Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இந்திய முழுவதும் வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 18-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம்

Posted: 14 Dec 2013 11:40 PM PST

சம்பள திருத்தங்கள் மற்றும் வங்கித்துறை சீர்திருத்தங்களை நிறுத்துவது தொடர்பாக வரும் 18-ம் தேதியன்று அனைத்து இந்திய வங்கி ஊழியர்களும் வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பின் கீழ் (யுஎப்பியு) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கித்துறையில் செயல்பட்டுவரும் ஒன்பது அமைப்புகளின் இணைந்த ஒரு சங்கம் யுஎப்பியு ஆகும். அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ்,வங்கி அதிகாரிகள் தேசிய அமைப்பு

கெஜ்ரிவால் நிபந்தனையை பா.ஜனதா- காங்கிரஸ் நிராகரித்தது: ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை

Posted: 14 Dec 2013 11:33 PM PST

கடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. 31 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதாவோ, 28 தொகுதிகளை கைப்பற்றிய 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஆட்சி அமைக்க முன் வரவில்லை.

விவாகரத்து செய்த கேரள முன்னாள் மந்திரி கணேஷ்குமார் மறுமணம்

Posted: 14 Dec 2013 11:22 PM PST

விவாகரத்து செய்த கேரள முன்னாள் மந்திரி கணேஷ்குமார் மறுமணம்

ஐதராபாத்தில் ரூ.28 கோடி செலவில் புதிய ஏழுமலையான் கோவில்: தேவஸ்தான அதிகாரி தகவல்

Posted: 14 Dec 2013 11:02 PM PST

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கனுமூரி பாபிராஜு நிருபர்களிடம் கூறியதாவது:– ஐதராபாத் நகரில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் ரூ.28 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் போன்ற மாதிரி கோவில் கட்டப்பட உள்ளது. திருமலை அன்னமய்யா பவனில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முடிவுகளை எடுத்துள்ளனர். ஜனவரி 15–ந்தேதி வைகுண்ட

பிரியங்காதான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருவார்: பாரதீய ஜனதா கருத்து

Posted: 14 Dec 2013 10:55 PM PST

ராகுல்காந்தி செல்வாக்கு இழந்ததால் பிரியங்கா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருவார் என்று பாரதீய ஜனதா தலைவர் கூறினார். பாரதீய ஜனதா பொது செயலாளர் ராமேஸ்வர் சவுரசியா வாரணாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

குஜராத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதியில் களம் இறங்குகிறது: மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி?

Posted: 14 Dec 2013 10:50 PM PST

ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்றது. முதல் முறையாக களம் இறங்கி அந்த கட்சி காங்கிரசை 3–வது இடத்துக்கு தள்ளியது. பாராளுமன்ற தேர்தலிலும் பல்வேறு இடங்களில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. ராகுல்காந்தியை எதிர்த்தும் ஆம் ஆத்ம கட்சி போட்டியிடும்

மத்திய மந்திரி சிஸ்ராம் ஓலா மாரடைப்பால் மரணம்

Posted: 14 Dec 2013 10:40 PM PST

மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சிஸ்ராம் ஓலா. 86 வயதாகும் இவருக்கு இன்று காலை திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். சிஸ்ராம் ஓலா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் 1927–ம் ஆண்டு ஜூலை மாதம் 30–ந்தேதி பிறந்தார்.

திருப்பதி லட்டை தரம் உயர்த்த ரூ.12½ கோடிக்கு நெய்வாங்க திட்டம்

Posted: 14 Dec 2013 09:44 PM PST

இந்துக்களின் புண்ணிய தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது திருப்பதி. இங்கு ஏழுமலையான் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, உலக பிரசித்தி பெற்றதாகும். திருப்பதி லட்டுவின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று, அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

சபரிமலையில் பக்தர்கள் அலைமோதல் அப்பம்–அரவணை: ரூ.40 கோடிக்கு விற்பனை

Posted: 14 Dec 2013 09:41 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15–ந்தேதி நடைதிறக்கப்பட்டது. மறுநாள் 16–ந் தேதி முதல் சுவாமி சன்னதியில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மண்டல பூஜை வருகிற 26–ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சரங்குத்தியில் இருந்து பக்தர்கள் வரிசையாக சன்னிதானத்துக்கு சென்று வந்தனர். தற்போது பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தன் காரணமாக நேற்று முதல் பம்பையில் இருந்தே பக்தர்கள் வரிசையாக செல்லும் நிலை நிலவுகிறது.

பாராளுமன்ற தேர்தல்: நரேந்திர மோடி 100 கூட்டங்களில் பேசுகிறார்

Posted: 14 Dec 2013 09:16 PM PST

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். திருச்சி, ஐதராபாத், பீகார் உள்ளிட்ட இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். நரேந்திர மோடியின் பேச்சை கேட்க லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

மோடி, தவறை உணர்ந்து வருந்த அனுமதிக்க வேண்டும்: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

Posted: 14 Dec 2013 04:18 PM PST

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்-நாராயண மூர்த்தி, புதுடெல்லி தனியார் தொலைக்காட்சி நடத்திய இந்தியாவின் சாராம்சம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மதச்சார்பின்மை குறித்து அவர் பேசியதாவது:-

லோக்பால் மசோதா பற்றி ராகுல்காந்தியின் கருத்துக்கு அன்னாஹசாரே வரவேற்பு

Posted: 14 Dec 2013 02:37 PM PST

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே தன் சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவரது போராட்டம்

செல்போன் கோபுரங்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: இந்திய மருத்துவக்கழக டாக்டர்கள் தகவல்

Posted: 14 Dec 2013 02:22 PM PST

நாட்டின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய பங்குவகிப்பது செல்போன்கள். அத்தகைய செல்போன்கள் இயங்குவதற்கு அடிப்படையாக செயல்படுவது செல்போன் கோபுரங்கள். இந்த நிலையில் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் புற்றுநோய், தோல்நோய் உள்ளிட்ட பாதிப்புகள்

இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது: ராஜ்நாத் சிங் பேட்டி

Posted: 14 Dec 2013 01:56 PM PST

'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல' என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது. 'இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன்கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு

ஒருங்கிணைந்த ஆந்திர தீர்மானத்தை காங்., தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த ஜெகன் வேண்டுகோள்

Posted: 14 Dec 2013 12:00 PM PST

ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனிமாநிலம் உருவாக்குவது தொடர்பாக, இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமியற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி எடுத்துவருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கிரண் குமார் ரெட்டி உள்பட சீமாந்திர பகுதியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஐதராபாத்தில் வெங்கடாசலபதி, மகாகணபதிக்கு கோவில்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Posted: 14 Dec 2013 10:28 AM PST

உலகப்புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை திருப்பதி - திருமலா தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் தலைவர் கே. பாபிராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தலைநகரான ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ்

முலாயம் சிங்கிற்கு ஹசாரே கடிதம்: லோக்பால் மசோதாவை ஆதரிக்க வேண்டுகோள்

Posted: 14 Dec 2013 08:36 AM PST

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதா விவாதத்திற்கு வந்தால் அதனை சமாஜ்வாடி கட்சி ஆதரிக்காது என்று தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிராவில் ரூ.118 கோடி மதிப்பிலான கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்: 6 பேர் கைது

Posted: 14 Dec 2013 07:11 AM PST

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜால்கோன் மாவட்டத்தில் உள்ள ருக்மா இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட கேட்டமைன் போதைப் பொருள் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுவதாக தகவல்

ஊழலற்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்ததால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு: ஷிண்டே

Posted: 14 Dec 2013 05:54 AM PST

டெல்லியில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள் மற்றும் டெல்லியின் தான் எழுப்பிய பல்வேறு

தேர்தல் தோல்வியால் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங். ஆர்வம் காட்டவில்லை: ராகுல் காந்தி விளக்கம்

Posted: 14 Dec 2013 04:42 AM PST

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதால் மசோதாவை அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்திருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™