Tamil News | Online Tamil News |
- தீபாவளி நன்னாளில் சரக்கு விற்பனை ரூ.154 கோடி: இலக்கை தாண்டி "டாஸ்மாக்' கஜானா நிரம்பியது
- கருத்து கணிப்புகளை வெளியிட காங்., எதிர்ப்பு: பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருப்பதால் திடீர் முடிவு
- கருணாநிதி - சிதம்பரம் சந்திப்பு அதிருப்திகளை குறைக்கும் முயற்சி : அடுத்தடுத்து உறவை சீராக்க திட்டம்
- இலங்கைக்கு பிரதமர் செல்ல வேண்டுமா? கருணாநிதி கேள்வி
- ஏற்காடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி? வேட்பாளர் அறிவிப்பு எப்போது?
- தீபாவளிக்கு தங்கம் விற்பனை 40 சதவீதம் சரிவு: மக்கள் ஆர்வம் குறைகிறதா?
- "மொட்டை மலை' ஆகிறது மேகமலை: ஊழல் அதிகாரி விவகாரம் விஸ்வரூபம்
- தேர்தலுக்கு ஓட்டுக்கேட்டு போகும் அரசியல் கட்சிகள் ஜாக்கிரதை
- அரசு அங்கன்வாடி மையத்தில் மத பிரசாரம்: கடும் அதிருப்தியில் பகுதிவாசிகள்
- தெலுங்கானா தனி மாநில விவகாரம் : காங்கிரஸ், தெலுங்கு தேசம் திணறல்
| தீபாவளி நன்னாளில் சரக்கு விற்பனை ரூ.154 கோடி: இலக்கை தாண்டி "டாஸ்மாக்' கஜானா நிரம்பியது Posted: தீபாவளியை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 154 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன. தமிழகத்தில், சென்னை மண்டலம், 1,085; கோவை, 954; மதுரை, 1,752; சேலம், 1,336; திருச்சி மண்டலம், 1,711 என, மொத்தம், 6,838 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 150 கோடி ரூபாய் மதி"ப்பிலான, மது வகைகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதனால், 12 நாட்களுக்கு தேவையான மது வகைகள், கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டன. ... |
| கருத்து கணிப்புகளை வெளியிட காங்., எதிர்ப்பு: பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருப்பதால் திடீர் முடிவு Posted: புதுடில்லி : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பற்றிய கருத்து கணிப்புகளில், பா.ஜ.,வுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாவதால், காங்கிரஸ் கட்சி, கலக்கம் அடைந்துள்ளது. இதனால், 'தேர்தலின் போது, கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், கருத்துக் கணிப்புகளை தடை செய்வதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.'ஓட்டு பதிவு துவங்குவற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து, தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை, பத்திரிகைகளோ, 'டிவி' சேனல்களோ வெளியிடக் கூடாது' என, தேர்தல் விதிமுறை ... |
| கருணாநிதி - சிதம்பரம் சந்திப்பு அதிருப்திகளை குறைக்கும் முயற்சி : அடுத்தடுத்து உறவை சீராக்க திட்டம் Posted: டில்லியில் நடந்த, 15 கட்சிகளின் மூன்றாவது அணிக்கூட்டத்தில், அ.தி.மு.க., பங்கேற்றதால், காங்கிரஸ் பா.ஜ., கட்சிகளுடன், அ.தி.மு.க., கூட்டணி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தி.மு.க.,வுடன் ஏற்பட்டுள்ள விரிசலை போக்கி, அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பித்துக் கொள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் திடீரென சந்தித்து பேசியுள்ளார். மேலும், இம்மாதம், 7ம் தேதி, கோவையில், காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைப்பதால், "தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மலருமா?' என்ற எதிர்பார்ப்பு ... |
| இலங்கைக்கு பிரதமர் செல்ல வேண்டுமா? கருணாநிதி கேள்வி Posted: சென்னை:இசைப்பிரியாவுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பின், பிரதமர், இலங்கை செல்ல வேண்டுமா? என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:இசைப்பிரியா; பெயரே அழகு; அவர் முகமோ, குழந்தை முகம். கல்லூரி சென்று வரும் குழந்தை எனக் கூறலாம். 27 வயது நிரம்பியவர். அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம், விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டது தான். இசைப்பிரியா போரின் போது கொல்லப்ட்டதாக, ராஜபக்சே அரசு இதுவரை சொல்லி வந்த கதையை, ஏமாற்று வித்தையை வெளிப்படுத்துகின்ற வகையில், இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகள் இன்று ... |
| ஏற்காடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி? வேட்பாளர் அறிவிப்பு எப்போது? Posted: ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள, தே.மு.தி.க., தலைமை விரைவில் வேட்பாளர் பெயரை அறிவிக்க உள்ளது. லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைப்பதற்கான முன்னோட்டமாக, ஏற்காடு இடைத்தேர்தல் கருதப்படுகிறது. இத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், மறைந்த எம்.எல்.ஏ., பெருமாள் மனைவி சரோஜாவும், தி.மு.க., சார்பில் மாறன் களமிறக்கப்பட்டு உள்ளனர்.லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, இத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு போட்டி போட்டு, பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. பா.ம.க., - பா.ஜ., கட்சிகள், "போட்டியிடப் போவது இல்லை' என, அறிவித்துள்ளன. காங்., கட்சி தன் ஆதரவை ... |
| தீபாவளிக்கு தங்கம் விற்பனை 40 சதவீதம் சரிவு: மக்கள் ஆர்வம் குறைகிறதா? Posted: மத்திய அரசின் வரி விதிப்பு கொள்கையால், தீபாவளி தங்கம் விற்பனை, 40 சதவீதம் சரிந்தது.இந்து மத பண்டிகைகளில் முதன்மையானதாக திகழும், தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆவலோடு, இல்லத்தரசிகள், மாதம் தோறும், 200 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, தங்க நகை கடைகளில், பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கம். தீபாவளி தினத்தன்று, கடைகளுக்கு சென்று, தாங்கள் சேமித்த பணத்திற்கு ஈடாக செய்கூலி, சேதாரம் இல்லாமல், தங்க ஆபரணம் வாங்குவதை ஆர்வமாக கொண்டிருந்தனர். வட மாநிலங்களில் மட்டுமே பிரசித்தி பெற்றதாக இருந்த, "அட்சய திருதியை' நடைமுறை, தமிழகத்திலும் ... |
| "மொட்டை மலை' ஆகிறது மேகமலை: ஊழல் அதிகாரி விவகாரம் விஸ்வரூபம் Posted: தேனி:அபூர்வ மரங்கள் நிறைந்த மேகமலை வன உயிரின சரணாலயம், மரங்கள் வெட்டப்பட்டு, "மொட்டை மலை' யாக மாறி வருகிறது. மரக்கடத்தலுக்கு துணை போன வன அதிகாரி, வெங்கடசாமி குறித்து, "பகீர்' தகவல்கள் வெளியாகி உள்ளன. கிருஷ்ணகிரி சக்கன்நகரை சேர்ந்தவர் வெங்கடசாமி, 57. மேகமலை வன உயிரின காப்பாளரான இவர், தீபாவளியை முன்னிட்டு, ஒப்பந்ததாரர்கள், மர வியாபாரிகளிடம் "வசூல் வேட்டை' நடத்தினார். நவ., 1 ல், சேலம் வழியாக சொந்த ஊருக்கு காரில் சென்ற போது, லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை செய்தனர்; காரில், 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனர்; "கடன் வாங்கிய பணம்' என, ... |
| தேர்தலுக்கு ஓட்டுக்கேட்டு போகும் அரசியல் கட்சிகள் ஜாக்கிரதை Posted: குறிச்சி:வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களுக்கு, மறைமுக மிரட்டல் விடுப்பதாக, ஆளுங்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள மக்கள், வரும் லோக்சபா தேர்தலின்போது, அரசியல் கட்சியினருக்கு "சிறப்பான வரவேற்பு' அளிப்பது குறித்த, ஆலோசனையில் உள்ளனர்.கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில், தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைக் கழிவுகள், போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டிலுள்ள, மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணையில் கொட்டப்படுகிறது. இதனால், போத்தனூர், கோணவாய்க்கால்பாளையம், மகாலிங்கபுரம், ... |
| அரசு அங்கன்வாடி மையத்தில் மத பிரசாரம்: கடும் அதிருப்தியில் பகுதிவாசிகள் Posted: புளியந்தோப்பு : புளியந்தோப்பில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், நேற்று நடந்த மத பிரசார கூட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது. பகுதிவாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு பின்னும், அங்கு அதுபோன்ற பிரசாரக் கூட்டம் நடந்து வருவதும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாததும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இந்த பகுதியில் உள்ள பெரியார் நகரில், அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இரண்டு பெண்களின் மேற்பார்வையில் உள்ள இந்த மையத்தில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், தினசரி வருகின்றனர்.பல புகார்கள்:அவர்களில், சமையலராக உள்ள பெண்ணின் வீடு, அதே பகுதியில் ... |
| தெலுங்கானா தனி மாநில விவகாரம் : காங்கிரஸ், தெலுங்கு தேசம் திணறல் Posted: ஐதராபாத்:தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் விஷயத்தில், ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாமல், காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள், திணறி வருகின்றன. ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, ஆந்திராவின் சீமந்திரா, கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து, கருத்து தெரிவிக்கும்படி, ஆந்திராவைச் சேர்ந்த, எட்டு முக்கிய அரசியல் கட்சிகளிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 04,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |