Tamil Star |
- கன்னியாகுமரியில் இலங்கை மீனவர்கள் நால்வர் கைது
- மன்மோகன் சிங் இலங்கை வரமாட்டார் ?
- இலங்கை மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – பிரித்தானியா
- 10 இலட்சத்திற்காக தந்தையை கொன்ற மகன்
- பேஸ்புக்கில் ஜெயலலிதா- கருணாநிதி
- விசாகப்பட்டினத்தில் காணாமற் போகும் சிறுவர்கள்!
- யுனெஸ்கோவில் வாக்குரிமையை இழந்தது அமெரிக்கா
- பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல்: 100 பேர் பலி (வீடியோ இணைப்பு)
- வறுமையில் வாடும் இளவரசி
- நீங்கள் பறக்கும் ரயிலைப் பார்த்ததுண்டா.
| கன்னியாகுமரியில் இலங்கை மீனவர்கள் நால்வர் கைது Posted: 08 Nov 2013 11:27 PM PST தூத்துக்குடி கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடலோர காவல்படையின் வைபவ் ரோந்து கப்பல், கமாண்டர் சஞ்சீவ் திர்ஹா தலைமையில் கடலோர காவல்படையினர் ரோந்து சென்றனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து தெற்கு பகுதியில் 128 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் ஒரு படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக விரைந்து சென்ற ரோந்து கப்பல் அந்த இலங்கை படகை மடக்கி பிடித்தது. இந்த படகில் இருந்த கல்துறையை சேர்ந்த மெரில்செல்வா (வயது […] |
| மன்மோகன் சிங் இலங்கை வரமாட்டார் ? Posted: 08 Nov 2013 11:22 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இதே கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் […] |
| இலங்கை மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – பிரித்தானியா Posted: 08 Nov 2013 11:15 PM PST பொதுநலவாயத்தின் முக்கிய நாடு என்ற வகையில் இந்தியா, இலங்கை மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மாநாட்டுக்கு செல்வதன் மூலமே அந்த நாட்டின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் குரல் கொடுக்கமுடியும். அந்த நாட்டு அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சு நடத்தமுடியும் என்று உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் பெவன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை நிறைவேற்றுவதற்காகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் இலங்கை செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்திய பிரதமர் இலங்கை […] |
| 10 இலட்சத்திற்காக தந்தையை கொன்ற மகன் Posted: 08 Nov 2013 11:06 PM PST உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 63 பேர் பலியானார்கள். முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சூறையாடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது. அவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ராணுவத்தின் தீவிர ரோந்து காரணமாக தற்போது […] |
| பேஸ்புக்கில் ஜெயலலிதா- கருணாநிதி Posted: 08 Nov 2013 11:02 PM PST தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் தற்போது பிரபலமாகி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதிதான் பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேஸ்புக்கில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் லேட்டஸ்டாக செல்வி ஜெயலலிதா பிரபலமாகியுள்ளார். செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படமாக சமீபத்தி்ல அவர் தொடங்கி வைத்த மெட்ரோ ரயிலின் படம் இடம் பெற்றுள்ளது. இந்த பக்கத்தை இதுவரை 12,532 பேர் லைக் செய்துள்ளனர். அதேசமயம் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| விசாகப்பட்டினத்தில் காணாமற் போகும் சிறுவர்கள்! Posted: 08 Nov 2013 10:56 PM PST விசாகப்பட்டினத்தில் காணாமற் போகும் சிறுவயதினரின் எண்ணிக்கை சமீபகாலங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் பணிபுரிந்துவரும் குழந்தை பாதுகாப்புப் பிரிவின் மூலம் சேகரிக்கப்பட்ட கணக்கீடானது கடந்த 2011-12-ம் ஆண்டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 பேர் காணாமற் போயிருந்ததாகக் குறிப்பிடுகின்றது. அதன்பின் கடந்த ஆண்டு இதே எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை 24 பேர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கும் இந்த அமைப்பு மொத்த எண்ணிக்கையை 77 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| யுனெஸ்கோவில் வாக்குரிமையை இழந்தது அமெரிக்கா Posted: 08 Nov 2013 10:45 PM PST
யுனெஸ்கோ விதிகளின்படி, அமெரிக்காவும், இஸ்ரேலும் நிதியைச் செலுத்தி வாக்குரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இரு நாடுகளிடமிருந்தும் நிதி அளிப்பது தொடர்பான, உரிய ஆவணங்கள் பெறப்படாததால், விதிகளின்படி வெள்ளிக்கிழமையோடு அந்நாடுகளின் வாக்களிக்கும் உரிமை தானாகவே ரத்தாகியுள்ளதாக யுனெஸ்கோ வட்டாரம் தெரிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல்: 100 பேர் பலி (வீடியோ இணைப்பு) Posted: 08 Nov 2013 10:43 PM PST பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சமர் தீவு அருகே கடலில் ஹையான என்ற பயங்கர புயல் உருவாகி மிரட்டியது. ஹையான் புயல் நேற்று கரையை கடக்கும் என்றும், மணிக்கு 235 கிலோ மீட்டர் முதல் 275 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் சமர், லெய்தே தீவுகள் உள்பட 20 மாகாணங்களில் முன் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 08 Nov 2013 10:26 PM PST மியான்மரை ஆட்சி செய்து வந்த இளவரசி தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார். மியான்மரில் மன்னர் ஆட்சி இருந்த காலகட்டத்தில், திபா என்பவர் கடைசி மன்னராக இருந்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது கடந்த 1885ம் ஆண்டில் இவரது அதிகாரம் பறிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. அதையடுத்து மன்னர் பரம்பரை ஒழிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினர் சாதாரண குடி மகன்களாக்கப்பட்டனர். அந்த வழியில் வந்த கடைசி இளவரசி ஆக ஹிடெக் சு பாயா ஜி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீங்கள் பறக்கும் ரயிலைப் பார்த்ததுண்டா. Posted: 08 Nov 2013 08:47 AM PST |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

