Tamil News | Online Tamil News |
- மாதம்தோறும் 35 கிலோ அரிசி இலவசம்: சத்தீஸ்கர் காங்., தேர்தல் அறிக்கையில் உறுதி
- வங்க கடலில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: இன்று முதல் தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
- உள்நாட்டில் விற்பனையாகும் வெங்காயம் விலை குறையும்
- இலங்கைக்கு போக வேண்டாம்: மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் அதிருப்தி
- 'நான் ரொம்ப பிசி...' என்கிறார் ராகுல்: தேர்தல் கமிஷனுக்கு பதிலளிக்க நேரமில்லையாம்
- ஜெ., அதிரடி திட்டம்: சமுதாய சங்கங்களுக்கு அழைப்பு; பா.ம.க.,வுக்கு "செக்'
- ஆதர்ஷ் வித்யாலயா திட்டம் : அரசுக்கு கருணாநிதி கேள்வி
- ஐந்து ஆண்டுகளுக்கு பின் மின்தடை இல்லாத தீபாவளி
- இனி 'கேமரா' கண்காணிப்பில் சார் - பதிவாளர் அலுவலகங்கள்
- மாறியது பிணம்; போதை ஊழியர்கள் அலட்சியத்தால் அலைக்கழிப்பு
- நாளை திருப்பதி செல்ல முடியாது: ஜெகன் மோகன் கட்சி போராட்டம்
| மாதம்தோறும் 35 கிலோ அரிசி இலவசம்: சத்தீஸ்கர் காங்., தேர்தல் அறிக்கையில் உறுதி Posted: ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை, காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 'காங்., ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு, மாதம்தோறும், 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 11 மற்றும் 19 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ், தேர்தல் அறிக்கையை, நேற்று வெளியிட்டது. கட்சியின் பொருளாளரும், ராஜ்யசபா, எம்.பி., யுமான, மோதிலால் வோரா, ... |
| வங்க கடலில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: இன்று முதல் தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு Posted: சென்னை : 'வங்கக் கடலில் உருவாகியுள்ள, இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், இடியுடன் கூடிய மழையும், கடலோரப் பகுதிகளில், கனமழையும், சில இடங்களில், மிக கனமழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, கடந்த மாதம், 21ம் தேதி முதல், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. பெரும்பாலும், மாலையில் இருந்து இரவு முழுவதும் பெய்யும் இந்த மழையானது, கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுப்பெறும் போது, அதிகரிக்கிறது. இந்த வகையில், கடந்த 10 நாட்களுக்கு ... |
| உள்நாட்டில் விற்பனையாகும் வெங்காயம் விலை குறையும் Posted: புதுடில்லி:உள்நாட்டில், வெங்காயம் விலை உயர்ந்து வருவதை தடுக்கும் வகையிலும், உள்நாட்டில் குறைந்த விலைக்கு, வெங்காயத்தை கிடைக்கச் செய்வதற்காகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், 1 டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச விலையை, மத்திய அரசு, 1,150 டாலராக (69 ஆயிரம் ரூபாய்) உயர்த்தி உள்ளது.மூன்று மாதங்களாக உச்சத்தில்...:நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த குறைந்தபட்ச விலைக்கு குறைவாக, வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்பதால், உள்நாட்டில், வெங்காயம் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களாக, உள்நாட்டில், வெங்காயத்தின் விலை, மிகவும் ... |
| இலங்கைக்கு போக வேண்டாம்: மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் அதிருப்தி Posted: புதுடில்லி : காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கு, எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது. காங்கிரசைச் சேர்ந்த, மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், காங்., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக கட்சிகள் போர்க்கொடி:இலங்கை தலைநகர் கொழும்பில், இம்மாதம், 15ம் தேதியிலிருந்து, 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்கிறது. 'இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, ஏராளமான தமிழர்கள், ராணுவத்தால், கொல்லப்பட்டனர். எனவே, மனித உரிமை மீறல்கள் நடந்த இலங்கையில், ... |
| 'நான் ரொம்ப பிசி...' என்கிறார் ராகுல்: தேர்தல் கமிஷனுக்கு பதிலளிக்க நேரமில்லையாம் Posted: புதுடில்லி : தேர்தல் பிரசார கூட்டங்களில், மத மோதல்களை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதற்காகவும், சிறுபான்மையின மக்களை தவறாக சித்தரித்து பேசியதற்காகவும், தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள, நோட்டீசிற்கு பதிலளிக்க, கூடுதல் அவகாசம் வேண்டுமென, காங்., துணை தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.முசாபர்நகர் கலவரம்:காங்., துணை தலைவர், ராகுல், சமீபத்தில், ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களில், சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், 'உ.பி., முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின், ஐ.எஸ்.ஐ., உளவு ... |
| ஜெ., அதிரடி திட்டம்: சமுதாய சங்கங்களுக்கு அழைப்பு; பா.ம.க.,வுக்கு "செக்' Posted: லோக்சபா தேர்தலை சந்திக்க, அரசியல் ரீதியாக, பலம் வாய்ந்த கூட்டணி அமைக்காமல், சமுதாய சங்கங்களை அழைத்துப் பேசி, அ.தி.மு.க.,வுக்கு திரட்டி வருகிறார், முதல்வர் ஜெயலலிதா. அதன் தொடர்ச்சியாக, ஏழு சமுதாய சங்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜாதி பலத்தை நம்பி, சமூக ஜனநாயக கூட்டணி ஏற்படுத்தியுள்ள, பா.ம.க.,வின் திட்டத்துக்கு அ.தி.மு.க., "செக்' வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி பலத்தை நம்பாமல், கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும், துணைக்கு வைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலை சந்திக்கும் திட்டத்தில், அ.தி.மு.க., தலைமை இருக்கிறது. அதற்கு நேர்மாறாக, தி.மு.க.,வின் ... |
| ஆதர்ஷ் வித்யாலயா திட்டம் : அரசுக்கு கருணாநிதி கேள்வி Posted: சென்னை: மத்திய அரசின், ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்திற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க முன்வருமா? என, தி.மு.க., தலைவர் கருணநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும், மத்திய அரசின் ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்திற்கு, தமிழக அரசு உடனடியாக, தன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தை பாதிக்கக் கூடிய ஒரு திட்டத்தை, பள்ளிக் கல்வியில், மத்திய அரசு இப்போது நிறைவேற்ற முன்வருகிற நிலையி"ல், தமிழக அரசின் சார்பில், இந்நாள் வரை, எந்த எதிர்ப்புக் குரலும் வெளியே வரவில்லை. பள்ளிக் கல்வியைப் பெரிதும் ... |
| ஐந்து ஆண்டுகளுக்கு பின் மின்தடை இல்லாத தீபாவளி Posted: மின் நுகர்வு குறைவு, கூடுதல் மின்சார உற்பத்தி போன்ற காரணங்களால், ஐந்து ஆண்டுகளுக்கு பின், தீபாவளியன்று, குடியிருப்புகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.தமிழகத்தில், வீடுகள், 1.62 கோடி; விவசாயம், 20.35 லட்சம்; வணிகம், 32.59 லட்சம்; தொழிற்சாலை, 5.77 லட்சம்; இதர பிரிவு, 22.23 லட்சம் என, மொத்தம், 2.43 கோடி மின் இணைப்புகள் உள்ளன.தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளதால், 2008 முதல், மின் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டது.மின் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாநில கொள்முதல், கட்டுப்பாடு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும், ... |
| இனி 'கேமரா' கண்காணிப்பில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் Posted: சென்னை : தமிழகத்தில் அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களின் செயல்பாடு மற்றும் பத்திரப் பதிவுகளை, இணைய தள முறையில், கேமராக்கள் உதவியுடன், உயர் அதிகாரிகள், நேரடியாக கண்காணிக்கும் பணிகள், நாளை (நவ., 6ம் தேதி) முதல், நடைமுறைக்கு வருகிறது. பத்திரப் பதிவிலும், சில நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை தவிர்த்து விட்டு வரும் யாருக்கும், சார் - பதிவாளர் அலுவலகத்தில் எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது என்ற சூழலே ... |
| மாறியது பிணம்; போதை ஊழியர்கள் அலட்சியத்தால் அலைக்கழிப்பு Posted: மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், இறந்தவர் உடலை மாற்றி அனுப்பிய, பிரேத பரிசோதனை ஊழியர்களால், உறவினர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.மதுரை பசுமலையை சேர்ந்த தர்மராஜ் மகன் ஜான் அமிர்தராஜ், 30; எலக்ட்ரீசியன். இவர், நேற்று முன் தினம், சிம்மக்கல் பாலத்தில், "பைக்'கில் சென்ற போது, பஸ் மோதியது. தலைக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரவு இறந்தார்.அதேபோல், மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ராகவன். பட்டறையில் "டிங்கராக' உள்ளார். இவரது மனைவி ஜிச்சாபாய், 40, தீக்குளித்து, கடந்த மாதம், 4ம் தேதி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும், ... |
| நாளை திருப்பதி செல்ல முடியாது: ஜெகன் மோகன் கட்சி போராட்டம் Posted: திருப்பதி: ஆந்திரா பிரிவினையை எதிர்த்து, நாளையும், நாளை மறுதினமும், திருப்பதி வரும் தேசிய நெடுஞ்சாலைகளில், மறியல் போராட்டம் நடத்த, ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலப் பிரிவினையை எதிர்த்து, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இம்மாதம், 1ம் தேதி, பிரிவினைக்கு காரணமானவர்களின், உருவ பொம்மைகளை எரித்தனர். அதன்பின் கிராம சபை கூட்டி, மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களிடம் கையொப்பம் பெற்று, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, கடிதம் அனுப்பி உள்ளனர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 05,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |