேலி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரத்யேக அவசர ஊர்தி சேவை இன்று தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் அவசரஊர்தி சேவையால் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இதேபோல் நெல்லை மாவட்டத்துக்கு முதல் முறையாக ஒரு நியோ நேட்டல் அவசர ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஊர்தியில் பச்சிளம் குழந்தைகளுக்காக தொட்டில் போன்ற படுக்கை இன்குபேட்டர், வார்மர், மூச்சு விடுவதற்காக ஆக்சிஜன் உள்ளிட்ட அவசர சிகிச்சை கருவிகள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

மேலும் குழந்தைகளை கவனிப்பதற்காக மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த அவசரஊர்தி சேவையானது அவசர காலங்களில் அருகில் இருக்கும் தூத்துக்குடி, குமரி மாவட்டத்துக்கும் சென்று உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீரியல் பார்க்கிறாயா? மனைவி தீக்குளிப்பு

Posted: 29 Dec 2013 10:28 PM PST

6-year-old-girl-set-on-fire

6-year-old-girl-set-on-fireகடலூர் மாவட்டத்தில் சமையல் செய்யாமல் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்துள்ளார்.

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் சமையல் எதுவும் செய்யாமல் தொலைக்காட்சி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது வீட்டுக்கு வந்த அருள் முருகன், மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்து திட்டியுள்ளார்.

இதனால் கோபமமும், மன உளைச்சலும் அடைந்தார் சீதா. பின்னர் கணவர் வெளியே சென்ற நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்தில் வெளியான விபச்சார விளம்பரத்தால் பெரும் பரபரப்பு

Posted: 29 Dec 2013 09:16 PM PST

prostitute_advt_001

prostitute_advt_001இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்று வெளியான விளம்பரத்தால் லண்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு பல நாடுகளில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் வழித்துணைக்கு பாதுகாவலர்களாக எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்துகிறது.

இவ்வாறு பணியமர்த்தப்படும் நபர்கள் அந்நாட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். தனியாக வரும் ஆணுக்கு துணையாக அழகான பெண்களையும், பெண்ணுக்கு துணையாக இளமையும், நல்ல உடல்கட்டும் கொண்ட ஆண்களையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன.

ஒருவர் எந்த நாட்டுக்கு போக வேண்டுமோ..? அந்த நாட்டில் பிரபலமாக இயங்கிவரும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்துவிட்டால் போதும். செல்பவர் ஆணாக இருந்தால் அழகான பெண்களின் புகைப்படங்களையும், பெண்ணாக இருந்தால் கட்டிளங்காளையர்களின் புகைப்படங்களையும் இந்த நிறுவனம் 'இ-மெயில்' மூலமாக அனுப்பி வைத்துவிடும்.

வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்து தகவல் தெரிவித்து, உறுதிபடுத்தி விட்டால் அவர்களை விமான நிலையத்திற்கே வந்து அந்த நபர்கள் அழைத்து செல்வார்கள்.

அந்த நேரம் முதல் வெளிநாட்டு வாடிக்கையாளரின் நிழல் போலவே இருந்து, அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் தங்கும் அறையிலேயே இவர்கள் படுத்து தூங்குவார்கள்.

'எஸ்கார்ட் சர்வீஸ்' என்றழைக்கப்படும் இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை கட்டணமாக பெறும் இந்த நிறுவனங்கள், தங்களது கமிஷன் போக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு சொற்ப தொகையை சம்பளமாக வழங்குகின்றன.

இவ்வகையில், இங்கிலாந்தில் இயங்கிவரும் 'ஹார்னி எஸ்கார்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணயதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில், 'தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் பிரியம் இருந்தால் போதும். விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்டுகள் வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது.

இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

Posted: 29 Dec 2013 09:00 PM PST

israeli_attack_001

israeli_attack_001தென் லெபனான் பகுதியை குறி வைத்து மூன்று எறிகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த பிரதேசத்தில் இருந்து தமது பிரதேசத்திற்கு எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தம்மால் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து, இரண்டு லெபனான் துருப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்களை அடுத்தே இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதேவேளை, 2006ஆம் ஆண்டு 34 நாட்களாக இடம்பெற்ற யுத்தத்தை அடுத்து, இரு நாட்டு எல்லை பகுதியில் ஐக்கிய நாடுகளில் படையணியினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த மோதலின் போது 1125யிற்கும் மேற்பட்ட லெபனான் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 119 இஸ்ரேலிய துருப்பினரும் 45 பொதுமக்களும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதலையுடன் போராடி மகனை மீட்ட தந்தை

Posted: 29 Dec 2013 08:55 PM PST

crocodile_attack_001

crocodile_attack_001ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவரது 11 வயது மகன் தபிவா. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தந்தையும், மகனும் தங்கள் கிராமத்துக்கு செல்ல ஆற்றைக் கடந்தனர்.

அப்போது ஒரு முதலை தபிவாவை வாயால் கவ்விப் பிடித்தது. வாய்க்குள் சிக்கிய சிறுவனை கடித்து குதற ஆரம்பித்தது முதலை.

இந்த இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அவனது தந்தை தபாட்ஷவாவிடம் ஆயுதம் எதுவும் இல்லை. இருந்தாலும் ஆக்ரோஷத்துடன் முதலை மீது பாய்ந்தார். அதன் முதுகில் அமர்ந்து அதன் தாடையை அகற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. தலையில் தனது கையால் ஓங்கி குத்தினார்.

இறுதியில் அதன் கண்ணில் ஓங்கி குத்தி கிழித்தார். இதனால் நிலை தடுமாறிய முதலை தனது வாயை திறந்தது. அதை தொடர்ந்து முதலை வாய்க்குள் சிக்கிய சிறுவன் தபிவா மீட்கப் பட்டான்.

ஆனால் முதலை கடித்ததில் அவனது ஒரு கால் துண்டானது. தபாட்ஷ்வா கையிலும் ரத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிம்பாப்வேயில் மழை காலத்தில் முதலைகள் தாக்குதல் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு குறைந்த ஊதியம்

Posted: 29 Dec 2013 08:51 PM PST

dollars-

dollars-இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணி புரியும் இந்தியர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ள குழு, இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

இந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சட்டத்துறை, நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ளது.

விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக, இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் ஒன்றாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் குறித்த தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த தகவல்களை வழங்காமல், அமெரிக்க அரசு காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், துணை தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணி புரியும் இந்தியாவைச் சேர்ந்த ஒட்டுநர்கள், சமையல் கலைஞர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க சட்டப்படி, ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 9.47 டாலர்கள் (ரூ.586) வழங்க வேண்டும். ஆனால் இந்திய ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை (200 முதல் 250 டாலர்கள்) மட்டும் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தூதரக வளாகத்தினுள் இருக்கும் முடி திருத்தகம் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களை அங்குள்ள அதிகாரிகளே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும், தூதரக அதிகாரிகள் அல்லாதோரும் அதனை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இதன்மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் விதிகளை மீறியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு சட்டங்களையும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீறியிருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™