Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டார் – சேனல்-4: வெறும் நாடகம் – இராணுவம்

Posted: 01 Nov 2013 10:54 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம்பெண்ணை இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சேனல் 4 புதிதாக வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. சேனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார். ´இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப் புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இசைப்பிரியா வீடியோ உண்மை எனில் நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் – ஜெயந்தி

Posted: 01 Nov 2013 10:44 PM PDT

இசைப் பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றது குறித்த வீடியோ உண்மை என்று தெரிய வந்தால், நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும், செய்தி வாசிப்பாளராக இருந்தவருமான இசைப் பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதிநிதிகள் செல்லலாம்! மன்மோகன் சிங் செல்லக்கூடாது

Posted: 01 Nov 2013 10:39 PM PDT

கொழும்பின் பொதுநலவாய மாநாட்டுக்கு பிரதிநிதிகளை அனுப்பலாம். எனினும் பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு நெருங்கிய தரப்புக்களை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் மன்மோகன் சிங் இலங்கை சென்றால் அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று காங்கிரஸின் தோழமை கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால், மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டுக்கு செல்லவேண்டும் […]

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது; வடக்கு முதல்வர் தெரிவிப்பு

Posted: 01 Nov 2013 10:28 PM PDT

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது" – இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், யாழ்.நகரிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு ஆளுநரை மாற்றுமாறும், படைக் குறைப்பைச் செய்யுமாறும் வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய, நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் […]

பிரபாகரன் இல்லாத உலகத்தையே எப்போதும் எதிர்பார்த்தேன்

Posted: 01 Nov 2013 10:21 PM PDT

ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான பிரதான ஏதுவென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சிறந்த தேர்தல் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உட்பூசல்கள் மற்றும் தேர்தல் வியூகக் குறைபாடுகளே பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சிக்கு தாவிய அனைவரும் […]

கிண்ணம் யாருக்கு? இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை

Posted: 01 Nov 2013 10:20 PM PDT

இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் ஏழாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடக்கிறது. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஆறு போட்டிகளின் முடிவில் 2-2 என, இரு அணிகளும் சமமாக உள்ளன. இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் ஏழாவது ஒருநாள் போட்டி, இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் வலுவாகத்தான் உள்ளது. ரோகித் சர்மா (282), ஷிகர் தவான் (224 […]

லா லிகா காற்பந்து தொடர்: அத்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி

Posted: 01 Nov 2013 10:07 PM PDT

கிரானடா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து லீக் போட்டியில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கிரானடா, அத்லெட்டிகோ மாட்ரிட் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் அத்லெட்டிகோ அணியின் தியாகோ (38வது நிமிடம்) பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க மாற்றினார். இதற்கு கிரானடா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அத்லெட்டிகோ அணியின் டேவிட் […]

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தான் தாலிபன் தலைவர் பலி

Posted: 01 Nov 2013 09:45 PM PDT

thalipaan

thalipaanஅமெரிக்க படையினரின் ஏவுகணைத் தாக்குதலில், பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் தலைவர் ஹகிமுல்லா மெசூத் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தண்டே தர்பா கேல் என்ற இடத்தில், அமெரிக்கப் படையினர் இரண்டு ஏவுகணைகள் மூலம் வெள்ளிக்கிழமை தாக்கியதில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இந்தச் செய்தியை இன்னும் உறுதி செய்யவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு வாஸிரிஸ்தானின் தண்டே தர்பாகேல் பகுதியில் தொழுகைக்காக புறப்பட்டபோது, மெசூத் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில், அவரது நெருங்கிய உதவியாளர் அப்துல்லா பாஹர் மெசூத் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்; இருவர் காயம் அடைந்தனர் என்று தனது உயர் மட்ட அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு தகவல் தெரிவித்ததாக, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிரானது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பைசுல்லா மேசூத் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, கடந்த 2009-ல் பாகிஸ்தான் தாலிபன் தலைவரான மெசூத், மிகவும் முக்கியத் தீவிரவாதியாகக் கருதப்பட்டவர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில், பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, தமது இயக்கத்தின் தலைவர் ஹகிமுல்லா மெசூத் இறந்துவிட்டதாக, பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தாலிபனைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகின் வளமிக்க நாடுகள்: நோர்வே முதலிடத்தில்

Posted: 01 Nov 2013 09:31 PM PDT

உலகின் வளமிக்க நாடுகளில் நோர்வே முதலிடத்தை பிடித்துள்ளது. உலக நாடுகளில் வளமிக்க நாடுகள் பட்டியலை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட லெகாடம் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டாமிடத்தில் சுவிட்சர்லாந்தும் 3ம் இடத்தில் கனடாவும் உள்ளன. அத்துடன் பொருளாதார சரிவு காரணமாக அமெரிக்கா 11 ஆவது இடத்திலும் , பிரித்தானியா 16 ஆவது இடத்திலுள்ளமுள்ளன. மேலும் 4-ம் இடத்தில் சுவீடன், 5ம் இடத்தில் நியூசிலாந்து, 6ம் இடத்தில் டென்மார்க் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 106 ஆவது இடத்திலுள்ளது.டன் […]

கற்பழித்து புதைக்கப்பட்ட சிறுமி உயிருடன் வந்த அதிசயம்

Posted: 01 Nov 2013 09:28 PM PDT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தோபா தேக் சிங் என்ற இடத்தில் கடந்த வாரம் தனியாக சென்ற 13 வயது சிறுமியை வழிமறித்த 2 பேரினால் கற்பழிக்கப்பட்டார். அந்த சிறுமியை உயிருடன் விட்டால் விஷயம் வெளியே தெரிந்து ஆபத்தாகி விடும் என நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு குழியை தோண்டி மயங்கிய நிலையில் இருந்த சிறுமியைய உயிருடன் புதைத்தனர். மயக்கம் தெளிந்த சிறுமி, தான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை அறிந்து, முட்டி மோதி மண்ணை தள்ளி புதைகுழியில் இருந்து […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™