Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கூடங்குளத்தில் 400 மெகாவாட்; வல்லூரிலும் மின் உற்பத்தி துவங்கியது

Posted:

சென்னையை அடுத்த, வல்லூர் அனல் மின் நிலையத்தில் உள்ள, இரண்டு அலகுகளிலும், நீண்ட நாட்களுக்கு பின், மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி அளவு, 400 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு, கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என, தெரிகிறது.சென்னை அடுத்த, வல்லூரில், மத்திய அரசின் என்.டி.பி.சி., மற்றும் தமிழக மின்சார வாரியம் இணைந்து, தலா, 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடைய, மூன்று அலகுகளை அமைத்து வருகின்றன. இதில், இரண்டு அலகுகளில், வர்த்தக ரீதியான மின் உற்பத்தி துவங்கியது.நிலக்கரி தட்டுப்பாட்டால், வல்லூர் அனல் ...

'இதவிட உனக்கு என்ன வேணும்ன்னு கடவுள் கேட்டார்'

Posted:

பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ பேரின் வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான்.வாழ்க்கை, இன்பத்தை நோக்கி செல்லும் மலர்ப் பாதை அல்ல. இடையிடையே, பாலைவனமும், மேடும் பள்ளமும் அதில் வரத் தான் செய்யும்.அந்த மாற்றத்தை எதிர்கொள்ளும் திராணி உள்ளவர்கள் தான், வாழ்வில் வெற்றி பெற்றவர்கள். மற்ற அளவுகோல்களின் அடிப்படையில் கணிக்கப்படும் வெற்றி, நிலையானது அல்ல. இதை நமக்கு உணர்த்துகிறார், செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,78. இந்த தள்ளாத வயதிலும் அவர் களைத்து கிடக்கவில்லை. உழைப்பை ...

மானிய விலை உர மருந்தால் சம்பா மகசூல் 'அம்போ': கடைமடையில் விவசாயிகள் 'கதறல்'

Posted:

நாகப்பட்டினம் : காவிரி கடைமடையான நாகை மாவட்டத்தில், சம்பா பயிர்கள் சூல் பருவத்தில், நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பயிர்கள் கருகி வருவதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.நாகை மாவட்டத்தில், வழக்கமான சம்பா சாகுபடி பரப்பான, 2 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கரில், நடப்பு ஆண்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. சாகுபடி:140 நாட்கள் சம்பா பயிரான பி.பி.டி., சி.ஆர்., ரக பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பயிர்கள் 100 நாட்கள் நன்றாக வளர்ந்து சூல் பருவத்தில், விளைநிலங்களில் பயிர்களை சூரை நோய் தாக்கியது.அதிகளவில் ...

5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் தி.மு.க.,வின் தேர்தல் யுக்தி மாறுமா? கட்சியின் பொதுக்குழுவை வரும் 15ம் தேதி கூட்டுகிறார் கருணாநிதி

Posted:

லோக்சபா தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து, விவாதிக்க, தி.மு.க., பொதுக்குழு, இம்மாதம் 15ம் தேதி, சென்னையில் கூடுகிறது. அதற்குள், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும் என்பதால், அதற்கேற்ப, தி.மு.க.,வின் தேர்தல் யுக்தி மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இக்கட்சியில் நடந்து வந்த உள்கட்சித் தேர்தல்கள், ஏற்காடு இடைத்தேர்தல் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உள்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, டிசம்பர், 1ம் தேதி, பொதுக்குழு கூடும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4ம் தேதி ஏற்காட்டில் ஓட்டுப்பதிவு, 8ம் தேதி ஐந்து மாநில தேர்தலுக்கான ...

தேர்தல் புறக்கணிப்பு கட்சிகளுக்கு "நோட்டா'வால் வந்தது சிக்கல்!

Posted:

ஏற்காடு தேர்தலில் நடுநிலை வகிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ள கட்சி நிர்வாகிகளை, அ.தி.மு.க., தி.மு.க., நிர்வாகிகள் வளைத்து போட்டு வருகின்றனர்.முதல் முறையாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், "நோட்டா' பட்டன் அறிமுகப்படுத்தியதால், தேர்தலை புறக்கணித்த கட்சிகளின் தொண்டர்கள், "நோட்டா' பட்டனை அழுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதை மீறி, அவர்கள் மாற்று கட்சிக்கு ஓட்டளித்தால், "நோட்டா'வில் பதிவாகும் ஓட்டு எண்ணிக்கை குறையும். புறக்கணிப்பு கட்சிகள் யாருக்கு ஓட்டளித்தனர் என்ற கேள்வி எழும்போது, அக்கட்சியின் சாயம் வெளுக்கும் நிலை ...

ஏற்காட்டில் வாக்காளர்களுக்கு ரூ. 2,000 வினியோகம்: இரவோடு இரவாக இரு கட்சிகளும் 'பட்டுவாடா!'

Posted:

தேர்தல் நெருங்க, நெருங்க ஏற்காடு தொகுதி முழுவதும் வாக்காளர்கள் உற்சாகமடைந்துள்ளனர், அ.தி.மு.க., சார்பில், 2,000 ரூபாய் பணம், வேட்டி, சேலைக்கு தனியாக, 500 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.வெளி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியினர், தொகுதி முழுவதும், இரவோடு, இரவாக வழங்கி முடித்தனர். தி.மு.க., சார்பில், இரண்டாம் கட்டமாக, 500 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.பிரசாரம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல், வரும், 4ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா, தொகுதிக்கு உட்பட்ட ஒன்பது இடங்களில், பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க., சார்பில் போட்டியிடும் மாறனை ...

பா.ஜ., செயற்குழுவில் நள்ளிரவு வரை கூட்டணி விவாதம்: தி.மு.க.,வுக்கு ஆதரவு அதிகம்?

Posted:

லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி, பா.ஜ.,வின் அகில இந்திய தலைமை தான் இதுவரை முடிவு செய்து வந்தது. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், கட்சியின் மாநிலக் குழு என்ன சொல்கிறதோ அதன்படி, கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பரமக்குடியில் நடந்த, தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வுடன்: இம்மாதம் 27, 28ம் தேதிகளில் நடந்த செயற்குழுவில், முதல் நாள் துவங்கிய கூட்டணி விவாதம், நள்ளிரவையும் தாண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளும் ...

என்னை வீழ்த்த நினைக்கும் முயற்சிகள் தோல்வியடையும்: மோடி அறைகூவல்

Posted:

புதுடில்லி: ''என்னை வீழ்த்த நினைக்கும், காங்கிரசின் முயற்சிகள் தோல்வி அடையும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறினார்.டில்லி சட்டசபைக்கு, 4ம் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ., - காங்கிரஸ், 'ஆம் ஆத்மி' கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.இடம்பெயர்ந்தோர் அதிகம்: பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், கிழக்கு டில்லியில் நேற்று நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பேசினார். உ.பி., மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து டில்லிக்கு ...

"மாற்றத்தை எதிர்பார்த்த மக்களை ஜெ., ஏமாற்றி விட்டார்': ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted:

கடந்த தேர்தல் மூலம், மாற்றத்தை எதிர்பார்த்த மக்களை, ஜெயலலிதா ஏமாற்றி விட்டார்,'' என, ஏற்காடு தொகுதி பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.ஏற்காடு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் மாறனை ஆதரித்து, ஸ்டாலின், 21 கிராமங்களில், நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் கருணாநிதி. இங்கு, தேர்தலுக்காக வரவில்லை. எந்த சூழலிலும், உங்களுக்காக போராடவும், வாதாடவும், குரல் கொடுப்பவன் என்கிற உரிமையோடு வந்திருக்கிறேன். இரண்டரை ஆண்டுகால ஆட்சியில், ஏற்காடு தொகுதியை ...

விண்வெளியில் சாதித்தது இந்தியா: செவ்வாய் நோக்கி புறப்பட்டது "மங்கள்யான்'

Posted:

சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட, "மங்கள்யான்' செயற்கைக்கோள், இன்று , புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.செவ்வாய் கிரகத்தை ஆராய, "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. "இஸ்ரோ' சார்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள், நவம்பர், 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™