மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்களில் 3 பேர் மட்டுமே முஸ்லீம்கள்
- கவுகாத்தி கோர்ட்டு உத்தரவு எதிரொலி: புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை- நிபுணர்கள் கருத்து
- மத்திய மந்திரிகள் எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு?
- மருத்துவ உதவிக்காக தாஷ்கண்ட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர்-இந்தியா
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது
- ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஜெகன்மோகன் ரெட்டி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம்
- ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டியை மாற்றும் திட்டம் இல்லை: திக்விஜய் சிங் அறிவிப்பு
- முன்னாள் பிரதமர் தேவேகவுடா வீட்டில் நகை-பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை
- மோடி ஆட்சியை பிடிப்பார் என்று கணித்த அமெரிக்க நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டனம்
- தங்கள் நாட்டு மக்கள் இனத்தால் குறிப்பிடப்படுவது குறித்து நைஜீரியா அதிருப்தி
- ராகுல் காந்தி கடிதம் குறித்து விரைவில் முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
- ஐ.நா. விருது பெறும் பீகாரின் சுகாதார ஊழியர்
- ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கை தினந்தோறும் விசாரிக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு
- உ.பி. அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் பெறுவதற்காக தந்தையை சுட்டுக் கொன்ற 'பாசக்கார மகன்'
- எம்.ஐ.ஜி.- 29 போர் விமானம் குஜராத் வயலில் விழுந்து நொறுங்கியது
- 6 கிலோ தங்கம் கடத்தி வந்த 'ஏர் இந்தியா' விமான பணிப்பெண் கைது
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இளவரசர் சார்ல்ஸ் சந்திப்பு
- சி.பி.ஐ. அதிகாரமற்ற அமைப்பு: கவுகாத்தி கோர்ட் தீர்ப்பை தடை செய்ய நாளை சுப்ரீம் கோர்ட்டில் மனு
- கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி பங்கேற்ற நிகழ்ச்சியில் தீவிபத்து
- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்
| ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்களில் 3 பேர் மட்டுமே முஸ்லீம்கள் Posted: 08 Nov 2013 10:22 PM PST ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் 3 முஸ்லீம்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் 1–ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்– மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடி ஆகும். இதில் 15 சதவீதம் முஸ்லீம் வாக்காளர்கள் ஆவார்கள். முஸ்லீம்கள் எப்போதும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்களை |
| Posted: 08 Nov 2013 10:04 PM PST சி.பி.ஐ. சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்று கவுகாத்தி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள், அது தொடர்பான கைதுகள், விசாரணைகள் என்ன ஆகும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சி.பி.ஐ.யை முடக்கிப்போடும் கவுகாத்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அப்பீல் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் சி.பி.ஐ. |
| மத்திய மந்திரிகள் எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு? Posted: 08 Nov 2013 09:58 PM PST இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 15–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நடத்தும் அந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. காமன்வெல்த் அமைப்பில் உள்ள 53 உறுப்புநாடுகளில் இந்தியா முக்கிய அங்கம் வகிக்கும் நாடு என்பதால் கொழும்பு மாநாட்டில் மன்மோகன்சிங் பங்கேற்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை கூறியது. இதையடுத்து மன்மோகன்சிங்கின் கொழும்பு பயணத்துக்கான ஏற்பாடுகளை பிரதமர் |
| மருத்துவ உதவிக்காக தாஷ்கண்ட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர்-இந்தியா Posted: 08 Nov 2013 09:46 PM PST புதுடெல்லியிலிருந்து நியூயார்க் வரை செல்லும் ஏர் இந்தியாவின் ஏஐ-101 விமானம் 241 பயணிகளுடனும், 12 ஊழியர்களுடனும் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விமானம் மத்திய ஆசிய நாடுகளின் மீது பறந்து கொண்டிருந்தபோது விமான ஊழியர்கள் கேப்டனிடம் அந்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதைக் கூறியுள்ளார்கள். அந்த |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது Posted: 08 Nov 2013 09:42 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். வைகுண்டம் 2–வது கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் கோவிலுக்கு வெளியே 500 மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது. |
| ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஜெகன்மோகன் ரெட்டி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் Posted: 08 Nov 2013 09:03 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டு உள்ளார். டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்து உள்ளார். நிபந்தனை ஜாமீனில் ஐதராபாத்தில் தங்கி இருக்கும் அவருக்கு நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்ய சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து அவர் வருகிற 16–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை முக்கிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்க |
| ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டியை மாற்றும் திட்டம் இல்லை: திக்விஜய் சிங் அறிவிப்பு Posted: 08 Nov 2013 08:55 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் ஏற்பாட்டில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதற்கு ஆந்திர முதல்–மந்திரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்காக அவரை மாற்றும் திட்டத்திலும் காங்கிரஸ் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கானா மசோதா சட்டமன்றத்தில் வரும் போது எந்தவித தடையும் இன்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டிக்கு அறிவுரை வழங்குவதற்காக அவரை டெல்லி வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து கிரண்குமார் ரெட்டி நேற்று டெல்லி புறபட்டு சென்றார். காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் திக்விஜய் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் திக் விஜய் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:– தெலுங்கானா உருவாக்குவதில் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கட்சியின் முடிவுக்கு அதன் நிர்வா |
| முன்னாள் பிரதமர் தேவேகவுடா வீட்டில் நகை-பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை Posted: 08 Nov 2013 08:52 PM PST பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, பெங்களூர் பனசங்கரியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தேவேகவுடா, பிரதமராக பதவி வகித்தவர் என்பதால், அவரது வீட்டுக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. |
| மோடி ஆட்சியை பிடிப்பார் என்று கணித்த அமெரிக்க நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டனம் Posted: 08 Nov 2013 07:45 PM PST அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய முதலீட்டு வங்கி நிறுவனம், கோல்ட்மேன் சச்ஸ். இந்நிறுவனம், சமீபத்தில் 18 பக்க அறிக்கை வெளியிட்டது. அதில், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, அடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று கணிக்கப்பட்டு இருந்தது. மேலும், மோடி, வர்த்தகத்துக்கு சாதகமாக நடந்து கொள்பவர் என்றும் கூறப்பட்டு இருந்தது. மோடியை 'மாற்றத்தின் தூதராக' மூலதன பங்கு முதலீட்டாளர்கள் பார்ப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த அறிக்கையால் மத்திய அரசு கடும் கோபம் |
| தங்கள் நாட்டு மக்கள் இனத்தால் குறிப்பிடப்படுவது குறித்து நைஜீரியா அதிருப்தி Posted: 08 Nov 2013 07:29 PM PST கோவா மாநிலத்தில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞர் ஒருவர் அக்டோபர் மாத இறுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது இறப்பு கோவாவில் பல சர்ச்சைகளைக் கிளப்பியது.போதை மருந்து தொடர்பாக இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்த சம்பவம் குறித்து குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கோவாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா அனுமதிகள் சோதனையிடப்பட்டு முறையற்ற வழியில் |
| ராகுல் காந்தி கடிதம் குறித்து விரைவில் முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல் Posted: 08 Nov 2013 07:08 PM PST மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, முசாபர்நகர் கலவரத்துக்கு பா.ஜனதாவே காரணம் என்றும், இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு தொடர்பு கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபடுமாறு அழைத்தது என்றும் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா, ராகுல் காந்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தது. எனவே இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. |
| ஐ.நா. விருது பெறும் பீகாரின் சுகாதார ஊழியர் Posted: 08 Nov 2013 04:19 PM PST இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களாக யாரும் போலியோ நோயால் பாதிக்கப்படவில்லை. இதே நிலை ஜனவரி மாதம் வரை நீடிக்குமேயானால் உலக நாடுகளில் இந்தியாவும் போலியோ இல்லாத நாடு என்ற தகுதியைப் பெறும். இந்தப் பிரிவில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களில் பீகார் மாநிலத்தில் |
| ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கை தினந்தோறும் விசாரிக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு Posted: 08 Nov 2013 02:30 PM PST குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு |
| உ.பி. அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் பெறுவதற்காக தந்தையை சுட்டுக் கொன்ற 'பாசக்கார மகன்' Posted: 08 Nov 2013 02:10 PM PST உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 63 பேர் |
| எம்.ஐ.ஜி.- 29 போர் விமானம் குஜராத் வயலில் விழுந்து நொறுங்கியது Posted: 08 Nov 2013 01:41 PM PST எம்.ஐ.ஜி.- 29 போர் விமானம் குஜராத் வயலில் விழுந்து நொறுங்கியது |
| 6 கிலோ தங்கம் கடத்தி வந்த 'ஏர் இந்தியா' விமான பணிப்பெண் கைது Posted: 08 Nov 2013 12:37 PM PST 6 கிலோ தங்க கட்டிகளை வயிற்றில் மறைத்து கடத்தி வந்த ஏர் இந்தியா விமான பணிப்பெண் உள்பட 2 பேரை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காரிப்பூர் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் நேற்று ஒரு பெண் தனது |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இளவரசர் சார்ல்ஸ் சந்திப்பு Posted: 08 Nov 2013 11:02 AM PST இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து ராணி எலிசபத்தின் சார்பில் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான சார்லஸ் பங்கேற்க உள்ளார். இதற்காக இலங்கை செல்வதற்கு முன்னதாக மனைவி கமீலா - பார்க்கர் |
| சி.பி.ஐ. அதிகாரமற்ற அமைப்பு: கவுகாத்தி கோர்ட் தீர்ப்பை தடை செய்ய நாளை சுப்ரீம் கோர்ட்டில் மனு Posted: 08 Nov 2013 10:03 AM PST கவுகாத்தி கோர்ட்டின் தீர்ப்பை தடை செய்யக் கோரி மத்திய அரசின் சார்பில் நாளை சுப்ரீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா கூறியுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த நவேந்திரகுமார் என்பவர் மீது சி.பி.ஐ. ஒரு |
| கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி பங்கேற்ற நிகழ்ச்சியில் தீவிபத்து Posted: 08 Nov 2013 08:40 AM PST கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி, பத்தனம்திட்டாவில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர் மனு வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, விழா அரங்கத்தின் உள்ளே மின்சார சுவிட்ச் போர்டில் திடீரென தீப்பிடித்தது. அதையடுத்து |
| இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளமாட்டார் என தகவல் Posted: 08 Nov 2013 08:20 AM PST இலங்கையில் இந்த மாதம் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |