Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தல் சீர்திருத்த பரிந்துரை என்ன? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

Posted:

புதுடில்லி: தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக, சட்ட கமிஷனிடம் தெரிவித்த பரிந்துரை விவரக் குறிப்புகளை, இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.குற்ற வழக்குகளில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவுக்கு தேர்தல் கமிஷன் அளித்த பதிலில், 'ஐந்தாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம் என்ற நிலையிலுள்ள, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள், தேர்தலில் ...

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க அனுமதி : தமிழக அரசு தடையை நீக்கியது சென்னை ஐகோர்ட்

Posted:

சென்னை : தமிழகத்தில், ஏழு மாவட்டங்களில், விவசாய நிலங்கள் வழியாக, கொச்சி பெங்களூரு இயற்கை எரிவாயு, "பைப் லைன்' திட்டத்தை அமல்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இத்திட்டத்தை நிறைவேற்ற, தமிழக அரசு நிபந்தனைகள் மூலம் ஏற்படுத்திய தடையை, உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. கேரள மாநிலம், கொச்சி முதல் பெங்களூரு வரை, இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்காக, நிலத்தடியில் குழாய்கள் பதிக்கும் பணிகளை, இந்திய எரிவாயு நிறுவனமான, "கெயில்' மேற்கொண்டது. தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக, 318 கி.மீ., ...

நொய்டா இரட்டை கொலை வழக்கில் சிறுமி ஆருஷியின் பெற்றோர் குற்றவாளிகள்:

Posted:

காஜியாபாத்:கடந்த ஐந்தரை ஆண்டுகளாக, நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த சிறுமி ஆருஷி, அவரின் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை வழக்கில், டில்லி காஜியாபாத் சிறப்பு கோர்ட், நேற்று தீர்ப்பளித்தது. ஆருஷியின் பெற்றோர் தான், இந்த கொலைகளை செய்துள்ளனர் என்றும், அவர்கள் இருவரும், குற்றவாளிகள் என்றும், கோர்ட் தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டதும், ஆருஷியின் பெற்றோர் கதறி அழுதனர். இவர்களுக்கான தண்டனை, இன்று அறிவிக்கப்படுகிறது.கடந்த, 2008ல், நாட்டையே, அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஒரு சம்பவம், உ.பி., மாநிலம், நொய்டாவில், மிகவும் பிரபலமான, பல் டாக்டர் ...

வறுமை ஒழியும்: ராகுல் நம்பிக்கை

Posted:

புஷ்கர் : ''நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும், வறுமையை ஒழிக்க வேண்டியது அவசியம்; இதை, காங்., கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும்'' என, காங்., துணைத் தலைவர், ராகுல் தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில், காங்., துணைத் தலைவர், ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.புஷ்கர் என்ற இடத்தில் அவர் பேசியதாவது:நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு தடையாக உள்ள, வறுமையை ஒழிக்க வேண்டியது அவசியம். வளர்ச்சியை பாதிக்கும், கடினமான வறுமை என்ற சுவரை, காங்., கட்சி கண்டிப்பாக உடைத்து எறியும்.சாலைகள் அவசியம் தான். அரசின் உதவியை எதிர்பார்க்கும் ஏழை மக்களுக்கும், தேவையான நடவடிக்கைகளை ...

'நூற்றாண்டு கட்டண பாக்கியை உடனே கட்டு' : அதிர்ச்சியில் ஆழ்த்திய பி.எஸ்.என்.எல்.,

Posted:

கொச்சி : கேரளாவில், வாடிக்கையாளர் ஒருவரை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நூறாண்டுகளுக்கு மேல், பாக்கி வைத்துள்ள கட்டணத்தை செலுத்தும்படி, மொபைல் போனில் தொடர்ந்து நினைவூட்டல் செய்யப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த, சி.ஏ.பிரான்சிஸ், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொபைல் போன் வாடிக்கையாளர். அவரது மொபைல் போனுக்கு, கடந்த ஒரு மாத காலமாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், 'நிலுவையில் உள்ள மொபைல் போனுக்கான கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்; இல்லையேல் நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும்' என, ...

கவர்னருக்காக ரயில் நிலையத்திற்குள் காரை அனுமதிக்க முடியாது: அனுமதி மறுப்பால் ஆடிப்போன போலீஸ்

Posted:

பட்டமளிப்பு விழாவுக்காக, ரயிலில் வந்த, தமிழக கவர்னர் ரோசையாவை, ரயில் நிலையத்திற்குள், காரை கொண்டு சென்று அழைத்து வர, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அனுமதி மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி பாரதிதாசன் பல்கலை, பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் பங்கேற்க தமிழக கவர்னர் ரோசையா, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், நேற்று காலை, 5:40 மணிக்கு, திருச்சி ரயில் நிலையம் வந்தார்.கவர்னர் மிகவும் வயதானவர் என்பதாலும், அவரால் நீண்ட தூரம் நடக்க முடியாது என்பதாலும், அவரை அழைத்து வருவதற்காக, ரயில் நிலையத்திற்குள் காரை கொண்டு செல்ல அனுமதிக்கக் ...

கனிமொழி பிரசாரத்தில் வன்னியர் கோஷம்: லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமா?

Posted:

ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க., ராஜ்யசபா தலைவர் கனிமொழியின் இரு நாள் பிரசாரத்தில், வன்னியர் கோஷத்தை முன்னிலைப்படுத்தியும், தே.மு.தி.க., - பா.ம.க.,வுக்கு அனுசரணையாகவும் பேசியுள்ளதால், அக்கட்சிகளின் வன்னியர் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், கனிமொழி பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலில், அவரை, நான்கு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. ஆனால், இரண்டு நாட்கள் மட்டுமே கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். இம்மாதம், 22ம்தேதி, சென்னையில் இருந்து ...

ஏற்காட்டில் சங்கேத வார்த்தைகளில் பணப்பட்டுவாடா?

Posted:

ஏற்காடு தொகுதியில், சங்கேத வார்த்தை மூலம், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. இந்த வித்தையை, அ.தி.மு.க., தி.மு.க., என, இரு கட்சிகளுமே பின்பற்றுவதால், தேர்தல் கமிஷன் திணறி வருகிறது.கன ஜோர்:ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கு, இன்னும், எட்டு நாட்களே உள்ளதால், வாக்காளர்களை, அ.தி.மு.க., தி.மு.க., என, இரு கட்சிகளுமே, 'கவனித்து' வருகின்றன. அவர்களுக்கான, பணப்பட்டுவாடா, கனஜோராக நடந்து வருகிறது.இதை தடுக்கும் வகையில், சேலம் மாவட்டத்தில், 33 இடங்களில், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், பணம் கடத்தல் மற்றும் பட்டுவாடா ...

ஜனாதிபதிக்கு தினமும் கடிதம்: தமிழக இளைஞர் அயராத முயற்சி

Posted:

புனே : 'பெண்கள், குழந்தைகளை பாலியல் பலாத்காரத்திலிருந்து காப்பாற்ற தேவையான சட்டங்கள் இயற்றுங்கள்' என, புனே நகரைச் சேர்ந்த தமிழர் இளைஞர், பண்டிதர் சிவகுமார் பெருமாள் என்பவர், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த, ஏழு மாதங்களாக, தினமும் கடிதம் எழுதி வருகிறார். நாடு முழுவதும், தினமும், ஏராளமான, பாலியல் பலாத்கார கொடுமைகள் நடந்த வண்ணமாக உள்ளன. அவற்றைத் தடுக்க, சரியான சட்டங்கள், தண்டனை இல்லாததால், இந்தக் கொடுமை, அதிகரித்த வண்ணமாக உள்ளது.புனே நகரில் உள்ள, 'இன்போசிஸ்' நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றும், பண்டிதர் சிவகுமார் பெருமாள், 37, என்ற தமிழர், பெண்களை ...

அட, நம்புங்க! மின்வெட்டுக்கு 2 நாளில் தீர்வு: கோவை தொழில்துறையினரிடம் அதிகாரிகள் உறுதி

Posted:

கோவை : மீண்டும் தலைதூக்கியுள்ள மின்வெட்டால், கோவை தொழில்துறை, மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மின் தடை கண்டித்து போராட்டம் அறிவிக்க தயாராகி வரும் தொழில்அமைப்புகளை சமரசப்படுத்தும் நோக்கில், தொழில் அமைப்பு நிர்வாகிகளை, கோவை மண்டல மின்வாரிய அதிகாரிகள் அழைத்து, சமாதானப்படுத்தினர்.தமிழகத்தில், கடந்த 2007ம் ஆண்டில், "தினமும் ஒரு மணி நேரம்' என துவங்கிய மின்வெட்டு, ஐந்து மாதங்களுக்கு முன் 18 மணி நேரம் வரை படிப்படியாக அதிகரித்தது. இருளில் மூழ்கிய தமிழகத்துக்கு, கடந்த ஐந்து மாதங்கள் காற்றாலை கரம் கொடுத்தது. காற்றாலை மின்உற்பத்தி கடந்த அக்., 27ம் ...

தவறான பாதைக்கு சென்ற இளைஞர்களை மன்னிக்க அரசு தயார்: சுஷில்குமார் ஷிண்டே

Posted:

ராஞ்சி:தவறான வழிநடத்துதலால் வன்முறையை பின்பற்றி சென்ற இளைஞர்களை மன்னிக்க, மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள ராஞ்சி பல்கலைக்கழக 28ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இவ் விழாவில் சுஷில்குமார் ஷிண்டே உரையாற்றுகையில், மாநிலத்தில் உள்ள எந்த ஒரு பயங்கரவாத அமைப்பின் பெயரையும் குறிப்பிடாமல் பேசினார்.மன்னிக்க தயார்:எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வல்ல. சில இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட சித்தாந்தத்தின் காரணமாக வன்முறைப் பாதைக்கு சென்று ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™