Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

Posted: 06 Nov 2013 01:14 PM PST

ஆவடியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ஏற்காடு இடைத்தேர்தல்: காமராஜர் பற்றிய புத்தகத்துக்கு தடை

Posted: 06 Nov 2013 01:13 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் காமராஜர் பற்றிய புத்தகத்தை விநியோகம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழக போலீஸ் காவலில் உள்ள பக்ருதீனை விசாரிக்க என்ஐஏ திட்டம்

Posted: 06 Nov 2013 01:12 PM PST

தமிழக காவல் துறையினரால் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பக்ருதீனிடம் விசாரணை நடத்த என்ஐஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விரைவில் அத்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

ஜப்பான் செல்கிறார் அமைச்சர் ஜி.கே.வாசன்

Posted: 06 Nov 2013 01:12 PM PST

கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.

வானகரத்தில் அப்பல்லோ மருத்துவமனை: முதல்வர் திறந்தார்

Posted: 06 Nov 2013 01:11 PM PST

சென்னை வானகரத்தில் புதிய அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

"பரதேசி' திரைப்படம் தேர்வு: செழியன், பூர்ணிமா ராமசாமிக்கு லண்டன் சர்வதேச திரைப்பட விருது

Posted: 06 Nov 2013 12:53 PM PST

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் செழியன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நைஜீரியர் கொலையில் கோவா இளைஞர் கைது

Posted: 06 Nov 2013 12:30 PM PST

நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கோவா இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

வியாபாரிக்கு கொலை மிரட்டல்: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு

Posted: 06 Nov 2013 12:30 PM PST

வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரûஸச் சேர்ந்த கான்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் மீது டேராடூன் போலீஸôர் புதன்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல்: பாஜகவுடன் கொமுக கூட்டணி

Posted: 06 Nov 2013 12:23 PM PST

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.

தேமுதிக இளங்கோவன் மீது அவதூறு வழக்கு

Posted: 06 Nov 2013 12:22 PM PST

பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் மீது தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி கெடுபிடி: பக்ருதீன், பிலால் மாலிக் வழக்குரைஞர்கள் சேலம் நீதிமன்றத்தில் மனு

Posted: 06 Nov 2013 12:22 PM PST

"போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவதற்கு போலீஸார் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாகக் கூறி, அவர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் சேலம் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி: அரசுப் பேருந்து நடத்துநர் கைது

Posted: 06 Nov 2013 12:21 PM PST

மத்திய மிருகவதைத் தடுப்புப் பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாமக்கல் மாவட்டத்தில் 16 இளைஞர்களிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அரசுப் பேருந்து நடத்துநரை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், அவரது மனைவி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆந்திரத்துக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

Posted: 06 Nov 2013 12:21 PM PST

ஆந்திரத்தில் நடைபெறும் மறியல் காரணமாக, வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், எல்லைப் பகுதியில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம் மீனவர்களுக்கு நவ. 19 வரை சிறைக் காவல்

Posted: 06 Nov 2013 12:18 PM PST

எல்லை தாண்டியதாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களையும் இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நவம்பர் 19 வரை சிறைக் காவலில் வைக்க உத்திரவிட்டது. இதையடுத்து 13 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கம்பெனி செயலர்களுக்கான தேசிய மாநாடு

Posted: 06 Nov 2013 12:13 PM PST

இந்திய கம்பெனி செயலர்களுக்கான (ஐ.சி.எஸ்.ஐ.) தேசிய அளவிலான 3 நாள் மாநாடு சென்னை கிண்டியில் வியாழக்கிழமை (நவ.7) தொடங்குகிறது. மாநாட்டை கம்பெனி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சச்சின் பைலட் தொடங்கி வைக்கிறார்.

சாலை விபத்தில் சமூக சேவகர் சாவு

Posted: 06 Nov 2013 12:12 PM PST

சென்னை சென்ட்ரல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த சமூக சேவகர் சிவகுமார் புதன்கிழமை இறந்தார்.

உடல்நலம் காப்போம்

Posted: 06 Nov 2013 12:08 PM PST

தினசரி வாழ்க்கையில் எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நம்மால், நம் உடல் நலனுக்காக ஒரு அரை மணி நேரம்கூட ஒதுக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

மனிதன் இருக்கின்றானா?

Posted: 06 Nov 2013 12:07 PM PST

அண்ட சராசரத்தில் உயிருள்ள கிரகம் இந்தப் பூமி மட்டும் தானா? பொன்விழா கண்ட கேள்வி இது.

நமக்கு உரிமையில்லை...

Posted: 06 Nov 2013 12:06 PM PST

ஒற்றாடல் என்பது ராஜதந்திர உத்திகளில் ஒன்று. அப்படி இருக்கும்போது, என்.எஸ்.ஏ. எனப்படும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு, பல நாட்டு தலைவர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்டிருக்கிறது என்கிற செய்தி, இந்த அளவுக்குப் பரபரப்பாக வேண்டிய அவசியம்தான் என்ன?

ஸ்மால் பஸ்: இலைச் சின்னத்தை நீக்கக் கோரி மு.க.ஸ்டாலின் மனு

Posted: 06 Nov 2013 12:03 PM PST

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலைச் சின்னத்தை நீக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 06 Nov 2013 12:02 PM PST

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடலில் மூழ்கிய மீனவரின் சடலம் மீட்பு

Posted: 06 Nov 2013 12:02 PM PST

ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை காலையில் மீன் பிடிக்கச் சென்று கடலின் காற்றழுத்த தாழ்வு அதிகமாக இருந்ததால் ஒரு படகு கடலில் மூழ்கியது.

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை

Posted: 06 Nov 2013 12:02 PM PST

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லி பேரவைத் தேர்தல்: 5 தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 06 Nov 2013 12:01 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த தேசிய முற்போக்குத் திராவிட கழகம், ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை புதன்கிழமை வெளியிட்டது.

பாமக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 06 Nov 2013 12:00 PM PST

மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் 2-வது வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்டார். 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 06 Nov 2013 12:00 PM PST

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்

Posted: 06 Nov 2013 11:59 AM PST

கொழும்பில் வரும் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயந்தி நடராஜன் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் இன்று உலக செஸ் சாம்பியன் போட்டி

Posted: 06 Nov 2013 11:58 AM PST

உலக செஸ் சாம்பியன் போட்டியை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

என்.எல்.சி. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 06 Nov 2013 11:58 AM PST

என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தக் கால அவகாசம் தொடர்பான பேச்சுவார்த்தை, நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: பாலிவுட் பாடலுக்கு மிஷெல் ஒபாமா நடனம்

Posted: 06 Nov 2013 11:48 AM PST

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, அமெரிக்க வாழ் இந்தியக் குழந்தைகளுடன் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது, பாலிவுட் பாடலுக்கு அவர் நடனமாடினார்.

ஸ்மார்ட் போனில் ஒலி மாசுகளை கட்டுப்படுத்தும் வசதி

Posted: 06 Nov 2013 11:40 AM PST

நகரங்களில் ஒலி மாசுகளினால் ஏற்படும் இன்னல்களைக் கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய ஸ்மார்ட் போன்களை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி தலைமையிலான ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொழிலதிபர்களுக்கு துரித விசா சேவை: பிரிட்டன் அறிவிப்பு

Posted: 06 Nov 2013 11:39 AM PST

முக்கியத்துவம் வாய்ந்த தொழிலதிபர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி உடனடியாக விசா வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை பிரிட்டன் அறிமுகப்படுத்தவுள்ளது.

மோடிக்கான விசா கொள்கையில் மாற்றமில்லை: அமெரிக்கா

Posted: 06 Nov 2013 11:37 AM PST

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கான விசா கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் கொலை சம்பவம்: 35 பேர் கைது

Posted: 06 Nov 2013 11:36 AM PST

மாலியின் வடக்குப் பகுதியில் பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கடந்த 2 நாள்களில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலி போலீஸார் தெரிவித்தனர்.

சீனாவில் தொடர் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு, 8 பேர் காயம்

Posted: 06 Nov 2013 11:36 AM PST

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். அதில் காயமுற்ற 8 பேரில் ஒருவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது.

ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்காவுக்கு சாதகமாக பாகிஸ்தான் அறிக்கை: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Posted: 06 Nov 2013 11:35 AM PST

ஆளில்லா விமான தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடி நோய்: கட்டுப்படுத்தும் முறைகள்

Posted: 06 Nov 2013 11:31 AM PST

தமிழகத்தில் ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் பிரிசியன் கலப்பின பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இத்தகைய மாடுகள் அதிக பால் கொடுக்கும். நாட்டு பசுக்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால், மாடு வளர்ப்போர் நஷ்டம் அடைகின்றனர்.

பழ மரக்கன்றுகள் நட, உரமிட உகந்த தருணம்!

Posted: 06 Nov 2013 11:30 AM PST

மழை பெய்து வரும் தருணத்தில்தான் பழ மரக்கன்றுகள் நடவு செய்யவும், ஏற்கெனவே உள்ள மரங்களுக்கு உரமிட்டு பாரமரிக்கும் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுங்கத் தொகை செலுத்தாததால் இந்திய அழகியின் கிரீடம் பறிமுதல்

Posted: 06 Nov 2013 09:49 AM PST

"மிஸ் ஆசியா பசிபிக் வேர்ல்ட் 2013' பட்டம் வென்ற இந்திய அழகியின் வைரம் பதித்த கிரீடம் சுங்கத் தொகை செலுத்தாததன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம்: குற்றச்சாட்டு பதிவு குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 06 Nov 2013 09:48 AM PST

மக்களவையில் 2008 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக நடத்தபட்ட வாக்கெடுப்பில் எம்.பி. க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான தீர்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அலைக்கற்றை ஏல மதிப்பீட்டை உயர்த்த வேண்டும்

Posted: 06 Nov 2013 09:48 AM PST

நாடு தழுவிய மொபைல் போன் அலைக்கற்றை (1800 மெகா ஹெர்ட்ஸ்) ஏலத்தின் அடிப்படை விலையை 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஏழைக் குடும்பங்களுக்கு கிலோ 1 ரூபாய்க்கு அரிசி

Posted: 06 Nov 2013 09:47 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழைக் குடும்பங்களுக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும், மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களும் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

மிசோரம்: 5-ஆவது முறையாக அரியணை ஏறுவாரா லால்தன்ஹாவ்லா?

Posted: 06 Nov 2013 09:47 AM PST

இம்மாதம் நடைபெறவிருக்கும் மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில், அந்தமாநில முதல்வர் லால்தன்ஹாவ்லா போட்டியிடும் தொகுதியில் எதிர்க்கட்சிகள் அவருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

ஜாட் இனத்தவருக்கு ஓ.பி.சி அந்தஸ்தா? காங்கிரஸின் சதி

Posted: 06 Nov 2013 09:42 AM PST

ஜாட் இனத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிடுவது, காங்கிரஸ் கட்சியின் சதி என்று சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியிடம் குறுக்கு விசாரணை

Posted: 06 Nov 2013 09:42 AM PST

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய சாட்சியிடம் இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நீண்ட நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

சாலை விபத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி சாவு

Posted: 06 Nov 2013 09:41 AM PST

பஞ்சாபில் சாலையோர மரத்தில் வாகனம் மோதி புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

சீனாவுடனான "விசா' பிரச்னை: விரைந்து தீர்க்க பிரதமருக்கு கோரிக்கை

Posted: 06 Nov 2013 09:40 AM PST

அருணாசலப் பிரதேச மக்களுக்கு சீன அரசு வழங்கும் விசா தொடர்பான பிரச்னையை தீர்க்க பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணைஅமைச்சர் நினோங் யெரிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அசாமில் லேசான நிலநடுக்கம்

Posted: 06 Nov 2013 09:40 AM PST

அசாமில் புதன்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவான நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

எல்லையில் ஆளில்லா தரைவழி தொலையுணர்வு சாதனங்கள்

Posted: 06 Nov 2013 09:39 AM PST

பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவலைக் கண்காணிக்கும் வகையில் ஆளில்லா தரைவழி தொலையுணர்வு சாதனங்களை  (Unattended Ground sensor)  நிறுவ எல்லைப் பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி

Posted: 06 Nov 2013 09:38 AM PST

கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கும் பாரத ஸ்டேட் வங்கி, கடன் வட்டி விகிதத்தில் 0.20 சதவீதம் உயர்த்தியுள்ளது.

"தேர்தலுக்காக சிறுபான்மையினரை  கவர்ந்திழுக்க முயற்சிக்கிறார் மோடி'

Posted: 06 Nov 2013 09:37 AM PST

சிறுபான்மையினர் ஆதரவை பெறுவதற்காக பாஜக மற்றும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் ஆகிய விவகாரங்களைப் புறக்கணித்து வருவதாக சிவசேனை புதன்கிழமை குற்றம் சாட்டியது.

எரிபொருள் சிக்கனம்: பிரீமியம் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்

Posted: 06 Nov 2013 09:37 AM PST

எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக மைலேஜ் பெற ஏதுவாக பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை மத்திய நிதியமைச்சகம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

மிசோரம் தேர்தல்: வாக்களித்ததற்கான ஒப்புகைச் சீட்டு வசதியுடன் வாக்குப்பதிவு இயந்திரம்

Posted: 06 Nov 2013 09:35 AM PST

வாக்களித்ததற்கான ஒப்புகைச் சீட்டு பெறும் வசதியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.

தகவல் உரிமை ஆர்வலர் கொலை வழக்கு: பாஜக எம்.பி.யை ஆமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 2 நாள் அவகாசம்

Posted: 06 Nov 2013 09:35 AM PST

தகவல் உரிமை ஆர்வலர் அமித் ஜேத்வா கொலை வழக்கில் கைதான குஜராத் மாநில பாஜக எம்.பி. டினு போகா சோலங்கியை ஆமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய புலனாய்வுத் துறையினருக்கு (சிபிஐ) இருநாள் அவகாசம் அளித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

எங்கெங்கு காணினும் சச்சின்!

Posted: 06 Nov 2013 09:31 AM PST

கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எங்கெங்கு காணினும் சச்சின்மயமாக இருந்தது. சச்சினுக்கு இது 199-ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் சச்சினைக் காண மைதானத்தில் 40 ஆயிரம் ரன்கள் குவிந்திருந்தனர்.

மாநில கபடி: மணிமுத்தாறு சிறப்பு காவல்படைக்கு கோப்பை

Posted: 06 Nov 2013 09:28 AM PST

மணிமுத்தாறில் நடைபெற்ற மாநில அளவிலான சிறப்பு காவல்படை அணிகளுக்கு இடையிலான கபடிப் போட்டியில் மணிமுத்தாறு 12 சிறப்பு காவல்படை அணி முதலிடமும், உளுந்தூர்பேட்டை அணி 2 வது இடமும் பெற்றது.

கான்பூரில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3-ஆவது ஒரு தின ஆட்டம்

Posted: 06 Nov 2013 09:27 AM PST

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் கான்பூரில் நடைபெறவுள்ளது.

உலக செஸ் போட்டியில் ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு

Posted: 06 Nov 2013 09:26 AM PST

சென்னையில் நடைபெறவுள்ள உலக செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக இந்திய கிராண்ட்மாஸ்டர் சஹஜ் குரோவர் தெரிவித்தார்.

ஷமி வேகத்தில் சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள்

Posted: 06 Nov 2013 09:22 AM PST

இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 06 Nov 2013 09:10 AM PST

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் இரா.நந்தகோபால் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை: விபத்தில் இளைஞர் சாவு

Posted: 06 Nov 2013 09:06 AM PST

மதுரையில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

மகன் தாக்கியதில் தந்தை சாவு

Posted: 06 Nov 2013 08:55 AM PST

திருச்சி உய்யகொண்டான் திருமலை அருகே மகன் தாக்கியதில் தந்தை புதன்கிழமை உயிரிழந்தார்.

அயோடின் உப்பை பயன்படுத்த அறிவுறுத்தல்

Posted: 06 Nov 2013 08:52 AM PST

அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தினார்.

ராஜிவ்காந்தி சிலை சேதம்: காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கோபி கண்டனம்

Posted: 06 Nov 2013 08:50 AM PST

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் உருவச் சிலையை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.கோபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இறந்த பெண்ணின் உடலைக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு

Posted: 06 Nov 2013 08:43 AM PST

சவூதி அரேபியாவில் இறந்த, தஞ்சையைச் சேர்ந்த பெண்ணின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்த அந்தோணி யாகப்பா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காஸ் கசிவால் தீ விபத்து,2 வீடுகள் எரிந்து சேதம்

Posted: 06 Nov 2013 08:12 AM PST

திருவண்ணாமலை அருகே காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

10-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு எழுத்துத் தேர்வு

Posted: 06 Nov 2013 08:06 AM PST

வேலூர் மாவட்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 370 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (10-ம் தேதி) நடைபெறுகிறது.

நாங்களும் ஆடுறோம் சதுரங்கம்

Posted: 06 Nov 2013 08:02 AM PST

நாங்களும் ஆடுறோம் சதுரங்கம்; அரசியல் சதுரங்கம்!

இந்த நாளில் அன்று: நேரு கைது பற்றி ஸ்ரீ.சவர்க்கார்

Posted: 06 Nov 2013 07:52 AM PST

நேரு கைது பற்றி ஸ்ரீ.சவர்க்கார் அடக்குமுறை மூலம் ஒத்துழைப்பு ஏற்படுமா? பண்டிதர் போன்றோர் மனம் கசந்ததேன்?

யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்புகள் ஆர்பாட்டம்

Posted: 06 Nov 2013 07:35 AM PST

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கிலுள்ள  கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாக யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள்  இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆந்திர மாநிலத்துக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

Posted: 06 Nov 2013 07:34 AM PST

பௌத்த விகாரைகள் இராணுவ முகாம்களில் இருந்தே முளைக்கின்றன:யோகேஸ்வரன்

Posted: 06 Nov 2013 07:21 AM PST

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்த விகாரைகள் இராணுவ முகாம்களில் இருந்தே முளைத்துக் கொண்டிருக்கின்றன என  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து நாளை இறுதி முடிவு?

Posted: 06 Nov 2013 06:51 AM PST

இலங்கையில் வரும் நவ.15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகள் மாநாடு,நடைபெறுகிறது. அந்நாட்டில் நடந்த போர்க் குற்றங்கள் காரணமாக, இம்மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: தனியார் டி.வி.புகைப்பட கலைஞர் கைது

Posted: 06 Nov 2013 06:23 AM PST

சேத்துப்பட்டு பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் கௌதமன் (28). இவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் உதவி புகைப்பட கலைஞராக வேலை செய்து வருகிறார். கௌதமனுக்கு

நவ.10-ல் தமிழ்நாடு இளைஞர் சிறப்பு காவல்படை தேர்வு

Posted: 06 Nov 2013 06:13 AM PST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிய 280 தமிழ்நாடு இளைஞர் சிறப்பு காவல்படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர்

எச்.ஐ.வி. 2 ஆயிரம் பேர் சிகிச்சை பெறவில்லை

Posted: 06 Nov 2013 06:08 AM PST

இலங்கையில் நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பெறவில்லை என இலங்கை எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இளம்பெண்ணை கடத்திய இளைஞர் கைது

Posted: 06 Nov 2013 06:01 AM PST

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பாண்டிமீனா(17). இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சென்று கூறி வருவதாக சென்றாராம். இதனால் நீண்டநேரம்

அழகு ராஜா படத்தில் சில காட்சிகள் நீக்கம் 

Posted: 06 Nov 2013 05:59 AM PST

கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா.  தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

மோடியின் ஆன்லைன் பிரசாரம் காங்கிரசுக்கு தேவையில்லை: ஆஸ்கர் பெர்ணான்டஸ்

Posted: 06 Nov 2013 05:56 AM PST

மைசூர் மாவட்டத்தில் புதன்கிழமை பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் புத்தூர் மடாதிபதிகளிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக பிரதமர்

கந்த சஷ்டித் திருவிழா: திருச்செந்தூருக்கு நாளை 2 சிறப்பு ரயில்கள்

Posted: 06 Nov 2013 05:46 AM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக வரும் நவ. 8 ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து 2 சிறப்பு விரைவு ரயில்களை

மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Posted: 06 Nov 2013 05:44 AM PST

சேனல் 4 இயக்குநர் கெல்லம் மெக்ரேவுக்கு விசா தர மத்திய அரசு மறுத்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்

இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சித்திரவதைகள் தொடர்கிறது

Posted: 06 Nov 2013 05:37 AM PST

இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சித்திரவதைகள் தொடர்வாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்தும் கனடா போராடும்

Posted: 06 Nov 2013 05:20 AM PST

இலங்கை மனித உரிமை மீறல் நிலைமைகளுக்கு எதிராக கனடா தொடர்ந்தும் போராடும் என அந்தநாட்டு வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அதிகாரி கைது

Posted: 06 Nov 2013 05:14 AM PST

வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் கே.ஏ.சந்திரசேகர் (40). இவர் தனது உறவினரான அதேப் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அண்மையில் இருவரும்

நவ.14-ல் மெய்கண்டதேவ நாயனார் கோயில் கும்பாபிஷேகம்: 4 மடாதிபதிகள் பங்கேற்பு

Posted: 06 Nov 2013 04:47 AM PST

சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்டதேவ நாயனார் திருக்கோயில் மகா

அதிமுக பெண் நிர்வாகி வெட்டிக் கொலை: விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கைது

Posted: 06 Nov 2013 04:43 AM PST

சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனி அருகே உள்ள பொன்னுவேல் பிள்ளை தோட்டம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் அந்தப் பகுதி அதிமுக நிர்வாகியாக இருந்தார். பல்வேறு சமூக சேவை

மோட்டார் சைக்கிள் மீது குப்பை லாரி மோதல்: தந்தை, பள்ளி மாணவி சாவு

Posted: 06 Nov 2013 04:42 AM PST

ஆதம்பாக்கம் செகரிடேரியட் காலனியைச் சேர்ந்தவர் திருப்பதிராவ் (45). இவர் சென்னை அடையாறில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வக ஊழியராக வேலை செய்து வந்தார். திருப்பதியின் மகள்

சமூகநீதி ஆட்சி நடத்தி வருகிறேன்: சித்தராமையா

Posted: 06 Nov 2013 04:31 AM PST

மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், ஹெஜ்ஜிகே கிராமத்தில் புதன்கிழமை கபிலா நதியின் குறுக்கே ரூ.12.5 கோடி செலவில் கட்ட திட்டமிட்டுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியது: சமத்துவத்தை

ரூ.5.58 கோடி செலவில் கால்நடை மருத்துவமனைகள்: வீடியோ கான்பரஸ் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 06 Nov 2013 04:25 AM PST

கடலூர் மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அதிநவீந மற்றும் தரம் உயர்த்தப்பட்ட 21 கால்நடை மருத்துவமனைகளை

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலரையற்ற வேலை நிறுத்தம்

Posted: 06 Nov 2013 04:22 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஜெதாப்பட்டினத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள்  திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் 4 விசைப்படகுகளையும்,17

சாலை விபத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி சாவு

Posted: 06 Nov 2013 04:20 AM PST

பஞ்சாபில் சாலையோர மரத்தில் வாகனம் மோதி புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

ஜே.பி.சி. அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும்:சபாநாயகருக்கு ராசா கடிதம்

Posted: 06 Nov 2013 04:04 AM PST

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின்  அறிக்கையை திருப்பி அனுப்ப

சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு!

Posted: 06 Nov 2013 03:56 AM PST

பிப்ரவரி 8ம் தேதி அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த நாள். அன்றுதான் மாலை 4.30 மணிக்கு சுவாமிஜிக்கு விக்டோரியா ஹாலில் பொது வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இசைப்பிரியா  வீடியோவை இலங்கை இராணுவ படை வீரரே தந்தார்:கெலம் மக்ரே.

Posted: 06 Nov 2013 03:50 AM PST

இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற காணொளியை இலங்கை இராணுவ படை வீரர்   ஒருவரே தனக்குத் தந்தார் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் சனல் - 4 இயக்குநர் கெலம் மக்ரே.

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Posted: 06 Nov 2013 03:50 AM PST

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை

வைகை அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Posted: 06 Nov 2013 03:47 AM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்திட நீர் மட்டம் குறைந்து வருவதை தடுக்கவும், தற்போது பெய்து வரும் மழையுடன் கண்மாய்களில்

காமன் வெல்த் மாநாடு இலங்கை  அரசுக்கு வைக்கப்பட்டுள்ள பொறி-மனோ கணேசன்

Posted: 06 Nov 2013 03:45 AM PST

இலங்கை  அரசாங்கம் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தி கொள்ளையடிக்கும் சந்தர்ப்பத்தைதான் முதலில் கேட்டது. அதை மறுத்த காமன் வெல்த் அமைப்பு இன்று இவர்களுக்கு காமன் வெல்த் அரசு தலைவர்கள் மாநாட்டை தந்துள்ளது.

பாட்னா குண்டுவெடிப்பு: 'Nimbuzz' இணையதளம் மூலமாக உத்தரவிட்ட தீவிரவாதிகள்

Posted: 06 Nov 2013 03:29 AM PST

பாட்னா குண்டுவெடிப்புக்கான உத்தரவு 'Nimbuzz' இணையதளம் மூலமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலில் சிறுத்தைகள் தாக்கி ஒருவர் பலி; பெண் படுகாயம்

Posted: 06 Nov 2013 03:26 AM PST

இமாச்சல் பிரதேசம் பிதொரோகார்க் மாவட்டம் கியாராகான் வன பகுதியில் இன்று சிறுத்தை புலி தாக்கியதில் ஒருவர் பலியானார். இதே போல்

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி நெல்லையில் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Nov 2013 03:10 AM PST

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™