மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உத்தரபிரதேசத்தில் கலவரம்: லல்லுபிரசாத்யாதவ் நேரில் ஆறுதல்
- அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆயுதமான துடைப்பம் ஊழல் குப்பையை அகற்றுமா?
- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு
- புத்தாண்டு தரிசனம்: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிகிறார்கள்
- லால்பகதூர்சாஸ்திரி பேரன் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார்
- கெஜ்ரிவால் வீட்டில் இன்று பஸ் தொழிலாளர்கள் திரண்டனர்: வேலையை நிரந்தரமாக்க கோரிக்கை
- ரெயில் விபத்துக்கு மத்திய அரசின் கவனக்குறைவே காரணம்: ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
- சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அரவிந்த் கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்
- தமிழகத்தில் உள்ள 10 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி ஜனாதிபதி உத்தரவு
- காங்கிரசின் மிகப்பெரிய பிரச்சினை ஊழலும், பணவீக்கமும் தான்: சோனியா பேச்சு
- வீடுகளுக்கு இலவச குடிநீர் சப்ளை பற்றி நாளை அறிவிப்பேன்: அரவிந்த் கெஜ்ரிவால்
- காங்கிரசுடன் ஒப்பந்தமா? கட்காரி மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்
- கேரளாவின் முதல் எம்.எல்.ஏ. ரோசம்மா மறைவு
- 3 பேரை காப்பாற்றியும் மனைவியை காப்பாற்ற முடியவில்லையே: ரெயில் விபத்தில் உயிர்பிழைத்தவர் உருக்கம்
- மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: பிரதமர் உறுதி
- டெல்லியின் புதிய முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் வாழ்த்து
- ஆந்திராவில் லிட்டர் 2,000 ரூபாய்க்கு விற்பனையாகும் கழுதைப் பால்
- நாட்டில் அடிப்படை மாற்றத்தை ஆம் ஆத்மி கட்சி கொண்டு வரும்: பிரசாந்த் பூஷன்
- முதல்வர் பதவியை பிடித்துள்ள 2-வது ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் கெஜ்ரிவால்
- பஞ்சாபில் ஆசிட் வீச்சில் காயமடைந்த மணப்பெண் 20 நாட்களுக்கு பின் மரணம்
| உத்தரபிரதேசத்தில் கலவரம்: லல்லுபிரசாத்யாதவ் நேரில் ஆறுதல் Posted: 28 Dec 2013 11:49 PM PST மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட ராஷ்டீரிய ஜனதா கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் இன்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் சென்றார். கலவரத்தால் பாதித்து நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் முஸ்லிம்களை சந்தித்தார். பின்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். |
| அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆயுதமான துடைப்பம் ஊழல் குப்பையை அகற்றுமா? Posted: 28 Dec 2013 11:32 PM PST துடைப்பம், வீட்டில் குப்பைகளை அகற்ற பயன்படுத்தும் ஆயுதம். 'வாரியல்'– 'விளக்குமாறு'– இப்படி சொன்னால் குடிசையில் வாழும் சாமானியர்கள் வரை அத்தனை பேருக்கும் பட்டென்று தெரியும். ஊரே வெறுக்கும் ஒருவனை சுற்றி வளைத்து வாரியலால் வெளுப்பார்கள். பேய் விரட்டுவதற்கும் இந்த விளக்குமாறுதான் ஆயுதம்! குடிசை முதல் கோபுரம் வரை எல்லா இடங்களிலும் குப்பையை பெருக்கி சுத்தப்படுத்தும் வாரியலை கையால் தொடுவதை கூட அசிங்கமாக நினைப்பார்கள். |
| மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு Posted: 28 Dec 2013 11:11 PM PST இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 15–ந்தேதி தொடங்கி கடந்த 26–ந்தேதியுடன் நிறைவடைந்தது. மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் அய்யப்பப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (30–ந்தேதி) மாலையில் திறக்கப்படுகிறது. நாளை மாலை சுவாமி அய்யப்பனுக்கு பூஜைகள் நடைபெறாது. |
| புத்தாண்டு தரிசனம்: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிகிறார்கள் Posted: 28 Dec 2013 10:54 PM PST திருப்பதி கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகிறார்கள். நேற்று 73 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் பக்தர்கள் காத்துநின்றனர். வருகிற புதன்கிழமை 2014–ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு அன்று |
| லால்பகதூர்சாஸ்திரி பேரன் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார் Posted: 28 Dec 2013 10:32 PM PST டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதல்–மந்திரி ஆக பதவி ஏற்றார். அவருடன் 6 மந்திரிகளும் பொறுப்பேற்றனர். அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கும், முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கும் நாடு முழுவதும் இருந்து பொது மக்கள் வாழ்த்துகள் |
| கெஜ்ரிவால் வீட்டில் இன்று பஸ் தொழிலாளர்கள் திரண்டனர்: வேலையை நிரந்தரமாக்க கோரிக்கை Posted: 28 Dec 2013 09:34 PM PST டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார். முன்பு இதே மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருந்த போது அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய |
| ரெயில் விபத்துக்கு மத்திய அரசின் கவனக்குறைவே காரணம்: ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு Posted: 28 Dec 2013 09:22 PM PST பெங்களூரில் இருந்து மராட்டிய மாநிலம் நாந்தெட் சென்ற 'பெங்களூர்– நாந்தெட்' எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்ததில் 26 பயணிகள் கருகி பலியானார்கள். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தி அருகே அதிகாலை நேரத்தில் இந்த கோர விபத்து நடந்தது. இதில் 64 பயணிகள் கொண்ட பி–1 என்னும் ஏ.சி.3 அடுக்கு பெட்டி எரிந்தது. ரெயில் தீப்பற்றியது தெரியாமல் பயணிகள் அனைவரும் |
| சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அரவிந்த் கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார் Posted: 28 Dec 2013 03:42 PM PST டெல்லி மாநில முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்ற 7 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று அவரிடம் கவர்னர் நஜீப் ஜங் ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 2-ந்தேதி, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் |
| தமிழகத்தில் உள்ள 10 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி ஜனாதிபதி உத்தரவு Posted: 28 Dec 2013 01:36 PM PST தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்பட 10 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அதிகாரி எப்.இன்னொசென்ட் திவ்யா, எஸ்.மலர்விழி, எஸ்.சுரேஷ்குமார், எஸ்.பழனிச்சாமி, எஸ்.பிரபாகரன், எம்.லட்சுமி, ஆர்.கஜலட்சுமி, கே.எஸ்.கந்தசாமி, எஸ்.கணேஷ், சி.கதிரவன் |
| காங்கிரசின் மிகப்பெரிய பிரச்சினை ஊழலும், பணவீக்கமும் தான்: சோனியா பேச்சு Posted: 28 Dec 2013 01:12 PM PST மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் குறித்த விசாரணை அறிக்கையில், காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் 3 பேர் உள்பட பல்வேறு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் இந்த அறிக்கையை மராட்டிய மந்திரி சபை நிராகரித்தது |
| வீடுகளுக்கு இலவச குடிநீர் சப்ளை பற்றி நாளை அறிவிப்பேன்: அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 28 Dec 2013 11:16 AM PST டெல்லி மாநில முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றார். 6 புதிய மந்திரிகளும் பதவி ஏற்றனர். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலகத்துக்கு சென்றார். முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு, துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மின்சாரம், போக்குவரத்து |
| காங்கிரசுடன் ஒப்பந்தமா? கட்காரி மீது கெஜ்ரிவால் பாய்ச்சல் Posted: 28 Dec 2013 08:03 AM PST டெல்லியில் பா.ஜனதா கட்சியை எந்த விலை கொடுத்தாவது ஆட்சி வருவதை தடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரபல தொழிலதிபர் மூலம் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் பா.ஜனதா |
| கேரளாவின் முதல் எம்.எல்.ஏ. ரோசம்மா மறைவு Posted: 28 Dec 2013 05:52 AM PST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலத்தின் முதல் எம்.எல்.ஏ.வுமான ரோசம்மா புன்னூஸ் ஓமனில் இன்று காலமானார். அவருக்கு வயது 100. அவரது கணவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பி.டி.புன்னூஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே |
| 3 பேரை காப்பாற்றியும் மனைவியை காப்பாற்ற முடியவில்லையே: ரெயில் விபத்தில் உயிர்பிழைத்தவர் உருக்கம் Posted: 28 Dec 2013 05:21 AM PST கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து மராட்டிய மாநிலம் நந்தெத் நகருக்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மா வரம்– பெனுகொண்டா இடையே கொத்தசேரவு ரெயில் |
| மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: பிரதமர் உறுதி Posted: 28 Dec 2013 04:45 AM PST இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். |
| டெல்லியின் புதிய முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் வாழ்த்து Posted: 28 Dec 2013 04:30 AM PST டெல்லி அரசியலில் புரட்சியை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் 7-வது முதல்வராக இன்று பதவியேற்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. |
| ஆந்திராவில் லிட்டர் 2,000 ரூபாய்க்கு விற்பனையாகும் கழுதைப் பால் Posted: 28 Dec 2013 04:02 AM PST கழுதைகளை வைத்து ஜோக்குகள் மட்டுமல்ல பணமும் சம்பாதிக்கலாம் என்பது தற்போது ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அன்றாட நிகழ்வாகும். |
| நாட்டில் அடிப்படை மாற்றத்தை ஆம் ஆத்மி கட்சி கொண்டு வரும்: பிரசாந்த் பூஷன் Posted: 28 Dec 2013 03:30 AM PST டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது வரலாறு என்று கூறிய அக்கட்சி முக்கிய தலைவரான பிரசாந்த் பூஷன், பொது மக்களிடம் உண்மையான ஜனநாயகத்தையும், நியாயமான சட்ட உரிமைகளையும் |
| முதல்வர் பதவியை பிடித்துள்ள 2-வது ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் கெஜ்ரிவால் Posted: 28 Dec 2013 02:40 AM PST ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியின் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர். கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களிடம் |
| பஞ்சாபில் ஆசிட் வீச்சில் காயமடைந்த மணப்பெண் 20 நாட்களுக்கு பின் மரணம் Posted: 28 Dec 2013 02:22 AM PST பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 7-ம் தேதி அழகு நிலையத்தில் இருந்த மணப்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டது. 22 வயதான ஹர்பிரித் கவுர் என்ற அந்த பெண் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் லூதியானாவில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |