Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950)

Posted: 12 Dec 2013 02:42 PM PST

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவருடைய பெற்றோர் ராமோசிராவ் கெய்க்வாட்-ராமாபாய் ஆவர். ஐந்து வயதான நிலையில் தனது தாயை இழந்த சிவாஜிராவ் பெங்களூரில் கல்வி பயின்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் பல மேடை நாடகங்களில் நடித்த சிவாஜிராவ் மனதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதையடுத்து, ...

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 12 Dec 2013 02:27 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’.......

Posted: 12 Dec 2013 01:32 PM PST

நல்ல மனம் வாழ்க ! இது போன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். "ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்" படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக் கொடுக்குறவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் ...

ஈகரையின் புதிய வசதிகள்!

Posted: 12 Dec 2013 01:21 PM PST

ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா

தலைமை நடத்துனர் தமிழன் முனீர் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Posted: 12 Dec 2013 09:38 AM PST

இன்று பிறந்தநாள் காணும் தமிழன் முனீர் அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே.... இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் தமிழன் ஐயா

வேலை வாய்ப்பு!!!

Posted: 12 Dec 2013 08:58 AM PST

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் போர்ட்டில் 4 சிவில் engineers (பெர்மனென்ட் போஸ்ட்) தேவை.  30.12.2013 தான் கடைசி தேதி.

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Posted: 12 Dec 2013 08:34 AM PST

'அன்பு'  தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-6 வெளிவந்த ஆண்டு- (24.07.1953) கதை - எம். நடேசன் வசனம் - விந்தன் சங்கீதம் - டி.ஆர். பாப்பா படப்பிடிப்பு - ஜி.விட்டல்ராவ் நடனம் - தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால், கோபால கிருஷ்ணன் ஸ்டூடியோ - நியூடோன், சிட்டாடல் தயாரிப்பாளர் இயக்குநர் - எம்.நடேசன் தயாரிப்பு - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் கதை: ராஜமாணிக்கம் (கே. துரைசாமி) ஒரு முதியவர். அவர் ஒரு ஆபிசில் பணிபுரிகிறார். அவரின் முதல் தாரத்து பிள்ளைகள் செல்வமும், (நடிகர் ...

குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்

Posted: 12 Dec 2013 08:32 AM PST

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர், சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61. மாஸ்டர் ஸ்ரீதர் கர்ணன், திருவிளையாடல், கந்தன் கருணை உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், மாஸ்டர் ஸ்ரீதர். 'குறத்தி மகன்' படத்தில் கதாநாயகனாக, ஜெயசித்ராவுக்கு ஜோடியாக நடித்தார். 150 படங்களுக்கு மேல் நடித்த மாஸ்டர் ஸ்ரீதர், நீண்டகாலமாக ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். ராதாரவி அஞ்சலி அவருடைய ...

டிசம்பர் 13 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்

Posted: 12 Dec 2013 08:29 AM PST

11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், டிசம்பர் 13-ம் தேதி திரையிடப்படும் படங்களுக்கான கதைச் சுருக்கம். தேதி : 13 DEC 2013 திரையரங்கம் : WOODLANDS நேரம் : 11.00 am 90 Minutes ஒரு இயக்குநர் என்பவர் படம் எடுப்பார். அவரையே ஒருவர் படம் எடுத்தால்? அதுவும் அவர் ஒரு பெண்ணுடன் படுக்கை உறவில் இருக்கும் போது? உறவாடிய பெண்தான் அப்படி படம் எடுத்தவள். 'உன் பணக்கார மனைவிக்கு படத்தை போட்டுக் காட்டி விடுவேன்' என்று அவள் அவனை மிரட்ட.. உங்களை நிஜமாகவே இருக்கை நுனிக்கு நகர்த்தும் கொரிய நாட்டு திரில்லர் ...

அபூர்வ கானங்கள்

Posted: 12 Dec 2013 08:27 AM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

மேலே மேலே பறக்குது பார் மங்கள் யானு !

Posted: 12 Dec 2013 07:45 AM PST

மேலே மேலே பறக்குது பார் மங்கள் யானு ! (படைப்பு - நாகசுந்தரம்) குழந்தையே குழந்தையே ஒரு கதையைக் கேளு ! அழுகையதை நிறுத்திவிட்டு அழகாய்ப் பாரு ! மேலே மேலே பறக்குது பார் மங்கள் யானு ! நாளை செய்தி கொண்டு வரும் நீயே பாரு ! இருக்குதா உயிரினங்கள் இதையும் சொல்லும் ! இருக்குதா தண்ணீரு அதையும் அனுப்பும் ! அந்த மண்ணை அரிந்தெடுத்து அனுப்பும் வகையோ? இந்தியாவின் விஞ்ஞானி எவர்க்கும் குறையோ? அந்த நிலாவத்தான் நான் கையிலே புடிப்பேன் அது சினிமா பாடல் ! அந்த செவ்வாயில நான் குடித்தனம் போவேன் இது விஞ்ஞான ...

தோசை வகைகள் - காரமான பருப்பு தோசை

Posted: 12 Dec 2013 06:57 AM PST

தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ...

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - பச்சை பூண்டு பொடி !

Posted: 12 Dec 2013 06:38 AM PST

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 12 Dec 2013 06:27 AM PST

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

உணவுகளின் போட்டோகள் - ஜவ்வரிசி பகோடா - photo

Posted: 12 Dec 2013 06:25 AM PST

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 12 Dec 2013 06:16 AM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !

Posted: 12 Dec 2013 06:16 AM PST

ஸ்பெயினில் ஐரோப்பாவிலேயே மிக நீண்ட ஓடுதளத்தைக் கொண்ட விமான நிலையமொன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சியுடாட் ரியல் விமானநிலையம். உலகிலேயே மிக நீளமான விமானமாகக் கருதப்படும் ஏர்பஸ்-380 இறங்கக்கூடிய அளவிற்கு வசதி படைத்த ஓடுதளத்தைக் கொண்டது. மேலும், வருடத்திற்கு 10 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான வசதிகளும் இங்கு உள்ளன. இதைக் கட்டி முடிப்பதற்கான செலவு ஒரு பில்லியன் யூரோக்களைத் தொட்டது.கடந்த 2008 ஆம் ...

2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Posted: 12 Dec 2013 05:59 AM PST

மேஷம் உறுதியான அறிவும் தீரமிக்க செயலில் வீரமும் கட்டுகின்ற மேஷ ராசி அன்பர்களே! இந்த வருடம் புத்தாண்டு 2014 கன்னி லக்னத்திலும் தனுகராசியிலும் பிறக்கிறது. அனைத்து சிறப்பம்சங்கள் உங்கள் ராசிக்கு இருப்பதால், இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பான பலன்கள் தான் நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். வேலை, உத்தியோகம் இல்லாதோருக்கு படிப்புக்கேற்ற வேலையும், திருப்தியான ஊதியமும் கிடைக்கும்., இந்தப் புதுவருடத்தில், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் திருப்தியான ...

தமிழ் 2014 காலண்டர் தேவை

Posted: 12 Dec 2013 05:55 AM PST

தமிழ் 2014  மாதாந்திர நாள்காட்டி pdf வடிவில் தேவை (தினகரன், தினத்தந்தி அல்லது தினமலர்)

" களவும் கற்று மற "

Posted: 12 Dec 2013 04:47 AM PST

" களவும் கற்று மற "

என்பதன் பொருளை

தவறாகப் புரிந்து கொண்டாளோ ... ?

என் இதயத்தை " கள "வாடி

காதலை " கற்று "க் கொடுத்து

என்னை " மற "ந்து விட்டாளே ... !

பேராசை ... !

Posted: 12 Dec 2013 04:21 AM PST

வீட்டிற்கு விளக்கேற்ற
மகாலட்சுமி போலொரு
மருமகள் வேண்டுமாம்

அம்மாவின் ஆசை ...

அந்த மகாலட்சுமியாகிய
உன்னை மனைவியாகப்
பெற வேண்டுமென்பது

என்னாசை ...

ஆசைகளெல்லாம்
நிறைவேறிவிட்டால்
பிறகு நானெதற்கு

தெய்வத்தின் பேராசை ... !

மூளை

Posted: 12 Dec 2013 04:06 AM PST

சதா அரித்துக்கொண்டது என் சராசரி மூளை. சதா சண்டையிட்டுக்கொண்டது என் முழுமைபெறாத சிந்தணைகள். சிந்திப்பது தெய்வீக நிலையாம்; குழம்பிப்போனேன் சராசரி மனிதப்பிறவியானதால். மனிதமூளை கசாப்பு கடைகளில் காண்பதிலும் மலிவானது உண்மை உரைக்கின்றது. கல்விச்சாலை சொன்னது சொல்வதை செய்யென்று. கற்பிப்பவர்கள் சொன்னார்கள் கற்பிதம் பேசாதேயென்று.. கல்வியும் கற்பித்தலும் மலிவாக்கியது மனிதமூளையை, மலினமாக்கியது மனிதத்தை. பள்ளிக்கூடங்கள் இன்று பன்னாட்டு கழிவுசேகரிப்புகள்; தூர்வாராதவரை அங்கு உற்பத்தியானவையும் உற்பத்தியாபவையும் கிரிமிகளே.

" புனிதம் "

Posted: 12 Dec 2013 03:52 AM PST

எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது

காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !



க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி

பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !

முகநூலில் ரசித்தவை!

Posted: 12 Dec 2013 03:41 AM PST

" ஏழை "

Posted: 12 Dec 2013 03:28 AM PST

பிரம்மன் செய்த

இலக்கணப் பிழை

படைத்ததில் பாகுபாடு ...


மனிதன் செய்த

தலைக்கணப் பிழை

வாழ்நாள் வகுப்பாடு


" ஏழை " !

தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது!

Posted: 12 Dec 2013 03:23 AM PST

சிங்கப்பூர் கலவரம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை ஒளிபரப்பியதற்காக சன் தொலைக்காட்சி நிர்வாகம் சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் டிசம்பர் 8ம் திகதி நடந்த கலவரம் குறித்த ஒளிபரப்பப்பட்ட செய்தியில் உண்மைக்கு மாறான செய்திகளை சன் தொலைக்காட்சி தெரிவித்ததாகக் கூறி, அதன் நிர்வாகத்துக்கு சிங்கப்பூர் தூதரகம் மூலம் கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டது. சரியான செய்தியை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கடிதத்தைத் தொடர்ந்து உடனடியாக தனது செய்திக்கு சிங்கப்பூர் ...

காதல் ...

Posted: 12 Dec 2013 03:17 AM PST

விழியம்பு பாய்ந்து
இதயத்தில் மலர்வது
காதல் ...

அதன் சின்னமும் அதுவே
என நிர்ணயித்தவர்களுக்கு
அது உண்டாக்கும் வலிகள்
புரியாமல் போனது ஏன் ...?

புரிந்திருந்தால் அம்பை
இதயத்தின் நடுப் பக்கத்தில்
குத்தி கிழித்திருக்க மாட்டார்கள் அல்லவா !

மனநோயாளி ... !

Posted: 12 Dec 2013 03:13 AM PST

அகம் ஒன்றுப் பேசி

புறம் ஒன்று பேசும்

மனிதப் புரளிகளுக்கு மத்தியில்

மனதால் பேசுபவர்

மனநோயாளி ...!



(" கீர்த்தி சிறிதெனினும் மூர்த்தி பெரிது "
என்பதால் இச்சிறு கிறுக்கலை தனியே பதிந்தேன்)

மன்னிக்கவும் !

Need mein kampf Tamil ebook

Posted: 12 Dec 2013 02:57 AM PST

I Need mein kampf Tamil ebook pls

சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

Posted: 12 Dec 2013 02:56 AM PST

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கலவரத்திற்குக் காரணமாக இருந்த சாலை விபத்தில் இறந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்ற நபரின் புகைப்படம் தாங்கிய பதாகையை, சம்பவம் நடந்த இடத்தில் வைத்த இரண்டு சிங்கப்பூரர்கள், நினைவுகூறும் வகையில் சில வாசகங்களையும் அதில் எழுதியுள்ளனர். அந்தப் பதாகையில், "டிசம்பர் 8 ஆம் தேதி, சாலைவிபத்தில் இறந்தவரையும், அதன் பின்னர் நடந்த கலவரத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அமைதி நிலவ போராடியவர்களையும் நினைவு கூறும் வகையில் இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது. ...

வாழ்க்கை ...

Posted: 12 Dec 2013 02:46 AM PST

சோலைவனத்திற்கு இழப்பில்லை
சில பூக்கள் உதிர்வதினால் - ஆனால்

செடிகள் உணர மறுப்பதில்லை
கிளையின் வலிகளை

அதன் உறுப்புகள் உதிர்வதானாலும்
மீண்டும் பூக்க மறப்பதில்லை ...


சமுதாயத்திற்கு இழப்பில்லை
சில மனிதர் வீழ்வதினால் - ஆனால்

உறவுகள் உணர மறுப்பதில்லை
அம்மனிதரின் வலிகளை

அவன் உயிர் வடிவதானாலும்
அவன் சார்ந்தோர் வாழ மறப்பதில்லை ...!

சிறையில் ஒரு படலம்- தமிழ் காமிக்ஸ் இலவசமாக .

Posted: 12 Dec 2013 02:33 AM PST

சிறையில் ஒரு படலம்- தமிழ் காமிக்ஸ் இலவசமாக . The Blue coats -சிறையில் ஒரு படலம் தமிழ் காமிக்ஸ் புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . "The Bluecoats" is a humorous comic-book series starring Sergeant Chesterfield and Corporal Blutch, soldiers in the Union army during the Civil War. Our two heroes are captured by the Confederates and taken to Robertsonville prison camp, from which Blutch and the Sergeant try to escape five times. The camp commandant ...

வேலிப்பருத்தி

Posted: 12 Dec 2013 02:08 AM PST

1. குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் வேலிப்பருத்தி இலையைக் குடிநீரில் வேகவைத்து ஒரு தம்ளர் அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும். இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும் 2. இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும். 3. இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் ...

வேலை செய்வது போல் நடிப்பது எப்படி?

Posted: 12 Dec 2013 02:01 AM PST

மற்றும் பிரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்:- 1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். 2. போனில் உரக்க பேசுங்கள். 'ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்',டுமாரோ வில் பீ டூ லேட்', என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் ...

நலம் பெற -----ராகங்கள்

Posted: 12 Dec 2013 02:00 AM PST


நலம் பெற கர்நாடக சங்கீத ராகங்கள்
.
தலைவலிக்கு நிவாரணம் ---சாவேரி ராகம்
ரத்த கொதிப்புக்கு ------------ஆனந்த பைரவி
மன நோய்க்கு -----------------சங்கராபரணம்
நரம்பு த் தளர்ச்சிக்கு --------கரஹரப்ரியா
பயம் நீங்க --------------------கல்யாணி
கிருகங்களின் தோஷம் நீங்க --தீட்சிதரின் நவக்ருக கிருதிகள்
மொத்த நிவாரணி -------தனியாவர்தனம்

ரமணியன்
நன்றி குமுதம்

புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்

Posted: 12 Dec 2013 01:28 AM PST

புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள் அனைவருக்கும் வணக்கம். 10-01-2014 முதல் 22-01-2014 வரை, சென்னை நந்தனம் Y.M.C.A.மைதானத்தில், சுமார் 400 பதிப்பகங்கள் கலந்து கொள்ளும் புத்தக கண் காட்சி நடைபெற உள்ளது. அங்கு ஸ்டால் எண் . . . . இல் (ஸ்டால் எண் பின்பு தருகின்றோம்), யாம் தொகுத்து உருவாக்கிய கீழ்க்கண்ட நூல்கள் கிடைக்கும். 1.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1 2.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2 3.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 3 4.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் ...

தலை முதல் கால் வரை....

Posted: 12 Dec 2013 01:24 AM PST

தலை



இருப்பது உயரத்திலென்றாலும்
வணங்கி கொடுக்கிறது
துளியும் கர்வமின்றி...

சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது...ஆனால்

Posted: 12 Dec 2013 01:22 AM PST

- வாழ்வில் சில நேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்... அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள்... மனம் தளராதீர்கள்.. அவைதான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்..! - ------------------------- - கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது... - சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது...ஆனால் - கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது..! - --------------------------------


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™