Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இலங்கைக்கு பிரதமர் பயண திட்டம் சஸ்பென்ஸ் : காங்கிரஸ் உயர்மட்ட குழு முடிவு என்ன?

Posted:

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், இந்தியாவின் சார்பில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு, நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தில், இன்னமும் விவாதிக்க வேண்டியிருப்பதாக கூறி, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, காங்கிரஸ் கட்சி தள்ளி வைத்துள்ளது. இதனால், இந்த விவகாரத்தில், "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இலங்கை தலைநகர் கொழும்பில், வரும், 15ம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்கிறது. காமன்வெல்த் அமைப்பில், இடம் பெற்றுள்ள இந்தியா சார்பில், ...

26 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட கர்நாடகா ஒப்புதல்

Posted:

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்காக, 26 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட, கர்நாடக அரசை, காவிரி கண்காணிப்புக் குழு வற்புறுத்தியதை அடுத்து, தண்ணீர் திறக்க, கர்நாடகா சம்மதம் தெரிவித்துள்ளது.டில்லியில், நேற்று நடைபெற்ற, காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டதாவது:அரசிதழில் இறுதி தீர்ப்பு: கடந்த, பிப்ரவரி, 2ம் தேதி, மத்திய அரசின் அரசிதழில், காவிரி இறுதி தீர்ப்பு வெளியானது. மிகுந்த சிரமங்களுக்கு பிறகு, அரசிதழில் இறுதித் தீர்வு வெளியிடப்பட்டும், அந்த இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி, முக்கிய அம்சங்களை, ...

சி.பி.ஐ.,க்கு எதிராக கவுகாத்தி ஐகோர்ட் உத்தரவு விவகாரத்தை விடுவதாக இல்லை

Posted:

புதுடில்லி : 'சி.பி.ஐ., அமைப்பு, சட்டப்பூர்வமாக அமைந்தது இல்லை; யாரையும் கைது செய்யவோ அல்லது குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கோ, அதற்கு அதிகாரம் இல்லை' என, கவுகாத்தி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, வரும் திங்கள் கிழமை, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.அசாம் மாநிலத்தை சேர்ந்த, நவேந்திர குமார் என்பவர், தனக்கு எதிராக, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்யக்கோரி, கவுகாத்தி ஐகோர்ட்டில், மனு ...

நான் வித்தியாசமானவன்; பயங்கரவாதிகளுக்கு பணிய மாட்டேன்: மோடி ஆவேச பேச்சு

Posted:

லக்னோ : ''நான், வித்தியாசமானவன். பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன். பயங்கரவாதிகளை வேரோடு வீழ்த்துவோம். நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்காக, நாங்கள் எடுத்துள்ள சபதத்தை, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளால் முறியடிக்க முடியாது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சென்று, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று, உ.பி., மாநிலம், பராய்ச்சில் நடந்த கூட்டத்தில், அவர், அனல் பறக்க பேசினார்.அவர் ...

'தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை': ராகுல் பதில்

Posted:

புதுடில்லி : 'ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களில் நடந்த பிரசார கூட்டங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, சர்ச்சைக்குரிய வகையில், நான், எதுவும் பேசவில்லை' என, காங்., துணை தலைவர் ராகுல், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் உளவுப்படை:காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், 'உ.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்பு கொண்டு பேசியது' ...

மனச்சாட்சிப்படி பங்கேற்க கூடாது: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Posted:

சென்னை:பிரதமருக்கு மனச்சாட்சி உண்டு; அந்த மனசாட்சிப்படி, காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது, என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில் அவரது பேட்டி:இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக, டில்லி அமைச்சரவையில் என்ன பேசுகின்றனர் என்று, எனக்கு தெரியாது. நாங்கள் ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விட்டோம். வெளியில் இருந்து ஆதரவு என்பது, இப்போதைய பிரச்னையல்ல. பிரதமருக்கு மனச்சாட்சி உண்டு; அந்த மனசாட்சிப்படி பிரதமர் நடந்து கொண்டால் போதும். "இந்தியாவின் சார்பில் பிரதமரோ, பிறரோ, இலங்கையில் நடக்கும் ...

கம்போடியாவில் இருந்து 32,000 டன் மணல் இறக்குமதி: தனியார் நிறுவன முயற்சிக்கு வெற்றி

Posted:

சென்னை: கட்டுமான பணிகளுக்கு தேவையான, ஆற்று மணல் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கம்போடியாவில் இருந்து, 32 ஆயிரம் டன் மணலை இறக்குமதி செய்து, புதிய வாய்ப்பை உறுதி செய்துள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்பு, விதிமீறல், பசுமை தீர்ப்பாய தடை, "யார்டு' ஒப்பந்ததாரர்கள் முறைகேடு போன்ற காரணங்களால், தமிழகத்தில் செயல்பட்டு வந்த, 40க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், லாரிகளுக்கு ஒரு லோடு மணல் ...

ரயில்வே பணிக்கு தேர்வு எழுத வந்தவர்கள் வேதனை : தட்டச்சு இயந்திரம் வாடகை - 20 நிமிடங்களுக்கு ரூ.300

Posted:

சென்னை : 'ரயில்வே பணி தேர்வு எழுதுபவர், தட்டச்சு இயந்திரம் கொண்டு வர வேண்டும்' என்ற விதி அமலில் இருப்பதால், சென்னையில் ரயில்வே பணிக்கு தேர்வு எழுதியவர்கள், தட்டச்சு இயந்திரத்திற்கு, 20 நிமிடங்களுக்கு, 300 ரூபாய் வாடகை கொடுத்து அவஸ்தைக்கு உள்ளாயினர்.முதுநிலை எழுத்தர்:ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இளநிலை கணக்கு உதவியாளர் (ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டண்ட்ஸ்) மற்றும், முதுநிலை எழுத்தர் (சீனியர் கிளார்க்) பதவிகளுக்கான தேர்வு சென்னையில் நடந்து வருகிறது.இதற்கான பொது அறிவுத்தேர்வு மற்றும் கணக்கு தேர்வு முடிந்து, தட்டச்சு தேர்வு, கடந்த, ...

புதிய தலைமை செயலகத்தில் காரை பெயரும் கட்டடங்கள்

Posted:

அவசர கோலத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதால், பெரும்பாலான கட்டடங்களில், காரை பெயர்ந்து வருகிறது. அதை சீரமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.சென்னை, சேப்பாக்கம், வாலாஜா சாலையில் அமைந்துள்ள, புதிய தலைமை செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் பணி, 29 கோடி ரூபாய் செலவில், நடந்து வருகிறது.இதில், கட்டடத்தை இடிக்காமல், மருத்துவனைக்கான அறைகளாக மாற்றும் பணி மட்டும் நடக்கிறது.இந்நிலையில், பெரும்பாலான கட்டடங்களில், காரை பெயர்ந்து வருவதால், அந்த இடத்தில் மீண்டும் பெயின்ட் அடிக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™