Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சென்னையில் மீண்டும் அமலாகிறது 2 மணி நேரம் கடும் மின்வெட்டு: மற்ற மாவட்டங்களில் வந்து, போகும் "விருந்தாளி'

Posted:

சென்னை: தமிழகத்தில், மின் உற்பத்தி குறைந்ததை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், டிச., 2ம் தேதி முதல், மீண்டும் இரண்டு மணி நேரம், மின் தடையை அமல்படுத்த, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. மற்ற மாவட்டங்களில், வீடுகளுக்கு, வந்து, போகும் "விருந்தாளி' போல், மின்சாரம் எப்போது வரும், போகும் என்பதே தெரியாது. தமிழகத்தில், தினசரி மின்சார தேவை, 12 ஆயிரம் மெகா வாட். அதேசமயம், உற்பத்தி, சராசரியாக, 8,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. தேவையை விட, மின் உற்பத்தி குறைவாக உள்ளதால், பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை ...

'பிரித்தாளும் அரசியல் நடத்துகிறது காங்கிரஸ்': நரேந்திர மோடி புகார்

Posted:

ஜெய்ப்பூர்: ''தண்ணீர் பங்கீடு தொடர்பான பிரச்னையில், மாநிலங்களுக்கு இடையே, மோதல்களை உருவாக்கும் வகையில், காங்., கட்சி, பிரித்தாளும் அரசியல் நடத்துகிறது; இது, மிகவும் மோசமான போக்கு,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, குற்றம் சாட்டியுள்ளார்.சட்டசபை தேர்தல்: ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 1ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கும், எதிர்க்கட்சியான, பா.ஜ.,வுக்கும் இடையே, கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பிரதமர் ...

புதிதாக அமையும் தெலுங்கானா மாநிலத்திற்கு சோனியாவின் பெயர் வைக்க வேண்டுமாம்

Posted:

புதுடில்லி: 'தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்' என, காங்கிரஸ் அறிவித்த பின், ஆந்திராவில் தற்கொலைகள் குறைந்துள்ளதால், தெலுங்கானா மாநிலத்திற்கு, 'சோனியா மாநிலம்' என, பெயர் வைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து, கட்சி மேலிடத்திற்கு தன் விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த, காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாநில, முன்னாள் அமைச்சர், சங்கர் ராவ் கூறியுள்ளதாவது:தற்கொலை: ...

ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை: அமைச்சர் ராஜிவ் சுக்லா அத்துமீறல்

Posted:

மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், மத்திய அமைச்சரும், காங்., சேர்ந்தவருமான, ராஜிவ் சுக்லாவின் அறக்கட்டளைக்கு, வெறும், 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.அறக்கட்டளை: காங்., கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், ராஜிவ் சுக்லா. தற்போது, மத்திய பார்லி மென்ட் விவகாரத் துறை இணை அமைச்சராக உள்ளார். மகாராஷ்டிராவில், மும்பை அருகேயுள்ள, அந்தேரியில், பி.ஏ.ஜி., திரைப்பட சமூகம் என்ற அறக்கட்டளையை, இவரின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இதன் தலைவராக, ராஜிவ் சுக்லாவின் மனைவி ...

இந்திய விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா? உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தால் திடீர் பீதி

Posted:

புதுடில்லி: அடுத்த வாரம் நடக்கவுள்ள உலக வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி.ஓ.,) கூட்டத்தில், இந்தியா தனது வேளாண் மற்றும் உணவு மானியங்களை கட்டுப் படுத்திக் கொள்ளும் படியான ஒப்பந்தத் திற்கு, இந்திய அரசு ஒப்புக்கொள்ளலாம் என்ற, பீதி கிளம்பி உள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ''இந்தியா தனது உணவு பாதுகாப்பை தற்காத்துக் கொள்வதோடு, வேளாண் மானிய கட்டுப்பாடுகளில் இருந்து நிரந்தர விலக்கு பெறவே முயற்சிக்கும்,'' என்றார்.வேளாண் ஒப்பந்தம்: உலகளவில் வர்த்தகத்தை எளிமையாக்குவது மற்றும் அதிகரிப்பது ...

1,800 மெகாவாட் மின் திட்டத்தை முடக்கியது யார்? ஜெ.,வுக்கு ஸ்டாலின் கேள்வி

Posted:

"தி.மு.க., ஆட்சியில், வடசென்னை அனல்மின் நிலைய அலகு ஒன்று, அலகு இரண்டு, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில், தலா, 600 மெகாவாட் என, 1,800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, 7,280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, ஆட்சி பொறுப்பேற்றதும், அத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்காமல், முடக்க நினைக்கிறார்," என, ஏற்காடு தேர்தல் பிரசாரத்தில், ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.எழுதி கொடுப்பதை: ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாறனை ஆதரித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தொகுதிக்கு உட்பட்ட, 78 இடங்களில், ...

டில்லி தமிழர்களிடம் வரவேற்பில்லை: இன்று சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

Posted:

டில்லி தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, அங்குள்ள தமிழர்கள் மத்தியில் வரவேற்பில்லாததால், இன்றுடன் சென்னை திரும்ப அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும், 4ம் தேதி நடக்கும் டில்லி சட்டசபை தேர்தலில், 11 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அங்குள்ள, 15 லட்சம் தமிழர்களின் ஓட்டுகளை குறி வைத்து, வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக தே.மு.தி.க., தலைமை கூறி வருகிறது. தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு, ஆதரவாக பிரசாரம் செய்ய, அக்கட்சியின் தமிழக மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள், கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக ...

நில அபகரிப்பு புகாரில் சிக்கிய அ.தி.மு.க., அமைச்சர்: உளவுப்பிரிவு போலீஸ் விசாரணை தீவிரம்

Posted:

அமைச்சர் ராமலிங்கம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து, எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். ஈரோடு அடுத்த, புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 74; விவசாயி. இவருக்கு சொந்தமான, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,232 சதுரடி வீட்டை, அமைச்சர் ராமலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் மற்றும், புதூர் பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் ஆகியோர் தங்களுக்கு தரும்படி கூறி, முத்துசாமியை கடத்தி, மிரட்டியதாக, முத்துசாமி மற்றும் அவரது மூத்த சகோதரி சிவகாமி ஆகியோர், ஈரோடு எஸ்.பி., பொன்னியிடம், கடந்த, 27ம் தேதி புகார் ...

முதல்வர் பொறுப்பற்ற பேச்சு பதவிக்கு அழகல்ல: கருணாநிதி

Posted:

சென்னை: மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி, நானோ, என் கட்சியை சேர்ந்தவர்களோ, மத்திய அரசிலே உள்ளவர்களிடமோ, மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ பேசியதாகவோ, தொடர்பு கொண்டதாகவோ முதல்வரால் நிரூபிக்க முடியுமா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டிருக்கிறார்.அவரது அறிக்கை: ஏற்காடு இடைத்தேர்தலில் மின்வெட்டு குறித்து விரிவாகப் பேசிய முதல்வர், மின் உற்பத்தியில், காங்., கட்சியும், தி.மு.க.,வும் கைகோர்த்துக் கொண்டு, தமிழக மக்களைப் பழி வாங்குவதாக ஒரு பெரிய குற்றச்சாட்டை முழங்கியிருக்கிறார். நான், முதல்வருக்கு சவால் ...

இத்தாலி கடற்படை வீரர்கள் மீது கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு: தர்மசங்கடத்தில் மத்திய உள்துறை

Posted:

புதுடில்லி: கேரளாவில், நம் மீனவர்களை சுட்டுக் கொன்ற, இத்தாலி கடற்படை வீரர்களுக்கு, 'மரண தண்டனை வழங்க வேண்டும்' என, கோரும், தேசிய புலனாய்வு அமைப்பால், மத்திய அரசுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டு உள்ளது.கடல் எல்லையில்: ஏனெனில், 'இத்தாலி வீரர்களுக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம்' என, உறுதியளித்து, அவர்களை இந்தியா கொண்டு வந்துள்ள மத்திய அரசு, இதனால் விழிபிதுங்கி நிற்கிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், கேரளாவில், நம் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, 'கடற்கொள்ளையர்கள்' என, தவறாக நினைத்த, அவ்வழியே வந்த இத்தாலிய கப்பலின் கடற்படை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™