Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மதக் கலவர தடுப்பு மசோதாவுக்கு மம்தா கடும் எதிர்ப்பு

Posted: 30 Nov 2013 01:07 PM PST

மதக் கலவரத் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.

பயங்கரவாத சதித் திட்டம்: பெங்களூருவில் மருத்துவர் கைது

Posted: 30 Nov 2013 01:05 PM PST

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு சதித் திட்டம் தீட்டிய மருத்துவரை பெங்களூருவில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கைது செய்தனர்.

போலி வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிப்பு: ஹரியாணா அமைச்சர் மீது வழக்குத் தொடர உத்தரவு

Posted: 30 Nov 2013 01:03 PM PST

போலி வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ஹரியாணா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு குர்கான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்து அரசுக்கு எதிரான போராட்டம்: வன்முறையில் ஒருவர் சாவு

Posted: 30 Nov 2013 01:01 PM PST

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மூண்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

குண்டு வெடிப்பு வழக்கு கைதியிடம் செல்போன் பறிமுதல்

Posted: 30 Nov 2013 01:01 PM PST

கோவை மத்திய சிறையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து செல்போன், பணம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 30 Nov 2013 01:01 PM PST

கோவை குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவராக கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒடிஸா முதல்வருக்கு தெலங்கானா ஆதரவு தலைவர்கள் எச்சரிக்கை

Posted: 30 Nov 2013 01:00 PM PST

தெலங்கானா அமைக்கும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் கருத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று தெலங்கானா ஆதரவு தலைவர்கள் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கை எச்சரித்துள்ளனர்.

உருட்டுக்கட்டை மற்றும் மது பாட்டில்களால் தம்பதியைத் தாக்கிய 3 பேருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Posted: 30 Nov 2013 01:00 PM PST

உருட்டுக்கட்டை மற்றும் மது பாட்டில்களால் தம்பதியைத் தாக்கிய 3 பேருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வங்கியில் ரூ.3.35 லட்சம் மோசடி

Posted: 30 Nov 2013 01:00 PM PST

வங்கி காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ.3.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கோமாரி நோயால் கால்நடைகள் உயிரிழப்பு: தாமதமின்றி இழப்பீடு வழங்கக் கோரிக்கை

Posted: 30 Nov 2013 01:00 PM PST

கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Posted: 30 Nov 2013 12:59 PM PST

சூலூர் ரத்தினவேல் சுப்பிரமணியம் கல்லூரி தேசிய மாணவர் படையினர், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது

Posted: 30 Nov 2013 12:59 PM PST

கோவையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

நகருக்குள் புகுந்த 3 மான்களை பிடிக்க நடவடிக்கை

Posted: 30 Nov 2013 12:59 PM PST

கோவை பீளமேடு அருகே சுற்றித் திரியும் 3 மான்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

11, 13 இல் சி.இ.ஓ. அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Posted: 30 Nov 2013 12:59 PM PST

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 11, 13 ஆகிய நாள்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் (சி.இ.ஓ.) முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்

Posted: 30 Nov 2013 12:58 PM PST

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி திட்ட முகாமில், 9 மாவட்டங்களிலிருந்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழக உணவுப்பொருள் வழங்கல் ஆணையரகம், கோவை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல்

கோவை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Posted: 30 Nov 2013 12:58 PM PST

திருப்பூரில் போலீஸாரால் பத்திரிகை புகைப்படக் கலைஞர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, கோவை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டு முன்னேற்றத்திற்காக வாழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர்: நீதிபதி ராமசுப்பிரமணியன்

Posted: 30 Nov 2013 12:58 PM PST

இந்தியா ஏழ்மை அகன்று முதன்மையான நாடாக மாறவேண்டும் என வாழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறினார்.

பவானிசாகர் நீர்மட்டம்

Posted: 30 Nov 2013 12:57 PM PST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 67.47 அடியாக இருந்தது

மனவளக்கலை அறக்கட்டளை துணைத் தலைவருக்கு பாராட்டு விழா

Posted: 30 Nov 2013 12:57 PM PST

ஆன்மிக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்ற மனவளக்கலை அறக்கட்டளையின் துணைத் தலைவருக்கு, கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

உதகை கின்னஸ் சாதனை பூங்காவை மேம்படுத்த நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை

Posted: 30 Nov 2013 12:57 PM PST

உதகையில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த கின்னஸ் பூங்கா தற்போது நிர்வாகச் சீர்கேட்டால் பொலிவிழந்துள்ளது. இப்பூங்காவை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று, உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாலகொலா கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப முகாம்

Posted: 30 Nov 2013 12:56 PM PST

உதகை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் நடைபெற்றது.

வனத்தோட்டக் காவலர்கள் அரசுக்கு கோரிக்கை

Posted: 30 Nov 2013 12:56 PM PST

வனத்தோட்டக் காவலர்களுக்கு வனப் பணியாளர்களுக்கு வழங்கும் பயன்களை வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு வனத்தோட்டக் காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களுக்கு புத்தாடைகள்

Posted: 30 Nov 2013 12:55 PM PST

பெருந்துறை ரோட்டரி சங்கம் சார்பில் 40 குழந்தைகளுக்கு புத்தாடைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

பவானி நகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை 9-க்குள் அகற்றுமாறு எச்சரிக்கை அறிவிப்பு

Posted: 30 Nov 2013 12:55 PM PST

பவானி நகரில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், வீடுகள் போன்ற ஆக்கிரமிப்புகளை டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு நெடுஞ்சாலைத் துறை எச்சரித்துள்ளது.

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

Posted: 30 Nov 2013 12:55 PM PST

நிலஅளவைத் துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை ஒன்றிப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சத்தி- திம்பம் மலைப்பாதையில் பனிமூட்டம்

Posted: 30 Nov 2013 12:55 PM PST

சத்தியமங்கலம், திம்பம் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்குகின்றனர். சத்தியமங்கலம், திம்பம் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் திம்பம் வ

கருங்கல்பாளையம் கோவில் திருவிழா:காவிரி தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்

Posted: 30 Nov 2013 12:54 PM PST

கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் புனித நீரை தீர்த்தக் குடங்களில்

செவ்வாய் கிரக பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது மங்கள்யான்!

Posted: 30 Nov 2013 12:53 PM PST

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) நள்ளிரவு 12.49 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

மாவட்ட கராத்தே: மாணவர்கள்  பங்கேற்பு

Posted: 30 Nov 2013 12:52 PM PST

நீலகிரி மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள், விங்ஸ் நீலகிரீஸ் மாவட்ட மார்ஷியல் அகாதெமி சார்பில், குன்னூர், சாந்திவிஜயா பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன .

நீலகிரி மாவட்ட மின் நுகர்வோர் கவனத்திற்கு

Posted: 30 Nov 2013 12:52 PM PST

நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோரும் தங்களது மொபைல் எண்களை அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏக்குணி  பள்ளியில் வாழ்வியல் கல்வி முகாம்

Posted: 30 Nov 2013 12:51 PM PST

ஏக்குணி அரசு உயர்நிலைப் பள்ளியில் வாழ்வியல் திறன் கல்வி தொடர்பான பயிற்சி முகாம் தலைமையாசிரியர் என்.ஷீலாகுமாரி தலைமையில் நடைபெற்றது. ஏக்குணி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவ மாணவி

பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Posted: 30 Nov 2013 12:51 PM PST

கோவையில் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கியதாக போலீஸ் எஸ்.ஐ.யை கண்டித்து, அரசுப் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து

திருப்பூரில் பத்திரிகையாளர் மீது போலீஸார் தாக்குதல்: சாலை மறியல்

Posted: 30 Nov 2013 12:51 PM PST

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன் நாளிதழ் புகைப்படக் கலைஞர் மீது 4 போலீஸார் சரமாரியாக தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து திருப்பூர் பத்திரிகையாளர்கள் அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதியுதவி ரூ.10.20 கோடி வழங்கல்

Posted: 30 Nov 2013 12:50 PM PST

திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் (2013-14) 8,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ரூ.10.20 கோடி நிதியுதவி

கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாகப் புகார்

Posted: 30 Nov 2013 12:50 PM PST

வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள நூற்பாலைகளில் வெளியூர் தொழிலாளர்கள் பலர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

மாவட்ட கராத்தே போட்டி

Posted: 30 Nov 2013 12:50 PM PST

திருப்பூர் மாவட்ட கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

சைனிக் பள்ளி 52-ஆவது ஆண்டு விழா

Posted: 30 Nov 2013 12:49 PM PST

உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் 52-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்டல கேரம் போட்டி பெரியாயிபாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 30 Nov 2013 12:49 PM PST

பெரியாயிபாளையத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டிகளில், பெரியாயிபாளையம்  திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளிகளில் குறைகேட்பு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும்

Posted: 30 Nov 2013 12:49 PM PST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்  புகார் பெட்டிகள், குறைகேட்புக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கோமாரி நோய் தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Posted: 30 Nov 2013 12:48 PM PST

தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோமாரி நோய் தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ரூ. 22 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Posted: 30 Nov 2013 12:48 PM PST

காங்கயம் அருகே, அரிசி ஆலை ஊழியர்களைத் தாக்கி ரூ.22 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

காங்கயத்தில் அனுமதியின்றி செம்மண் கடத்தியதாக டிராக்டர் பறிமுதல்

Posted: 30 Nov 2013 12:48 PM PST

காங்கயத்தில் அனுமதியின்றி செம்மண் கடத்தியதாக வெள்ளிக்கிழமை டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது . காங்கயம்-பழையகோட்டை சாலையில் வெள்ளிக்கிழமை மாலை காங்கயம் வட்டாட்சியர் டி.கனகராஜ்,

செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

Posted: 30 Nov 2013 12:48 PM PST

திருவண்ணாமலை அருகே போலீஸார் பறிமுதல் செய்த நண்பனின் பைக்கை திரும்பத் தரக்கோரி, செல்போன் டவரில் ஏறி சுமார் 2 மணி நேரமாக போதையில் மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அறிவியல் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 30 Nov 2013 12:48 PM PST

உடுமலையை அடுத்துள்ள இராகல்பாவி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வுப் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

Posted: 30 Nov 2013 12:47 PM PST

பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனத்துறையிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தன்வந்திரி பீடத்தில் இன்று ருத்ர யாகம்

Posted: 30 Nov 2013 12:47 PM PST

வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 10 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மனைவிக்கு தீ வைத்ததாக கணவர், மாமியார் கைது

Posted: 30 Nov 2013 12:46 PM PST

குடியாத்தம் அருகே வரதட்சிணை வாங்கி வர மறுத்த மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக அப்பெண்ணின் கணவரும், மாமியாரும் கைது செய்யப்பட்டனர்.

"நோட்டா' ஆதரவு பிரசாரம்: மதுரை சட்டக் கல்லூரி மாணவி கைது

Posted: 30 Nov 2013 12:46 PM PST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, ஏற்காடு தொகுதி வாக்காளர்களிடம் "நோட்டா' பொத்தானுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவி, அவரது தந்தையுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Nov 2013 12:46 PM PST

தமிழக அரசுடன் செய்யப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த தவறிய கோழிகுஞ்சு நிறுவனங்களை கண்டித்து வேலூரில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

சுங்கச் சாவடியில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு

Posted: 30 Nov 2013 12:46 PM PST

வாணியம்பாடி சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகளுக்கு  அனுமதி மறுக்கப்பட்டது. சமரசத்தின் பேரில், தாற்காலிகமாக பஸ்கள் அனுமதிக்கப்படுகிறது.

ஆற்காட்டில் ஆர்.வேலு வாக்கு சேகரிப்பு

Posted: 30 Nov 2013 12:45 PM PST

ஆற்காடு நகரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.வேலு  சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

திருச்சானூரில் அன்னப்பறவை வாகனத்தில் தாயார் பவனி

Posted: 30 Nov 2013 12:45 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் சனிக்கிழமை இரவு அன்னப்பறவை வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்தார்.

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 30 Nov 2013 12:45 PM PST

வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

டீசல் வாங்குவதில் முறைகேடு: மேல்விஷாரம் நகராட்சி மீது கவுன்சிலர் புகார்

Posted: 30 Nov 2013 12:45 PM PST

மேல்விஷாரம் நகராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Posted: 30 Nov 2013 12:45 PM PST

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் ராயல் மெட்ரிக். பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக கட்டட ஒப்பந்ததாரர் மீது அரசு டாக்டர் புகார்

Posted: 30 Nov 2013 12:44 PM PST

வேலூரில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சத்தை ஏமாற்றியதாக கட்டட ஒப்பந்ததாரர் மீது அரசு டாக்டர் புகார் தெரிவித்தார். அதையடுத்து அந்த கட்டட ஒப்பந்ததாரரை பாகாயம் போலீஸார் தேடி

வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது: ரூ.5லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

Posted: 30 Nov 2013 12:44 PM PST

ஆம்பூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை உமர்ஆபாத் போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனர்.

உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் வேலூர் மாவட்டத்தில் தேங்காய் விலை கடும் உயர்வு

Posted: 30 Nov 2013 12:44 PM PST

உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் வேலூர் மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு தேங்காயின் விலை ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.

வேலூரில் போலீஸார் கொடி அணிவகுப்பு

Posted: 30 Nov 2013 12:44 PM PST

வேலூரில் ஆயிரத்துக்கும மேற்பட்ட போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது .

அரக்கோணம் பகுதியில் திருடு போகும் கோயில் சூலங்கள்

Posted: 30 Nov 2013 12:43 PM PST

அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக கோயில்களில் சூலங்கள் மட்டும் திருடு போகின்றன. இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

வாலாஜா வட்டத்தில்  தேசிய மக்கள் தொகை பதிவு

Posted: 30 Nov 2013 12:43 PM PST

வாலாஜா வட்டத்தில் தேசிய மக்கள் கணக்கெடுப்பு 2011 ஐ தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குழந்தை திருமணத்தை தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்

Posted: 30 Nov 2013 12:43 PM PST

வேலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த சமூகநலத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியன ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் கேட்டுக் கொண்டார்.

வேலூர்

Posted: 30 Nov 2013 12:42 PM PST

திருப்பூர்

Posted: 30 Nov 2013 12:42 PM PST

வி.ஐ.பி.களுக்கு ஒருநாளில் ஒரு தரிசனமே அனுமதி

Posted: 30 Nov 2013 12:31 PM PST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் வி.ஐ.பி.க்கள் ஒரு நாளில் ஒரு சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான செயல் இணை அதிகாரி தெரிவித்தார்.

நடைபாதை பக்தர்கள் ஓய்வெடுக்க நாற்காலிகள்

Posted: 30 Nov 2013 12:30 PM PST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க நடைபாதையாக வரும் பக்தர்களுக்கு க்யூ வரிசையில் ஓய்வெடுக்க நாற்காலிகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

2014-ஆம் ஆண்டு தேவஸ்தான காலண்டர்கள் வெளியீடு

Posted: 30 Nov 2013 12:29 PM PST

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2014-ஆம் ஆண்டுக்கான காலண்டரையும், டைரியையும் சனிக்கிழமை வெளியிட்டது.

பூச்சிமருந்து குடித்தவர் சாவு

Posted: 30 Nov 2013 12:26 PM PST

கொரடாச்சேரியில் பூச்சிமருந்து குடித்த விவசாயி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கொரடாச்சேரி அருகே மலையூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (55). இவரது மனைவி  சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மாரிமுத்துவுக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாம்.

ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருப்பு

Posted: 30 Nov 2013 12:26 PM PST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தர்ம தரிசனத்தில் பக்தர்கள் சனிக்கிழமை 15 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் 5 மணிநேரமும் காத்திருந்தனர்.

காரைக்கால் பள்ளிகளில்டிச. 4 முதல் 11 வரைகல்வி வழிகாட்டல் கருத்தரங்கம்

Posted: 30 Nov 2013 12:26 PM PST

காரைக்கால் மேல்நிலைப் பள்ளிகளில் வரும் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

கோட்டூர் அருகே வீடு, கடைகள் தீக்கிரை

Posted: 30 Nov 2013 12:25 PM PST

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் கூரை வீடு, 2 கடைகள் எரிந்து நாசமடைந்தன.

முன்னாள் எம்எல்ஏ ரத்தினராஜ் காலமானார்

Posted: 30 Nov 2013 12:25 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ். ரத்தினராஜ் (74) நாகர்கோவில் கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் மறியல்

Posted: 30 Nov 2013 12:25 PM PST

கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா பயிருக்கான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் 10 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி தேமுதிக எம்எல்ஏவின் மகள் சேலம் போலீஸில் ஆஜர்

Posted: 30 Nov 2013 12:25 PM PST

காதல் திருமணம் செய்து கொண்ட தருமபுரி தேமுதிக எம்.எல்.ஏ.வின் மகள், தனது கணவருடன் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சேலம் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆஜரானார்.

கைபேசி மூலம் மணியார்டர் சேவை தொடக்கம்

Posted: 30 Nov 2013 12:24 PM PST

காரைக்கால் அஞ்சல் அலுவலகத்தில் செல்போன் மூலம் மணியார்டர் அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

முறையாக கூலி வழங்கக் கோரி மறியல்

Posted: 30 Nov 2013 12:24 PM PST

திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலத்தில் வேலை உறுதித் திட்டத்தில் முறையாக கூலி வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நூதன முறையில் ரூ. 45 ஆயிரம் திருட்டு

Posted: 30 Nov 2013 12:24 PM PST

பொறையாறு சந்தைவெளித் தெருவில் மளிகைக் கடை வைத்திருப்பவர் முகமது இஸ்மாயில். இவர் சனிக்கிழமை காலை கடையில்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

Posted: 30 Nov 2013 12:23 PM PST

கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேன் கவிழ்ந்து விபத்து : 13 பக்தர்கள் காயம்

Posted: 30 Nov 2013 12:23 PM PST

வந்தவாசி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உள்பட மொத்தம் 13 பக்தர்கள் காயம் (படம்)அடைந்தனர்.

ஆசிரியர்களை அலுவலகப் பணியில் ஈடுபடுத்துவதற்கு கண்டனம்

Posted: 30 Nov 2013 12:23 PM PST

கீழையூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகப் பணியில், பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

சைக்கிள்கள் திருடியவர் கைது

Posted: 30 Nov 2013 12:23 PM PST

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கோடியக்கரை கடற்கரையில்கரை ஒதுங்கிய பாலித்தீன் பை: சுங்கத் துறையினர் விசாரணை

Posted: 30 Nov 2013 12:23 PM PST

கோடியக்கரை கடற்கரையில் சனிக்கிழமை கரை ஒதுங்கிய பாலித்தீன் பை தொடர்பாக சுங்கத் துறையினர் விசாரிக்கின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

Posted: 30 Nov 2013 12:22 PM PST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆங்கில மொழியாசிரியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இளையோர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம்

Posted: 30 Nov 2013 12:21 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர் நியமிக்க வலியுறுத்தல்

Posted: 30 Nov 2013 12:21 PM PST

கந்தர்வகோட்டை அரசு  சித்த மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்தும் நில

டீசல் மீதான விற்பனை வரி 12.5 சதமாகக் குறைக்க வலியுறுத்தல்

Posted: 30 Nov 2013 12:21 PM PST

டீசல் மீதான விற்பனை வரியை 12.5 சதமாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உண்ணாவிரதம்

Posted: 30 Nov 2013 12:21 PM PST

பொன்னமராவதியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வட்டார வள மைய மேற்பார்வையாளரின் நடவடிக்கைகளைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதப் போராட்

தமிழர் விரோதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா

Posted: 30 Nov 2013 12:20 PM PST

தமிழர் விரோதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா.

மணல் பதுக்கி விற்பனை: 17 பேர் மீது வழக்கு

Posted: 30 Nov 2013 12:20 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளி பதுக்கி விற்பனை செய்ததாக 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்க எதிர்ப்பு

Posted: 30 Nov 2013 12:20 PM PST

விளை நிலங்களில் கெயில் நிறுவனத்திற்கான காஸ் குழாய்களை பதிக்க விடமாட்டோம் என்றார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன். இதுகுறித்து கரூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நங்கம் காட்டுவாரியை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 30 Nov 2013 12:19 PM PST

புதர் மண்டி கிடக்கும் நங்கம் காட்டு வாரியை தூர் வார வேண்டும் என குறிச்சி நகர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவசமாக சூரிய மின்சக்தி சாதனங்கள் வழங்க வலியுறுத்தல்

Posted: 30 Nov 2013 12:19 PM PST

கரூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்து மக்களுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனங்களை மாவட்ட நிர்வாகம் இலவசமாக வழங்க வேண்டுமென கரூரில் அண்மையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வங்கி மேலாளர் வீட்டில் நகை திருட்டு

Posted: 30 Nov 2013 12:19 PM PST

கரூரில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரைப் பவுன் நகையை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.

"மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்'

Posted: 30 Nov 2013 12:18 PM PST

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபடவேண்டும் என்றார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி.

குழந்தைகளுக்கு சத்துப்பொருள்கள் வழங்கல்

Posted: 30 Nov 2013 12:18 PM PST

கரூர் மாவட்டம் குளித்தலையில் உடல் எடை மிகவும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 30 Nov 2013 12:18 PM PST

குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின் போது மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 30 Nov 2013 12:17 PM PST

கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் நிறுவன அறங்காவலர் ஆர். சாமியப்ப கவுண்டர் நினைவு குழந்தைகள் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மண்டல சாரண, சாரணிய திறனறிதல் போட்டி: கரூர் பள்ளி முதலிடம்

Posted: 30 Nov 2013 12:17 PM PST

மண்டல அளவிலான சாரண, சாரணிய திறனறிதல் போட்டியில் பி.ஏ.வித்யா பவன் பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தல்:அதிமுகவுக்கு திரிணமூல் காங்கிரஸ்  ஆதரவு

Posted: 30 Nov 2013 12:17 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று கரூர் வெண்ணெய்மலையில் சனிக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அடிப்படை வசதிகள்  இல்லாத அரசு உயர்நிலைப்பள்ளி : மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி

Posted: 30 Nov 2013 12:16 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™