Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சபரிமலையில் நாளை திருவாதிரை பூஜை: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் அப்பம் விற்பனைக்கு கட்டுப்பாடு

Posted: 16 Dec 2013 11:28 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளதால் திரளான பக்தர்கள் இருமுடி கட்டி சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு சென்று வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் சபரிமலை பகுதி எங்கும் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தப்படி உள்ளது.

நிதின் கட்காரியை எதிர்த்து 'ஆம் ஆத்மி' பெண் வேட்பாளர் அஞ்சலி தமானியாவை நிறுத்த முடிவு

Posted: 16 Dec 2013 11:07 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலை கலக்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலையும் கலக்க வருகிறார். காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக சரியான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நரேந்திர மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட தீர்மானத்துள்ளதாக தகவல் வெளியானது. இப்போது நிதின் கட்காரியை எதிர்த்து பெண் வேட்பாளரை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி யோசித்து வருகிறது. நிதின் கட்காரி மீது ஊழல் புகார் கூறப்பட்டதால்

அமெரிக்க சிறையில் போதை குற்றவாளிகளுடன் இந்திய பெண்தூதர் அடைப்பு

Posted: 16 Dec 2013 10:43 PM PST

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக தேவயானி கோபர்கடே (39) பணிபுரிகிறார். போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நியூயார்க் பள்ளியில் தனது மகள்களை விட்டு திரும்பும் போது நடு வீதியில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

சரியாக செயல்படாவிட்டால் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவேன்: கர்நாடக மந்திரிக்கு கவர்னர் மிரட்டல்

Posted: 16 Dec 2013 09:55 PM PST

கர்நாடகாவில் சித்த ராமய்யா தலைமையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் செயல்பாட்டின் மீது கவர்னர் பரத்வாஜ் அதிருப்தியில் உள்ளார். மாநிலத்தில் சட்டம்– ஒழுங்கு சரியாக இல்லை என்று ஏற்கனவே குற்றம் சாட்டினார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிகள் சிலர் சரியாக செயல்படவில்லை என்று தற்போது அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். பெங்களூரில் தேசிய விபத்து மேலாண்மை தின விழாவில் கலந்து கொண்ட கவர்னர்

பாரதிய ஜனதாவுடன் மீண்டும் சேர தயார்: எடியூரப்பா அறிவிப்பு

Posted: 16 Dec 2013 09:53 PM PST

எடியூரப்பா பா.ஜனதாவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியுள்ளார். இதனால் கர்நாடகாவில் பா.ஜனதாவின் பலம் குறைந்துள்ளது. எனவே மீண்டும் எடியூரப்பாவை பா.ஜனதாவில் சேர்க்க வேண்டும் என்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதுகுறித்து கட்சி மேலிடத்திலும் வற்புறுத்தப்பட்டது. ஆனால் அவருக்கு பா.ஜனதா மேலிடம் இதுவரை எந்த அழைப்பும் விடுக்கவில்லை.

ஜெயிலில் தோட்ட வேலைக்கான கூலியை வாங்க மறுத்த லல்லு

Posted: 16 Dec 2013 09:04 PM PST

பீகாரில் லல்லுபிரசாத் யாதவ் முதல்–மந்திரியாக இருந்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் நடந்த ஊழல் வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 20–ந் தேதி லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வழக்கப்படி கைதிகளுக்கு அவரவர்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலை கொடுக்கப்படும்.

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய போலி ஆன்லைன் டிக்கெட்டுகள் வழங்கி பக்தர்களிடம் பணம் மோசடி

Posted: 16 Dec 2013 08:48 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலையில் ஆன்லைன் தரிசன முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல்: மாநில பொறுப்பாளர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

Posted: 16 Dec 2013 08:19 PM PST

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 31–ந்தேதியுடன் முடிவடைவதால் ஜூன் 1–ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. ஏப்ரல்–மே மாதங்களில் 7 கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில வாரியாக தேர்தல்

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர் ஐக்கிய முன்னணியினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Dec 2013 07:31 PM PST

தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்தும், அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். இவ்வாறு நூற்றுக்கணக்கான மீனவர்கள் அங்குள்ள சிறைகளில் வாடி வருகிறார்கள். இவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி மீனவ சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தநிலையில் இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களை உடனே

டெல்லியில் அரசு அமைப்பதற்கான ஆம் ஆத்மி கட்சியின் 18 நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் பதில்

Posted: 16 Dec 2013 07:21 PM PST

டெல்லி மாநிலத்துக்கு நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை. அந்த கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன் காரணமாக பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் என்று அறிவித்தது.

பாராளுமன்ற கூட்டம் நீட்டிக்கப்படுமா?

Posted: 16 Dec 2013 07:07 PM PST

கடந்த 5-ந் தேதி தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் நடைபெறாமல் அன்றாடம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் ஆந்திர மாநில பிரிவினையை எதிர்க்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட பலரும் தொடர்ச்சியாக கூச்சல் குழப்பங்கள் விளைவித்து வந்ததால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. இந்த கூட்டத்தொடரில் முக்கியமாக லோக்பால் மசோதாவை மேல்-சபையில் நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சி தரப்பில் முயற்சித்தும்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

Posted: 16 Dec 2013 07:04 PM PST

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் புதிய ஊதிய உயர்வு அளிக்கக்கோரி நாளை (புதன்கிழமை) தேசிய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதில் நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பதாக ஐக்கிய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஐக்கிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து அந்த சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் கடந்த 14-ந்தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் சுமூக உடன்பாடு

புதிய மது ஆலைகளுக்கு அனுமதி இல்லை: மத்திய பிரதேச முதல் மந்திரி திட்டவட்டம்

Posted: 16 Dec 2013 02:33 PM PST

மத்திய பிரதேச மாநிலத்தில் நிச்சயமாக புதிய மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது

நான் நிரபராதி-சி.பி.ஐ. போலீசார் என்னை அநியாயமாக சிக்க வைத்து விட்டனர்: லல்லு புலம்பல்

Posted: 16 Dec 2013 01:53 PM PST

பீகார் முதல் மந்திரியாக பதவி வகித்த போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக பொய் கணக்கு காட்டி 950 கோடி ரூபாய் ஊழல் செய்த வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பீகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

லோக்பால் மசோதாவை ஆதரிக்க கோரி சமாஜ்வாடி கட்சிக்கு அன்னா ஹசாரே வேண்டுகோள்

Posted: 16 Dec 2013 01:21 PM PST

மத்திய அரசு ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி காந்தியவாதியான 75 வயது அன்னா ஹசாரே தன் சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் உள்ள யாதவ் பாபா கோவில் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்

டெல்லியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் : 5500 பேருக்கு பாதிப்பு

Posted: 16 Dec 2013 10:43 AM PST

இந்திய தலைநகர் டெல்லியில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சல் படுவேகமாக பரவி வருகிறது. கொசுக்கடியால் வருவதாக கூறப்படும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள், கடுமையான கை, கால் உளைச்சல், தலைவலி மற்றும் எந்நேரமும் அசதியால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விடுவதுண்டு

மத்தியப் பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த பெண்

Posted: 16 Dec 2013 09:22 AM PST

மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28) ஆவார். குழந்தை இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் கருவுறுவதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால், முறையான கண்காணிப்பு

டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி-கவர்னர் பரிந்துரைத்தார்

Posted: 16 Dec 2013 08:37 AM PST

கடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. 31 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதாவோ, 28 தொகுதிகளை கைப்பற்றிய 'ஆம் ஆத்மி'

மதவாத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சிறிய மாற்றத்துடன் ஒப்புதல் அளித்துள்ளது

Posted: 16 Dec 2013 08:32 AM PST

நாட்டில் மதவாத வன்முறை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மத கலவர தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இச்சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மோடியின் லோக் ஆயுக்தா பேச்சு ஆசாராம் கற்பு குறித்து பேசுவது போன்று உள்ளது: ஜெய்ராம் ரமேஷ்

Posted: 16 Dec 2013 07:50 AM PST

மோடியின் லோக் ஆயுக்தா பேச்சு ஆசாராம் கற்பு குறித்து பேசுவது போன்று உள்ளது: ஜெய்ராம் ரமேஷ்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™