Daily Thanthi |
- இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் போஸ் கொடுத்த காட்சி.
- லெஹர் புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் வானிலை மையம் அறிவிப்பு
- கடந்த 5 நாட்களாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த மழை
- வல்லரசு நாடுகளுடனான உடன்படிக்கையால் ஈரானுக்கு சோயா புண்ணாக்கு, அரிசி ஏற்றுமதி குறையும்?
- அக்டோபர் மாதத்தில் மின்சார பற்றாக்குறை 3 சதவீதமாக குறைந்தது
- எரிவாயு குழாய்களைப்பதிக்கும் பிரச்சினையில் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் பேசித் தீர்வு காண வேண்டும்: கருணாநிதி
- ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
- ஆன்மீக சிந்தனை (28-11-2013)
- கன்னித்தீவு (28-11-2013)
- ஆண்டியார் (28-11-2013)
| இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் போஸ் கொடுத்த காட்சி. Posted: 27 Nov 2013 01:01 PM PST |
| லெஹர் புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் வானிலை மையம் அறிவிப்பு Posted: 27 Nov 2013 11:46 AM PST சென்னை லெஹர் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொய்த்துவிடுமோ? தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிடுமோ என்று தமிழக மக்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் கடந்த வருடமும் வடகிழக்கு பருவமழை இயல்பானஅளவுக்கு பெய்யவில்லை. ஆனால் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்து சற்று கை கொடுத்தது. கார்த்திகைக்கு பின்னர் மழையும் இல்லை, கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை என்று வழக்கத்தில் சொல்வது உண்டு. இந்த வருடம் திருக்கார்த்திகை விழா மாதத்தில் முதல் நாளே வந்துவிட்டது. அதனால் மழை கிடையாது என்ற அந்த வழக்கமொழி பொய்த்துவிட வாய்ப்பு உள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை காலம் முடிய ஒரு மாதம் இருக்கிறது. எனவே இனிமேலாவது மழை பெய்தால் நல்லது என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். லெஹர் புயல் இன்று கரையை கடக்கும் இந்த நிலையில் அந்தமான் அருகே கரையை கடந்த லெஹர்புயல் மீண்டும் வலுப்பெற்று மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இந்த புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 570 கிலோமீட்டர் தூரத்திலும், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 510 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. அது மேற்கு வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த புயல் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும். அப்போது கடலோர ஆந்திர பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் மிக கன மழை பெய்யும். தெலுங்கானா பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். காற்று மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். ஆனால் தமிழ்நாட்டுக்கு இந்த புயலால் எந்த தாக்கமும் இல்லை. இலங்கை அருகே புயல் உருவானால் அல்லது நிலை கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் மாதம் முடிய உள்ளது. சில வருடங்களில் ஜனவரி 5–ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடித்து இருக்கிறது. சில இடங்களில் மழை பெய்யும் இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். image: category:Tagging:News Group Category: |
| கடந்த 5 நாட்களாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த மழை Posted: 27 Nov 2013 10:08 AM PST சபரிமலை சபரிமலையில் கடந்த 5 நாட்களாக பலத்த பெய்தது. இதனால் பக்தர்கள் தங்கும் விரி அமைக்க கூட இடம் இல்லாமல் அவதிக்குள்ளாயினர். சபரிமலையில் மண்டல பூஜை பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 41 நாள் மண்டல கால பூஜைக்காக கடந்த 15–ந் தேதி நடை திறக்கப்பட்டு, பூஜை – வழிபாடுகள் நடந்து வருகிறது. மண்டல பூஜை நிறைவு விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 26–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி சுமந்து வந்து, சாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தி அருள் பெற்று செல்கின்றனர். நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. பலத்த மழை இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக சபரிமலை மற்றும் சுற்றுப்புறங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பம்பையில் இருந்து நீலிமலை வரையுள்ள பாதையில் இடையிடையே நடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால் நேற்று முன்தினம் பக்தர்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நனையாமல் நின்று கொண்ட னர். பின்னர் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் "சாமியே சரணம் அய்யப்பா" என்ற சரண கோஷங்கள் முழங்க மழையில் நனைந்தவாறு மலையேறிச் சென்று நீண்ட கியூ வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழக பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர். நெய் அபிஷேகம் அன்றைய தினம் நெய் அபிஷேகம் நேரம் முடிந்து விட்டதால், மறுநாள் காலையில் நெய் அபிஷேகம் செய்யும் வரை சபரிமலையில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலையில் நெய் அபிஷேகம் செய்த பின்னர் பக்தர்கள் மலை இறங்குவது வழக்கம். பக்தர்கள் வருகை கூடி வருவதால் சாமி தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அவதி இதன் காரணமாக கருவறை மற்றும் சுற்றுப்பகுதிகள், மாளிகைப்புறம் நடைப்பந்தல், பெரிய நடைப்பந்தல், வடக்கு வாசல் அருகே உள்ள நடைப்பந்தல்கள் மற்றும் பாண்டித்தாவளம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர். இவ்வாறு சாமி தரிசனம் செய்த பக்தர்கள், மாளிகைப் புறம் அம்மன் கோவில் வழியாக வெளியேறி வந்தனர். எங்கும் மழைநீர் காணப் பட்டதால் பக்தர்கள் தங்கு வதற்கு விரி அமைக்க இட வசதி இன்றி அவதிப்பட்டனர். பேட்டை துள்ளல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எருமேலி வாபர் கோவில் பகுதியில் இருந்து வண்ண வண்ண பொடிகள் உடலில் பூசி, பலூன்கள் தலையில் கட்டிக்கொண்டு மற்றும் இலை தழைகளை கையில் ஏந்தியவாறு ஆடிப் பாடி, சரண கோஷம் போட்டவாறு தர்ம சாஸ்தா கோவிலுக்கு வந்து வணங்கி வழி பட்ட பிறகு சபரிமலை பயணத்தை தொடருவார்கள். அதன்படி இந்த ஆண்டு எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் கன்னி அய்யப்பன்மார் உள்பட ஏராளமான பக்தர்கள் பேட்டை துள்ளல் நடத்திவிட்டு மலையேறிச் செல்லத் தொடங்கிவிட்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து எருமேலி, நிலைக்கலை, பம்பை, சபரிமலை போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவருத்துக் கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| வல்லரசு நாடுகளுடனான உடன்படிக்கையால் ஈரானுக்கு சோயா புண்ணாக்கு, அரிசி ஏற்றுமதி குறையும்? Posted: 27 Nov 2013 09:32 AM PST வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள உடன்படிக்கையால், அந்நாட்டிற்கான இந்தியாவின் அரிசி மற்றும் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறையும் என சந்தேகம் எழுந்துள்ளது. ஈரான் மீது பொருளாதார தடை இருந்த போது இந்தியா மட்டுமே அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. இதன் காரணமாக சென்ற நிதி ஆண்டில் அரிசி ஏற்றுமதி 80 சதவீதம் அதிகரித்து 11 லட்சம் டன்னாக உயர்ந்தது. இதே ஆண்டுகளில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்து 8.87 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தற்போது வல்லரசு நாடுகள் ஈரான் மீது இன்னும் 6 மாத காலத்திற்கு பொருளாதார தடை விதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளன. எனவே ஈரானுக்கு பல நாடுகள் ஏற்றுமதி நடவடிக்கைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி குறையுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. image: category: |
| அக்டோபர் மாதத்தில் மின்சார பற்றாக்குறை 3 சதவீதமாக குறைந்தது Posted: 27 Nov 2013 09:31 AM PST புதுடெல்லி, அக்டோபர் மாதத்தில், மின்சார பயன்பாடு உச்சகட்டமாக இருக்கும் நேரத்தில் மின்பற்றாக்குறை 3 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 9.4 சதவீதமாக உயர்ந்திருந்தது. தேவைப்பாடு 2013 அக்டோபர் மாதத்தில் மொத்த மின்சார தேவைப்பாடு 1.30 லட்சம் மெகா வாட்டாக இருந்தது. மின்சார உற்பத்தி 1.26 லட்சம் மெகா வாட் என்ற அளவிலே இருந்தது. ஆக, உச்சகட்ட நேரத்தில் மின் உற்பத்தியை காட்டிலும் தேவைப்பாடு 3,845 மெகா வாட் அளவிற்குதான் அதிகமாக இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மின்சார தேவைப்பாடு மற்றும் உற்பத்தி முறையே 1.34 லட்சம் மெகாவாட் மற்றும் 1.21 லட்சம் மெகா வாட்டாக இருந்தது. ஆக, அம்மாதத்தில் உச்சகட்ட பயன்பாடு நேரத்தில் மின்சார பற்றாக்குறை 9.4 சதவீதமாக (12,572 மெகா வாட்) உயர்ந்திருந்தது. பருவமழை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவமழை நன்றாக இருந்தது. இதன் காரணமாக விவசாயத்திற்கான மின்சார பயன்பாடு குறைந்தது. மேலும் நீர்மின் உற்பத்தி அதிகரித்ததும், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்ததும் மின்சார பற்றாக்குறை குறைந்துள்ளதற்கு காரணமாகும் என மத்திய மின்சார ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குஜராத், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு மாநிலங்களில் மின்பற்றாக்குறை 0.1 சதவீதம் என்ற அளவிலே இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1.5 சதவீதமாக உயர்ந்திருந்தது. டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் மின்பற்றாக்குறை 4,338 மெகா வாட்டிலிருந்து (10.6 சதவீதம்) 2,769 மெகா வாட்டாக (6.7 சதவீதம்) குறைந்துள்ளது. அசாம் அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாசலபிரதேசம், மிசோரம், திரிபுரா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மண்டலங்களில் மின்சார பற்றாக்குறை 3.3 சதவீதத்திலிருந்து (2,048 மெகா வாட்) 4.3 சதவீதமாக (2,140 மெகா வாட்) உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மின்சார பற்றாக்குறை 18.7 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாக குறைந்துள்ளது. இப்பகுதிகளில் கூடுதலாக புதிய மின்உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தியதே மின்பற்றாக்குறை சரிவடைந்தற்கு காரணமாகும். image: category: |
| Posted: 27 Nov 2013 09:21 AM PST சென்னை எரிவாயு குழாய்களை பதிக்கும் பிரச்சினையில் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகின்ற வகையில் பேசித் தீர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– பேசித்தீர்க்க வேண்டும் கேள்வி:–ஏற்காடு இடைத்தேர்தலில் நடந்து வரும் விதிமுறை மீறல்களையெல்லாம் உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? பதில்:–தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். கேள்வி:–எரிவாயு குழாய்களைப்பதிக்கும் பிரச்சினையில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே? பதில்:–விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன். கேள்வி:–உயர்நீதிமன்றம் இந்தப்பிரச்சினையில் அளித்துள்ள தீர்ப்பு பற்றி? பதில்:– நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை. கேள்வி:–உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்களா? பதில்:–வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து. சிவாஜிகணேசன் சிலை கேள்வி:–சிவாஜிகணேசனுக்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிலை வைக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்களே? பதில்–கண்ணகி சிலையையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும்பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக்கட்டும். மின்வெட்டு கேள்வி:–தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக்காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள திடீர் பழுதுகள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதல்–அமைச்சர் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:–இதைப்பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல்–அமைச்சரே பிரதம அமைச்சருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப்பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.இவ்வாறு அவர் பதில் அளித்தார். image: category:Tagging: |
| ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் Posted: 27 Nov 2013 09:19 AM PST புதுடெல்லி, மத்திய அரசு, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக பெட்ரோலிய அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்கள், சுத்திகரிப்பு மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் பிரநிதிகள் அடங்கிய குழுவை அந்நாட்டிற்கு விரைவில் அனுப்ப உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைப்பாட்டில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்கிறது. சர்வதேச அளவில் ஈரானின் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது அந்நாட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 2.20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக சந்தேகம் எழுந்ததால் வல்லரசு நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது. இதன்காரணமாக இந்தியா ஈரானிலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து வந்தது. இந்நிலையில் வளர்ந்த நாடுகள் அந்நாட்டின் மீது இன்னும் 6 மாதத்திற்கு எவ்வித பொருளாதார தடையும் விதிக்கப்போவதில்லை என்று அறிவித்தன. இதனையடுத்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. image: category: |
| Posted: 27 Nov 2013 08:14 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Anmikasinthanai: ![]() |
| Posted: 27 Nov 2013 08:12 AM PST Daily Thanthi Image Special: ![]() Daily Thanthi Special Term: |
| Posted: 27 Nov 2013 08:11 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Andiyar: ![]() |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



