Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சேனல் 4-க்கு இலங்கை அரசு மறுப்பு

Posted: 03 Nov 2013 12:31 PM PST

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பிரியா குறித்த விடியோ ஆதாரத்தை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தேவை

Posted: 03 Nov 2013 12:29 PM PST

ஐ.நா. மூலம் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இசைப்பிரியா கொலைக்குப் பிறகாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?

Posted: 03 Nov 2013 12:27 PM PST

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட காட்சியை சேனல் 4-ல் பார்த்த பிறகாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் இருக்குமா? என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் விளம்பர படங்களுக்கு அனுமதி மறுப்பு

Posted: 03 Nov 2013 12:14 PM PST

பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சியை நேரடியாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் விளம்பரப் படங்களுக்கு அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

"ஹிந்து' தலிபான்களை அனுமதிக்க மாட்டேன்

Posted: 03 Nov 2013 12:14 PM PST

"இந்தியாவில் "ஹிந்து' தலிபான்கள் வெற்றி பெறுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

நக்சல் தாக்குதல் அபாயம்: சத்தீஸ்கரில் தேர்தல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு

Posted: 03 Nov 2013 12:13 PM PST

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், தேர்தல் அதிகாரிகளை ஹெலிகாப்டர் மூலம் வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

குளிர்காலத்தை முன்னிட்டு பைரவ்நாத் கோயில் மூடல்

Posted: 03 Nov 2013 12:12 PM PST

குளிர்காலத்தை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகேயுள்ள பைரவ்நாத் கோயில் சனிக்கிழமை மூடப்பட்டது.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

Posted: 03 Nov 2013 12:09 PM PST

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள சூழலில் அங்கு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதுடன், அந்நாடு குறித்த கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.

ஓடும் ரயிலில் தீ பரவியதாக வதந்தி: கீழே குதித்த 8 பேர் எதிரில் வந்த ரயிலில் அடிபட்டு சாவு

Posted: 03 Nov 2013 12:08 PM PST

ஆந்திரத்தில் ரயிலில் தீப்பிடித்ததாக ஏற்பட்ட வதந்தியைத் தொடர்ந்து, உயிர் தப்ப முயன்ற 8 பயணிகள் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.

தில்லி தொழிற்சாலையில் தீ: 6 பேர் சாவு

Posted: 03 Nov 2013 12:03 PM PST

தில்லியில் தோல் பை தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 4 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

சிறுமியைக் கொன்ற சிறுத்தை சுட்டுக்கொலை

Posted: 03 Nov 2013 12:01 PM PST

உத்தரகண்டில் சிறுமியைக் கொன்ற சிறுத்தைப்புலி வனத்துறை அதிகாரிகளால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டது.

மேகாலயத்தில் 4 தீவிரவாதிகள் கைது

Posted: 03 Nov 2013 11:59 AM PST

மேகாலயத்தில் காரோ தேசிய புரட்சிப் படை (ஜி.என்.எல்.ஏ.) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஒடிஸாவில் ஆசிரியை எரித்துக் கொலை: போலீஸ் விசாரணை தொடங்கியது

Posted: 03 Nov 2013 11:59 AM PST

ஒடிஸா மாநிலத்தில் பள்ளி ஆசிரியை தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, அந்த மாநிலக் குற்றப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.

மலையாள நடிகைக்கு பாலியல் தொந்தரவு: காங்கிரஸ் எம்.பி. மீது புகார் பதிவு

Posted: 03 Nov 2013 11:58 AM PST

மலையாள நடிகை ஸ்வேதா மேனனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்புக்கு எதிராக கேரள போலீஸார் ஞாயிற்றுக்கிழமை புகார் பதிவு செய்துள்ளனர்.

பிரதமரின் ஒடிஸா, ஆந்திர பயணம் ரத்து

Posted: 03 Nov 2013 11:56 AM PST

அண்மையில் பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா, ஆந்திர மாநிலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்வதாக இருந்த சுற்றுப் பயணத்தை பிரதமர் மன்மோகன் சிங் திடீரென ரத்து செய்தார்.

சத்தீஸ்கரில் ஆதரவாளர்கள் மோதல்: பாஜக அமைச்சர், காங்கிரஸ் மேயர் கைது

Posted: 03 Nov 2013 11:55 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதரவாளர்களிடையே நிகழ்ந்த மோதல் தொடர்பாக பாஜக அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் மற்றும் காங்கிரûஸச் சேர்ந்த மேயர் கிரண்மயி நாயக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொலை: இளைஞர் கைது

Posted: 03 Nov 2013 11:37 AM PST

அமெரிக்க விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சேர்ந்த பால் அந்தோனி சியான்சியா (23) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்தோனேசியாவை உளவு பார்த்ததாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது புகார்

Posted: 03 Nov 2013 11:36 AM PST

2007-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடு நடந்தபோது, அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் இந்தோனேசியாவை உளவு பார்த்தாக ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

புதிய பட்ஜெட்: ஒத்துழைப்பு கோருகிறார் ஒபாமா

Posted: 03 Nov 2013 11:35 AM PST

உற்பத்தி நெருக்கடியைப் போக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் நாடாளுமன்றத்தில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய இருகட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தியானென்மென் தாக்குதல்: ராணுவ கமாண்டர் பதவி நீக்கம்

Posted: 03 Nov 2013 11:35 AM PST

சீனாவில் தியானென்மென் சதுக்கத்தில் கார் மூலம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து மூத்த ராணுவ கமாண்டர் பெங் யாங் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தேர்தலில் வாய்ப்பு மறுப்பு: பாஜக அமைச்சர் விலகல்

Posted: 03 Nov 2013 11:34 AM PST

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவிலிருந்து விலகுவதாக அந்த மாநில அமைச்சர் தேவி சிங் சய்யாம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Posted: 03 Nov 2013 11:34 AM PST

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட், 19 அமைச்சர்கள் மற்றும் வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தண்டவாள பராமரிப்பில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் ரயில் மோதி சாவு

Posted: 03 Nov 2013 11:33 AM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மோடிக்கு ஆதரவு: லதா மங்கேஷ்கர் வாபஸ் பெற வேண்டும்: காங்கிரஸ்

Posted: 03 Nov 2013 11:33 AM PST

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்ததை பாடகி லதா மங்கேஷ்கர் வாபஸ் பெற வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பாட்னா: பலியானோர் குடும்பத்தினரை சந்தித்து மோடி ஆறுதல்

Posted: 03 Nov 2013 11:00 AM PST

பாட்னா குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் தாக்குதல்: ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு

Posted: 03 Nov 2013 10:58 AM PST

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் தாக்குதலில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டார்.

இலக்கியச் சங்கமம்

Posted: 03 Nov 2013 10:50 AM PST

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல்துறை, மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் ஆவணப்பட, குறும்படத் திருவிழா.

சந்தித்திருக்கிறீர்களா?

Posted: 03 Nov 2013 10:49 AM PST

சந்தித்திருக்கிறீர்களா? - எம்.பி.உதயசூரியன்; பக்.88; ரூ.90; புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காடுதாங்கல், சென்னை - 32.

பிரபுலிங்கலீலை (மூலமும் உரையும்)

Posted: 03 Nov 2013 10:48 AM PST

பிரபுலிங்கலீலை (மூலமும் உரையும்) -உரை: அடிகளாசிரியர்; பக்.900; ரூ.600; வெளியீடு: மயிலம் பொம்மபுர ஆதீனம், பொம்மையபாளையம்.

ஜுதான் (எச்சில்)

Posted: 03 Nov 2013 10:47 AM PST

ஜுதான் (எச்சில்) - ஓம்பிரகாஷ் வால்மீகி; தமிழில்: வெ.கோவிந்தசாமி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை - 98; )044 - 2635 9906.

இனிதே வாழ இயற்கை உணவுகள்

Posted: 03 Nov 2013 10:47 AM PST

இனிதே வாழ இயற்கை உணவுகள் - வெ. தமிழழகன்; பக்.168; ரூ.100; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074.

நீராதிபத்தியம்

Posted: 03 Nov 2013 10:46 AM PST

நீராதிபத்தியம் - மாட் விக்டோரியா பார்லோ; தமிழில்: சா. சுரேஷ்; பக்.248; ரூ.200; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-2; )04259 - 226012.

வரப்பெற்றோம்

Posted: 03 Nov 2013 10:40 AM PST

மணக்கும் வனம் இனிக்கும் மனம் - கொ.மா.கோதண்டம்; பக்.96; ரூ.80; தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி)லிட்., சென்னை-98; )044 - 2635 9906.

நிலக்கரி சுரங்க விபத்தில் 7 பேர் சாவு

Posted: 03 Nov 2013 10:38 AM PST

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து நிகழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

மாலியில் 2 பிரெஞ்சு செய்தியாளர்கள் படுகொலை

Posted: 03 Nov 2013 10:37 AM PST

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், பிரான்ஸ் நாட்டைச் செர்ந்த இரு செய்தியாளர்கள் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டனர்.

ஜார்ஜியா பிரதமராகிறார் 31 வயது இளைஞர்

Posted: 03 Nov 2013 10:37 AM PST

ஜார்ஜியா நாட்டின் அடுத்த பிரதமராக, 31 வயதான இராக்லி கரிபாஷ்விலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை சீர்குலைக்க அமெரிக்கா சதி

Posted: 03 Nov 2013 10:36 AM PST

தலிபான்களுடன் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை முயற்சியை சீர்குலைக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தலிபான் தளபதி ஹகிமுல்லா மசூதை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செüத்ரி நிஸார் அலி கான் குற்றம்சாட்டினார்.

நைஜீரியா: நெரிசலில் சிக்கி 17 பேர் சாவு

Posted: 03 Nov 2013 10:36 AM PST

நைஜீரியா கிழக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சனிக்கிழமை 17 பேர் உயிரிழந்தனர்.

டாங்கோ தீவுகளில் நில நடுக்கம்

Posted: 03 Nov 2013 10:36 AM PST

தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள டாங்கோ தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரர் கோயிலில் முன்னேற்பாடு தீவிரம்

Posted: 03 Nov 2013 09:36 AM PST

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்திடம் நியூஸிலாந்து "வாஷ் அவுட்'

Posted: 03 Nov 2013 09:33 AM PST

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வாஷ் அவுட்டானது.

ஆசிய ஹாக்கி: ஜப்பானிடம் இந்தியா தோல்வி

Posted: 03 Nov 2013 09:32 AM PST

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்: முதன்முறையாக கோலி முதலிடம்

Posted: 03 Nov 2013 09:31 AM PST

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதன்முறையாக முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

ரோஹித் 209; கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Posted: 03 Nov 2013 09:30 AM PST

தொடக்க வீரர் ரோஹித் சர்மாவின் 209 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

திருக்கோவிலூர் அருகே ரயிலை கவிழ்க்க சதி: போலீஸôர் தீவிர விசாரணை 

Posted: 03 Nov 2013 09:16 AM PST

திருக்கோவிலூர் அருகே ரயிலை கவிழ்க்க நடந்த சதியில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Posted: 03 Nov 2013 09:01 AM PST

கயத்தாறு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்

கீழக்கரை அருகே கார்-லாரி மோதல்: 5பேர் காயம்

Posted: 03 Nov 2013 08:48 AM PST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே திருப்புல்லாணி பகுதியில் கார் மீது லாரி மோதியதில் 5பேர் காயமடைந்

ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது

Posted: 03 Nov 2013 08:38 AM PST

ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இரு இளைஞர்களை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரயில்வே சேவை குறைபாடுக்கு:இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

Posted: 03 Nov 2013 08:28 AM PST

ரயில்வே சேவை குறைபாடு தொடர்பாக தொடரப்பட்ட மனுவை நுகர்வோர் குறைதீர் ஆணைய மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் பணி நிறைவு

Posted: 03 Nov 2013 07:45 AM PST

சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ரகுபதி பணி நிறைவு பெற்றார். தமிழ்நாடு நீதித்துறை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் சேலத்தில் நடந்த பாராட்டு விழாவில், அதன் மாநிலத் தலைவர் பெ. தமிழழகன், மாநில பொதுச் செயலாளர்

ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது

Posted: 03 Nov 2013 07:20 AM PST

ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இரு இளைஞர்களை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டில் சஷ்டி விழா தொடக்கம்

Posted: 03 Nov 2013 07:20 AM PST

செங்கல்பட்டில் உள்ள கோயில்கள் மற்றும் ஆன்மீக அமைப்பின் சார்பிலும் கந்தர் சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல்நாள் தொடக்கத்திலேயே ஏராளமான முருகபகதர்கள் மற்றும் சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்களும் கோயிலுக்கு வந்து அலங்காரத்தில் முருகப்பெருமானை  வரிசையில நின்று தரிசித்தனர்.

பட்டாசு ஆலை விபத்து: தொடரும் மர்மம்

Posted: 03 Nov 2013 07:03 AM PST

கும்பகோணம் அருகே தீ விபத்துக்கு உள்ளான பட்டாசு ஆலையில் பெரும் விபத்தாக நிகழ்ந்ததற்கான காரணம் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

பால் காய்ச்சியபோது சேலையி்ல் தீப்பிடித்து பெண் கருகி சாவு

Posted: 03 Nov 2013 07:03 AM PST

உடல் கருகிய ராஜ லட்சுமி, மதுரை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி இறந்தார். சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் ராஜலட்சுமியின் தாயார் பூபதி(40) புகார் செய்தார். காவல் ஆய்வாளர்

தீபாவளி விருந்துக்கு வந்த மாணவன், பாம்பு தீண்டி சாவு

Posted: 03 Nov 2013 06:52 AM PST

கமுதி அருகே மண்டலமாணிக்கம் காவல் நிலைய சரகம், போத்தநதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு 2 மக ன்கள், 1 மகள் உள்ளனர். மகன் கருப்பு ராஜ்(12). இவன் 7-ம் வகுப்பு படித்து வந்தான். பக்கத்து ஊரான கூடக்குளத்தில்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான், மயில் சாவு

Posted: 03 Nov 2013 06:50 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் மான் மற்றும் பெண் மயில் உயிரிழந்தது.

நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 03 Nov 2013 06:49 AM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மழை பெய்து வருவதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

ரயில்வே சேவை குறைபாடுக்கு:இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

Posted: 03 Nov 2013 06:47 AM PST

ரயில்வே சேவை குறைபாடு தொடர்பாக தொடரப்பட்ட மனுவை நுகர்வோர் குறைதீர் ஆணைய மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயம் முற்றுகை

Posted: 03 Nov 2013 06:47 AM PST

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இசைப்பிரியா கொல்லப்பட்ட விவகாரம்:சுயாதீன விசாரணை கோருகிறது ஈ.பி.டி.பி

Posted: 03 Nov 2013 05:24 AM PST

விடுதலைப்புலிகள் அமைப்பில் செய்திவாசிப்பாளராகவும் நடிகராகவும் இருந்த இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்ததை

தீபாவளி சிறப்பு வர்த்தகம்: சென்செக்ஸ் உச்சபட்ச உயர்வு

Posted: 03 Nov 2013 05:18 AM PST

தீபாவளி சிறப்பு வர்த்தகம் என வழக்கமாக நடத்தப்படும் தீபாவளி முதல் தீபாவளி வரையிலான புத்தாண்டு சிறப்பு முகூர்த்த வர்த்தக தினம் என்பதால் இன்று பங்குச் சந்தை வர்த்தகம் நடத்தப்பட்டது. இதில் உச்ச பட்ச அளவான 21,321.53 என்ற புள்ளியைத் தொட்டது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்.

தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர் விபத்தில் சாவு: மூவர் காயம்

Posted: 03 Nov 2013 05:11 AM PST

அம்பாசமுத்திரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பலத்த காயமடைந்து இறந்தார். காயமடைந்த மூவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கமுதி அருகே போலீஸ் தடை மீறல்: பலர் மீது வழக்கு

Posted: 03 Nov 2013 05:09 AM PST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே போலீஸ் தடை உத்தரவை மீறியதாக பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கசினோ சூதாட்ட விடுதியால் பாதிப்பில்லை:எஸ்.பி. திசாநாயக்கா

Posted: 03 Nov 2013 05:04 AM PST

கொழும்பில் அமைக்கப்பட உள்ள கசினோ சூதாட்ட விடுதியால் இலங்கையில்  வாழும் சாதாரண குடிமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என இலங்கையின் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கா தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்

Posted: 03 Nov 2013 04:57 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நாகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கி.கணேசன் (40). இவரது மகள் காயத்திரி (17) பிளஸ் 2 படித்து வருகிறார்.

வத்திராயிருப்பில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 03 Nov 2013 04:54 AM PST

வத்திராயிருப்பு, பலகுடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி ராஜலட்சுமி (30). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று 2 பிள்ளைகள் உண்டு. சுந்தரமூர்த்தி, எலக்ட்ரீசியன் வேலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மொபெட் மீது பஸ் மோதி ஆசிரியை படுகாயம்

Posted: 03 Nov 2013 04:53 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில், தனியார் பஸ் மொபட் மீது மோதியதில் அதில் சென்று கொண்டிருந்த ஆசிரியை பலத்த காயம் அடைந்தார்.

சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் சேதம்: சாலைமறியல்

Posted: 03 Nov 2013 04:46 AM PST

சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிமேடை, கல்வெட்டு சேதப்படுத்தியதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்

Posted: 03 Nov 2013 04:44 AM PST

பிரசித்தி பெற்ற சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகமும், 149-வது சிறப்பு அர்த்தசாம பூஜையும் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இலங்கை அணியின் வீரர்களிடமிருந்து வரி

Posted: 03 Nov 2013 04:44 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கட் வீரர்களிடமிருந்து வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தஞ்சை அருகே முன்விரோதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

Posted: 03 Nov 2013 04:42 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகேயுள்ள வேளடிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீதுவின் மகன் முகமது தாரீக் (23). இவருக்கும், ராமாம்பாள்புரத்தைச் சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலர் ஏ. மைதீன்

குடிபோதையில் ரகளை: கண்டித்த மாமானார், மைத்துனரை வெட்டிய மருமகன் வெட்டிக் கொலை  

Posted: 03 Nov 2013 04:40 AM PST

தீபாவளி பண்டிகை நேரத்தில் குடிபோதையில் ரகளை செய்ததை கண்டித்த மாமனார், மைத்துனர் ஆகியோரை வெட்டிய மருமகன், நேற்று (சனிக்கிழமை) இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.  

நாளை மக்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார் நரேந்திர மோடி

Posted: 03 Nov 2013 04:17 AM PST

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாளை திங்கள் கிழமை (நவ.4) ஆமதாபாத்தில் மக்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் இனிப்பு பறிமாறல்

Posted: 03 Nov 2013 03:51 AM PST

இந்திய பாகிஸ்தான் எல்லையான அட்டாரி எல்லையில் இருதரப்பில் இருந்தும் ராணுவத்தினர் தீபாவளி இனிப்பு பரிமாறிக் கொண்டனர். வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும், இரு தரப்பிலும் பதற்றம் நிலவி வரும் சூழலில் தீபாவளி இனிப்பு பரிமாறல் நடைபெற்றுள்ளது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?: கருணாநிதி கடிதம்

Posted: 03 Nov 2013 03:43 AM PST

இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணிக்குமா என்று கேள்வி எழுப்பி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

உலக நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டும்:ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

Posted: 03 Nov 2013 03:38 AM PST

உலக நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டுமென ஆஸ்திரேலிய அரசாங்கம் கோரியுள்ளது. 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் இலங்கையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஸப்  தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை: ராமதாஸ்

Posted: 03 Nov 2013 03:26 AM PST

இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என்று கூறியிருகிறார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கும்பகோணம் தீவிபத்து பட்டாசு ஆலையில் ஆய்வு

Posted: 03 Nov 2013 03:22 AM PST

கும்பகோணம் அருகே தீ விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் இன்று தலைமை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ஆய்வு

மேட்டூர் அணை நீர்மட்டம்: 79.92 அடியாக சரிவு

Posted: 03 Nov 2013 03:17 AM PST

கல்லணையிலிருந்து நொடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 4,800 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,513 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 521 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

திருக்காட்டுப்பள்ளி அருகே முதியவர் கொலை

Posted: 03 Nov 2013 03:16 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே முதியவர் சனிக்கிழமை பிற்பகல் கொலை செய்யப்பட்டார்.

மெரினாவில் மூழ்கி 4 பேர் பலி

Posted: 03 Nov 2013 02:35 AM PST

சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை தினமான இன்று கூட்டம் அலைமோதியது. அப்போது, கடலில் குளிக்கச் சென்ற 4 பேர் கடல் அலைகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனராம். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

Posted: 03 Nov 2013 02:31 AM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமையன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான புக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர்.

இராணுவ வாகனம் மோதி விபத்து

Posted: 03 Nov 2013 02:29 AM PST

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளான நபர்  ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை: ஸ்வேதா மேனன்

Posted: 03 Nov 2013 02:15 AM PST

கொல்லத்தில் நடந்த படகுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மலையாளத் திரை நடிகை ஸ்வேதா மேனன். அப்போது அவரிடம் அந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப்பு தவறாக நடந்துகொண்டதாக

வட மாகாண ஆளுநரை மாற்ற இலங்கை அமைச்சர் ஆதரவு

Posted: 03 Nov 2013 02:05 AM PST

இலங்கையின் வடமாகாணத்தில் இராணுவம் சாராத ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவரும், இலங்கையின் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தார்.

நெல்லை அருகே இருவர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல், 3 பேர் கைது

Posted: 03 Nov 2013 01:56 AM PST

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். . இதனிடையே கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை வழக்கில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

நிர்வாண நிலையில் இளம்பெண் தீயில் கருகி சாவு: மர்ம மரணம் என உறவினர்கள் சாலைமறியல்

Posted: 03 Nov 2013 01:51 AM PST

காட்டுமன்னார்கோயில் அருகே திருமணமான இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் தீயில் கருதி இறந்துகிடந்தார். பெண் சாவில் மர்மம் உள்ளதாகவும், தீவைத்து எரித்த கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு அப்பெண்ணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே கொக்கு பிடிக்க சென்ற இருவர் மின்சாரம் பாய்ந்து சாவு!

Posted: 03 Nov 2013 01:45 AM PST

சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கொக்கு பிடிக்கச் சென்ற போது வயலில் கிடந்த மின்சார ஒயரை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்த சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.

என்எல்சி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

Posted: 03 Nov 2013 01:41 AM PST

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Graduate and Technician Apprenticeship Training

IOCL நிறுவனத்தில் கிரேடு-IV பணி

Posted: 03 Nov 2013 01:36 AM PST

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் (IOCL) பொறியியல் உதவியாளர் கிரேடு-IV பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

RITES நிறுவனத்தில் சிவில் பொறியாளர் பணி

Posted: 03 Nov 2013 01:31 AM PST

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள போக்குவரத்து, உள் கட்டுமானம் தொடர்பான தொழில்நுட்பம்,

தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு மாயை: காங்கிரஸ் கருத்து

Posted: 03 Nov 2013 01:15 AM PST

தேர்தல் கருத்துக் கணிப்புகள் என்பது ஒரு மாயை, மக்களை தவறாக வழிநடத்துவதாக ஆகிவிடும் என காங்கிரஸ் தலைவர் ரஷித் அலிவ் இன்று தெரிவித்தார்.

சிதம்பரத்தில் இளைஞர் அடித்து கொலை! 3 பேர் கைது, ஒருவர் தலைமறைவு

Posted: 03 Nov 2013 01:10 AM PST

சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை நள்ளி்ரவு இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூன்று பேரை நகர போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

திருவாடானை அருகே ஒரு பிரிவினர் கொடிகம்பத்தை வெட்டி சாய்த்ததாக பதட்டம்: இருவர் கைது

Posted: 03 Nov 2013 01:59 AM PDT

திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் கிராமத்தில் ஒரு பிரிவினர் கொடிகம்பத்தை வெட்டி சாய்த்ததாக பதட்டநிலை உருவானது இது தொடர்பாக இருவர் கைது செய்யபட்டு விசாரித்து வருகினற்னர்.

பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் கைது

Posted: 03 Nov 2013 01:46 AM PDT

பூரண மதுவிலக்கு கோரி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று சேலம் இளம்பிள்ளையில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டு  பிச்சையெடுத்து அரசுக்கு நிதி அனுப்பும் போராட்டம் நடத்த முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர ரயில் விபத்து: பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டதாக தகவல்

Posted: 03 Nov 2013 01:39 AM PDT

ஆலப்புழை - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஆந்திரமாநிலம் விஜயநகரம் அருகே வந்துகொண்டிருந்த போது அந்த ரயிலில் தீ பரவியதாக வந்ததி கிளம்பியது. இதையடுத்து பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர், அந்த ரயிலில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் தண்டவாளத்தைத் கடக்க முயற்சிக்கும்போது

‘ஹரிதாஸ்’ இயக்குனர் படத்தில் விக்ரம் பிரபு

Posted: 03 Nov 2013 01:39 AM PDT

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார்.

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது: முதல்வர் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க வலியுறுதல்

Posted: 03 Nov 2013 01:21 AM PDT

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது இதற்கு சான்று சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளே எனவே மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி பதவி விலக வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும் தெரியும்: பா.ஜ.க கருத்து

Posted: 03 Nov 2013 01:09 AM PDT

காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும்தெரியும் என பாரதீய ஜனதா கட்சி தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார். மேலும் அவர் கூறும் போது தேர்தல் கருத்துக்கணிப்பை நிறுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் -தனிமங்களின் இணைதிறன்

Posted: 03 Nov 2013 01:03 AM PDT

அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் உண்டாகின்றன. ஒரு தனிமத்தின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட இணையும் திறனைப் பெற்றுள்ளன. அதற்கு இணைதிறன் என்று பெயர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™