Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


செவ்வாயை சுற்ற புறப்பட்டது 'மங்கள்யான்!': 10 மாதங்கள் பயணம் செய்து ஆராய்ச்சியை துவக்கும்

Posted:

சென்னை : செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வர, 'இஸ்ரோ'வால், 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, 'மங்கள்யான்' செயற்கைகோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - எக்ஸ்.எல்., சி - 25 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, நேற்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 10 மாதங்கள் பயணம் செய்யும், 'மங்கள்யான்' செயற்கைகோள், அடுத்த ஆண்டு, செப்டம்பர், 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின், சுற்று வட்ட பாதையை அடைந்து, தன் ஆராய்ச்சியை துவக்கும்.செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம், வாயுக்கள் மற்றும் மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராய, 'இஸ்ரோ'வால், 'மார்ஸ் ...

'சர்தார் வல்லபாய் படேலை மதவாதி என நேரு விமர்சித்தார்': அத்வானி பதிலடி

Posted:

புதுடில்லி : 'ஐதராபாத் மகாணத்தை, இந்தியாவுடன் இணைக்க, ராணுவத்தை பயன்படுத்த வேண்டுமென, சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்திக் கூறியதால், ஆத்திரமடைந்த ஜவகர்லால் நேரு, அவரை, மதவாதி என, கடுமையாக விமர்சித்தார்' என, ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நாட்டின், முதல் உள்துறை அமைச்சரான, சர்தார் வல்லபாய் படேலை சொந்தம் கொண்டாடுவதில், சமீப காலமாகவே, காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில், குஜராத்தில் நடந்த விழாவில் பேசுகையில், 'சர்தார் ...

நாற்காலி போட்டவர், தடியடி வாங்கியவர் வேட்பாளர் ஆகலாம்: ராகுல் அதிரடி உத்தரவு

Posted:

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில், ஆளும் கட்சியான காங்கிரசுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் துணைத் தலைவர், ராகுலின் ஆவேச பேச்சால், மாநில நிர்வாகிகள் கண் கலங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ராஜஸ்தான், டில்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக, காங்கிரஸ் தொண்டர்கள் பலரும், கட்சி நிர்வாகிகளிடம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் வகையில், மனு கொடுத்து வருகின்றனர். ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையில் ...

லோக்சபா தேர்தலில் அமைச்சர்களை களம் இறக்க முதல்வர் திட்டம்

Posted:

சென்னை : லோக்சபா தேர்தலில், ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, போட்டியிட வைக்க, முதல்வர் முடிவு செய்திருப்பதாக, வெளியாகி உள்ள தகவல், அமைச்சர்களிடம் கலக்கத்தையும், எம்.எல்.ஏ.,க்களிடம், மகிழ்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, வரும் லோக்சபா தேர்தல், அக்னி பரீட்சையாக கருதப்படுகிறது. லோக்சபா தேர்தலில், கணிசமான வெற்றி பெற்றால் மட்டுமே, தி.மு.க., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், அரசியல் வாழ்வு என்ற சூழ்நிலை உள்ளது.ஆயத்தம்: ஆளும்கட்சியை பொறுத்தவரை, அனைத்து தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும் ...

ஏற்காடு இடைத்தேர்தல்: மாவட்ட செயலர்களுக்கு கருணாநிதி திடீர் கட்டளை

Posted:

ஏற்காடு இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு கடும் போட்டி கொடுத்து, 20 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற வேண்டும்; 15 ஓட்டுச்சாவடிகளுக்கு தலா, ஒரு மாவட்டச் செயலர் வீதம், மொத்தமுள்ள, 290 ஓட்டுச்சாவடிகளையும் பிரித்துக் கொண்டு, மும்முரமாக பணியாற்ற வேண்டும்' என, மாவட்டச் செயலர்களுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று கட்டளையிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர், 4ம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., இடையே, நேரடி போட்டி உருவாகியுள்ளது. அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, 61 பேர் ...

விஜயகாந்துடன் பேசிப்பேசி கட்சிகள் சோர்வு

Posted:

தே.மு.தி.க., தலைமை போடும் கடும் நிபந்தனைகளாலும், "பந்தா' பண்ணிக் கொள்வதாலும், அந்த கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பும், தேசிய கட்சிகள் கடும் விரக்தியில் உள்ளன. தமிழகத்தில், அரசியல் கட்சிகள் மத்தியில், தற்போது, அதிக கிராக்கி தே.மு.தி.க.,விற்கு தான் உள்ளது. ஒரு கவரச்சிகரமான பெண்ணை மணக்க முயற்சிக்கும் வாலிபர்கள் போல, மற்ற கட்சிகள் தே.மு.தி.க.,வை சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. யாராவது ஒருவருக்கு தலையசைத்துவிட்டால், மற்றவர்களை அலையவிடும் ஆனந்தம் போய்விடுமே என்ற கவலையில் தே.மு.தி.க.,வும் போக்கு காட்டி வருகிறது. கைவிட்டது தி.மு.க.,: ...

மங்கள்யான் செவ்வாய் கிரகம் செல்ல 10 மாதங்கள் ஏன்?

Posted:

''பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தை விட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் செவ்வாய் கிரகம் இருப்பதால், 'மங்கள்யான்' செயற்கைகோள், செவ்வாய் கிரகத்தை அடைய, 10 மாதங்களாகும்,'' என, 'அறிவியல்புரம்' இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறினார்.

பூமியின் 'அவுட் ஹவுஸ்' :'மங்கள்யான்' பயணம் குறித்து அவர் கூறியதாவது:பூமியில் இருந்து, 4 லட்சம் கி.மீ., தூரத்தில் சந்திரன் உள்ளது. சொல்லப் போனால், பூமி என்ற பங்களாவின், 'அவுட் ஹவுஸ்' போல சந்திரன் உள்ளது.ஆனால், இதைவிட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில், செவ்வாய் கிரகம் உள்ளது.பூமியும், செவ்வாய் கிரகமும், தனித் தனியான ...

'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல்

Posted:

பனாஜி : 'கோவாவில், வசிக்கும் நைஜீரிய மக்களை, வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம்' என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார்.கோவாவில் அத்துமீறல்:கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, ...

மண்ணுக்குள் மறையும் முன்னோர் வீரம்: சிதிலமடையும் வரலாற்று சின்னம்

Posted:

ஆனைமலை : தென் கொங்கு நாட்டில் (ஆனைமலை) பல்வேறு வரலாறு கூறும் சின்னங்கள் சிதிலமடைந்து யாராலும் கவனிக்கப்படாமல் உள்ளன. அரசு தொல்லியல் துறையினர் இது குறித்து அகழ்வராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.கொங்கு 24 நாடுகளில் ராஜகேசரி பெருவழி என அழைக்கப்பட்ட ஆறை நாட்டு பகுதியான இன்றைய கோவை நகர் பகுதி, அவினாசி வட்டம், பல்லடம் வட்டம் ஆகிய பகுதிகளிலும், வையாபுரிநாடு, நல்லுருக்காநாடு என அழைக்கப்பட்ட இன்றைய உடுமலை, பழநி வட்டங்களில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது முதுமக்கள் தாழி, கல்திட்டைகள், நாணயங்கள் கிடைத்தன. பல வரலாற்று செய்திகளும் வெளி வந்தன. அதுபோல் ...

சத்தீஸ்கரில் பா.ஜ., வெற்றி பெறும் : கருத்து கணிப்பில் தகவல்

Posted:

புதுடில்லி : சத்தீஸ்கரில், பா.ஜ., கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்' என, கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சத்தீஸ்கரில், வரும், 11 மற்றும், 19ம் தேதிகளில், இரு கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. அதில், கூறப்பட்டுள்ளதாவது: சத்தீஸ்கரில், மொத்தமுள்ள, 90 தொகுதிகளில், பா.ஜ., கட்சி, 60 இடங்களைப் பிடித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்கும். தற்போதைய முதல்வரான, ராமன் சிங், மூன்றாவது முறை முதல்வராவார். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™