Tamil News | Online Tamil News |
- இரண்டு ஆண்டுகளாக போக்கு காட்டும் உதயகுமார் சிக்குவாரா? இடிந்தகரை குண்டு வெடிப்பு சம்பவத்தால் திருப்பம்
- 'லெஹர்' புயல் இன்று ஆந்திராவை கலங்கடிக்கும்: மசூலிப்பட்டினத்தில் கரையை கடக்கும்
- பா.ஜ., மீது சோனியா கடும் தாக்குதல்: சுயநல அரசியல் நடத்துவதாக புகார்
- அதிரும் டில்லி சட்டசபை தேர்தல் களம்: ஓட்டு வேட்டையில் தமிழக தலைவர்கள்
- உத்தரகண்டில் மாயமான 14 பேர் கதி என்ன? இன்னமும் நிவாரணம் காணோம்
- அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் 'பல்டி': சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை
- பல கோடி ரூபாய் "சுருட்டினாரா' மதுரை ஆதீனம்: மீண்டும் "களைகட்டுது' மடம்
- தொடர் மின் வெட்டு பிரச்னை; முதல்வரிடம் நேரில் முறையிட முடிவு
- தமிழகத்தில் அதிகளவு கால்நடைகள் இறப்பு: பொருளாதார சுமையை ஏற்படுத்தும் அபாயம்
| Posted: திருநெல்வேலி: மிக பிரமாண்டமான அணு உலை அமைந்து உள்ள நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் இறந்த சம்பவத்தில், அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டுள்ளது.அணு உலைக்கு எதிராக போராடும் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி, பின்னர் பல்டியடித்த எஸ்.பி., விஜயேந்திர பிதரி, இரவோடு இரவாக மாற்றப்பட்டார். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பை பலப்படுத்தும் வகை யில், உதயகுமாரை வளைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அருகில் கடற்கரையையொட்டிய கிராமம் இடிந்தகரை. அணு உலைக்கு எதிரான ... |
| 'லெஹர்' புயல் இன்று ஆந்திராவை கலங்கடிக்கும்: மசூலிப்பட்டினத்தில் கரையை கடக்கும் Posted: சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள அதிதீவிர, 'லெஹர்' புயல், இன்று பிற்பகலில், ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது. இதனால் ஆந்திராவின், ஐந்து மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், 'பைலின்' புயல் தாக்குதலின் பாதிப்பே இன்னும் தீராத நிலையில், அடுத்த புயல் தாக்க உள்ளதால், ஆந்திர மாநிலம் ஆடிப்போயுள்ளது.அதிதீவிர புயல்: மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, 'லெஹர்' புயல், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரை கடந்து, அதிதீவிர புயலாக மாறியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, இந்தப் புயல், ... |
| பா.ஜ., மீது சோனியா கடும் தாக்குதல்: சுயநல அரசியல் நடத்துவதாக புகார் Posted: ஜெய்ப்பூர்: ''ராஜஸ்தான் மாநிலத்தில், காங்., ஆட்சியில் தான், சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. முந்தைய, பா.ஜ., ஆட்சியில், எந்த ஒரு உருப்படியான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பா.ஜ., தலைவர்கள், சுயநல அரசியல் நடத்துகின்றனர்,'' என, காங்., தலைவர் சோனியா பேசினார்.சட்டசபை தேர்தல்: ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடந்தது. ராஜஸ்தானில், அடுத்த மாதம், 1ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ... |
| அதிரும் டில்லி சட்டசபை தேர்தல் களம்: ஓட்டு வேட்டையில் தமிழக தலைவர்கள் Posted: டில்லியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டு வேட்டையாட துவங்கியுள்ளதால், தேர்தல் களம், களைகட்டத் துவங்கியுள்ளது.டிசம்பர், 4ல், டில்லி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், முக்கிய கட்சிகளான, காங்கிரஸ், பா.ஜ., மற்றும் 'ஆம் ஆத்மி' ஆகியவை முக்கிய கட்சிகள். இந்த கட்சிகளுக்காக, காங்கிரஸ் தலைவர், சோனியா, துணைத் தலைவர், ராகுல், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி போன்றோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில், பத்து லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசித்தாலும், இவர்கள் ... |
| உத்தரகண்டில் மாயமான 14 பேர் கதி என்ன? இன்னமும் நிவாரணம் காணோம் Posted: தமிழகத்தில் இருந்து, உத்தரகண்ட் சென்று, பெரும் மழையில் சிக்கிய, 14 பேரின் கதி என்ன என்று தெரியாமல், உறவினர்கள் தவித்து வருகின்றனர். நிவாரணம் வழங்க முயற்சி நடந்து வரும் நிலையில், 'உயிரோடு வருவர்' என, உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.கடந்த ஜூன், 17ம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தில், பெரும் மழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால், பலத்த சேதம் ஏற்பட்டது. கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புகழ் பெற்ற, வழிபாட்டு தலங்களுக்குச் சென்றிருந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இதில் சிக்கிக் கொண்டனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் ... |
| அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் 'பல்டி': சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை Posted: புதுச்சேரி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும், கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, 'பல்டி' அடித்து விட்டதால், காஞ்சி காமகோடி மடத்தை நிர்வகிக்கும், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், விடுதலை செய்யப்படுவதாக, நீதிபதி முருகன் அறிவித்தார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன், 2004 செப்டம்பர் 3ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி, ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 25 பேரை கைது ... |
| பல கோடி ரூபாய் "சுருட்டினாரா' மதுரை ஆதீனம்: மீண்டும் "களைகட்டுது' மடம் Posted: மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குரிய சொத்துக்களை, 33 ஆண்டுகளாக அனுபவித்து, பல கோடி ரூபாய் கையாடல் செய்ததாக, அருணகிரிநாதர் (மதுரை ஆதீனம்) மீது போலீஸ் கமிஷனரிடம் இந்துமக்கள் கட்சி புகார் செய்துள்ளது.கடந்த ஆண்டு மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தது முதலே, மதுரை ஆதீனம் தொடர் சர்ச்சையில் சிக்கினார். நித்யானந்தாவை நீக்கிய பின், பரபரப்புகளில் இருந்து ஒதுங்கியிருந்த அவரை, இந்து அமைப்புகள் விடுவதாக இல்லை போலும். நேற்று அவர் மீது, புதிய புகார் ஒன்றை, மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம், இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்தார். அதில் ... |
| தொடர் மின் வெட்டு பிரச்னை; முதல்வரிடம் நேரில் முறையிட முடிவு Posted: கோவை: மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முறையிட தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் தினசரி எட்டு முதல் பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோவையில் உள்ள தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக்கமிட்டி சிறப்பு கூட்டம் நேற்று மாலை நடந்தது. ... |
| தமிழகத்தில் அதிகளவு கால்நடைகள் இறப்பு: பொருளாதார சுமையை ஏற்படுத்தும் அபாயம் Posted: தமிழகத்தில் அதிகளவு கால்நடைகள் இறப்பதைத் தடுக்க, விரிவான ஆய்வு நடத்தி, கால்நடை பராமரிப்புக்கான, கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.தமிழகத்தின், கிராமப்புற வருவாயில், கால்நடை வளர்ப்பு, மிக முக்கியமானது. கால்நடைகளை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏராளமான குடும்பங்கள், பொருளாதார இழப்பை சீராக்க, உடனடி நடவடிக்கை தேவை என்ற கருத்து எழுந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில், 'ஆந்த்ராக்ஸ்' நோயால், முதன் முதலில், கால்நடைகள் அதிகளவில் இறந்தன. இதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், கோமாரி நோய் தாக்குதல் துவங்கி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 28,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |