Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஜெனீவா மாநாடு குறித்து இலங்கை அச்சத்தில் உள்ளது – மகா. தமிழ் பிரபாகரன்

Posted: 28 Dec 2013 11:21 PM PST

tamil_prabakaran_CI

tamil_prabakaran_CIஇலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ் பிரபாகரன் நேற்று (28) இரவு 8.30 அளவில் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை படம் பிடித்ததாகக் கூறி தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

சுற்றுலாவுக்கான விசாவில் இலங்கை வந்து, விசா விதிமுறைகளை மீறியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை ராணுவம் விளக்கம் அளித்தது.

ஆனால், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தான் செல்லவில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சென்றதாகவும் தமிழ் பிரபாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், துப்பாக்கி முனையில் தான் கைது செய்யப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

´நான் இலங்கையில் உள்ள வடகிழக்கு மாகாணங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தேன். அப்போது சாதாரணமாக அங்குள்ள இடங்களை படம் எடுத்தேன். எந்த பகுதியிலும் நான் அத்துமீறி செயல்படவில்லை. படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் என்னை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது நான் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளன் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் கைவிலங்கிட்டு சிறையில் அடைத்தனர். 2 நாட்களாக என்னை தூங்க விடாமல் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவில் இருந்து தமிழர்கள் யார் சென்றாலும் அவர்களை விடுதலைப்புலிகளாகவே பார்க்கிறார்கள். அங்கு இந்தியர்கள் என்றாலே மரியாதை கிடையாது. மேலும் பல உண்மை விஷயங்களை ஓரிரு நாட்களில் உங்களிடம் தெரியப்படுத்துவேன்.

எனது கைது குறித்து இலங்கை உலக நாடுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஜெனீவாவில் தமக்கு சிக்கல் ஏற்படும் என்ற காரணத்திற்காகவே என்னை கைது செய்தனர். நீ ஜெனீவா செல்வாயா என அடிக்கடி கேள்வி எழுப்பினர்´ என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புது வருடத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனம் செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த

Posted: 28 Dec 2013 11:13 PM PST

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதமளவில் இரு நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இஸ்ரேலுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இஸ்ரேல் ஜனாதிபதி சேமோன் பெரேஸை சந்திக்கவுள்ளார். பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நல்லுறவு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் பின் பாலஸ்தீனம் செல்லும் ஜனாதிபதி மஹிந்த அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகள்

Posted: 28 Dec 2013 10:57 PM PST

army

armyஅமெரிக்க இராணுவத்தில் ஆண்டு பாலியல் கொடுமைகள் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அரசுத் தகவல்களை ஆய்வு செய்ததில், கூடுதலாக 5000 பாலியல் முறைப்பாடுகள் வந்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்பவர்களை பாலியல் கொடுமைப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு குழந்தை கொள்கையை தளர்த்தியது சீனா

Posted: 28 Dec 2013 10:49 PM PST

குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை சீனா தளர்த்தியுள்ளது. தேசிய மக்கள் பேரவையின் நிலையியற் குழுவினால் உத்தியோகபூர்வமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தம்பதியினரில் ஒருவர் அவரது குடும்பத்தில் ஒரே பிள்ளையாக இருப்பின் அவர்கள் இரண்டு பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய மக்கள் நிலையியற் குழுஅறிவித்துள்ளது. கடந்த மாதம் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்'தைகளின் பின்னரே இந்த கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. சீன சனத்தொகையில் ஏற்பட்ட அதீத வளரச்சியினை கட்டுப்படுத்துவதற்கு சீனா குடும்பத்திற்கு ஒரு குழந்தை […]

க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

Posted: 28 Dec 2013 10:45 PM PST

School pupils in exam conditions in a school hall

School pupils in exam conditions in a school hallநடந்து முடிந்த க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல்கட்டப் பணிகள் நாளை (30) ஆரம்பமாகவுள்ளன.

103 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 7ம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப்பணிகள் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜனவரி 14 முதல் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 79 பாடசாலைகள் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 8ம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

திருகோணமலை எரிபொருள் : இலங்கை- இந்திய முறுகலுக்கு வழிவகுக்குமா?

Posted: 28 Dec 2013 10:30 PM PST

திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் குதங்களை மீண்டும் பொறுப்பேற்கப்போவதாக இலங்கையின் அறிவித்தல், இந்திய – இலங்கை உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது வரவு செலவுத்திட்ட உரையின் போது இந்த குதங்களை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியிட்ட கருத்து இந்திய அரசாங்கத்தின் தரப்பில் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக செயற்பட்டமை மற்றும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டைம மன்மோகன்சிங் […]

இலங்கை தொடர்பில் நவனீதம்பிள்ளை அறிக்கை

Posted: 28 Dec 2013 10:25 PM PST

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பகிரங்க கருத்துப் பரிமாறல் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் அதன் பக்க நியாயங்களை முன்னிலைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் வாய்மொழிமூல அறிக்கை ஒன்றை […]

பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் – ஜனாதிபதி

Posted: 28 Dec 2013 10:21 PM PST

sri-lanka-president-mahinda-rajapaksa-in-commonwealth

sri-lanka-president-mahinda-rajapaksa-in-commonwealthபயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பாதுகாக்க வேணடியது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 14ம் ஆண்டு நிறைவு நிகழ்வினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் மத்தியில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரினையும் சாரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இன மக்களும் ஏனைய இனங்களை மதிக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மும்மொழிச் சமூகமொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல இலக்குகளை அடைவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணி வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Meizu அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்

Posted: 28 Dec 2013 07:47 AM PST

meizu_mx_001 (1)

meizu_mx_001 (1)சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Meizu நிறுவனமானது MX4 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.

முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கைப்பேசி இரு வகைகளைக் கொண்டுள்ளது.

அவற்றில் ஒன்று 5.5 அங்குல அளவு மற்றும் 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் மற்றையது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் கொண்டதாக காணப்படுகின்றது.

இவை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சனல் 4 குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவருக்கு அமைச்சர் பட்டம் மட்டுமே எஞ்சியது!

Posted: 28 Dec 2013 02:55 AM PST

chandrasena

chandrasenaஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சராக எஸ்.எம். சந்திரசேனவை நியமித்த போதும் அவரது அமைச்சின் கீழ் எந்த நிறுவனங்களும் இல்லை என தெரியவருகிறது.
அமைச்சர் சந்திரசேனவின் அமைச்சுக்கான பொறுப்புகள் மற்றும் துறைகள் தொடர்பான இலக்கம் 1842/3 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் திணைக்களங்களோ, அரச கூட்டுத்தாபனங்களோ, அதிகாரமிக்க நிறுவனங்களோ அமைச்சர் சந்திரசேனவுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக இலங்கை வந்திருந்த கெலும் மக்ரே உள்ளிட்ட சனல் 4 குழுவினர் வடக்கு நோக்கி ரயிலில் புறப்பட்டுச் சென்ற போது அனுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. சனல் 4 ஊடக குழுவினருக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவே ஒழுங்கு செய்திருந்தார். இதனை பாராட்டும் வகையிலேயே அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்தே சந்திரனேவுக்கு ஜனாதிபதி விசேட திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பரிசளித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. எவ்வாறாயினும் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் தொடர்புதுறை அமைச்சுக்கும் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேருக்கும் அரச நிறுவனங்களை எதனையும் ஜனாதிபதி வழங்கவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது. இவர்கள் அனைவரும் அமைச்சர்கள் என்ற பட்டத்தை வைத்து கொண்டு அதற்கான பாதுகாப்பு சிறப்புரிமைகள் உட்பட ஏனைய சுகபோகங்களை அனுபவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™