Daily Thanthi |
- இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு சட்டசபை தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது புதன்கிழமை ஓட்டுப்பதிவு
- பொதுக்கூட்டத்தில் மகன்களுடன் ராப்ரிதேவி***
- மெட்ரோ ரெயில் பெட்டி
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர்வளையம் வைத்து மரியாதை
- காதல் தகராறில் கல்லூரி மாணவியை கொலை 2-ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் எலும்புக்கூடாக மீட்பு
- அடுத்த ஒன்பது ஆண்டுகளில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 55% உயரும்
- ஜப்பான் மன்னருக்கு வரவேற்பு
- நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம் வரி விலக்கு கடன்பத்திரங்களை வெளியிடுவதில் நிறுவனங்கள் ஆர்வம்
- தமிழகத்தில் நிலவும் மின் வெட்டுக்கு தி.மு.க. காரணம் அல்ல : மு.க.ஸ்டாலின் பேச்சு
- டெபாசிட்டுக்கு வட்டி வழங்கும் காலத்தை குறைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
| Posted: 30 Nov 2013 10:28 AM PST சேலம், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் (அ.தி.மு.க.) மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 4–ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. உச்சக்கட்ட பிரசாரம் இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறனும் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் ஏற்காட்டில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களும், தி.மு.க.வினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் தோரணங்கள் காட்சி அளிக்கின்றன. இதனால் தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது. ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்காடு தொகுதியில் கடந்த 28–ந் தேதி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். நடிகர்கள் ஆனந்தராஜ், தியாகு, ராமராஜன் மற்றும் கலைக்குழுவினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தா.பாண்டியன் மற்றும் இதர கட்சியினரும் சரோஜாவை ஆதரித்து பிரசாரம் செய்தனர். மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் பிரசாரம் செய்துள்ளனர்.தற்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார். அவர் நாளை (2–ந் தேதி) மாலை 5 மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். நாளையுடன் முடிவு ஏற்காடு தொகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே, ஏற்காடு தொகுதியில் தங்கி பிரசாரம் செய்துவரும் வெளிமாவட்டத்தினர் நாளை மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேறுமாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.திருமண மண்டபம், சமூக நலக்கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியாட்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என சோதனை நடத்தப்படும் என்றும், அதன் மூலம் தொகுதிக்குள் வெளியாட்கள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 'நோட்டா' பொத்தான் தமிழக தேர்தல் வரலாற்றில் ஏற்காடு இடைத்தேர்தலில் முதன் முதலாக, 'மேற்கண்ட வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்ற 'நோட்டா' பொத்தான் இடம் பெறுகிறது. இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளருக்கு அடுத்தபடியாக அமைகிறது. 290 வாக்குச்சாவடிகள் ஏற்காடு தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர். பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 94 பேர். திருநங்கைகள் 6 பேர். தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 120 இடங்களில் 290 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு 4–ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.ஒரு வாக்குச்சாவடிக்கு தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் என 290 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவின் போது பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று எந்திரம் பொருத்தும் வகையில் 35 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றமானவை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் அறிவித்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் என 600–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை தவிர மாவட்ட போலீசார் 500–க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.மொத்தம் உள்ள 290 வாக்குச்சாவடிகளில் 269 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது. இணையதள வசதி இல்லாத 21 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்க மத்திய அரசின் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது. தேர்தல் பணியில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என 1,402 பேர் ஈடுபடுகிறார்கள். News Category:Hot Topic Icon : News Group Category: |
| பொதுக்கூட்டத்தில் மகன்களுடன் ராப்ரிதேவி*** Posted: 30 Nov 2013 10:09 AM PST |
| Posted: 30 Nov 2013 10:05 AM PST |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர்வளையம் வைத்து மரியாதை Posted: 30 Nov 2013 10:00 AM PST |
| காதல் தகராறில் கல்லூரி மாணவியை கொலை 2-ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் எலும்புக்கூடாக மீட்பு Posted: 30 Nov 2013 10:00 AM PST திருச்சி, 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன கல்லூரி மாணவி, காதல் தகராறில் கொன்று காவிரி ஆற்றில் புதைத்த தகவல் வெளியானது. அவருடைய எலும்புகளை போலீசார் மீட்டனர். கல்லூரி மாணவி திருச்சி மாவட்டம் முசிறி ஆமூர் வடக்கு தெருவை சேர்ந்த சப்பானி என்பவரது மகள் ரஞ்சிதா (வயது 19). இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2–ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். ரஞ்சிதா வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து மெயின் ரோட்டில் உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு சென்றுவந்தார். ரஞ்சிதா கடந்த 23.2.2012 அன்று காலை சைக்கிள் நிறுத்தத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒருவருடன் ரஞ்சிதா செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி பஸ் வந்து நின்றபோது பஸ்சில் வந்த மாணவிகளிடம் தான் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறினார். ஐகோர்ட்டில் வழக்கு அதன்பிறகு ரஞ்சிதாவை காணவில்லை. அவருடைய சைக்கிள் மட்டும் சைக்கிள் நிறுத்தத்திலேயே இருந்தது. அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ரஞ்சிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. சைக்கிள் நிறுத்தம் அருகே காவிரி ஆற்றுக்கு செல்லும் புதர் பாதை வழியாக ரஞ்சிதா நடந்து சென்றதை சிலர் பார்த்துள்ளனர். ரஞ்சிதாவின் பெற்றோர் அங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வாத்தலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சிதாவை தேடிவந்தனர். ரஞ்சிதா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனுவை சப்பானி தாக்கல் செய்தார். அதன்பேரில் ஐகோர்ட்டு ரஞ்சிதாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மீண்டும் சப்பானி மனு செய்தார். அது விசாரணையில் உள்ளது. எலும்பு துண்டுகள் காவிரி ஆற்றுக்கு ரஞ்சிதா சென்ற பாதை வழியாக சப்பானி அவ்வப்போது சென்று ஏதாவது தடயம் இருக்கிறதா? என்று தேடிப்பார்ப்பது வழக்கம். அப்படி சென்றபோது ஒரு இடத்தில் எலும்பு துண்டு வெளியில் நீட்டிக்கொண்டிருந்ததை கண்டார். அதோடு மண்ணில் புதைந்த நிலையில் ஒரு செருப்பு, ஆரஞ்சு நிற கிழிந்த துணி ஆகியவை வெளியில் தெரிந்தது. அவை தனது மகளின் செருப்பு, ஆரஞ்சு நிற சுடிதார் என்று சந்தேகமடைந்த சப்பானி அந்த இடத்தை சிறிது தோண்டியபோது மேலும் சில எலும்புகள் கிடந்தன. உடனே இதுகுறித்து வாத்தலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கொன்று புதைப்பு போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் முசிறி தாசில்தார் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டியபோது மண்டை ஓடு மற்றும் இதர எலும்புகள் துண்டுதுண்டாக கிடந்தன. சுடிதார், உள்ளாடை, கைப்பை, டிபன் பாக்ஸ், அடையாள அட்டை, கைக்கடிகாரம், வளையல்கள், 3 சிம்கார்டுகள், சைக்கிள் சாவி ஆகியவையும் அந்த குழிக்குள் கிடந்தன. அவைகளை போலீசார் கைப்பற்றினர். இதனால் ரஞ்சிதா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது உறுதியானது. ரஞ்சிதாவை கொலை செய்தவர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. காதலன் எங்கே? ரஞ்சிதாவின் அண்ணன் அறிவழகனுடன் அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபர் கொத்தனார் வேலைக்கு செல்வார். அப்போது ரஞ்சிதாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக வளர்ந்தது. இது சப்பானிக்கு தெரியவந்ததால் அந்த வாலிபரை கண்டித்தார். அதன்பிறகு அந்த வாலிபரும், ரஞ்சிதாவும் செல்போனில் பேசி வந்தனர். ரஞ்சிதாவுக்கு, சப்பானி செல்போன் வாங்கித்தரவில்லை என்றாலும் தனியாக சிம்கார்டுகள் வாங்கி இரவல் போனை பயன்படுத்தி பேசி வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த வாலிபரின் நண்பரும் ரஞ்சிதாவுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சிதாவை அடைவதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் ரஞ்சிதா கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் புதைக்கப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாலிபர்களையும் போலீசார் தேட தொடங்கியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கி உள்ளது. image: category: |
| அடுத்த ஒன்பது ஆண்டுகளில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 55% உயரும் Posted: 30 Nov 2013 10:00 AM PST புதுடெல்லி, அடுத்த ஒன்பது ஆண்டுகளில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 55 சதவீதம் உயரும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி முன்னறிவிப்பு செய்துள்ளார். தற்போது நமது நிறுவனங்கள் ஆண்டுக்கு 21.50 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டுள்ளன. மொய்லியின் கணிப்புப்படி, 2022–க்குள் ஆண்டுக்கு 33.30 கோடி டன் எண்ணெயை சுத்திகரிக்கும் அளவிற்கு திறன் உயரும். செயற்கை ரப்பர் ஆலை இந்தியன் ஆயில் நிறுவனம் பானிப்பட்டில் செயற்கை ரப்பர் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. வீரப்ப மொய்லி இவ்வாலையை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது– செயற்கை ரப்பர் பெரும்பாலும் டயர் நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய ஆலை செயற்கை ரப்பருக்கான தேவையை பூர்த்தி செய்யும். நம் நாட்டில் டயர் தயாரிப்பு முழு உத்வேகம் பெற்று பெருமளவு அதிகரித்து வருகிறது. அதற்கு இணையாக செயற்கை ரப்பர் பயன்பாடு அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாகவும், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையிலும் இந்த உற்பத்திப் பிரிவை அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 1998–ஆம் ஆண்டில் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 6.20 கோடி டன் அளவிற்குத்தான் இருந்தது. சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு சுத்திகரிப்புத் துறையின் திறன் உயர்ந்து இன்று ஆண்டுக்கு 21.50 கோடி டன் என்ற அளவை எட்டியுள்ளது. நம் நாட்டில், 2012–13–ஆம் நிதி ஆண்டில் பெட்ரோலிய பொருள்கள் பயன்பாடு 15.50 கோடி டன்னாக இருந்தது. 2016–17–ஆம் நிதி ஆண்டில் பயன்பாடு 18.70 கோடி டன்னாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வாரி வழங்குகிறோம் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவடைவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.6.70 லட்சம் கோடிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளோம். தேசத்தின் செல்வத்தை கணிசமாக எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு வாரி வழங்குகிறோம் என்பதைத்தான் இது குறிக்கிறது. எனவே நமது அரசு இறக்குமதி கச்சா எண்ணெயை சார்ந்திருப்பதை குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். மேலும் இந்தியா எரிசக்தியில் தன்னிறைவு அடையும் வரை அயராது உழைக்கும். இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார். image: category: |
| Posted: 30 Nov 2013 09:55 AM PST |
| Posted: 30 Nov 2013 09:47 AM PST வரி விலக்கு அளிக்கும் கடன்பத்திரங்களை வெளியிடுவதில் நிறுவனங்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் என்.டி.பி.சி., தேசிய வீட்டு வசதி வங்கி, ஐ.ஆர்.எஃப்.சி. ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்கள் இம்மாதத்தில் வரி விலக்கு பெற்ற கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.13,850 கோடி திரட்ட உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் பல அரசுத் துறை நிறுவனங்கள் இவ்வகை கடன்பத்திரங்களை வெளியிடுவதற்கு அணிவகுத்து நிற்கின்றன. என்.டி.பி.சி. மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.டி.பி.சி. நிறுவனத்தின் வரி விலக்கு அளிக்கும் கடன்பத்திர வெளியீடு இம்மாதம் 3–ந் தேதி தொடங்குகிறது. இவ்வகை கடன்பத்திர முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. என்.டி.பி.சி. நிறுவனத்தின் 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட வரி விலக்கு கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் முறையே 8.66 சதவீதம் மற்றும் 8.73 சதவீதமாக உள்ளது. 20 ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்ட கடன்பத்திரங்களுக்கு 8.92 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும், சுமார் 11 நிறுவனங்கள் இவ்வகை கடன்பத்திரங்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில்... வரி விலக்கு கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதால் எவ்வித இடர்பாடும் ஏற்படாது. மேலும், வட்டி வருவாய்க்கு வரி வெலுத்த வேண்டியதில்லை. அத்துடன், அடுத்த 15–18 மாதங்களில் இவ்வகை கடன்பத்திரங்கள் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, நீண்ட கால அடிப்படையில் இவ்வகை கடன்பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என நிதி முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. எனினும், பருவமழை நன்றாக உள்ளதால் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரித்து பணவீக்கம் குறையும். எனவே, அடுத்த 12–15 மாதங்களில் கடனிற்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என ஜி.இ.பி.எல். கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் (கடன்பத்திரங்கள்) தீபக் பூஞ்ச்வாணி தெரிவித்துள்ளார். விலை உயரும் வட்டி விகிதம் குறையும்போது வங்கி டெபாசிட்டுகளில் முதலீடு குறைந்து, கடன்பத்திரங்களை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்குவதால் இவற்றின் விலை உயரும். முதலீட்டாளர்கள் அப்போது கடன்பத்திரங்களை விற்பனை செய்து ஆதாயம் பெறலாம். அதேசமயம், வங்கி வட்டி விகிதம் உயரும் நிலையில், கடன்பத்திர விலை குறையும். எனவே, நீண்ட கால அடிப்படையில் (2–3 ஆண்டுகள்) இவ்வகை கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதே சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடன்பத்திரம் விலை உயரும்போது எந்த அளவிற்கு ஆதாயம் கிடைக்கும் என்பதை பின்வரும் உதாரணம் வாயிலாக புரிந்து கொள்ளலாம். ஒருவர் 8.43 சதவீதம் வட்டி வழங்கும் (முதிர்வு காலம் 10 ஆண்டுகள்) வரி விலக்கு பெற்ற கடன்பத்திரத்தில் ரூ.1,000 முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். உள்நாட்டில் கடனிற்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைந்தால் இவ்வகை கடன்பத்திரங்கள் விலை 3 சதவீதம் உயரும். இதன்படி, மேற்கண்ட கடன்பத்திரத்தின் விலை ரூ.1,030–ஆக உயரும். கடன்பத்திரத்தை விற்பனை செய்யும் நிலையில் ஓராண்டில் முதலீட்டாளருக்கு 11.43 சதவீதம் (வட்டி + கடன்பத்திர விலை உயர்வு விகிதம்) ஆதாயம் கிடைக்கும். பொதுமக்கள் ஆர்வம் அண்மைக் காலமாக வரி விலக்கு கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இவ்வகை கடன்பத்திரங்களால் மத்திய அரசின் வருவாய் குறையும். இருப்பினும், இத்தகைய கடன்பத்திரங்களை சாலை போக்குவரத்து, விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் வெளியிடுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நிபுணர் ஒருவர் தெரிவித்தார். image: category:Tagging: |
| தமிழகத்தில் நிலவும் மின் வெட்டுக்கு தி.மு.க. காரணம் அல்ல : மு.க.ஸ்டாலின் பேச்சு Posted: 30 Nov 2013 09:42 AM PST சேலம், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு தி.மு.க. காரணம் அல்ல என்று ஏற்காடு தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசினார். 2–வது நாளாக ஸ்டாலின் பிரசாரம் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை மாலை ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2–வது நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது ராமலிங்கபுரம், சேசன்சாவடி, முத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து திறந்தவேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– மின் வெட்டு ஏற்காடு தொகுதி வாக்காளர்களாகிய உங்களை தேடி வந்திருக்கிறேன். நாடி வந்திருக்கிறேன். தி.மு.க. தலைவரால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை சந்திக்கக்கூடிய இயக்கம் தி.மு.க.தான்.ஏற்காடு தொகுதியில் 10 முறை தேர்தல் நடந்ததில், 6 முறை அ.தி.மு.க.வும், 4 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றிருக்கிறது. ஏன், இப்போது 5–வது முறையும் தி.மு.க. வெற்றிப்பெற போகிறது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசும், அதற்கு தி.மு.க.வும் உடந்தையாக இருப்பதாக தேர்தல் பிரசாரத்தின்போது முதல்–அமைச்சர் குற்றச்சாட்டு தெரிவித்து பேசியிருக்கிறார். இதை அவரால் நிரூபிக்க முடியுமா?. அவரது கேள்விக்கு இன்றைய தினம் (நேற்று) தி.மு.க. தலைவர், தனது அறிக்கையில் விரிவாக தெளிவுபடுத்தி உள்ளார். விலைவாசி உயர்வு தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2¾ ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த கால கட்டத்தில் பால், பஸ், மின் கட்டணங்கள் மட்டுமின்றி ஏன், மளிகை, காய்கறி கட்டணமும் விஷம்போல் உயர்ந்துள்ளது. இதுதவிர, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு போன்ற குற்றசம்பவங்கள் தான் அதிகளவில் நடந்து வருகிறது. சட்டம்–ஒழுங்கை கட்டுப்படுத்த அ.தி.மு.க. அரசு தவறிவிட்டது. இதற்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால் வருகிற 4–ந் தேதி நடைபெற உள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மாறனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.அதைத் தொடர்ந்து சிங்கிபுரம் காலனி, பழனியாபுரம், பொன்னாரம்பட்டி, சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், மன்னார்பாளையம், வே.புதூர், குமாரபாளையம், திருமனூர், வேப்பிலைப்பட்டி, வெள்ளாளகுண்டம், சேத்துக்குட்டை, காரிப்பட்டி, சின்னகவுண்டாபுரம், பெரிய கவுண்டாபுரம், ராம்நகர், அயோத்தியாபட்டணம் பகுதியிலும் தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். ஏற்காட்டில் இன்று... 3–வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஏற்காடு பகுதியிலும், நாளை (திங்கட்கிழமை)யும் தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். image: category:Tagging:News Group Category: |
| டெபாசிட்டுக்கு வட்டி வழங்கும் காலத்தை குறைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி Posted: 30 Nov 2013 09:32 AM PST மும்பை, சேமிப்பு மற்றும் குறித்த கால டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்கும் காலத்தை மூன்று மாதங்களுக்கும் கீழ் குறைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் வங்கிகளுக்கிடையில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வட்டி கிடைக்கும் வங்கிகள் இதற்கு முன்னர் மேற்கண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது அதற்கு அதிகமான காலத்தில் வழங்கி வந்தன. தற்போது வட்டி கணக்கிடும் காலத்தை குறைக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கணக்கிடுவதால் வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிக வட்டி கிடைக்கும். வட்டி கணக்கிடும் காலத்தை குறைப்பது குறித்த அக்டோபர் மாதத்தில் வெளியிட்ட பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. இதனால் வங்கிகளின் லாப வரம்பு குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.காமத் இது குறித்து கூறுகையில், ''டெபாசிட்டுகளுக்கான வட்டியை மாதந்தோறும் கணக்கிட்டு வழங்குவதால் வங்கிகளின் வட்டிச் செலவினம் அதிகரிக்கும். அதேசமயம், இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறிது ஆதாயம் கிடைப்பதால் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தாமலேயே அதிக டெபாசிட்டை ஈர்க்க முடியும்'' என்று தெரிவித்தார். திரட்டிய டெபாசிட் நவம்பர் 16–ந் தேதியுடன் நிறைவடைந்த இரு வார காலத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் 15.45 சதவீதம் அதிகரித்து ரூ.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிகள் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




