Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாரிக்கும் ஆளில்லா விமானம்

Posted: 18 Nov 2013 11:01 PM PST

ஈரான் அணு ஆயுதங்களை குவித்து வருவதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன. இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரான் தனது புதியவகை விமானம் ஒன்றை இன்று காட்சிக்கு வைத்தது. 30 மணி நேரம் வானில் வலம் வரக்கூடிய இந்த மிகப்பெரிய ஆளில்லா விமானம் விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும். அது இஸ்ரேல் வரை சென்று தாக்க வல்லமையுடையதாகும் […]

வெடிகுண்டு அச்சுறுத்தல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Posted: 18 Nov 2013 10:56 PM PST

plane

planeஅமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமான போயிங் எம்டி-80 நேற்று டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து 133 பயணிகளுடநும், 5 ஊழியர்களுடனும் புறப்பட்டது. இது டல்லாசின் போர்ட் வொர்த் விமான நிலையத்திலிருந்து இயங்கும் திட்டமிடப்பட்ட பயணமாகும்.

இந்த விமானம் ஓஹியோ மாநிலத்தின் போர்ட் கொலம்பஸ் சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்கும் முன்னர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு எச்சரிக்கை தகவல் நிலையத்தாருக்கு கிடைத்துள்ளது.

இதனால் விமானம் ஓஹியோவில் தரையிறங்கியபின்னர் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.

விமானக் காவல்துறையினர், போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், புலனாய்வுத்துறை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் அணியினர் ஆகியோர் விமானத்தினுள் சோதனையில் ஈடுபட்டனர்.

இது ஒரு வழக்கமான பாதுகாப்பு சோதனை என்றும், அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின்னர் விமானம் நிலையத்தின் டெர்மினல் உள்ளே கொண்டுவரப்பட்ட்டது என்றும் பிராந்திய விமான அதிகாரியான ஆஞ்சி டாபோர் தெரிவித்தார்.

அச்சுறுத்தல் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

இசைப்பிரியாவின் உறவினர்களுக்கு கனடாவில் அடைக்கலம்!

Posted: 18 Nov 2013 10:50 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அலைவரிசையின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் இசைப் பிரியாவின் உறவினர்களுக்கு கனடாவில் அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இசைப்பிரியாவின் அத்தை ரஞ்சனி உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது, இசைப்பிரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரிகளுக்கு ஏற்கனவே பிரிட்டனில் புகலிடம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இசைப்பிரியாவின் பாட்டி மற்றும் சகோதரி ஒருவருக்கு கனடா அரசியல் புகலிடம் வழங்கியிருந்தது.  

இந்தோனேசிய ஜனாதிபதியை உளவு பார்த்த அவுஸ்திரேலியா உளவு அமைப்பு

Posted: 18 Nov 2013 10:36 PM PST

இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பங் யுதோயோனோ, அவரது மனைவி அனி மற்றும் மூத்த அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை அவுஸ்திரேலிய உளவு அமைப்பு ஒட்டுக்கேட்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவுஸ்திரேலியாவை இந்தோனேசிய ஜனனாதிபதி மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி மற்றும் அவருக்கு நெருக்கமான 9 பேரை உளவு பார்த்ததாக அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகமும், “தி கார்டியன்’ நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடெனிடமிருந்து […]

மிதக்கும் விமான நிலையம்

Posted: 18 Nov 2013 09:24 PM PST

லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. உலகிலேயே பிஸியான விமான நிலையங்களில் ஒன்று தான் ஹீத்ரு விமான நிலையம். பிரிட்டனை பொருத்தவரையில் கடந்த 2002ம் ஆண்டில் 7.23 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். ஆனால் கடந்தாண்டில் மட்டும் 11.5 கோடி பேர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனர், இது 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். இந்த எண்ணிக்கை அடுத்த 15 ஆண்டுகளில் மிகவும் அதிகரிக்கும் என போக்குவரத்துத் துறை கணக்கிட்டுள்ளது. இதற்கு ஏற்றாற் போல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவால் முடியுமா? பாகிஸ்தான்

Posted: 18 Nov 2013 09:20 PM PST

மிகப்பெரிய பொருட்செலவில் சீரமைக்கப்பட்ட "ஜ.என்.எஸ் விக்ரமாதித்யா" என்ற விமானம் தாங்கி கப்பலை இந்திய கடற்படையினரால் பராமரிக்க முடியுமா என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் […]

மதத் தலைவர்கள், மக்கள் மீதான தாக்குதலுக்கு செல்வம் எம்.பி. கண்டனம்

Posted: 18 Nov 2013 09:04 PM PST

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட மக்கள் மீதும் கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மீதும் படைத்தரப்பினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், காணாமல் போனவர்களது உறவுகள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு […]

ஆர்ப்பாட்டத்தால் இலங்கை தமிழர்களுக்கு பயனில்லை – நாரா.சாமி

Posted: 18 Nov 2013 08:49 PM PST

மத்திய மந்திரி நாராயணசாமி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இதனால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் கிடைப்பது இல்லை. மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை செய்து தரமுடியும். மத்திய அரசு செய்யக் கூடிய உதவிகள் தமிழர்களுக்கு கிடைக்கும். ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது. அரசியல் […]

சுதந்திரமான போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தினேன் – டேவிட் கெமரூன்

Posted: 18 Nov 2013 08:43 PM PST

யுத்தக் குற்றம் குறித்து உண்மையான, வெளிப்படையான, சுதந்திர விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயம் குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பிரித்தானிய பாராளுமன்றில் நேற்று (18) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டமைக்கு பிரித்தானிய தொழில் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. நேற்று பிரித்தானிய பாராளுமன்றில் பிரதமர் டேவிட் கெமரூன் உரை நிகழ்த்துவதற்கு முன்பு […]

கழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா?

Posted: 18 Nov 2013 09:09 AM PST

375x321_cosmetic_surgery_and_the_neck_lift_ref_guide

375x321_cosmetic_surgery_and_the_neck_lift_ref_guideநல்ல சிவந்த நிறத்தை உடையவர்களுக்குக் கூட முழங்கை, முழங்கால், கணுக்கால், கழுத்தின் பின்புறம் கருமை படர்ந்து இருந்திருக்கும். எத்தனையோ சிகிச்சை எடுத்தும் எளிதாக நிறம் மாறாது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த கருமையான இடங்களை நிறம் மாறச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எலுமிச்சை, வினிகர் எலுமிச்சையை சரிபாதியாக நறுக்கி சருமத்தில் கருமை படர்ந்துள்ள இடங்களில் தேய்த்து ஊறவைத்து கழுவலாம். எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு அல்லது மஞ்சள்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து ஊறவைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், வினிகர் கலந்து கணுக்கால் பகுதியில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் எலுமிச்சையால் தேய்த்து கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒருமாதத்திற்கு தொடர்ந்து இதனை செய்யவேண்டும். யோகர்டு பேஸ்ட் 3 ஸ்பூன் யோகர்டுடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கால் முட்டியில் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து ஊறவைக்கவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். கடலைமாவு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, பால் 2 ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல கலக்கவும். இதனை முட்டிப் பகுதிகளில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். குளிர்ந்த நீரில் கழுவ கறுமை மறையும். வறண்ட தோல் மென்மையாகும். பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் நன்றாக அரைத்து கை, கால் முட்டிப் பகுதிகளில் தேய்க்கவும். கருமை மறையும். பசும் மஞ்சள், தயிர் பசும் மஞ்சள் நல்ல மணத்தைத் தரும். எல்லா வயதினரும் எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது. பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்.அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும். இப்படியே செய்து வந்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.வறண்ட சருமத்திற்கு மிகச் சிறந்த சிகிச்சை இது. பசும் மஞ்சளைக் அதன் இலையோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதோடு பாசிப் பயறு மாவைக் கலந்து பசைப் போல குழைத்துக் கொள்ளவும். இந்த விழுதை தினமும் பூசிக் குளித்தால் தோலில் கருமை உள்ள பகுதிகள் படிப்படியாக மறையும். பசு‌ம் ம‌ஞ்சளை அரை‌த்து உட‌லி‌ல் தட‌வி‌‌க் கு‌ளி‌த்தா‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌பிற‌க்கு‌ம். வைட்டமின் இ வைட்டமின் இ எண்ணெய் மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த எண்ணெயை கருமை உள்ள பகுதிகளில் பூசி ஊறவைத்து வெந்நீரில் குளிக்கலாம். கற்றாழைச் செடியை புதிதாக பறித்து அதை முட்டிக்கால், கணுக்கால் பகுதிகளில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து குளிக்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™