Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காஷ்மீர் பிரச்னையில் பேச்சுவார்த்தை: நிபந்தனை விதித்த அமெரிக்கா

Posted:

வாஷிங்டன்: 'பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதை நிறுத்திக் கொண்டால், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் உதவத் தயார்' என, பாக்., அரசிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாக, புதிய தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில், பாக்., தூதராக பணியாற்றியவர், ஹூசைன் ஹக்கைன். இவர் தனது, அனுபவங்களை புத்தகமாக, வெளியிட்டுள்ளார். ஹூசைன் தன் புத்தகத்தில் கூறியிருப்பதாவது: கடந்த, 1950ம் ஆண்டு முதலே, பாகிஸ்தான், தெற்காசிய நாடுகளின் பிரச்னைகளில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தை விரும்பியது. காஷ்மீர் பிரச்னையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில், ...

இந்திய எல்லைக்கருகே ரேடார் நிலையம் அமைக்கும் சீனா

Posted:

பீஜிங்: இந்திய ராணுவ விமானங்களை, உளவு பார்ப்பதற்காக, காஷ்மீர் எல்லைப் பகுதியில், ரேடார் நிலையங்களை, சீனா அமைத்து வருகிறது.காஷ்மீரின், லடாக் பகுதியில் உள்ளது தவுலத் பெய்க் விமானப்படை தளம். இந்திய ராணுவத்தின், சி-130 ஹெர்குலிஸ் விமானத்தை, இங்கு, தரையிறக்கும்போது, சீனப் பகுதியில், ரேடார் நிலையம் அமைக்கப்படுவதை, இந்திய ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதை, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களும் உறுதி செய்துள்ளனர். தவுலத் பெய்க் ஓல்டு பகுதியில் உள்ள விமான ஓடுதளம், 43 ஆண்டுகளுக்குப் பின், 2008ல் திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், ஹெர்குலிஸ் ...

'ஏசி' பஸ்கள் பழுதாவது ஏன்? விவரம் சேகரிக்கிறது மத்திய அரசு

Posted:

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,), கீழ் வாங்கப்பட்ட, தாழ்தள, 'ஏசி' பஸ்களின் தரம் குறித்த விவரங்களை, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஆய்வு செய்து வருகிறது.நாட்டின் அனைத்து பெருநகரங்களிலும், அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற் காக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டம், 2005ல் துவக் கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 65 நகரங்களில், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்த, 4,724 கோடி ரூபாயில், 15 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இதில் மத்திய அரசின் பங்காக, 2,089 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகையை, அந்தந்த மாநில அரசுகள் ...

இலங்கை செல்ல பிரதமர் மன்மோகன் சிங் முடிவு? தமிழக கட்சிகளை சமாளிக்க யாழ்பாணம் பயணம்

Posted:

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதை எதிர்க்கும் தமிழக கட்சிகளை சமாளிக்க, "யாழ்பாணத்திற்கும் சென்று, அங்குள்ள தமிழர்களை பிரதமர் சந்திக்க வேண்டும்' என, பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் யோசனை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில், பிரதமர் இலங்கைக்கு பயணிப்பாரா, இல்லையா என்ற முடிவு, இன்று அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்ப்பு:இலங்கை தலைநகர், கொழும்பில், வரும் 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு நடைபெற உள்ளது. இதில், இந்தியாவின் சார்பில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க, தமிழக கட்சிகளிடம் ...

வெங்காய விலையை தொடர்கிறது தக்காளி: டில்லியில் மக்கள் திண்டாட்டம்

Posted:

புதுடில்லி:கடந்த மாதம், டில்லியில், 1 கிலோ வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தக்காளியும் அந்த விலையை எட்டியுள்ளது. சில்லரை கடைகளில், 1 கிலோ தக்காளி, 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.வெங்காயத்தால் கண்ணீர்:வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய உணவு வகைகளைத் தயாரிப்பது இல்லை. குறிப்பாக, வெங்காயம் விலை, அடிக்கடி உயர்ந்து, சமையல் செய்யும் இல்லத்தரசிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும், கண்ணீர் விட வைத்து விடுகிறது.தலைநகர் டில்லியில், கடந்த மாதம் முழுவதும், 1 கிலோ வெங்காயம், ??? ...

'மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க முடியாது': பா.ஜ., தலைவர்கள் அதிருப்தி

Posted:

புதுடில்லி:'நரேந்திர மோடிக்கு, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என்ற, பா.ஜ.,வின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. 'மோடிக்கு, போதிய பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவருக்கு, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவையில்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சமீபத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், ஆறு பேர் பலியாகினர். இதையடுத்து, நரேந்திர மோடிக்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், ...

'போதும்ப்பா... நிறுத்து!' பொதுக்கூட்டத்தில் ராகுலை இடைமறித்த பஞ்சாயத்து தலைவர்

Posted:

ஜம்மு:ஜம்முவில், காங்., துணை தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது, அவரை இடைமறித்து பேசிய, பஞ்சாயத்து தலைவர் ஒருவர், ''போதும் நிறுத்துங்க... மாநில அரசு, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கவில்லை. முதலில் அதிகாரத்தை கொடுக்கச் சொல்லுங்கள்,'' என, பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.மும்முரமாக பேச்சு:காங்., துணை தலைவர் ராகுல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஜம்முவில், நேற்று, அம்மாநில பஞ்சாயத்து அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க கூட்டத்தில் கலந்து கொண்டார். மேடையில், அவர், பஞ்சாயத்து அமைப்புகளால் ஏற்படும் நன்மை குறித்து, உணர்ச்சி பூர்வமாக பேசிக் ...

கோழைத்தனமான நடவடிக்கை: சாக்கோ மீது பாய்ந்தார் ராஜா

Posted:

'என் வாக்குமூல அறிக்கையை இணைக்காமலேயே, இறுதி அறிக்கையை சமர்பித்ததன் மூலம், உண்மைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளன. பார்லி., கூட்டுக்குழுவின் நம்பத்தன்மையை, பாதாளத்திற்கு கொண்டு சென்ற, அதன் தலைவர், பி.சி.சாக்கோவின் நடவடிக்கை, முற்றிலும் கோழைத்தனமானது' என, தி.மு.க., முன்னாள், மத்திய அமைச்சர் ராஜா, பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.காட்டமான கடிதம்:'2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த இறுதி அறிக்கை, சபாநாயகர் மீரா குமாரிடம் சமர்பிக்கப்பட்டுவிட்டு, அது பார்லிமென்ட்டின் ஒப்புதலுக்காக, காத்திருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று ...

சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Posted:

சென்னை : கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், சோதனை ஓட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 4,000 மணி நேரம், சோதனை ஓட்டம் நடைபெறும். அடுத்த ஆண்டு மத்தியில், மெட்ரோ ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில், குடியேறுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, போக்குவரத்து நெரிசலும், அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மெட்ரோ ரயில்: விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து வசதியை வழங்குவது, சென்னை மெட்ரோ ...

"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி

Posted:

திருநெல்வேலி:செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள "மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக நெல்லையை சேர்ந்த விஞ்ஞானி சுப்பையா அருணன் பணியாற்றியுள்ளது, சொந்த ஊர் மக்களுக்கு பெருமையாக உள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்றுமுன்தினம் விண்ணில் ஏவப்பட்ட "மங்கள்யான்' செயற்கைகோள் தயாரிப்பில், முக்கிய பங்காற்றியவர் சுப்பையா அருணன்,55. இவர், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா, ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™