Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ரூ. 10 கோடி இழப்பு கேட்டு சோனியா மீது அவதூறு வழக்கு: மத்திய பிரதேச முதல்–மந்திரி தொடர்ந்தார்

Posted: 17 Nov 2013 09:49 PM PST

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு வரும் 25–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரம் மத்தியபிர தேசத்தில் சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்காக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் முதல் மந்திரி வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருப்பது போலவும் காண்டிராக்ட் பணிகளுக்கு அவரும் அவர்

டெல்லி சட்டசபை தேர்தல்: விஜயகாந்த் – பிரேமலதா பிரசாரம்

Posted: 17 Nov 2013 09:14 PM PST

டெல்லி சட்டசபை தேர்தல் வருகிற 4–ந் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. முதல்–அமைச்சர் ஷீலா தீட்சித் களத்தில் நிற்கிறார். பா.ஜ.க. வேட்பாளர் விஜேந்திர குப்தா, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜ.க.வின் முதல்–அமைச்சர் வேட்பாளராக ஹர்ஷவர்தன் களத்தில் உள்ளார். இவரை எதிர்த்து 12 பேர் போட்டியிடுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்க கூடிய தொகுதிகளில் போட்டியிட

டெல்லியில் ராகுல் பேசத் தொடங்கியதும் பொதுமக்கள் எழுந்து சென்றனர்: பேச்சை பாதியில் முடித்தார்

Posted: 17 Nov 2013 09:10 PM PST

டெல்லி மாநில சட்ட சபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சி ஆகிய மூன்று கட்சிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடந்து வரும் தொடர் கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் காங்கிரஸ் திட்டங்களில் நடந்துள்ள இமாலய ஊழல்கள் காரணமாக டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று கருத்து

சத்தீஸ்கரில் நாளை 2–ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு

Posted: 17 Nov 2013 08:11 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 11–ந்தேதி 12 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்தது. சுமார் 1½ லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு, அந்த முதல்கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவானது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்து விட்ட நிலையில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.

அரசியல் ஆதாயத்துக்காக தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் நரேந்திரமோடி: மன்மோகன்சிங் தாக்கு

Posted: 17 Nov 2013 07:44 PM PST

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாரதீய ஜனதா கட்சியினரின் தரம் தாழ்ந்த அரசியல் பேச்சு இழிவான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. மற்றவர்களின் நடத்தையையே நம்பியிருக்கும் அரசியல் கட்சியால் நாட்டு மக்களுக்கு என்ன செய்துவிட முடியும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மத்திய மந்திரி சரத்பவார் அழைப்பு

Posted: 17 Nov 2013 07:25 PM PST

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில கிளை கூட்டம் ஆலப்புழையில் நடந்தது. இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் பேசினார். அப்போது, "மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத செயல்களுக்கே அக்கட்சி முக்கியத்துவம் கொடுக்கும். இதை தடுக்க மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். இதை கருத்தில் கொண்டே மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரித்து

இளம் பெண்ணை குஜராத் அரசு கண்காணித்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

Posted: 17 Nov 2013 07:15 PM PST

குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் அமித்ஷா. கடந்த 2009-ம் ஆண்டில் அவர் குஜராத்தில் உள்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். அப்போது அவர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில், பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் கட்டிட கலைஞர் ஒருவரை கண்காணிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டதாக இணையதள புலனாய்வு பத்திரிகையில் தகவல் வெளியானது. இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, நரேந்திர மோடியை பா.ஜனதா கட்சியின் பிரதமர்

மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த அபிப்பிராயம்: காங்கிரஸ் கருத்து

Posted: 17 Nov 2013 01:12 PM PST

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்தால் மந்திரிகளின் கருப்புப் பண கணக்கை வெளியிடுவதாக ஐ.எஸ்.ஐ. மிரட்டல்: சுப்பிரமணிய சாமி

Posted: 17 Nov 2013 01:01 PM PST

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி ஒடிசா தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் வெளிநாட்டு வங்கிகளில் இந்திய மந்திரிகள்

மும்பை சிவாஜி பூங்காவில் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் அமைக்க மூத்த மகன் எதிர்ப்பு

Posted: 17 Nov 2013 12:43 PM PST

சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம்தேதி மும்பையில் காலமானார். அவரது உடல் சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தின் அருகே, சிவசேனா தொண்டர்கள் பந்தல் ஒன்றை அமைத்து, பந்தலில் பால்தாக்கரேவின் புகைப்படத்தை

ஆந்திராவில் ரெயில் மோதி 3 பேர் பலி

Posted: 17 Nov 2013 12:25 PM PST

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி சிங் (வயது 40). இவர் நேற்று தனது மகன்களை அழைத்துக்கொண்டு சம்பாவதி ஆற்றுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் விஜயநகரம் நோக்கி புறப்பட்டார்

பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவதை தடைசெய்ய வேண்டும் - இந்தியில் தான் பேச வேண்டும்: முலாயம்சிங் யாதவ்

Posted: 17 Nov 2013 11:56 AM PST

உத்தரபிரதேச மாநிலம், எடாவா மாவட்டத்தில் நடைபெற்ற இந்தி சேவா அறக்கட்டளை நிகழ்ச்சியில் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது

பீகார் குண்டு வெடிப்பு: சதிகாரர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

Posted: 17 Nov 2013 11:36 AM PST

பாட்னா மற்றும் புத்தகயா குண்டு வெடிப்பில் தொடர்புடைய 5 சதிகாரர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு போலீசார் அறிவித்து உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி புத்தகயா கோவிலில் நடந்த குண்டு வெடிப்பில் 5 துறவிகள் படுகாயம் அடைந்தனர்

என்.டி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு அறிக்கை

Posted: 17 Nov 2013 11:26 AM PST

பிரபல திரைப்பட நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்து ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி.ராமராவ் 16-8-1984 அன்று காலமானார். சுமார் 400 படங்களில் நடித்துள்ள என்.டி.ராமராவ்

ரூ.7 லட்சத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச்சென்ற 'பலே கொள்ளையர்கள்'

Posted: 17 Nov 2013 10:48 AM PST

குஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே ரூ.7 லட்சத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம்

ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு கேட்டு ராஜ்நாத் சிங்குடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

Posted: 17 Nov 2013 10:30 AM PST

தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆந்திர முதல் மந்திரி கிரண்குமார் ரெட்டி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்துக்கு ஆதரவாகவும் தனித்தெலுங்கானா மாநிலம்

தேர்தல் செலவு நிதி ரூ.20 கோடி சேர்ந்து விட்டதால் மேலும் பணம் அனுப்ப வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

Posted: 17 Nov 2013 09:37 AM PST

டெல்லி சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்குகிறார்

இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி: பீகார் மந்திரி

Posted: 17 Nov 2013 08:11 AM PST

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை ஒரு மிகப்பெரிய தீவிரவாதி என்று பீகார் விவசாய மந்திரி நரேந்திர சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Posted: 17 Nov 2013 07:21 AM PST

பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசனை குழுவின் தலைவரான விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று நேற்று அரசு அறிவித்தது.

பாரத ரத்னா விருது எனது மிகப்பெரிய கவுரவம்: சச்சின் பெருமிதம்

Posted: 17 Nov 2013 04:57 AM PST

கிரிக்கெட் உலகில் மறக்கமுடியாத நபராக விளங்கும் சச்சின் டெண்டுல்கர் நேற்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவரை கவுரவிக்கும் பொருட்டு நேற்றைய தினமே பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சச்சின் முதலாவதாக இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™