Daily Thanthi |
- திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி–தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார்
- சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கியது சிற்பங்கள் சேதம்
- மங்கள்யான் விண்கலம் ஏவப்படும் காட்சி: தூர்தர்ஷனில் இன்று நேரடி ஒளிபரப்பு ‘இஸ்ரோ’ இணையதளத்திலும் பார்க்கலாம்
- சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்***
- ஈடன் கார்டன் மைதானம் விழாக்கோலம் கொல்கத்தாவில் தெண்டுல்கர் மோகம்
- மாற்றுத்திறனாளிகளுடன் நரேந்திர மோடி***
- வழியனுப்பு விழா கொண்டாட்டத்தால் தெண்டுல்கரின் ஆட்டம் பாதிக்காது ரிச்சர்ட்சன் சொல்கிறார்
- கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனை
- இந்திய அணி
- உலக டென்னிஸ் தர வரிசை: இந்திய வீரர் யுகி பாம்ப்ரி முன்னேற்றம் மகேஷ்பூபதி பின்னடைவு
| Posted: 04 Nov 2013 02:13 PM PST திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி – தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2–ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. |
| சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கியது சிற்பங்கள் சேதம் Posted: 04 Nov 2013 01:43 PM PST சங்கரன்கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி யாழி, சிற்பங்கள் சேதம் அடைந்தன. தொடர் மழை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் பலத்த இடி – மின்னலுடன் மழை பெய்த போது சங்கரநாராயண சுவாமி கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதம் அடைந்தன. கோபுரத்தில் சேதம் |
| Posted: 04 Nov 2013 01:10 PM PST சென்னை, மங்கள்யான் விண்கலம் இன்று ஏவப்படும் காட்சி, தூர்தர்ஷனிலும், இஸ்ரோ இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மங்கள்யான் |
| சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்*** Posted: 04 Nov 2013 01:05 PM PST இந்திய கடற்படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். மெக் காம்பெல் சென்னை வந்துள்ளது. 320 வீரர்களை கொண்டுள்ள அமெரிக்க போர்க்கப்பலை படத்தில் காணலாம். |
| ஈடன் கார்டன் மைதானம் விழாக்கோலம் கொல்கத்தாவில் தெண்டுல்கர் மோகம் Posted: 04 Nov 2013 12:45 PM PST கொல்கத்தா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் தெண்டுல்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக கொல்கத்தாவே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. சாதனை நாயகன் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சாதனை நாயகன் சச்சின் தெண்டுல்கர் 1989–ம் ஆண்டு நவம்பர் 15–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். |
| மாற்றுத்திறனாளிகளுடன் நரேந்திர மோடி*** Posted: 04 Nov 2013 12:44 PM PST குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், குஜராத்தி புத்தாண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்&மந்திரி நரேந்திர மோடி, மேடைக்கு வந்த மாற்றுத்திறனாளிகளை வணங்கி வரவேற்ற காட்சி. |
| வழியனுப்பு விழா கொண்டாட்டத்தால் தெண்டுல்கரின் ஆட்டம் பாதிக்காது ரிச்சர்ட்சன் சொல்கிறார் Posted: 04 Nov 2013 12:33 PM PST கொல்கத்தா வழியனுப்பு விழா கொண்டாட்டத்தால் தெண்டுல்கரின் ஆட்டம் பாதிக்காது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் மானேஜரும், முன்னாள் கேப்டனுமான ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். வழியனுப்பு விழா மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற 14 முதல் 18–ந் தேதி வரை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். |
| கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனை Posted: 04 Nov 2013 12:26 PM PST கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் 6-ந்தேதி சோதனை ஓட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவிருப்பதையட்டி, அமைச்சர் தங்கமணி, அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். |
| Posted: 04 Nov 2013 12:24 PM PST இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட காட்சி. |
| உலக டென்னிஸ் தர வரிசை: இந்திய வீரர் யுகி பாம்ப்ரி முன்னேற்றம் மகேஷ்பூபதி பின்னடைவு Posted: 04 Nov 2013 12:23 PM PST புதுடெல்லி உலக டென்னிஸ் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 73 இடங்கள் முன்னேறி 204–வது இடத்தை பிடித்துள்ளார். யுகி பாம்ப்ரி முன்னேற்றம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஏ.டி.பி.சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 21 வயதான இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6–7, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் பிராட்லி காக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த சீசனில் யுகி பாம்ப்ரி வென்ற முதல் பட்டமாகும். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |