Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இதயத்தை உறைய வைக்கும் கொடூர போர் குற்றம், மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன‌ – டேவிட் கேமரூன்

Posted: 17 Nov 2013 11:15 PM PST

David-Cameron-007

David-Cameron-007இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கையில் வடக்கு பகுதியில் சில இடங்களில் கண்ணி வெடி பிரச்சினை இருக்கிறது. இவற்றை அகற்றும் பணிகளுக்காக அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ. 21 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

ஆபத்து நிறைந்த கண்ணி வெடிகளை அகற்றி விட்டு அந்த நிலங்களை உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்படும். யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் கண்ணி வெடிகளை அகற்ற இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கண்ணிவெடி அகற்றப்பட்ட நிலங்களை பொது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தலாம். இறுதி கட்ட போருக்கு பிறகு பிரிந்து கிடப்போர் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கும் ஆதரவாகவும் இந்த நிதி வழங்கப்படுகிறது.

இறுதி கட்ட போரின் போது இந்த பகுதிகளில் கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர். இவற்றை அகற்றுவது சிக்கல் நிறைந்த பணி.

இந்த நிதி உதவி மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முழுமையாகவும், கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஓரளவும் அகற்ற முடியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த சுமார் 70 ஆயிரம் பேரை மறுகுடியமர்த்த ஏற்கனவே இங்கிலாந்து அரசு அறக்கட்டளை மூலம் 30 லட்சம் பவுண்டு நிதி உதவி செய்துள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது நடந்ததாக சேனல்–4 வெளியிட்ட வீடியோ ஆவண படம் காட்டும் இதயத்தை உறைய வைக்கும் கொடூர போர் குற்றம், மனித உரிமை மீறல் சம்பவங்கள் இந்த பகுதியில் நடந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிறைவடைந்தது பொதுநலவாய மாநாடு : “கொழும்பு பிரகடனம்’ வெளியிடப்பட்டது

Posted: 17 Nov 2013 10:48 PM PST

comman

commanஇலங்கையில் நிகழ்ந்த பொதுநலவாயத் தலைவர்களின் மாநாட்டில் நேற்று "கொழும்பு பிரகடனம்' வெளியிடப்பட்டது. நிரந்தரமான – சமத்துவமான அபிவிருத்தி இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வறுமை, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாறுபாட்டைத் தணித்தல், வர்த்தகத்தில் நிலவும் பற்றாக்குறை, உறுதிப்படுத்தப்படும் போதிய நிதிகள், முதலீடு, அறிவு, தொழில் நுட்பப் பரிவர்த்தனை, உலக ரீதியிலான பொருளாதார – வர்த்தக முறைமையை சமத்துவமாக உயர்த்துதல் ஆகியவற்றுக்கு உதவும் பொருட்டு உலக ரீதியிலான கொள்கைகளை மேம்படுத்துவதற்கான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர் என இப்பிரகடனத்தில் பொதுநலவாயத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

உலக நிதி நிலைமை, பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றின் தாக்கம், குறிப்பாக வளர்முக நாடுகளின் அபிவிருத்திப் பணிகளைப் பாதிக்கின்றது என்பது குறித்தும் இதில் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.   உலக பொருளாதா ரத்துக்கு எதிரான சவால்களை முறியடித்து, சமப்பாட்டைத் தோற்றுவிக்க காத்திரமாகப் பணிபுரிய வேண்டுமென்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

முழுமையானதும், பயனுள்ளதுமான தொழில் முறைமையோடு நிரந்தரமானதும், சமத்துவமானதுமான உலக வளர்ச்சிக்குப் பணியாற்றவேண்டும் என்றும் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.   வளர்முக நாடுகளுக்கான நேர்மையான பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு சர்வதேச வர்த்தகம், நிதியம், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டியது மிக முக்கியமான அம்சமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்வதேச, தேசிய மட்டங்களில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, உறுப்பு நாடுகளின் வறுமை ஒழிப்பு குறைப்புக்கும் எதிர்கால சாத்தியமான வளர்ச்சிக்கும் குந்தகமாகவுள்ளது.    இயற்கை, மனிதர் உருவாக்கும் பேரிடர்கள் மற்றும் உலக சவால்களின் அழுத்தங்கள் ஆகியவற்றால் நாடுகள் மோசமாகப் பாதிப்படைகின்றன.

இந்த நிலைப்பாடு சமூகங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் பொருளாதார இடைவெளிக்கு வழிகோலுகிறது.    ஆகவே, சமத்துவ வளர்ச்சியை எட்டுவதற்கும் 2012 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட சாசனத்தைக் கடைப்பிடிப்பதற்கும் முன்னுரிமை வழங்குகின்றோம் – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாம்பே பாம்பிற்கு உணவாகும் அதிர்ச்சிக் காட்சி…..

Posted: 17 Nov 2013 10:38 PM PST

snake_snake_001.w245 (1)

snake_snake_001.w245 (1)

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரஜைகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி மஹிந்த

Posted: 17 Nov 2013 03:35 AM PST

M_Id_388725_Mahinda_Rajapaksa

mahindarajapaksheஇலங்கை பிரஜைகள் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

பொதுநலவாய அரச தலைவர்களது இறுதிநாள் அமர்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் இடம்பெற்றது. அதன்பின்னதாக இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீ்ள்குடியேற்றுவது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறிளார்.

கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போர் தொடர்பில் ஒரே தடவையில் தீர்வை பெற்றுவிட முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கான கால அவகாசம் தேவை என கூறிய ஜனாதிபதி, ஒருவருக்கான தீர்வல்ல அனைத்து மக்களுக்குமான தீர்வே தனக்கு வேண்டும் என தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இன்று (17) பிற்பகலுடன் நிறைவடைந்துள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

நுவரெலியா சென்றும் தோட்ட மக்களை திரும்பி பார்க்காத சார்ள்ஸ்

Posted: 17 Nov 2013 03:27 AM PST

பொதுநலவாய மாநாட்டில் கலந்த கொள்வதற்கு வருகைதந்துள்ள இளவரசர் சார்ள்ஸ் நேற்று (16) நுவரெலியாவிற்கு விஜயம் செய்தார். அதன்போது நுரெலியாவில் அமைந்துள்ள விஷேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கு விஜயம் செய்த இளவரசருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளவரசர் பாடசாலையின் செயற்பாடுகளை அவதானித்ததுடன் அங்குள் மாணவர்களுடன் சிறிது நேரத்தையம் செலவு செய்தார். அதன் பிறகு லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு விஜயம் செய்த இளவரசர் அதனை பார்வையிட்டதுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையம் திறந்து வைத்தார். அத்துடன் தொழிற்சாலை அருகில் வேலை செய்த சில […]

ஈரல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள

Posted: 17 Nov 2013 03:24 AM PST

மனித உடலில் ஈரலின் தொழிற்பாடானது இன்றியமையாத ஒன்றாகும். நீரிழிவு போன்ற நோய்களுக்கு பிரதான காரணமாக அமைவது ஈரலின் தொழிற்பாடு ஆகும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஈரலின் தொழிற்பாட்டினை சீராக பேணுவதன் மூலம் பல்வேறு வகையான நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பின்வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஈரலை சீராக இயங்க வைக்க முடியும். 1. நாள் ஒன்றிற்கு 8-10 கிளாஸ் வரையிலான தூய நீர் அருந்துதல். 2. பீட்ரூட், கரட், கோவா, போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – வில்லியம் ஹேக்

Posted: 17 Nov 2013 03:21 AM PST

இலங்கை சுயமான விசாரணை பொறிமுறை ஒன்றை அமைத்து, அதன் இராணுவப் படையினர் மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கையாள்வதாக உலகுக்குக் காட்டினால், அது அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் அரசு தலைவர்கள் உச்சிமாநாட்டில் இலங்கையின் மனித உரிமை விவகாரமே முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது. அடுத்த மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் அதன்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்காவிட்டால், சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக பிரிட்டன் கூறியுள்ளது. 2015-ம் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கவலைய விடுங்க! இனிமேல் கண்ணாடியின் மூலம் ஐபோனை சார்ஜ் செய்யலாம்

Posted: 17 Nov 2013 03:18 AM PST

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ஐபோன்களை மையமாகக் கொண்டு பல்வேறு சாதனங்கள் இன்று உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Sayalee Kaluskar என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த சன்கிளாஸினை பயன்படுத்தி ஐபோன்களை சார்ச் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஷ்யாவில் பெண் தீவிரவாதியின் கணவர் உட்பட ஐவர் சுட்டுக்கொலை

Posted: 17 Nov 2013 03:12 AM PST

தெற்கு ரஷ்யாவின் காகாசஸ் மாகாணத்தின் வழியே கடந்த மாதம் சென்ற பயணிகள் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர். ஒரு நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது பஸ்சினுள் ஒரு பெண் ஏறினாள். அடுத்த சில நிமிடங்களில் மரங்கள் அடர்ந்த சாலையில் பஸ் சென்றபோது அவளது உடல் வெடித்து சிதறியதும், பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டதையும் டிரைவர் சீட் அருகேயுள்ள சி.சி.டி.வி. கேமரா படம் பிடித்துள்ளது. இந்த தாக்குதலில் 32 […]

பெற்ற குழந்தையை விற்க முயன்ற தம்பதியர்

Posted: 17 Nov 2013 02:56 AM PST

பிரேசிலில் இணையதளத்தின் மூலம் குழந்தையை விற்க பெற்றோர் விளம்பரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இணையத்தளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரேசில் நாட்டு தம்பதி ஒருவர், பொருட்களை விற்கும் பிரபல இணையதளம் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தனர். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, எங்கள் குழந்தை தொடர்ந்து அழுது தொல்லை தருகிறது. எனவே குழந்தையை விற்க விரும்புகிறோம். ரூ.27 ஆயிரம் விலை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த எண் மற்றும் முகவரியை விசாரித்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™