Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கோழிக்கோடு விமான நிலையத்தில் 2 பயணிகளிடம், 3 கிலோ தங்கம் பறிமுதல்

Posted: 01 Nov 2013 09:17 PM PDT

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில், அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த 2 பேர், சுங்க இலாகா அதிகாரிகளிடம் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் பெயர், அப்துல் ரபீக் அலுங்கல் (வயது 33). கோழிக்கோடு மாவட்டம் கொடுவல்லியை சேர்ந்த அவர், ரியாத்தில் இருந்து சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தவர். அவரிடம் இருந்து 2.5 கிலோ அளவுக்கு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மற்றொருவர், காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த மொகமத் முஸ்தபா (27). ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த அவரிடம் இருந்து 1 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்தியாவின் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கு நாசா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி

Posted: 01 Nov 2013 05:11 PM PDT

இந்தியாவின் கனவுத் திட்டமான செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பும் மாங்கல்யான் திட்டம் வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சட்டசபை - பாராளுமன்ற தேர்தல்களில் ‘நோட்டா’ பெட்டியில் நிறமாற்றம்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Posted: 01 Nov 2013 03:29 PM PDT

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருக்கும் ஓட்டளிக்க விரும்பாத வாக்காளர்களுக்காக 'நன் ஆப் த அபவ்' (நோட்டா) என்ற பட்டனை ஓட்டுப்பதிவு எந்திரத்தில் இடம்பெறச் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் கூறியது.

நேருவை பிரதமராக்கியதன் மூலம் காந்தி தவறு செய்தாரா?: மோடிக்கு மகாராஷ்டிர முதல் மந்திரி கேள்வி

Posted: 01 Nov 2013 03:14 PM PDT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில்பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும்

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு

Posted: 01 Nov 2013 11:58 AM PDT

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது

தேவைப்பட்டால் மக்களுக்காக உயிரை விடுவேன்: மோடி ஆவேச பேச்சு

Posted: 01 Nov 2013 08:10 AM PDT

புனேயில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:- நாட்டில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றன. பா.ஜனதாவும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, பா.ஜனதா முக்கிய கூட்டணி கட்சியாக இருந்தது. இதேபோல் வாஜ்பாய் தலைமையிலும் பா.ஜனதா ஆட்சி அமைத்தது

இந்தியா-வியட்நாம் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்து

Posted: 01 Nov 2013 07:08 AM PDT

இந்தியா-வியட்நாம் இடையே தண்டனைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, வியட்நாம் மக்கள் பாதுகாப்புத் துறை மந்திரி டிரான் டாய் காங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம் வியட்நாமில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகள்

கர்நாடகத்தில் வாழும் மற்ற மாநிலத்தவரும் கன்னட மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டும்: முதலமைச்சர் பேச்சு

Posted: 01 Nov 2013 06:33 AM PDT

கர்நாடக மாநிலம் உருவாகிய 58ஆவது ஆண்டுவிழா இன்று அந்த மாநிலத்தில் ராஜ்யோத்சவமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் பெங்களூருவில் நடந்த அரசு விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் சித்தராமையா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில் கர்நாடகா மாநிலத்தில் வந்து குடியேறியுள்ள

ஊடகங்களில் என்னை டிராகுலா போன்று சித்தரிக்கிறார்கள்: சுப்ரீம் கோர்ட்டில் ஆசாராம் பாபு மனு

Posted: 01 Nov 2013 06:15 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு தற்போது குஜராத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா? - வெளியுறவுத் துறையிடம் ஆலோசனை

Posted: 01 Nov 2013 05:14 AM PDT

இலங்கையில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. போர்க்குற்றம் நடைபெற்ற இலங்கையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று கொலை செய்ததற்கான

பணவீக்கம் தொடர்ந்து சவாலாக இருக்கிறது: ப.சிதம்பரம்

Posted: 01 Nov 2013 04:47 AM PDT

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பண வீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக் குறை தொடர்வாக அவர் கூறியதாவது:- நடப்பு கணக்கு பற்றாக்குறையைப் பொருத்தவரையில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு

5 ஆண்டுகளுக்கு பிறகு பங்கு சந்தைகள் வரலாறு காணாத உயர்வு

Posted: 01 Nov 2013 12:29 AM PDT

5 ஆண்டுகளுக்கு பிறகு பங்கு சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை வணிக தொடக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 82.20 புள்ளிகள் உயர்ந்து 21,246.72 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் 10–ந்தேதி சென்செக்ஸ் 21,206.17 ஆக இருந்தது. இதுவே இதுவரையிலான அதிகபட்ச உயர்வாக இருந்தது. இப்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு அதையும் தாண்டி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்நிய நிறுவனங்களின் முதலீட்டு வரவால்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் இன்று முதல் இந்தியாவில் விற்பனை

Posted: 01 Nov 2013 12:14 AM PDT

ஆப்பிள் கம்ப்யூட்டர் என்று தொடங்கப்பட்டு தற்போது பெயர் மாற்றத்துடன் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். நுகர்வோர் மின்னணு, கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் மற்றும் வடிவமைப்புகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி இப்போது தங்களின் தயாரிப்பான ஐ-போன்களின் புதிய மாடல்களை இன்று விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாளான இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த போன்கள் '5 எஸ்'

மிசோராம் சட்டசபை தேர்தல்: 11 தொகுதிகளில் பா.ஜனதா போட்டி

Posted: 01 Nov 2013 12:10 AM PDT

மிசோராம் மாநில சட்ட சபை தேர்தல் வருகிற 25–ந் தேதி நடக்கிறது. இங்கு மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாரதீய ஜனதா 11 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். பாரதீய ஜனதா மாநில தலைவர் லல்க்லுனா, பொது செயலாளர் லால்ச்சன் ஹிமா ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்

உருளைக்கிழங்கை அதிக விலைக்கு விற்றால் வழக்கு: வியாபாரிகளுக்கு மம்தாபானர்ஜி எச்சரிக்கை

Posted: 31 Oct 2013 11:36 PM PDT

வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாடெங்கும் அதன் விலை உயர்ந்தள்ளது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலைகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீபாவளி பூஜையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் விலையை வியாபாரிகள் கடுமையாக உயர்த்தி விட்டனர். இதற்கு மேற்கு வங்க

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் கிடையாது: கெஜ்ரிவால் டுவிட்டரில் தகவல்

Posted: 31 Oct 2013 11:24 PM PDT

டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 4–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 9–ந்தேதி மனுதாக்கல் தொடங்குகிறது. டெல்லி தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கருத்து கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கு அதிக இடமும், அந்த கட்சிக்கு நெருக்கமாக ஆம் ஆத்மி கட்சிக்கு 2–வது இடமும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் எல்லாரது கவனமும் கெஜ்upவால் மீது திரும்பியுள்ளது. இந்த நிலையில் டூவிட்டரில் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார் அதில் அவர் கூறி

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு

Posted: 31 Oct 2013 11:17 PM PDT

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து கணிப்பை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடிக்கு 4 மாநில மக்களும் ஏகோபித்த ஆதரவை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™