Tamil News | Online Tamil News |
- மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு: பஞ்சாப் மாநில அரசு முடிவு
- உரத்த சிந்தனை: கனவு தானோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சுதந்திரம்?- ஆர்.நடராஜன் -
- 'சி.பி.ஐ., சட்டப்பூர்வமானது அல்ல' என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு தடை
- ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் - பஞ்சாயத்து தலைவர் இடையே அடிதடி
- கண்ணீர் வடிக்கும் சரோஜாவா; அப்பாவியாக வலம் வரும் மாறனா?
- கருணாநிதிக்கு கனிமொழியின் 'தேர்தல் வியூக மடல்'
- கொச்சையான வார்த்தைகளால் விமர்சிப்பதா? பிரதமர் மன்மோகன் கண்டனம்
- நரேந்திர மோடிக்கு அதிக கூட்டம் கூடுவது ஏன்?அரசியல் பார்வையாளர்கள் கருத்து
- தி.மு.க., எதிர்ப்பை மீறி காமன்வெல்த் மாநாட்டில் குர்ஷித் பங்கேற்பு?
- நான்கு மாதங்களுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி., மவுனம்: குரூப் 4 தேர்வு எழுதிய 12 லட்சம் பேர் தவிப்பு
- மத்தியில் பா.ஜ.க.- காங்.,ஆதரவின்றி எந்த அரசும் அமையாது: அத்வானி
| மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு: பஞ்சாப் மாநில அரசு முடிவு Posted: சண்டிகார்: பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு, சிறப்பு பாதுகாப்பு அளிக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, கடந்த மாதம், பீகார் மாநிலம் பாட்னாவில் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வெடித்தது. மோடிக்கு, போதிய பாதுகாப்பு அளிக்க, பீகார் மாநில அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், அவர் பங்கேற்கும் பொதுகூட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பை ... |
| உரத்த சிந்தனை: கனவு தானோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சுதந்திரம்?- ஆர்.நடராஜன் - Posted: 'அம்மா சொன்னார்கள்... மேலிடத்து உத்தரவு' என்று அமைச்சர்களோ, அவர்களின் பி.ஏ.,க்களோ இனி அதிகாரிகளை மிரட்டிக் காரியம் சாதித்துக் கொள்ள முடியாது. அப்படி யாராவது சொன்னால், 'அம்மாவை எழுதி தர சொல்லுங்கள்' என்று அதிகாரிகள் இனி துணிந்து சொல்லலாம்.நான் டில்லியை சொல்கிறேன்! ஐ.மு.கூ., ஆட்சிக் காலத்தில், பிரதமர் பதவி மன்மோகன் சிங்கிடம் இருந்தாலும், அசல் நிர்வாகம் யாரிடம் இருக்கிறது என்பது, எல்லாருக்கும் தெரிந்ததே. இந்த நிழல் நிர்வாகத்தின் லட்சணம் தான், அலைக்கற்றை மற்றும் சுரங்க ஒதுக்கீடு, ஊழல்களில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் நிர்வாகத்தை ... |
| 'சி.பி.ஐ., சட்டப்பூர்வமானது அல்ல' என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு தடை Posted: புதுடில்லி: 'சி.பி.ஐ., அமைப்பு, சட்டப்பூர்வமாக அமைந்தது அல்ல' என, கவுகாத்தி ஐகோர்ட் பிறப்பித்த, சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட், தடை விதித்துள்ளது. இதுகுறித்து, பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.,க்கும், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, நவேந்திர குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவை விசாரித்த, கவுகாத்தி ஐகோர்ட், சமீபத்தில், ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவு:உத்தரவு செல்லாது:சி.பி.ஐ., சட்டப்படி அமைக்கப்பட்டது அல்ல. 1963ல், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த ... |
| ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் - பஞ்சாயத்து தலைவர் இடையே அடிதடி Posted: புதுக்கோட்டையில், சத்துணவு அமைப்பாளர்களை நியமிக்கும் விவகாரத்தில், அமைச்சருக்கும், பஞ்சாயத்து தலைவருக்கும் இடையே கைகலப்பு நிகழ்ந்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில், காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய, தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.கைகலப்பு: இந்நிலையில், வடுகபட்டி பஞ்சாயத்து தலைவரான, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மதியழகன், தங்கள் கிராமத்தின், அ.தி.மு.க., கிளைக்கழக செயலர் மனைவிக்கு, சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் எனக்கோரி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ... |
| கண்ணீர் வடிக்கும் சரோஜாவா; அப்பாவியாக வலம் வரும் மாறனா? Posted: ஏற்காடு சட்டசபை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர் இருவருமே, தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். கட்சி பலத்தால், தற்போது தேர்தலில் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். சரோஜா, கணவரை இழந்தவர் என்பதால், கண்ணீருடன் மக்களை சந்தித்து ஓட்டு கேட்கிறார். அதேநேரத்தில், தி.மு.க., வேட்பாளர் மாறனோ, ஏதுமறியா பிள்ளையாக வலம் வருகிறார். ஏற்காடு சட்டசபை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, பெருமாள் மறைந்ததை அடுத்து, அங்கு, டிசம்பர், 4ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, மறைந்த பெருமாளின் மனைவி சரோஜா ... |
| கருணாநிதிக்கு கனிமொழியின் 'தேர்தல் வியூக மடல்' Posted: ''காங்கிரஸ் அல்லது பா.ஜ., போன்ற தேசிய கட்சியையும், தே.மு.தி.க.,வையும் இணைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ராஜ்ய சபா தி.மு.க., தலைவர் கனிமொழி, 'தேர்தல் வியூக மடலை' எழுதியுள்ளார்.தனித்துப் போட்டி: லோக்சபா தேர்தலில், 'யாருடனும் கூட்டணி கிடையாது; தனித்து போட்டி' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மேடைகளில் முழங்கி வருகிறார். காங்கிரஸ் அல்லது பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., போன்ற கட்சிகளுடன் பலம் பொருந்திய கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்க வேண்டும் என, ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி விரும்புகிறார். எந்தெந்த ... |
| கொச்சையான வார்த்தைகளால் விமர்சிப்பதா? பிரதமர் மன்மோகன் கண்டனம் Posted: ராய்ப்பூர்:நாங்களும், எதிர்க்கட்சியினரை விமர்சிக்கிறோம். அதற்காக, கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. நாகரிகமாகத் தான் விமர்சிக்கிறோம்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். சத்தீஸ்கர் மாநிலத்தில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 11 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கிறது. காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, ராய்ப்பூரில், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று பேசியதாவது:சத்தீஸ்கரில், இன்னும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கு, மத்திய அரசு ... |
| நரேந்திர மோடிக்கு அதிக கூட்டம் கூடுவது ஏன்?அரசியல் பார்வையாளர்கள் கருத்து Posted: லக்னோ : சாதாரண மக்களின் பிரதிநிதியாக, தன்னை அடையாளப் படுத்தி கொள்வதாலும், உள்ளூர் பிரச்னைகளை பற்றி பேசுவதாலும் தான், நரேந்திர மோடி செல்லுமிடங்களில், ஏராளமான கூட்டம் கூடுவதாக, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.பதிலடி: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாடு முழுவதும், தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டில்லி, ஐதராபாத், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடந்த கூட்டங்களில், அவர் பங்கேற்றபோது, ஏராளமான மக்கள் கூடினர். குறிப்பாக, இளைஞர்கள், அதிக அளவில், மோடியின் ... |
| தி.மு.க., எதிர்ப்பை மீறி காமன்வெல்த் மாநாட்டில் குர்ஷித் பங்கேற்பு? Posted: 'இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு, இந்தியாவில் இருந்து ஒரு துரும்பு கூட செல்லக்கூடாது' என்ற, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மிரட்டலை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமயில், இரு அதிகாரிகள் கொண்ட குழு, இலங்கை செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தமிழக கட்சிகளை திருப்தி படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என, தெரிகிறது.இலங்கையில் நடைபெறவுள்ள, காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று, தமிழகத்தில் இருந்து, வலுவான கோரிக்கைகள், ... |
| நான்கு மாதங்களுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி., மவுனம்: குரூப் 4 தேர்வு எழுதிய 12 லட்சம் பேர் தவிப்பு Posted: குரூப் 4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும், தேர்வு முடிவை வெளியிடாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 25ல், குரூப் 4, போட்டித்தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடந்த தேர்வு என்பதால், போட்டி போட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர் எண்ணிக்கை, 17 லட்சமாக ... |
| மத்தியில் பா.ஜ.க.- காங்.,ஆதரவின்றி எந்த அரசும் அமையாது: அத்வானி Posted: பிலாஸ்பூர்:மத்தியில் பா.ஜ.க.- காங்.,ஆதரவின்றி எந்த அரசும் அமைக்க முடியாது என பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் நாளை (11ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று சத்தீஸ்கர் சுகாதார துறை அமைச்சர் அமர் அகர்வாலை ஆதரித்து பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பிலாஸ்பூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.அத்வானி பேசியதாவது:டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் குஜராத்தை தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 10,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |