Daily Thanthi |
- மெட்ரோ ரெயில் புதன்கிழமை சோதனை ஓட்டம் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
- பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி
- பாகிஸ்தான் ஆளுங்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் தலீபான்கள் மிரட்டல்
- இசைப்பிரியா படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் ராஜபக்சேவுக்கு இலங்கை மந்திரி கடிதம்
- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது பற்றி பிரதமரே முடிவு செய்வார் காங்கிரஸ் சொல்கிறது
- திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது 8–ந்தேதி புஷ்பாஞ்சலி நடக்கிறது
- லால் மசூதி வழக்கில் பர்வேஸ் முஷரப்புக்கு ஜாமீன் கிடைத்தது
- தேர்தல் ஆணையம் நோட்டீசுக்கு பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு ராகுல்காந்தி கடிதம்
- தோற்பவர்கள்தான் தடை கேட்பார்கள் கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது பா.ஜனதா கருத்து
- இலங்கை அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு
| மெட்ரோ ரெயில் புதன்கிழமை சோதனை ஓட்டம் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார் Posted: 04 Nov 2013 09:46 AM PST சென்னை, கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை புதன்கிழமை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். மெட்ரோ ரெயில் திட்டம் சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.வண்ணாரப்பேட்டை– சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்–பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2–வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. |
| பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி Posted: 04 Nov 2013 08:39 AM PST புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் 'பங்க்'குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்ய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 5 கிலோ சிலிண்டர் |
| பாகிஸ்தான் ஆளுங்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் தலீபான்கள் மிரட்டல் Posted: 04 Nov 2013 08:07 AM PST இஸ்லாமாபாத், அமெரிக்கா நடவடிக்கைகளுக்கு அரசு உதவி வருவதால் பாகிஸ்தான் ஆளுங்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தலீபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். குண்டு வீச்சில் மசூத் சாவு |
| இசைப்பிரியா படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் ராஜபக்சேவுக்கு இலங்கை மந்திரி கடிதம் Posted: 04 Nov 2013 07:56 AM PST கொழும்பு, இசைப்பிரியா படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மந்திரி டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார். இசைப்பிரியா கொலை |
| காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது பற்றி பிரதமரே முடிவு செய்வார் காங்கிரஸ் சொல்கிறது Posted: 04 Nov 2013 07:44 AM PST புதுடெல்லி, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது பற்றி பிரதமரே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மாநாடு |
| திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது 8–ந்தேதி புஷ்பாஞ்சலி நடக்கிறது Posted: 04 Nov 2013 07:37 AM PST திருவள்ளூர் திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. 8–ந்தேதி சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா சிறப்பாக தொடங்கியது. முதல் நாள் விழாவையொட்டி கோவிலில் உள்ள மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. |
| லால் மசூதி வழக்கில் பர்வேஸ் முஷரப்புக்கு ஜாமீன் கிடைத்தது Posted: 04 Nov 2013 07:27 AM PST இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் (70) பல்வேறு வழக்குகளில் கைதாகி தனது பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அதில் பெனாசிர் கொலை வழக்கு உள்பட 3 வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் லால் மசூதியில் ராணுவம் தாக்குதல் நடத்தி மத குருவை கொன்றதாக தொடரப்பட்ட புதிய வழக்கில் அவர் மீண்டும் கைதாகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். |
| Posted: 04 Nov 2013 06:42 AM PST புதுடெல்லி சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்துக்கு, பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டு ராகுல் காந்தி நேற்று கடிதம் அனுப்பினார். ஆனால் தேர்தல் ஆணையம் 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. சர்ச்சைக்குரிய பேச்சு |
| தோற்பவர்கள்தான் தடை கேட்பார்கள் கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது பா.ஜனதா கருத்து Posted: 04 Nov 2013 06:06 AM PST புதுடெல்லி, தேர்தல் கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது, தோற்பவர்கள்தான் தடை விதிக்க கோருவார்கள் என்று பா.ஜனதா கூறியுள்ளது. காங்கிரஸ் கோரிக்கை 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இத்தகைய கருத்து கணிப்புகள் விஞ்ஞானபூர்வமானவை அல்ல என்றும், எனவே, இவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை செயலாளர் கே.சி.மிட்டல் கடிதம் எழுதி உள்ளார். |
| இலங்கை அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு Posted: 04 Nov 2013 05:34 AM PST சென்னை, இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு நிலை |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |