மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானா விவகாரம்: ஒருதலை பட்சமான முடிவை தெலுங்கு தேசம் ஏற்காது- சந்திரபாபு நாயுடு
- தெலுங்கானா மசோதாவுக்கு 3 நாட்களுக்குள் இறுதி வடிவம்: ஐதராபாத் யூனியன் பிரதேசம் ஆகுமா?
- யாராலும் நெருங்க முடியாத ராகுல்காந்தியை தைரியமாக கடித்த கொசுவை பாராட்டுகிறேன்: மோடி கிண்டல்
- பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
- சத்தீஷ்கர் மாநிலத்தில் 2–ம் கட்ட தேர்தல்: 72 தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- சபரிமலையில் பலத்த மழை: பெருவழி பாதையில் நடந்து சென்ற பக்தர்கள் அவதி
- குளிர்வாட்டுவதால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்தது
- அப்துல் கலாம் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது: உடல் நிலை தேறுகிறது
- கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் காயம்
- யாரையும் முட்டாள் என்று சொல்லவில்லை: விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பேட்டி
- நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி கோரிய ஜெகன்மோகன் ரெட்டியின் மனு சி.பி.ஐ.கோர்ட்டில் தள்ளுபடி
- சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது பாலியல் தொந்தரவு புகார்: விசாரணை குழுவிடம் பெண் வழக்கறிஞர் வாக்குமூலம்
- போலீசாரின் கெடுபிடியால் ராகுல் கூட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு மக்கள் வரமுடியவில்லை: ஷீலா தீட்சித் விளக்கம்
- ராஜஸ்தான் தேர்தல்: முன்னாள் சபாநாயகர் உள்பட 33 போட்டி வேட்பாளர்கள் காங்கிரஸ் - பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்
- தெலுங்கானாவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- அரவிந்த் கெஜ்ரிவால் மீது மையை ஊற்றியவன் யார் என்றே எனக்கு தெரியாது: அன்னா ஹசாரே
- வயது சர்ச்சை பற்றிய தீர்ப்பை விமர்சித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிடம் மன்னிப்பு கேட்டார் வி.கே.சிங்
- குண்டு துளைக்காத மேடையை நிராகரித்த மோடி: எப்போதும் போல் திறந்த மேடையில் மக்களிடையே பேசினார்
- உ.பி. கோட்டையில் ஆயிரம் டன் தங்கம்: தோண்டத் தோண்ட மண் மட்டுமே வந்ததால் ஆய்வு பணி கைவிடப்பட்டது
- டெல்லியில் 2 பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபர் கைது
| தெலுங்கானா விவகாரம்: ஒருதலை பட்சமான முடிவை தெலுங்கு தேசம் ஏற்காது- சந்திரபாபு நாயுடு Posted: 18 Nov 2013 10:28 PM PST தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திரா முழுக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வீடுதோறும் தெலுங்கு தேசம் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது மாநில பிரிவினையை கடுமையாக எதிர்த்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:– எனக்கு 2 முறை தேசிய அளவில் வாய்ப்புகள் வந்தது. ஆனால் தெலுங்கு மக்களுக்காக அதை நான் புறக்கணித்தேன். இப்போதும் நான் ஆந்திர மாநிலத்தின் முதல் மந்திரியாக வேண்டும் என்றே விரும்புகிறேன். தெலுங்கு தேச வளர்ச்சியை தடுக்க காங்கிரஸ் அரசு மாநில |
| தெலுங்கானா மசோதாவுக்கு 3 நாட்களுக்குள் இறுதி வடிவம்: ஐதராபாத் யூனியன் பிரதேசம் ஆகுமா? Posted: 18 Nov 2013 10:15 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக உள்துறை மந்திரி சுஷில்குமார் மிண்டே தலைமையிலான மந்திரிகள் குழு நேற்று தெலுங்கானா, சீமாந்திரா பகுதியை சேர்ந்த மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில் முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டியும் கலந்து கொண்டார். ஆந்திராவை பிரிக்க அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவ்வாறு பிரித்தால் நக்சலைட்டுகள் ஆதிக்கம் தலைதூக்கும். இது நாட்டுக்கு பெரும் அச்சறுத்தலாக இருக்கும் என்று எச்சரித்தார். |
| யாராலும் நெருங்க முடியாத ராகுல்காந்தியை தைரியமாக கடித்த கொசுவை பாராட்டுகிறேன்: மோடி கிண்டல் Posted: 18 Nov 2013 09:54 PM PST மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வரும் 25–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் கடும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடி நேற்று போபாலில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வழக்கம்போல அவர் ராகுல்காந்தியை பெயர் குறிப்பிடாமல் கிண்டல் செய்தார். அவர் கூறியதாவது:– கடந்த மாதம் இந்த பகுதியில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் |
| பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல் Posted: 18 Nov 2013 09:46 PM PST பெங்களூர் அருகே தோடபெலவங்களா என்ற கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் நடந்த ஒரு விழாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர். 10–வது வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியும் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனே, அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள், சிறுமியை வாயைப் பொத்தி தூக்கி சென்றனர். மறைவான ஒரு இடத்திற்கு சென்றதும் |
| சத்தீஷ்கர் மாநிலத்தில் 2–ம் கட்ட தேர்தல்: 72 தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 18 Nov 2013 09:43 PM PST சத்திஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் காரணமாக 2 கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த 11–ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் 75.53 சதவீத ஓட்டுகள் பதிவானது. மீதமுள்ள 72 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 2–ம் கட்ட தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதற்காக 19 மாவட்டங்களில் 18015 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 4594 ஓட்டுச் சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கணக்கிடப் |
| சபரிமலையில் பலத்த மழை: பெருவழி பாதையில் நடந்து சென்ற பக்தர்கள் அவதி Posted: 18 Nov 2013 09:13 PM PST கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக கோவில் நடை திறந்த நாள் முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கேரளாவில் நேற்று இடது சாரி கட்சிகள் கஸ்தூரி ரெங்கன் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய முழு |
| குளிர்வாட்டுவதால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்தது Posted: 18 Nov 2013 09:02 PM PST திருப்பதி கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மொகரம் பண்டிகை மற்றும் அதனையடுத்து வந்த அரசு விடுமுறையால் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் அலைமோதினர். இதனால் தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆனது. இப்போது விடுமுறை முடிந்து விட்டது. அதோடு திருமலையில் கடும் குளிர் |
| அப்துல் கலாம் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது: உடல் நிலை தேறுகிறது Posted: 18 Nov 2013 08:34 PM PST முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவ – மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் திடீர் என்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கீழே தவறி விழுந்ததில் அவரது தலையின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது |
| கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் காயம் Posted: 18 Nov 2013 07:32 PM PST மேற்கு வங்கம் ஹூக்லி மாவட்டத்தின் தாரகேஸ்வர் அருகேயுள்ள சம்படங்க ரவீந்திரா மகாவித்யாலயா கல்லூரியில் உள்ள மாணவர் பிரிவுகளிடையே நேற்று பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரியின் உயர் கல்வித்துறையின் தலைவராகக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், புர்சுரா பகுதி சட்டமன்ற உறுப்பினருமான பர்வேஸ் ரஹ்மான் செயல்பட்டுவந்தார். கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி இவருக்குப் பதிலாக தாரகேஸ்வர் சட்டமன்ற உறுப்பினரான ரச் பால் சிங் தலைவராகப் பதவியேற்றார். |
| யாரையும் முட்டாள் என்று சொல்லவில்லை: விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பேட்டி Posted: 18 Nov 2013 07:15 PM PST அறிவியல் ஆராய்ச்சிக்கு அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் கூறியதால் அரசியல் கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகளை அவமதிக்கும் வகையில் நான் கருத்து சொல்லவில்லை என்று விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் கூறினார். இதுகுறித்து அவர் பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- |
| Posted: 18 Nov 2013 04:23 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒன்றுபட்ட ஆந்திராவிற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் திட்டமிட்டு |
| சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது பாலியல் தொந்தரவு புகார்: விசாரணை குழுவிடம் பெண் வழக்கறிஞர் வாக்குமூலம் Posted: 18 Nov 2013 03:47 PM PST டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஒரு ஓட்டலில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஸ்டெல்லா ஜேம்ஸ் என்ற பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். புகாருக்குள்ளான அந்த நீதிபதி இப்போது ஓய்வு பெற்றுவிட்டாடர். அவர் பெயர் வெளியிடப்படவில்லை |
| Posted: 18 Nov 2013 01:48 PM PST டெல்லி மாநில சட்ட சபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சி ஆகிய மூன்று கட்சிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடந்து வரும் தொடர் கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் காங்கிரஸ் திட்டங்களில் நடந்துள்ள இமாலய ஊழல்கள் |
| Posted: 18 Nov 2013 12:46 PM PST ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 200 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி முடிவடைந்தது. மனுக்களை வாபஸ் பெறும் கடைசி தேதியும் கடந்த 16ம் தேதியுடன் நிறைவடைந்தது |
| தெலுங்கானாவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி Posted: 18 Nov 2013 12:29 PM PST ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, கடந்த மாதம் 3-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் டி.ஏ.சோமயாஜுலு சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு |
| அரவிந்த் கெஜ்ரிவால் மீது மையை ஊற்றியவன் யார் என்றே எனக்கு தெரியாது: அன்னா ஹசாரே Posted: 18 Nov 2013 12:01 PM PST டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாரதீய ஜனதா கட்சியையும், காங்கிரசையும் விமர்சனம் செய்தார் |
| வயது சர்ச்சை பற்றிய தீர்ப்பை விமர்சித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிடம் மன்னிப்பு கேட்டார் வி.கே.சிங் Posted: 18 Nov 2013 11:52 AM PST முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் தனது வயது சர்ச்சை பற்றிய வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததற்காக, அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. ராணுவ தளபதியாக இருந்தபோது, வி.கே.சிங்குக்கும், மத்திய அரசுக்கும் இடையே வி.கே.சிங் வயது தொடர்பாக பிரச்சினை எழுந்தது |
| குண்டு துளைக்காத மேடையை நிராகரித்த மோடி: எப்போதும் போல் திறந்த மேடையில் மக்களிடையே பேசினார் Posted: 18 Nov 2013 11:17 AM PST மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்திற்காக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்று போபால் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் பட்டியலில் மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பதாலும் |
| உ.பி. கோட்டையில் ஆயிரம் டன் தங்கம்: தோண்டத் தோண்ட மண் மட்டுமே வந்ததால் ஆய்வு பணி கைவிடப்பட்டது Posted: 18 Nov 2013 10:49 AM PST உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜாராவ் ராம்பக்ஸ் சிங் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 1000 டன் தங்கம் பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சாமியார் ஷோபம் சர்க்கார் கனவு கண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் |
| டெல்லியில் 2 பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபர் கைது Posted: 18 Nov 2013 10:23 AM PST டெல்லி மேற்கு பெகும்பூர் பகுதியை சேர்ந்தவர் பார்வதி (18) அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (28) என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணை தொந்தரவு செய்தார். ஆனால் பார்வதி மறுத்து விட்டார் மனோஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |